Arduino/C2/Display-counter-using-Arduino/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:22, 25 January 2022 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Display counter using Arduino. குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Arduino board க்கு ஒரு LCD மற்றும் ஒரு Push buttonஐ இணைப்பது மற்றும் pushbutton அழுத்தப்படும் போதெல்லாம் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு programஐ எழுதுவது
00:22 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, மின்னணுவியல் பற்றிய அடிப்படை மற்றும் C or C++ programming languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்.
00:34 இங்கு நான் பயன்படுத்துவது: Arduino UNO Board, Ubuntu Linux 14.04 operating system மற்றும் Arduino IDE.
00:47 இந்த தொடரின் முந்தைய டுடோரியல் ஒன்றில், Arduino மற்றும் LCDஐ பயன்படுத்தி நாம் ஒரு circuitஐ உருவாக்கினோம். இந்த டுடோரியலில் அதே circuitஐ பயன்படுத்துவோம்
01:00 இங்கு, ஒரு pushbuttonஐ சேர்த்து, ஒரு எளிய counterஐ செய்வோம்
01:06 முந்தைய டுடோரியலில் pushbutton எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றி ஏற்கனவே கற்றுக்கொண்டோம்.
01:12 இப்போது, இணைப்பு circuit விவரங்களை அறிந்து கொள்வோம்.
01:17 ஒரு pushbutton ஒரு 100 ohm resistor.க்கு இணைக்கப்படுகிறது
01:22 pushbutton pin number 7 க்கு இணைக்கப்படுகிறது மற்றும் ஒரு 100 ohm resistor groundக்கு இணைக்கப்படுகிறது
01:31 மற்ற எல்லா இணைப்புகளும் நமது முந்தைய பரிசோதனையில் இருந்ததைப் போலவே இருக்கின்றன.
01:37 இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள இணைப்பின் நேரடி அமைப்பாகும்.
01:44 இப்போது, Arduino IDE.ல் நாம் ஒரு programஐ எழுதுவோம். அதனால், Arduino IDEக்கு மாறவும்
01:54 முதலில் நாம் Liquid crystal library.ஐ சேர்க்கவேண்டும்
01:59 காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்
02:02 நான் LiquidCrystal. வகையை சேர்ந்த ஒரு variable lcd ஐ initialize செய்துள்ளேன்
02:08 இங்கு, pin number 12, Register Select என initialize செய்யப்பட்டுள்ளது மற்றும் pin number 11, Enable. எனவும் initialize செய்யப்பட்டுள்ளது
02:19 அடுத்த 4 அளவுருக்கள் LCD.ன் data lineகளை குறிப்பிடுகின்றன
02:25 void setup functionல் காட்டப்பட்டுள்ளபடி டைப் செய்க: lcd.begin 16 comma 2 . இந்த command, LCDஐ வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளுடன் initialize செய்கிறது
02:41 எதுத்து, pin number 7ஐ நாம் INPUTஆக setup செய்வோம். காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்
02:49 வேறு விதமாக, pin எண்ணை நாம் ஒரு variable pbutton.ல் சேமிக்கலாம். காட்டப்பட்டுள்ளபடி pbutton variable ஐ நாம் வரையறுப்போம்
03:01 இப்போது, void loop.க்கான codeஐ எழுதுவோம். pushbutton அழுத்தப்படும் போதெல்லாம், LCDயில் ஒரு எண்ணிக்கை அதிகரிக்கிறது
03:11 pushbutton அழுத்தப்படுகிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்க, ஒரு எளிய 'if' statementஐ நாம் எழுதுவோம்
03:19 எண்ணிக்கையைக் காண்பிக்கும் முன், பட்டனின் நிலையைச் சரிபார்ப்போம்.
03:25 இந்த command கர்சர் நிலையை LCDயில் set செய்யும். lcd.print messageஐ print செய்யும்
03:35 இப்போது நாம் programஐ compile செய்து, upload செய்வோம். இப்போது நான் pushbuttonஐ அழுத்துகிறேன்
03:43 இங்கு, LCDல் “button pressed” என்ற messageஐ நாம் காண்கிறோம். pushbutton வெற்றிகரமாகச் செயல்படுவதை இது காட்டுகிறது.
03:54 அடுத்து, ஒரு counterஐ set செய்ய, நாம் programஐ மாற்றுவோம்
03:58 Counterக்கு நமக்கு ஒரு variable தேவை. இப்போது, variable countஐ பூஜ்யத்திற்கு நாம் initialize செய்வோம்
04:08 இங்கு காட்டப்பட்டுள்ளபடி print statement ஐ மாற்றவும். ஒவ்வொரு முறையும் பட்டனை அழுத்தும் போது, count++ எண்ணிக்கையை ஒன்று அதிகரிக்கும்.
04:21 இப்போது நாம் programஐ compile செய்து, upload செய்வோம். இப்போது நான் pushbuttonஐ அழுத்துகிறேன்
04:29 எதிர்பார்த்தபடி அது வேலை செய்யவில்லை. இங்கே வேறு எண்ணிக்கை காட்டப்படுவதைக் காண்கிறோம். ஏன் இப்படி?
04:37 பட்டனை அழுத்துவதற்கான நிலையை நாங்கள் குறிப்பிட்டதே இதற்குக் காரணம். ஆனால் release செய்யப்பட்ட பட்டனின் நிலையை நாங்கள் குறிப்பிடவில்லை.
04:46 பட்டனை அழுத்திய நேரத்தின் அடிப்படையில் அதிகரித்த எண்ணை output காட்டுகிறது.
04:52 அதனால் இங்கு காட்டப்பட்டுள்ளபடி, ஒரு 'while' statementஐ எழுதுவோம்
04:57 இது pushbutton அழுத்தப்பட்ட நிலையில் இருக்கும் போது எண்ணிக்கையைக் காண்பிக்கும். அதன் பொருள், pin 7 HIGH mode ல் உள்ளது
05:07 நீங்கள் பட்டனை release செய்யும் போது, நிலை LOW ஆகும், மேலும் அது 'while' loopல் இருந்து வெளியே வரும்.
05:14 நான் programஐ விளக்குகிறேன்
05:17 Program LCDன் initialization உடன் தொடங்குகிறது. நாம் variable pbutton மற்றும் count.ஐ கொண்டிருக்கிறோம்
05:26 void setup functionனின் உள், 16 நெடுவரிசைகள் மற்றும் 2 வரிசைகளுடன் LCD ஐ நாம் initialize செய்துள்ளோம். பின், pin number 7'க்கு input, pinMode ஆகும்
05:42 void loop functionல், pushbutton HIGHஆக இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை நாங்கள் சரிபார்க்கிறோம்.
05:49 pushbutton அழுத்தப்படும் போது, cursor பூஜ்ஜிய கமா பூஜ்ஜியமாக அமைக்கப்படும்.
05:56 lcd.print statement எண்ணிக்கை மதிப்பை print செய்யும். தொடக்கத்தில் count பூஜ்யமாக இருக்கும். Count plus plus 1 ஆக இருக்கும்
06:09 பட்டன் release செய்யப்படும் போது, அது while loopஐ உடைத்துக்கொண்டு loop ல் இருந்து வெளியே வரும்
06:15 மீண்டும் நீங்கள் பட்டனை அழுத்தினால், அடுத்த மறு iteration தொடங்குகிறது மற்றும் அது எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
06:23 Programஐ compile செய்து, upload செய்வோம்
06:27 இப்போது, நான் ஒரு முறை பட்டனை அழுத்தி அதை release செய்கிறேன்.
06:32 மீண்டும் நான் பட்டனை அழுத்தி, release செய்கிறேன். பட்டனை அழுத்தும் போதெல்லாம் எண்ணிக்கை அதிகரிப்பதைக் நீங்கள் காணலாம்.
06:42 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
06:47 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Arduino board க்கு ஒரு LCD மற்றும் ஒரு Push buttonஐ இணைப்பது மற்றும் pushbutton அழுத்தப்படும் போதெல்லாம் எண்ணிக்கையை காட்ட ஒரு programஐ எழுதுவது
07:03 ன்வரும் பயிற்சியை செய்யவும். எண்ணிக்கையை 2,4,6 மற்றும் பலவாக காட்ட அதே programஐ மாற்றவும். Programஐ compile செய்து, upload செய்யவும். மேலும், LCDயில் காட்டப்படும் எண்ணிக்கையைக் கவனிக்கவும்.
07:21 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
07:29 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
07:38 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
07:42 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
07:53 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree