Arduino/C2/Electronic-components-and-connections/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Electronic components and connections. குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் பின்வருவனவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று கற்போம்: Breadboard மற்றும் அதன் உள் தொடர்புகள், |
00:14 | breadboard ல் உள்ள LED, PushButton மற்றும் breadboard ல் உள்ள Seven Segment Display |
00:23 | இந்த தொடரை புரிந்து கொள்ள உங்களுக்கு, பின்வருவனவற்றில் அடிப்படை பற்றி தெரிந்து இருக்க வேண்டும்: resistors, push-button, LED போன்ற மின்னணு கூறுகள் |
00:34 | திறந்த சுற்று, மூடிய சுற்று, |
00:38 | serial மற்றும் parallel connection கள், |
00:41 | பேட்டரிகள், நேர்மறை மற்றும் எதிர்மறை மின்னழுத்தம். |
00:47 | இந்த டுடோரியல் பின்வரும் கூறுகளைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளது: Breadboard, |
00:54 | LED or Tri Colour LED, Push Button, |
01:00 | Resistor மற்றும் Seven Segment Display. |
01:06 | breadboard பார்ப்பதற்கு இவ்வாறு இருக்கிறது |
01:11 | ஒரு breadboard என்பது ஒரு சர்க்யூட்டின் கூறுகளைப் வைத்து அவற்றை ஒன்றாக இணைக்கும் ஒரு சாதனமாகும். |
01:18 | சாலிடரிங் எதுவும் செய்யாமல் breadboardல் எலக்ட்ரானிக் சர்க்யூட்டை உருவாக்கலாம். |
01:25 | மேல் இரண்டு தண்டவாளங்கள் மற்றும் கீழ் இரண்டு தண்டவாளங்கள் power railsகள் என்று அழைக்கப்படுகின்றன. |
01:31 | துளைகளின் மேல் வரிசை அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு சிவப்பு புள்ளிகள் மற்றும் நீல புள்ளிகளால் இங்கு குறிக்கப்பட்டுள்ளன. |
01:41 | breadboardன் நடுவில் இணைப்பு உடைகிறது என்பதை நினைவில் கொள்ளவும். |
01:46 | நடுவில், கம்பிகளின் நெடுவரிசைகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. |
01:51 | எடுத்துக்காட்டாக, குறிக்கப்பட்ட அனைத்து பச்சை துளைகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை மஞ்சள் துளைகளுடன் இணைக்கப்படவில்லை. |
02:02 | அடுத்து LED பற்றி அறிந்து கொள்வோம். LED என்றால் light emitting diode. என்றாகும் |
02:11 | மின்னோட்டம் பாயும் போது அது வண்ண ஒளியை வெளியிடுகிறது. |
02:16 | ஒரு LED, இரண்டு leadsகளை கொண்டிருக்கிறது. அவை anode மற்றும் cathode என்பன. |
02:22 | நீளமான lead, anode ஆகும். இது positive voltage.உடன் இணைக்கப்பட வேண்டும். |
02:29 | குட்டையான lead, cathode ஆகும். இது groundஉடன் இணைக்கப்பட வேண்டும். |
02:35 | Tri-color LED என்பது மூன்று வெவ்வேறு வண்ணங்களை வெளியிடும் LEDயின் மேம்பட்ட பதிப்பாகும். |
02:43 | அது 4 pinகளை கொண்டிருக்கிறது. மிக நீளமான lead, common lead. என அழைக்கப்படுகிறது. |
02:50 | மீதமுள்ள மூன்று pinகள் சிவப்பு, பச்சை மற்றும் நீல வண்ண LED'களுக்கானவை. |
02:57 | இரண்டு வகையான tri-color LED க்கள் உள்ளன: common anode and common cathode. |
03:07 | common anode பதிப்பில், common lead, positive voltage.உடன் இணைக்கப்பட வேண்டும். |
03:14 | common cathode பதிப்பில், common lead, ground.உடன் இணைக்கப்பட வேண்டும். |
03:21 | அடுத்து, Resistor. பற்றி அறிந்து கொள்வோம். |
03:25 | மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு resistor பயன்படுத்தப்படுகிறது. |
03:30 | இப்போது, ஒரு LED, ஒரு resistor மற்றும் ஒரு பிரெட்போர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி எளிய சுற்று ஒன்றை உருவாக்குவோம். |
03:37 | இந்தப் படம் சரியான இணைப்புகளைக் காட்டுகிறது. |
03:41 | 9 volt batteryயின் positive, இரண்டாவது rail உடன் இணைக்கப்பட்டுள்ளது. |
03:46 | 9 volt batteryயின் Negative, முதலாவது rail உடன் இணைக்கப்பட்டுள்ளது. |
03:51 | Anode (அதாவது, LED,ன் வலது lead), ஒரு resistor மூலம் breadboardன் 2வது தண்டவாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. |
04:00 | Cathode (அதாவது, LED,ன் இடது lead) breadboardன் 1வது தண்டவாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. |
04:08 | இது LED இணைப்புகளின் நேரடி setup ஆகும் |
04:13 | நாங்கள் பயன்படுத்திய இணைப்புகள் சரியாக இருப்பதால், LED ஒளிர்வதைக் நீங்கள் காணலாம். |
04:21 | இப்போது, இணைப்புகளை உருவாக்குவதற்கு breadboardஐ பயன்படுத்தும் போது மக்கள் செய்யும் பொதுவான தவறுகளைப் பார்ப்போம். |
04:29 | இந்த இணைப்பில், இணைப்புகள் சரியாக இல்லாததால் LED ஒளிரவில்லை. |
04:36 | resistor மற்றும் LED ஆகியவை ஒன்றுக்கொன்று அருகில் வைக்கப்பட்டுள்ளன. |
04:41 | breadboardல், power railகள் தவிர துளைகள் நெடுவரிசை வாரியாக இணைக்கப்பட்டுள்ளன. |
04:47 | எனவே, LEDயின் anodeக்கும் resistor leadக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. இது LEDயை தனிமைப்படுத்துகிறது. |
04:57 | அடுத்த இணைப்பில், LEDயின் cathode 2வது rail உடன் இணைக்கப்பட்டுள்ளது. |
05:04 | LEDயின் anode , resistor மூலம் 1வது தண்டவாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. |
05:10 | இந்த சர்க்யூட்டில் உள்ள இணைப்புகள் தலைகீழாக இருக்கின்றன. அதனால்தான் LED ஒளிரவில்லை. |
05:18 | அடுத்து, push button. பற்றி அறிந்து கொள்வோம். |
05:23 | ஒரு push button என்பது ஒரு எளிய switch பொறிமுறையாகும், இது அழுத்தும் போது ஒரு சர்க்யூட்டில் இரண்டு புள்ளிகளை இணைக்கிறது. |
05:31 | Push button பொதுவாக நான்கு கால்களுடன் வருகிறது. |
05:35 | switchன் நிலையைப் எவ்வாறு இருந்தாலும், கால்கள் A மற்றும் C எப்போதும் இணைக்கப்பட்டிருக்கும். |
05:43 | இதேபோல், B மற்றும் D கால்கள் எப்போதும் இணைக்கப்பட்டுள்ளன. |
05:48 | switchஐ அழுத்தும் போது நான்கு கால்களும் ஒன்றோடொன்று இணைக்கப்படும். |
05:53 | இப்போது, முந்தைய சர்க்யூட்டில் push button ஒன்றைச் சேர்த்து, LEDயின் நிலையை மாற்ற அதைப் பயன்படுத்துவோம். |
06:02 | இந்தப் படம் சரியான இணைப்புகளைக் காட்டுகிறது. LED anode 2வது power railஉடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது resistor மற்றும் push button. மூலம் நேர்மறை மின்னழுத்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. |
06:15 | நேரடி setup இணைப்பைப் பார்ப்போம். |
06:19 | push button அழுத்தப்படும் போது, LED எதிர்பார்த்தபடி ஒளிர்கிறது. |
06:25 | push buttonல் 4 கால்கள் இருப்பதால், சர்க்யூட்டை வேறு வழியிலும் அமைக்கலாம். |
06:32 | push buttonனின் B லெக்கைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, D என்ற லெக்கைப் பயன்படுத்துகிறோம். |
06:38 | அவை ஒன்றோடொன்று உட்புறத்தில் இணைக்கப்பட்டிருப்பதால், 'push buttonஐ அழுத்தும் போது LED ஒளிர்கிறது. |
06:45 | அடுத்து, push buttonகளை பயன்படுத்தும் போது மக்கள் செய்யும் பொதுவான தவறுகளைப் பார்ப்போம். |
06:52 | இந்த படத்தை பார்க்கவும். LED'ன் anode, push button.னின் கால்கள், A மற்றும் C வழியாக, 2வது power rail,உடன் இணைக்கப்பட்டுள்ளது. |
07:03 | push buttonனின் A மற்றும் C ' கால்கள் உட்புறமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். |
07:10 | எனவே, push button எவ்வாறு இருந்தாலும், LEDன் anode எப்பொழுதும் 2வது power rail,உடன் இணைக்கப்பட்டிருக்கும். |
07:19 | push button, OFF ஆக இருந்தாலும், LED இந்த சுற்றில் எப்போதும் ஒளிரும் |
07:26 | seven-segment displayக்கு செல்வோம் |
07:31 | seven-segment display, எண் எட்டின் வடிவத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, ஏழு LEDக்களை கொண்டிருக்கிறது |
07:38 | இரண்டு வகையான seven-segment displays உள்ளன: common anode மற்றும் common cathode seven segment display. |
07:49 | ஒரு common cathode seven-segment displayவில், pins a, b, c, d, e, f, g மற்றும் dot , +5Volts.க்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும் |
08:02 | இரண்டு COM pins களும், ground (GND). க்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும் |
08:07 | common anode display இதற்கு நேர் எதிர் மாறானதாகும் |
08:11 | இங்கு, pins a, b, c, d, e, f, g மற்றும் dot , ground. க்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு COM pins களும், +5Volts. க்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். |
08:26 | இப்போது breadboard ல், seven-segment displayஐ எவ்வாறு இணைப்பது மற்றும் அனைத்து LEDக்களையும் எவ்வாறு ஒளிரச் செய்வது என்று பார்ப்போம். |
08:35 | இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள seven-segment display , ஒரு common anode ஆகும் |
08:41 | எனவே, common anode, ஒரு resistor. மூலம் 2வது power railஉடன் இணைக்கப்பட்டுள்ளது. |
08:48 | LED pins a, b, c, d, e, f, g, dot இவை அனைத்தும் 1வது power railஉடன் இணைக்கப்பட்டுள்ளன |
08:56 | இணைப்பு சரியாக இருந்தால், அனைத்து LEDs க்களும் ஒளிர்வதைக் காண்போம். |
09:02 | நேரடி setup இணைப்பைப் பார்ப்போம். |
09:05 | seven segment displayல் எல்லா செக்மென்ட்களும் ஒளிர்வதைக் காணலாம். |
09:11 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
09:17 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, Breadboard மற்றும் அதன் உள் இணைப்புகள், |
09:24 | breadboard ல் உள்ள LED, PushButton மற்றும் breadboard ல் உள்ள Seven Segment Display |
09:33 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
09:41 | Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
09:51 | இந்த ஸ்போக்கன் டுடோரியலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? இந்த வலைதளத்தை பார்க்கவும் |
09:57 | உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்ந்தெடுக்கவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும் |
10:04 | எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். |
10:07 | ஸ்போக்கன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலின் குறிப்பிட்ட கேள்விகளுக்கானது. அவற்றில் தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை பதிவிட வேண்டாம் |
10:17 | இது குழப்பங்களை குறைக்க உதவும். குழப்பம் குறைந்தால், இந்த விவாதங்களை நாம் instructional materialஆக பயன்படுத்தலாம். |
10:26 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
10:37 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |