Python-3.4.3/C2/Subplots/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:27, 4 January 2022 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 எல்லோருக்கும் வணக்கம். Subplots குறித்த spoken tutorial நல்வரவு
00:06 இந்த டுடோரியலின் முடிவில், subplotகளை உருவாக்கவும் அவர்களுக்கிடையே மாறவும் உங்களால் முடியும்
00:14 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 operating system, Python 3.4.3, IPython 5.1.0.
00:29 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு பின்வருவனவற்றை செய்ய தெரிந்து இருக்கவேண்டும்: ipython consoleலில், அடிப்படை Python commandகளை run செய்வது, plot களை interactiveஆக பயன்படுத்துவது, ஒரு plotஐ embellish செய்வது. இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள, முன்நிபந்தனை Python டுடோரியல்களை பார்க்கவும்
00:48 முதலில் Ctrl+Alt+T key களை ஒன்றாக அழுத்தி, Terminal ஐ திறப்போம். இப்போது, ipython3 என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்
01:01 'pylab' packageஐ initialise செய்வோம். percentage pylab என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்
01:10 இரண்டு plotகளை ஒப்பிட, நாம் ஒரே plotting பகுதியில் plotகளை வரைகிறோம்
01:15 இப்போது, ஒரே plotting பகுதியில், ஒரு cosine plot மற்றும் ஒரு exponential curveஐ உருவாக்குவோம்
01:24 டைப் செய்க: x equals to linspace அடைப்புக்குறிக்குள், 0 comma 50 comma 500 . பின் Enter.ஐ அழுத்தவும். plot அடைப்புக்குறிக்குள், x comma cos(x).
01:45 டைப் செய்க: y equals to linspace அடைப்புக்குறிக்குள், 0 comma 5 comma 100.. plot அடைப்புக்குறிக்குள், y comma y square.
02:04 இங்கே, இரண்டு plotகளும் வெவ்வேறு regular axisகளை கொண்டிருக்கின்றன. அதனால், ஒன்றன் மேல் ஒன்றாக நாம் plotகளை வரைய முடியாது
02:13 அத்தகைய வழக்குகளில் நாம் subplotsகளை வரையலாம்
02:17 இதை நிறைவேற்ற, நாம் 'subplot' commandஐ பயன்படுத்துகிறோம். டைப் செய்க: clf(). subplot அடைப்புக்குறிக்குள், 2 comma 1 comma 1.
02:33 நாம் முதல் subplotஐ காணலாம். subplot command மூன்று argumentகளை எடுத்துக்கொள்கிறது
02:40 முதல் argument, உருவாக்கப்பட வேண்டிய subplotகளின் rowக்களின் எண்ணிக்கையாகும். Plotஐ கிடைமட்டமாக பிரிக்க, இங்கே முதல் argument 2 ஆக இருக்கிறது.
02:53 இரண்டாவது argument என்பது உருவாக்கப்பட வேண்டிய subplotsகளின் columnகளின் எண்ணிக்கையாகும். இங்கே, இரண்டாவது argument 1 ஆகும். எனவே, plot செங்குத்தாகப் பிரிக்கப்படாது.
03:07 கடைசி argument, subplotக்கான வரிசை எண்ணைக் குறிப்பிடுகிறது. இங்கே நாம், 1 ஐ argument ஆகக் கொடுத்தோம், இது மேல் subplot ஐ உருவாக்குகிறது.
03:19 subplot commandஐ பின்வருமாறு நாம் execute செய்தால்- subplot அடைப்புக்குறிக்குள் 2 comma 1 comma 2, கீழ் subplot உருவாக்கப்படுகிறது
03:34 இங்கு, நாம் இரண்டு subplotகளை காணலாம்
03:38 இப்போது, ஒவ்வொரு subplot பகுதியிலும் plot command ஐ பயன்படுத்தி, நாம் plotகளை வரையலாம். டைப் செய்க: subplot அடைப்புக்குறிக்குள் 2 comma 1 comma 1. plot அடைப்புக்குறிக்குள் x comma cos(x).
04:00 இப்போது, டைப் செய்க: subplot அடைப்புக்குறிக்குள் 2 comma 1 comma 2 plot y comma y square
04:16 இது இரண்டு plotகளை உருவாக்கியது, ஒவ்வொரு subplot பகுதியிலும் ஒவ்வொன்று. மேல் subplot, cosine curveஐயும் மற்றும் கீழ் subplot parabolaவையும் கொண்டிருக்கிறது
04:29 இரண்டும் வெவ்வேறு வழக்கமான axisகளைக் கொண்டுள்ளன என்பது இரண்டு subplotகளில் இருந்தும் தெளிவாக தெரிகிறது
04:35 cosine curveக்கு, x-axis, 0 முதல் 50 வரை மற்றும் y-axis minus 1 லிருந்து 1 வரை மாறுபடுகிறது
04:46 parabolic curveக்கு, x-axis0 முதல் 5 வரை மற்றும் y-axis 0 லிருந்து 25 வரை மாறுபடுகிறது
04:57 இப்போது plot windowவை செய்யவும்
05:00 வீடியோவை இடைநிறுத்தவும். இந்த பயிற்சியை முயற்சிக்கவும், பின்னர் வீடியோவை மீண்டும் செய்யவும்.
05:05 Pressure, Volume மற்றும் Temperatures , Pv equals to nRT என்ற சமன்பாட்டின் மூலம் நடத்தப்படுகிறது, இதில் nR என்பது ஒரு constant ஆகும்.
05:16 nR equals to 0.01 Joules per Kelvin மற்றும் T equals to 200K என அனுமானித்துக் கொள்ளவும். V' 21cc to100cc வரம்பில் இருக்கலாம்.
05:29 இரண்டு வெவ்வேறு plotகளை subplotகளாக என வரையவும்: Pressure v/s Volume plot மற்றும் Pressure v/s Temperature plot.
05:39 தீர்வுக்கு terminalக்கு மாறவும்
05:43 தொடங்குவதற்கு, நமக்கு Volume வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது, அதில் இருந்து v. variableஐ நாம் வரையறுக்கலாம்.
05:51 v equals to linspace அடைப்புக்குறிக்குள் 21 comma 100 comma 500.
06:03 நாம் subplotஐ உருவாக்கி, இந்த vஐப் பயன்படுத்தி, Pressure v/s Volume வரைபடத்தை வரையலாம். subplot(2 comma 1 comma 1) plot(v comma 2 point 0 by v)
06:24 nRT என்பது 2.0க்கு சமமான ஒரு constant என்பதை நாம் அறிவோம். ஏனெனில், nR 0.01 Joules per Kelvinக்கு சமம் மற்றும் T 200 Kelvin. க்கு சமம்
06:38 இப்போது, நாம் இரண்டாவது subplot'ஐ உருவாக்கி, Pressure v/s Temperature plotஐ பின்வருமாறு வரையலாம். subplot(2 comma 1 comma 2) plot(200 comma 2 point 0 divided by v)
07:02 x மற்றும் y பரிமாணங்கள் பொருந்தவில்லை என்று கூறுகின்ற ஒரு பிழை ஏற்படுகிறது
07:08 எனவே, temperature.'க்கு அதே எண்ணிக்கையிலான புள்ளிகளை உருவாக்குவோம்.
07:14 டைப் செய்க: t equals to linspace அடைப்புக்குறிக்குள் 200 comma 200 comma 500.
07:27 இப்போது, tல் எங்களிடம் 500 மதிப்புகள் உள்ளன மற்றும் ஒவ்வொன்றும் 200 Kelvin மதிப்பை கொண்டிருக்கிறது.
07:35 இந்தத் dataவை plot செய்யும் போது, தேவையான plotஐ நாம் பெறுகிறோம். plot அடைப்புக்குறிக்குள் t comma 2 point 0 divided by v
07:48 முறையே Pressure v/s Volume மற்றும் Pressure v/s Temperatureயின் இரண்டு subplotகளை நாம் பார்க்கலாம்.
07:56 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலில் நாம் subplots களை உருவாக்க மற்றும் அவர்களுக்கிடையே switch செய்யவும் கற்றோம்
08:08 நீங்கள் தீர்க்க சில சுய மதிப்பீட்டு கேள்விகள் இங்கே உள்ளன
08:12 1. பின்வருவனவற்றில் எது சரியானது? subplot அடைப்புக்குறிக்குள் numRows comma numCols comma plotNum , subplot அடைப்புக்குறிக்குள் numRows comma numCols , subplot அடைப்புக்குறிக்குள் numCols comma numRows.
08:36 முதலாவது தேர்வே விடையாகும். 1.The' subplot command மூன்று argumentகளை எடுத்துக்கொள்கிறது, அதாவது rowக்களின் எண்ணிக்கை, columnகளின் எண்ணிக்கை மற்றும் plot எண் '.
08:48 இந்த மன்றத்தில் உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை முன்வைக்கவும்.
08:53 இந்த மன்றத்தில் Python பற்றிய பொதுவான கேள்விகளை முன்வைக்கவும்
08:59 FOSSEEகுழு TBC projectஐ ஒருங்கிணைக்கிறது
09:04 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
09:15 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ப்ரியா. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree