Python-3.4.3/C2/Getting-started-with-IPython/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | எல்லோருக்கும் வணக்கம். Getting started with IPython குறித்த இந்த டுடோரியலுக்கு வருக |
00:07 | இந்த டுடோரியலின் முடிவில், உங்களால் பின்வருவனவற்றை செய்ய இயலும்: IPython interpreterஐ செயல்படுத்துவது, |
00:13 | IPython interpreterல் இருந்து வெளியில் வருவது, |
00:16 | IPython session historyஐ பார்ப்பது, |
00:20 | IPythonனின் உள் tab-completionஐ பயன்படுத்துவது, |
00:23 | IPythonல் documentation ஐ பார்ப்பது, |
00:26 | முழுமையற்ற அல்லது தவறான commandகளை நிறுத்துவது. |
00:30 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 operating system, |
00:37 | Python 3.5.2, IPython 5.1.0 |
00:44 | IPythonஎன்றால் என்ன? IPython மேம்படுத்தப்பட்ட ஊடாடும் Python interpreter ஆகும். |
00:50 | இது tab-completion போன்ற அம்சங்களையும், உதவிக்கான எளிதான அணுகலையும் வழங்குகிறது. |
00:56 | முதலில் IPython interpreterஐ எவ்வாறு தொடங்குவது என்று பார்ப்போம். |
01:00 | முதலில் keyboard ல், Ctrl+Alt+T key களை ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும். |
01:07 | promptல் ipython3 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும் |
01:13 | IPythonநிறுவப்படவில்லை எனில், Instruction sheetஐ பார்க்கவும் |
01:18 | IPython நிறுவப்பட்டுவிட்டால், terminalலில், ipython command செயல்படுத்தப்பட்டு, IPython interpreter load செய்யப்படுகிறது |
01:25 | நிறுவப்பட்ட Python மற்றும் IPython பதிப்புகள் terminalலில் காட்டப்படுகின்றன |
01:32 | சில கூடுதல் பயனுள்ள தகவல்கள் 'IPython னால் அச்சிடப்படுகின்றன. |
01:37 | இதற்குப் பிறகு, i n bracket 1 உடன் கூடிய prompt ஒன்று நமக்கு கிடைக்கிறது: |
01:42 | இப்போது, IPython interpreterல் இருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றிப் பார்ப்போம். Ctrl+D keyகளை அழுத்தவும் |
01:48 | நாம் உண்மையில் வெளியேற விரும்புகிறோமா என்பதை உறுதிப்படுத்த ஒரு prompt தோன்றும். |
01:53 | yesக்கு y என டைப் செய்து, IPythonஐ விட்டு வெளியே வரவும் |
01:57 | சதுர அடைப்புக்குறிக்குள் 'y கொடுக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்கவும். எனவே அது முன்னிருப்பானது. |
02:02 | நாம் Enterஐ அழுத்தியும் வெளியே வரலாம் |
02:05 | இல்லையெனில், நீங்கள் IPythonல் இருந்து வெளியே வர விரும்பவில்லை எனில், no க்கு n என டைப் செய்யவும் |
02:10 | நாம் y என டைப் செய்வோம். நாம் IPython interpreterல் இருந்து வெளியே வந்துவிட்டோம் மற்றும் terminal promptல் உள்ளோம் |
02:16 | மீண்டும் தொடங்குவோம். terminal லில் ipython3 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும் |
02:23 | இப்போது, interpreter ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வோம். எளிமையான செயல்பாட்டுடன் தொடங்குவோம் - addition. |
02:30 | IPython prompt ல் 1 plus 2 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும் |
02:36 | python commandஐ செயல்படுத்த நாம் Enterஐ அழுத்துகிறோம். ஒவ்வொரு commandஐயும் டைப் செய்த பிறகு, அவ்வாறு செய்யவும் |
02:43 | IPython, output ஐ 3 என சரியாக காட்டுகிறது |
02:47 | Output, Out சதுர அடைப்புக்குறி 1 குறிப்புடன் காட்டப்படுவதைக் கவனிக்கவும். |
02:54 | பின்வரும் மேலும் சில களை இப்போது முயற்சிப்போம்- 5 minus 3, 7 multiplied by 4. |
03:03 | ஒவ்வொரு முறை நாம் Enterஐ அழுத்தும் போது, IPython console window.வில் நாம் output ஐ காண்கிறோம் |
03:10 | இப்போது, IPythonல் முந்தைய commandகளுக்கு எப்படி செல்வது என்று பார்ப்போம் |
03:15 | உதாரணத்திற்கு, print open parenthesis 1 plus 2 close parenthesis. என்பதை execute செய்யவேண்டும் என்று வைத்துக்கொள்வோம் |
03:23 | முழு commandஐயும் டைப் செய்வதற்கு பதிலாக, நாம் முன்பு டைப் செய்த 1 plus 2 commandஐ நினைவு கூர்வோம் |
03:30 | 1 plus 2 commandக்கு திரும்பச் செல்ல up arrow key ஐ பயன்படுத்தவும் |
03:35 | இப்போது, வரியின் தொடக்கத்திற்கு செல்ல, left-arrow key ஐ பயன்படுத்தவும் |
03:40 | print, திறந்த அடைப்புக்குறி மூடல் அடைப்புக்குறி, என்பதை keyboardல் டைப் செய்யவும் |
03:49 | நாம் commandஐ print (1 plus 2). வுக்கு மாற்றிவிட்டோம். இப்போது Enterஐ அழுத்தவும் |
03:53 | interpreter , முடிவை, 3 என print செய்கிறது. ஆனால் இம்முறை, Out சதுர அடைப்புக்குறிகள் காட்டப்படவில்லை என்பதைக் கவனியுங்கள். |
04:03 | இப்போது, print 10 multiplied by 2. ஐ செயல்படுத்துவோம். முந்தைய command print (1 plus 2)க்கு செல்ல, நாம் ஐ பயன்படுத்துகிறோம் |
04:14 | இப்போது, 1 plus 2 க்கு பதிலாக 10 multiplied by 2 ஐ வைத்து, பின் Enterஐ அழுத்தவும் |
04:21 | எந்த programming language ஐ போலவே, பெருக்கல் குறிக்கு asterisk பயன்படுத்தப்படுகிறது. |
04:27 | consoleலில் outputஐ கவனிக்கவும் |
04:30 | இப்போது, tab-completion என்றால் என்ன என்பதை பார்ப்போம். ஒரு உதாரணத்தைக் எடுத்துக் கொள்வோம். |
04:35 | உதாரணத்திற்கு நாம் function "print"ஐ பயன்படுத்தவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். |
04:39 | இதற்கு, நாம் promptல் pri என டைப் செய்து, tab keyஐ அழுத்துகிறோம் |
04:45 | நீங்கள் consoleலில் பார்க்கிறபடி, IPython command priஐ printஆக தானாக நிறைவு செய்திருப்பதை நீங்கள் காணலாம் |
04:52 | IPythonனின் இந்த அம்சம் tab-completion எனப்படுகிறது |
04:56 | tab completionக்கான இன்னும் சில சாத்தியங்களைப் பார்ப்போம். p என டைப் செய்து, பின் tab ஐ அழுத்தவும் |
05:05 | இந்த வழக்கில், IPython commandஐ நிறைவு செய்யாதிருப்பதை நாம் காணலாம் |
05:09 | இது ஏனெனில், ஒன்றுக்கு மேற்பட்ட commandகள் p உடன் தொடங்குகின்றன. |
05:14 | எனவே, இது p இன் சாத்தியமான tab-completionகள் அனைத்தையும் பட்டியலிடுகிறது. |
05:20 | இப்போது ஒரு பயிற்சியை செய்ய முயற்சிப்போம் |
05:23 | வீடியோவை இடைநிறுத்தி, சிக்கலைத் தீர்த்து, வீடியோவை மீண்டும் தொடங்கவும். "ab"உடன் தொடங்கும் commandகளை கண்டுபிடிக்கவும் |
05:31 | "ab"உடன் தொடங்கும் commandகளை பட்டியலிடவும் |
05:35 | ab ஐ a b s abs என தானாக நிறைவு செய்கிறது |
05:40 | a உடன் தொடங்கும் அனைத்து commandகளின் பட்டியலை a tab' காட்டுகிறது. |
05:46 | இப்போது, function abs எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்ப்போம். |
05:51 | இதைக் கண்டறிய IPython இன் help அம்சத்தைப் பயன்படுத்துவோம். |
05:55 | functionனின் documentationஐ பார்க்க, functionனின் பெயரைத் தொடர்ந்து கேள்விக்குறியைத் டைப் செய்யவும். |
06:03 | IPython interpreter , functionக்கான documentationஐ காண்பிக்கும். |
06:08 | காட்டப்படும் தகவலில் இருந்து, abs ஒரு எண்ணை input ஆக ஏற்றுக்கொண்டு அதன் absolute value வை வழங்குகிறது என்று அது கூறுகிறது |
06:16 | சில உதாரணங்களைப் பார்ப்போம். consoleலில் டைப் செய்க: a b s minus 19, பின் a b s 19. |
06:29 | இரண்டு வழக்குகளுக்கும் எதிர்பார்த்தபடி 19 கிடைக்கிறது. |
06:33 | இப்போது அதை decimal எண்களுக்கு முயற்சிப்போம். a b s minus 10.5ஐ முயற்சிப்போம் |
06:42 | 10.5 நமக்கு முடிவாக கிடைக்கிறது |
06:46 | வீடியோவை இங்கே இடைநிறுத்தவும். பின்வரும் பயிற்சியை முயற்சித்து பின், வீடியோவை மீண்டும் தொடங்கவும். |
06:52 | round documentation ஐ எடுத்து , அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கவும். |
06:57 | விடைக்கு consoleக்கு மாறவும். round கேள்விக்குறியை டைப் செய்து, நீங்கள் function roundனின் documentation ஐ பார்க்கலாம் |
07:06 | இங்கே , function 'round' ஒரு எண்ணை கொடுக்கப்பட்ட துல்லியத்திற்குச் round செய்கிறது. |
07:12 | ndigits , round functionக்கான துல்லிய மதிப்பு ஆகும். ndigits சுற்றி கூடுதல் சதுர அடைப்புக்குறிகள் உள்ளன என்பதை கவனிக்கவும். |
07:21 | இதன் பொருள், ndigits optional ஆகும் மற்றும் 0 முன்னிருப்பான மதிப்பு ஆகும் |
07:27 | Optional parameter கள், Python documentation ல், சதுர அடைப்புக்குறிக்குள் காட்டப்படுகின்றன |
07:33 | வீடியோவை இங்கே இடைநிறுத்தவும். பின்வரும் பயிற்சியை முயற்சித்து, பின் வீடியோவை மீண்டும் தொடங்கவும். |
07:38 | பின்வருவானவற்றின் ஐ சரிபார்க்கவும்: round 2.48, round 2.48 comma 1, round 2.484, round 2.484 comma 2 |
07:52 | நமக்கு பின்வருபவை கிடைக்கின்றன: round 2.48 is equal to 2.0, |
07:57 | round 2.48 comma 1 is 2.5, |
08:02 | round 2.484 is 2.0, |
08:06 | round 2.484 comma 2 is 2.48 . இவை நாம் எதிர்பார்த்தவையே |
08:13 | consoleலில் டைப் செய்யும் போது ஏற்படும் தட்டச்சுப் பிழைகளை எவ்வாறு சரிசெய்வது என்பதை இப்போது பார்க்கலாம். |
08:20 | வேண்டுமென்றே தட்டச்சுப் பிழையைச் செய்வோம். டைப் செய்க: round open parenthesis 2.484, அடைப்புக்குறியை மூடாமல், பின் Enterஐ அழுத்தவும் |
08:32 | புள்ளிகளுடன் கூடிய ஒரு promptஐ பெறுகிறோம். இந்த prompt, IPythonனின் தொடர்ச்சியான prompt ஆகும் |
08:40 | முந்தைய வரி முழுமையடையாதபோது இது தோன்றுகிறது. |
08:44 | இப்போது commandஐ மூடும் அடைப்புக்குறியுடன் நிறைவு செய்து, பின் Enter ஐ அழுத்தவும். நமக்கு எதிர்பார்த்த output, அதாவது 2 கிடைக்கிறது |
08:54 | தவறான command ஐ டைப் செய்து, தொடர்ச்சியான prompt உடன் முடித்தால் என்ன நடக்கும் ? |
09:00 | அத்தகைய வழக்கில், commandஐ நிறுத்த Ctrl+C key களை அழுத்தி, IPython promptக்கு திரும்ப வரலாம் |
09:09 | roundஎண்களை மட்டுமே input ஆக எடுத்துக்கொள்கிறது. டைப் செய்க: round(1a |
09:15 | அடைப்புக்குறிகளை மூடாமல், Enter. ஐ அழுத்தவும் |
09:19 | alpha-numeric மதிப்பு, '1 a'ஐ inputஆக நாம் கொடுத்துள்ளோம். செயல்படுத்துதலை நிறுத்த, Ctrl+Cஐ அழுத்தவும் |
09:28 | வீடியோவை இங்கே இடைநிறுத்தவும். பின்வரும் பயிற்சியை முயற்சித்து பின் வீடியோவை மீண்டும் தொடங்கவும். |
09:34 | டைப் செய்க: round 2.484, அடைப்புக்குறிகளை மூடாமல், பின் Enterஐ அழுத்தவும் |
09:41 | பின், Ctrl+Cஐ பயன்படுத்தி commandஐ canel செய்யவும். round 2.484 comma 2 commandஐ டைப் செய்யவும் |
09:51 | உங்கள் console லில் காட்டப்படுகின்ற output பார்ப்பதற்கு இவ்வாறு இருக்கவேண்டும் |
10:01 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
10:04 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: terminalலில் ipythonஐ டைப் செய்து, IPython interpreter ஐ செயல்படுத்துவது |
10:13 | Ctrl+Dஐ பயன்படுத்தி, IPython interpreter ல் இருந்து வெளியே வருவது |
10:17 | arrow keyகளை பயன்படுத்தி, IPython session historyஐ பார்ப்பது |
10:23 | வேகமாக வேலை செய்வதற்கு, tab-completionஐ பயன்படுத்துவது |
10:27 | question markஐ பயன்படுத்தி, functionகளின் documentation ஐ பார்ப்பது |
10:32 | நாம் ஒரு பிழையை செய்யும் போது, Ctrl+Cஐ பயன்படுத்தி களை நிறுத்துவது |
10:37 | நீங்கள் தீர்க்க சில சுய மதிப்பீட்டு கேள்விகள் உள்ளன. |
10:41 | IPython is a programming language similar to Python. True அல்லது False |
10:46 | IPythonல் இருந்து வெளியே வர எந்த key combination ஐ பயன்படுத்தவேண்டும். Ctrl + C, Ctrl + D, Alt + C, Alt + D |
10:55 | documentation ஐ காட்ட, IPythonல் commandன் இறுதியில் எந்த character பயன்படுத்தப்படுகிறது? under score, question mark, exclamation mark, ampersand |
11:07 | விடைகள்- False. IPython ஒரு புதிய programming language அல்ல. இது ஒரு மேம்படுத்தப்பட்ட ஊடாடும் Python interpreter ஆகும். |
11:17 | நாம் IPython interpreterல் இருந்து வெளியில் வர, Ctrl + Dஐ பயன்படுத்துகிறோம் |
11:21 | documentation ஐ காட்ட commandன் இறுதியில், நாம் question mark (?) ஐ பயன்படுத்துகிறோம் |
11:28 | இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தைச் சுருக்கமாகக் கூறுகிறது. உங்களிடம் தரமான அலைவரிசை இல்லையென்றால், அதை தரவிறக்கி பார்க்கலாம். |
11:37 | நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
11:42 | இந்த Spoken Tutorial?லில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? உங்களின் கேள்விக்கான நிமிடம் மற்றும் வினாடியைத் தேர்ந்தெடுக்கவும். |
11:48 | உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் FOSSEE குழுவில் இருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். இந்த தளத்தை பார்க்கவும் |
11:56 | உங்களுக்கு Pythonல் பொது/தொழில்நுட்ப கேள்விகள் ஏதேனும் உள்ளதா? |
11:59 | FOSSEE forumல் உங்கள் கேள்வியை முன் வைக்கவும். |
12:04 | FOSSEEகுழு பிரபலமான புத்தகங்களின் பல தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டுகளின் codingஐ ஒருங்கிணைக்கிறது. |
12:10 | இதை செய்பவர்களுக்கு நாங்கள் கௌரவத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறோம். மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
12:17 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
12:23 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ப்ரியா. கலந்துகொண்டமைக்கு நன்றி. |