C-and-C++/C2/If-And-Else-If-statement/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:43, 10 August 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time' 'Narration
00.02 C மற்றும் C++ ல் Conditional statements குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00.09 இந்த tutorial ல் நாம் கற்க போவது,


00.12 ஒரே ஒரு statement ஐ இயக்குதல்.


00.14 statement களின் தொகுப்பை இயக்குதல் .


00.17 உதாரணங்களின் மூலம் இதை செய்யலாம்


00.20 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
00.25 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu 11.10, gcc மற்றும் g++ Compiler 4.6.1
00.39 condition statements ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்


00.43 program-ல் statement என்பது program இயக்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்துகிறது


00.50 எந்த code இயக்கப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க இது உதவுகிறது


00.56 conditions... true ஆ false ஆ என பார்க்க முடியும்.


01.01 ஒரே ஒரு statement அல்லது பல statementகளை இயக்க முடியும்.
01.08 if statements-ன் இயக்கத்தை புரிந்துகொள்வோம்.


01.13 இங்கே condition... true எனில், statement1 இயக்கப்படும்


01.21 condition... false எனில் statement2 இயக்கப்படும்
01.29 இப்போது else if statementன் இயக்கத்தைப் பார்ப்போம்,


01.33 இங்கே, condition1... true எனில் statement1 இயக்கப்படும்.


01.41 condition1... false எனில் இது மற்றொரு condition ஐ சரிபார்க்கும் அதுதான் condition2.


01.50 condition2... true எனில் statement3 இயக்கப்படும்


01.55 condition2... false எனில், statement2 இயக்கப்படும்
02.03 இப்போது நம் program க்கு வருவோம்.


02.06 editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன்.


02.09 அதை திறக்கிறேன்.


02.13 file பெயர் ifstmt.c என்பதை கவனிக்கவும்
02.19 இந்த program ல் இரு எண்களின் கூடுதலை கணக்கிட்டு சில conditionகளையும் சரிபார்ப்போம்.
02.27 code ஐ விளக்குகிறேன்.


02.31 இது நம் header file.
02.34 இது நம் main function.
02.38 இங்கே a, b மற்றும் sum என்ற மூன்று integer variable களை declare செய்துள்ளோம்
02.47 இங்கே user input க்காக கேட்கிறோம்.


02.49 a மற்றும் b-க்கான மதிப்பை user கொடுப்பார்.


02.53 variable a மற்றும் variable bல் அந்த மதிப்புகள் சேமிக்கப்படும்
02.58 console லிருந்து data ஐ 'scanf()' எடுக்கிறது.


03.02 பின் இது கொடுத்த variableலில் முடிவை சேமிக்கிறது


03.06 scanf() ல் format specifier ... data வகையை அறிய உதவுகிறது.


03.11 இங்கே %d உள்ளது. இது integer data வகையை கையாளுகிறோம் என்பதை குறிக்கிறது.
03.19 இங்கே a மற்றும் b மதிப்புகளைக் கூட்டுகிறோம்


03.22 இதன் தீர்வை sum ல் சேமிப்போம்
03.26 பின் தீர்வை அச்சிடுவோம்.
03.29 இதுதான் நம் if statement.
03.31 இங்கே, sum... 20 ஐ விட பெரியதா என condition ஐ சரிபார்க்கிறோம்.
03.36 condition... true எனில், Sum is greater than 20 என அச்சிடுகிறோம்.
03.43 இந்த வரிகளை comment-ல் வைக்கிறேன்.
03.48 இது நம் return statement.
03.51 Save ஐ சொடுக்கவும்
03.53 முதலில் if statement ன் இயக்கத்தைப் பார்ப்போம்.
03.58 Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
04.09 compile செய்ய எழுதுக , gcc ifstmt.c -o if பின் enter செய்க
04.20 இயக்க, ./if என எழுதி enter ஐ தட்டுக
04.26 Enter the value of a and b என காட்டுகிறது.
04.32 10 மற்றும் 12 என மதிப்புகளைத் தருகிறேன்.
04.38 Sum of a and b is 22. Sum is greater than 20 என வெளியீடு காட்டப்படுகிறது.
04.46 இப்போது programக்கு வருவோம்.
04.49 மற்றொரு condition ஐ சரிபார்ப்போம்.
04.53 இங்கிருந்து comment ஐ நீக்குவோம்.
04.57 இங்கே comment ஐ இடுகிறேன்.
05.00 Save ஐ சொடுக்கவும்
05.03 இது நம் else-if statement.
05.05 இங்கே , Sum... 10 ஐ விட பெரியதா என மற்றொரு condition ஐ சரிபார்ப்போம்
05.11 condition... true எனில் Sum is greater than 10 and less than 20 என அச்சிடுவோம்.
05.18 terminal க்கு வருவோம்.
05.20 முன்பு போல compile செய்து இயக்குவோம்.
05.27 Enter the value of a and b என காட்டுகிறது.
05.30 10 மற்றும் 2 என மதிப்புகளைத் தருகிறேன்.
05.35 Sum of a and b is 12.
05.39 Sum is greater than 10 and less than 20 என காட்டுகிறது.
05.43 prompt ஐ துடைக்கிறேன். program க்கு வருவோம்.
05.48 இங்கேயும் இங்கேயும் comment ஐ நீக்குகிறேன். save ல் சொடுக்கவும்,
05.56 இரண்டு conditionகளும் false எனில், Sum is less than 10 என அச்சிடுவோம்.
06.04 இது நம் else statement.
06.08 இப்போது இயக்கி பார்க்கலாம். terminal க்கு வருவோம்.
06.12 முன்பு போல compile செய்து இயக்குவோம்.
06.18 Enter the value of a and b என காட்டுகிறது.
06.22 3 மற்றும் 5 என மதிப்புகள் தருகிறேன்.
06.27 sum of a and b is 8.
06.31 Sum is less than 10 என வெளியீட்டை பார்க்கிறோம்.
06.34 இப்போது குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்ப்போம்
06.39 program க்கு வருவோம்.
06.41 if statement ன் முடிவில் ஒரு semicolon ஐ இட்டால் என்னாகும்.
06.47 நடப்பதை பார்ப்போம். Save ஐ சொடுக்குவோம்
06.50 இயக்குவோம். terminalக்கு வருவோம்.
06.53 முன்புபோல compile செய்வோம்.
06.56 else without a previous if என பிழையைப் பார்க்கிறோம்
07.02 program-க்கு வருவோம். இது ஒரு syntax error.
07.07 If statement... ஒரு semicolon உடன் முடியாது.
07.10 if இல்லாமல் else if statement வேலைசெய்யாது
07.16 இந்த பிழையை சரிசெய்வோம். இங்கே semicolon ஐ நீக்குவோம்
07.22 Save ஐ சொடுக்குவோம்
07.25 இயக்குவோம். terminal க்கு வருவோம்.
07.29 முன்புபோல compile செய்து இயக்குவோம்
07.35 Enter the value of a and b
07.37 3 மற்றும் 6 என மதிப்புகளைத் தருகிறேன்.
07.44 Sum of a and b is 9. Sum is less than 10 என வெளியீடு உள்ளது.
07.52 இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம்.
07.57 program-க்கு வருவோம்.
08.00 இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.
08.03 Shift, Ctrl மற்றும் S ஐ ஒருசேர அழுத்துக
08.11 .cpp extension உடன் file ஐ சேமிப்போம். Save ல் சொடுக்கவும்
08.20 iostream என header file ஐ மாற்றுவோம்
08.26 using statement ஐ இங்கே சேர்ப்போம்.
08.30 search for an replace text option ஐ சொடுக்கவும்.
08.36 printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம்
08.40 Replace all ல் சொடுக்கி பின் Close ல் சொடுக்கவும்
08.46 இங்கே closing brackets ஐ நீக்குவோம்.
08.50 scanf statement ஐ cin statement ஆக மாற்றுவோம்.
08.55 எழுதுக cin பின் இரண்டு closing angle brackets
09.00 C++ ல் வரியை read செய்ய cin function ஐ பயன்படுத்துகிறோம்.


09.06 format specifiers ஐ நீக்குவோம்.
09.09 comma மற்றும் & ஐ நீக்குவோம்
09.12 இங்கே comma ஐ நீக்கி இரு closing angle brackets ஐ இடவும்.
09.17 மீண்டும் & மற்றும் closing brackets ஐ நீக்கி Save ல் சொடுக்கவும்
09.25 இங்கே closing bracket மற்றும் comma ஐ நீக்கவும்.
09.32 இப்போது \n மற்றும் format specifier-ஐ நீக்கவும்
09.37 இரு opening brackets ஐ இடுவோம்
09.42 மீண்டும் இரு opening brackets ஐ இட்டு double quotes னுள் \n ஐ இடவும்
09.49 இங்கேயும் closing bracket ஐ நீக்குவோம்.
09.54 மீண்டும் இங்கேயும் இங்கேயும் closing bracket ஐ நீக்குவோம்.
09.59 Save ஐ சொடுக்கவும்
10.03 இயக்குவோம்.
10.04 terminalக்கு வருவோம். promptஐ துடைக்கிறேன்.
10.10 compile செய்ய எழுதுக g++ ifstmt.cpp -o if1
10.21 file ifstmt.c ன் output parameterஐ overwrite செய்யாமல் இருக்க இங்கே if1 என்போம்
10.31 Enter ஐ தட்டுக
10.33 இயக்க ./if1 என எழுதி Enter ஐ தட்டுக
10.39 Enter the value of a and b. 20 மற்றும் 10 என மதிப்புகள் கொடுக்கிறேன்.
10.48 Sum of a and b is 30.
10.53 Sum is greater than 20 என வெளியீடு வருகிறது.
10.57 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
10.59 slideகளுக்கு வருவோம்.
11.03 இந்த tutorial லில் நாம் கற்றது, if statement உதாரணமாக. if(condition)

{…........

}

11.12 else if statement உதாரணமாக. else if(condition)

{….........

}

11.18 இப்போது பயிற்சி,
11.19 a என்பது b ஐ விட பெரியதா சிறியதா என சரிபார்க்க ஒரு program எழுதுக
11.24 குறிப்பு if statement ஐ பயன்படுத்துக.
11.28 a, b மற்றும் c இவற்றில் எதன் மதிப்பு பெரியது என காண மற்றொரு program ஐ எழுதுக
11.34 குறிப்பு: else-if statement ஐ பயன்படுத்துக.
11.39 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
11.44 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
11.49 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
11.58 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
12.05 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

12.16 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
12.21 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst