Koha-Library-Management-System/C2/OPAC/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | OPACஐ எப்படி பயன்படுத்துவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Searchஐ பயன்படுத்தி, ஒரு itemஐ எப்படி கண்டுபிடிப்பது |
00:13 | மற்றும் Advance Searchஐ பயன்படுத்தி, ஒரு itemஐ எப்படி கண்டுபிடிப்பது. |
00:18 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04, மற்றும் Koha பதிப்பு 16.05. |
00:32 | இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள உங்களுக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:38 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha -நிறுவப்பட்டிருக்க வேண்டும். |
00:44 | மற்றும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும். |
00:49 | இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும். |
00:56 | தொடங்குவதற்கு, நான் Microbiologyல் மேலும் இரண்டு புத்தகங்களை சேர்த்துள்ளேன். |
01:02 | ஒன்றின் ஆசிரியர் Powar and Daginawala , மற்றொன்றின் ஆசிரியர் Heritage. |
01:12 | இது, எனது libraryல் உள்ள புத்தகங்களின் மொத்தத்தை மூன்றாகச் செய்கிறது. |
01:17 | ஒரு முந்தைய டுடோரியலில் விளக்கியது போல், தொடர்வதற்கு முன் உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு உங்கள் libraryயினுள் மேலும் இரண்டு புத்தகங்களை சேர்க்கவும். |
01:27 | உங்கள் Web Browserஐ திறந்து, டைப் செய்க: 127.0.1.1/8000 |
01:39 | இந்த URL, நிறுவுதலின் போது கொடுக்கப்பட்ட port number மற்றும் domainனின் பெயரை அடிப்படையாக கொண்டிருக்கிறது. |
01:47 | நீங்கள் குறிப்பிட்டவாறு டைப் செய்யவும். பின், Enter.ஐ அழுத்தவும். |
01:54 | homepage Welcome to Spoken Tutorial Library திறக்கிறது. |
02:00 | மேல் இடது பக்கத்தில் உள்ள, Library catalog, drop down னிலிருந்து பின்வரும் தேர்வுகள் மூலமாக நாம் தேடலாம்: |
02:09 | Title, Author , Subject, ISBN , Series மற்றும் Call number. |
02:22 | வலது பக்க fieldல், Microbiology என இங்கு டைப் செய்து, fieldன் வலது பக்கத்தில் உள்ள Go ஐ க்ளிக் செய்கிறேன். |
02:33 | Microbiology, என்ற சொல்லை கொண்ட எல்லா Library itemகளும் முடிவுகளில் பட்டியலிடப்படுகின்றன. |
02:40 | நாம் தேடுகின்ற சொல்லை கொண்ட பட்டியலிடப்பட்ட itemகளை, userகளின் விருப்பத்திற்கேற்றவாறு நாம் மேலும் வைகைப்படுத்தலாம். |
02:47 | அதைச் செய்ய, பட்டியலின் வலது பக்கத்திற்கு சென்று, Relevance. tabஐ க்ளிக் செய்யவும். |
02:54 | Drop-downனிலிருந்து, நான் Author (A-Z).ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03:00 | உங்கள் தேவைக்கேற்றவாறு, நீங்கள் வேறு எந்த தொடர்புடைய தேர்வையும் தேர்ந்தெடுக்கலாம். |
03:06 | Author (A-Z),ஐ தேர்ந்தெடுக்கையில், Authorகளின் ஒரு பட்டியல் அகரமுதலான வரிசையில் காட்டப்படுகிறது. |
03:14 | பட்டியலிடப்பட்ட itemகளின் தலைப்பின் கீழ் பார்க்கவும். இங்கு, எல்லா libraryகளிலும் அந்த குறிப்பிட்ட item உள்ளதா என்று நாம் காணலாம். |
03:26 | அதனால், மேலும் சிறந்த முடிவுகளுக்கு நமது தேடலை நாம் எவ்வாறு மேம்படுத்த முடியும்? |
03:31 | அதற்கு, இடது முனைக்கோடியில் உள்ள ‘Refine Your Search' tab ஐ க்ளிக் செய்யவும். |
03:39 | பின், பின்வரும் பிரிவுகளின் கீழ் உள்ள பல்வேறு tabகளுக்கு செல்லவும்: Availability, Authors, Item Types மற்றும் Topics. |
03:52 | இப்போது, பொதுவான தேடலினால் தேவையான பொருள், ஒரு வேளை கிடைக்கவில்லையெனில், என்ன செய்யவேண்டும் என்பதை பார்ப்போம். |
04:01 | Search Catalog பக்கத்தில், Advanced Search. இணைப்பை க்ளிக் செய்யவும். |
04:07 | Search for என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
04:13 | பல drop-down தேர்வுகளை பயன்படுத்தி, நமக்கு தேவையான பொருளுக்கான தேடலை நாம் மேலும் சரி செய்யலாம். |
04:21 | இடது பக்கத்தில் உள்ள முதல் drop-downனிலிருந்து, பின்வருவனவற்றிலிருந்து தகுந்த தேர்வை தேர்ந்தெடுக்கவும்: Keyword, Subject , Title , Author , Publisher, Publisher Location, ISBN and Barcode. |
04:40 | நான் Subjectஐ தேர்ந்தெடுக்கிறேன். மற்றும், வலது பக்க fieldல், இடது பக்க drop-downனிலிருந்து தேர்ந்தெடுத்த தேர்வின் விவரங்களை டைப் செய்யவும். |
04:51 | நான் இங்கு Microbiology என டைப் செய்கிறேன். |
04:55 | இரண்டாவது drop-down தேர்வை பயன்படுத்தி, நான் Author ஐ Patel. என தேர்ந்தெடுக்கிறேன். |
05:03 | மூன்றாவது drop-down தேர்வை பயன்படுத்தி, நான் Publisherஐ Pearson. என தேர்ந்தெடுக்கிறேன். |
05:11 | அதே பக்கத்தில், Item Type பிரிவின் கீழ் மற்ற தேர்வுகளை கவனிக்கவும்- |
05:18 | Book, Reference மற்றும் Serial |
05:23 | இவற்றை பின்தொடர்ந்து வருகின்ற தேர்வுகள்- Publication date range, Language மற்றும் Sorting. |
05:34 | அதனால், Item Type பிரிவின் கீழ், Books.க்கான ரேடியோ பட்டனை நான் க்ளிக் செய்கிறேன். |
05:41 | நான் Publication date range ஐ காலியாக விடுகிறேன். |
05:46 | Language, க்கு, drop-downனிலிருந்து English ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:52 | Sorting, பிரிவின் கீழ், Sort by: க்கு, நான் Author (A-Z).ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
06:00 | எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, பக்கத்தின் கீழுள்ள Searchஐ க்ளிக் செய்யவும். |
06:07 | இந்த பக்கம், பின்வருவனவற்றை கொண்ட itemகளின் ஒரு பட்டியலை கொண்டிருக்கும்: Subjectக்கு Microbiology, |
06:16 | Author க்கு Patel Arvind H., |
06:20 | Publisher க்கு Pearson. |
06:23 | இப்போது, Advanced Search பக்கத்திற்கு திரும்பச் சென்று, Search for: பிரிவின் கீழுள்ள More Options பட்டனை க்ளிக் செய்யவும்: |
06:36 | அவ்வாறு செய்கையில், Advanced search பக்கத்தின் layout மாறுகிறது. |
06:42 | மீண்டும், முதல் drop-downனிலிருந்து நான் Subjectஐ தேர்ந்தெடுக்கிறேன். |
06:48 | பிறகு, நான் Microbiology. என டைப் செய்கிறேன். |
06:52 | இப்போது, தேர்வுகளின் இரண்டாவது வரிசைக்கு வரவும். |
06:56 | முதல் drop-downல், தேர்வு “and” ஐ நான் அப்படியே வைத்துக்கொள்கிறேன். |
07:03 | மற்றும், வலது பக்கத்தில் உள்ள drop-downல், நான் “Author”.ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
07:08 | பின், இதற்கு வலது பக்கத்தில், நான் “Patel” என டைப் செய்கிறேன். |
07:13 | அடுத்து, தேர்வுகளின் மூன்றாவது வரிசைக்கு வரவும். முதல் drop-downல், தேர்வு “or”.ஐ நான் தேர்ந்தெடுக்கிறேன். |
07:22 | மற்றும், வலது பக்கத்தில் உள்ள drop-downல், நான் “Author”.ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
07:28 | பின், இதற்கு வலது பக்கத்தில், நான் “Heritage” என டைப் செய்கிறேன். |
07:33 | தேவைப்பட்டால், Item type பிரிவின் கீழுள்ள search தேர்வுகளை பயன்படுத்தி அல்லது மீதமுள்ள தேர்வுகளை பயன்படுத்தி, நீங்கள் தேடுதலை மேலும் விரிவாக்கலாம். |
07:45 | எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, பிரிவின் கீழுள்ள Search பட்டனை க்ளிக் செய்யவும். |
07:52 | இவ்வாறு, OPACஐ பயன்படுத்தி libraryல் உள்ள itemகளை நாம் தேடலாம். |
07:58 | இந்த டுடோரியலின் மூலம், ஒரு library itemஐ ஒரு user எவ்வாறு எளிதாக தேட முடியும் என்று நீங்கள் இப்போது கற்றுக் கொண்டீர்கள். |
08:05 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
08:08 | சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியலில் நாம், Searchஐ பயன்படுத்தி, ஒரு itemஐ கண்டுபிடிக்கவும் |
08:17 | Advance Searchஐ பயன்படுத்தி, ஒரு itemஐ கண்டுபிடிக்கவும் கற்றோம். |
08:22 | பயிற்சியாக- Biology, என்ற keywordஐ பயன்படுத்தி, OPAC. ல் உள்ள Journalகளின் பட்டியலை தேடவும். |
08:30 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
08:37 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
08:47 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
08:51 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
09:03 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |