QGIS/C2/Creating-Dataset-Using-Google-Earth-Pro/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:57, 8 February 2021 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Creating Dataset using Google Earth Pro குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது-
00:10 Google Earth Proஐ தரவிறக்கி நிறுவுவது
00:13 ஒரு datasetஐ உருவாக்கி செலவதற்கு Google Earth Proஐ பயன்படுத்துவது
00:19 Google Earth Proஐ பயன்படுத்தி, point மற்றும் polygon file களை Kml format ல் உருவாக்குவது
00:26 QGISல் Kml file களை திறக்கவும்
00:30 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04,
00:38 QGIS பதிப்பு 2.18
00:42 Google-Earth Pro பதிப்பு 7.3
00:46 Mozilla Firefox browser பதிப்பு 54.0 மற்றும்
00:50 ஒரு வேலை செய்கின்ற Internet இணைப்பு
00:55 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும்
01:01 முன்நிபந்தனை QGIS டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும்.
01:07 Google Earth என்பது பூமியின் 3 டி பிரதிநிதித்துவத்தை வழங்கும் கணினி நிரலாகும்.
01:15 இந்த program, செயற்கைக்கோள் படங்கள், வான்வழி புகைப்படம் எடுத்தல் மற்றும் 'ஜி.ஐ.எஸ் தரவு' மூலம் மிகைப்படுத்தி பூமியை வரைபடமாக்குகிறது.
01:25 இந்த program userகளை நகரங்கள் மற்றும் இயற்கை காட்சிகளை பல்வேறு கோணங்களில் பார்க்க அனுமதிக்கிறது.
01:32 Google Earth Proவை தரவிறக்கி நிறுவுவோம்
01:37 உங்கள் கணினியில் program ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால் இந்த படிநிலையை நீங்கள் தவிர்க்கலாம்.
01:42 Google Search பக்கத்தை திறக்கவும்
01:46 search barல் டைப் செய்க: “ Download Google Earth Pro”. பின், Enterஐ அழுத்தவும்
01:53 முடிவுகளுடன் கூடிய ஒரு பக்கம் திறக்கிறது
01:56 முதல் முடிவு, Earth Versions-Google Earthஐ க்ளிக் செய்யவும்
02:02 Google Earthஐ தரவிறக்குவதற்கு, 3 தேர்வுகளுடன் கூடிய ஒரு பக்கம் திறக்கிறது
02:08 திரையின் கீழ் வலது பக்கத்தில் உள்ள Download Earth Pro on desktop பட்டனை க்ளிக் செய்யவும்
02:15 Download Google Earth Pro (Linux) தனியுரிமைக் கொள்கை மற்றும் விதிமுறைகள் பக்கம் திறக்கிறது.
02:22 இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் படிக்கவும்.
02:26 நீங்கள் பதிவிறக்கவிருக்கும் Google Earth Proவின் பதிப்பு இங்கே காட்டப்படும்.
02:32 பொருத்தமான ரேடியோ பட்டனை க்ளிக் செய்து, உங்கள் பதிவிறக்க தொகுப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
02:38 நான் 64 bit dot debஐ தேர்ந்தெடுக்கிறேன்
02:42 Accept & Download பட்டனை க்ளிக் செய்யவும்
02:47 ஒரு dialog-box திறக்கிறது, Save file தேர்வை தேர்ந்தெடுத்து, OK பட்டனை க்ளிக் செய்யவும்
02:54 File, Downloads folderக்கு தரவிறக்கப்படுகிறது
02:58 நிறுவுதலுக்கு, terminalஐ திறக்கவும்
03:02 directory ஐ Downloadsக்கு மாற்றவும்
03:06 திரையில் காட்டியுள்ளபடி, commandஐ டைப் செய்யவும். Enterஐ அழுத்தவும்
03:12 கேட்கப்படும் போது, system passwordஐ டைப் செய்யவும்
03:18 சில வினாடிகளில், program நிறுவுதல் முடிவடைகிறது
03:23 terminalஐ மூடவும்
03:26 Dashboardஐ திறந்து, search boxல் Google Earth Pro என டைப் செய்யவும்
03:32 Google Earth Pro iconஐ க்ளிக் செய்யவும். இது Google Earth Pro interface ஐ திறக்கும்
03:40 Windows மற்றும் Macல், Google Earth Proஐ நிறுவதற்கான படிகள் Additional materialலில் கொடுக்கப்பட்டுள்ளன
03:48 Start-up Tips பக்கத்தை படிக்கவும்
03:52 Windowவை மூட, Close பட்டனை க்ளிக் செய்யவும்
03:56 இப்போது Google Earthஐ பயன்படுத்தி, ஒரு data setஐ உருவாக்குவோம்
04:00 இடது panelலில், Places tabன் கீழ், Temporary Places folderஐ ரைட்-க்ளிக் செய்யவும்
04:07 Addஐ தேர்ந்தெடுத்து, sub-menu வில் folderஐ தேர்ந்தெடுக்கவும்
04:12 Google Earth - New Folder dialog-box திறக்கிறது
04:17 Name fieldல் டைப் செய்க: Places in Maharashtra.
04:22 இரண்டு check boxகளை check செய்யவும்
04:24 Allow this folder to be expanded மற்றும் Show contents as options.
04:31 கீழ் வலது மூலையில் உள்ள, OK பட்டனை க்ளிக் செய்யவும்
04:35 Places in Maharashtra folder, Places panelலில் சேர்க்கப்படுகிறது
04:40 இப்போது இந்த folderலில், ஒரு point data setஐ உருவாக்குவோம்
04:45 அந்த இடத்திற்கு செல்ல நாம் Google Earthஐ பயன்படுத்துவோம்
04:50 இடது panelலில் search boxல், டைப் செய்க: Mumbai. Search பட்டனை க்ளிக் செய்யவும்
05:00 Google Earth, Mumbai பகுதியை கண்டுபிடிப்பதற்கு, வரைபடத்தை பெரிதாக்கும்
05:05 Mumbaiன் இடம் காட்டப்படுகிறது
05:10 Toolbarல் மஞ்சள் நிற pin எனக் காட்டப்பட்டுள்ள Add placemark tool ஐ க்ளிக் செய்யவும்
05:17 Google-Earth New Placemark dialog-box திறக்கிறது
05:22 Name fieldல் டைப் செய்க: Mumbai
05:26 Name fieldக்கு அடுத்துள்ள Pin icon ஐ க்ளிக் செய்யவும்
05:31 தேர்ந்தெடுப்பதற்கு தேர்வுகளுடன் Icon box திறக்கிறது. நான் சிவப்பு pin iconஐ தேர்ந்தெடுக்கிறேன்
05:39 Icon dialog-box ல் கீழ் வலது மூலையில் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
05:46 New placemark dialog-box ல், OK பட்டனை க்ளிக் செய்யவும்
05:51 வரைபடத்தில் ஒரு புதிய placemark சேர்க்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்
05:56 Places panelலில் Mumbaiன் இடம் சேர்க்கப்படுகிறது
06:01 search panel.லில் தேடுதலின் முடிவை clear செய்யவும். search boxல் Pune என டைப் செய்யவும்
06:09 தேடுதல் தேர்வுகளில் இருந்து Pune Maharashtraவை தேர்ந்தெடுக்கவும். Search பட்டனை க்ளிக் செய்யவும்
06:17 Google Earth, Pune நகரத்தை கண்டுபிடிக்க வரைபடத்தை பெரிதாக்கும்
06:22 Puneவின் இடம் வரைபடத்தில் தெரிகிறது. Puneவிற்கு ஒரு Placemarkஐ சேர்ப்போம்
06:31 toolbar ல் Add placemarkஐ சேர்க்கவும்
06:35 placemark Mumbaiக்கு நாம் செய்த அதே படிகளை பின்பற்றவும்
06:43 எல்லா படிகளும் முடிந்த பிறகு, Puneவிற்கு ஒரு placemark சேர்க்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்
06:50 அதே முறையை பின்பற்றி, மேலும் சில நகரங்களை குறியிடவும்: Satara, Nashik, Amravati, Chandrapur, Jalna, Latur, மற்றும் Dhule.
07:05 Maharashtraவில் ஒரு சில இடங்களுக்கான இருப்பிட வரைபடத்தை உருவாக்கியுள்ளோம்.
07:11 இப்போது இந்த இடங்களுக்கு ஒரு boundary layerஐ நாம் உருவாக்குவோம்.
07:16 Places in Maharashtra folder iconஐ ரைட்-க்ளிக் செய்யவும்
07:20 Add தேர்வை க்ளிக் செய்யவும். sub-menuக்களில் இருந்து Folderஐ தேர்ந்தெடுக்கவும்
07:28 Google Earth New Folder dialog-box திறக்கிறது
07:33 Name fieldல் டைப் செய்க: Boundary
07:37 திரையின் கீழ் வலது மூலையில் உள்ள Ok பட்டனை க்ளிக் செய்யவும்
07:43 Boundary folder, Places panelக்கு சேர்க்கப்படுகிறது
07:48 சிறிதாக்க, வலது பக்கத்தில் உள்ள sliderஐ இழுக்கவும்
07:54 Maharashtra எல்லையைக் காணும் வரை sliderஐ இழுக்கவும்.
07:59 toolbar ல் Add polygon தேர்வை க்ளிக் செய்யவும்
08:04 Name fieldல் டைப் செய்க: Boundary
08:08 Maharashtraவின் எல்லையில் க்ளிக் செய்யத் தொடங்கி, தோராயமாக Maharashtra எல்லையை வரையவும்.
08:31 முடிந்தவுடன் boxல் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
08:36 Boundary polygon layer, Places panelலில் சேர்க்கப்படுகிறது
08:41 Places in Maharashtra. folderஐ ரைட்-க்ளிக் செய்யவும்
08:46 sub-menuக்களில் இருந்து Save Place as...ஐ க்ளிக் செய்யவும்
08:51 Save file dialog-box திறக்கிறது
08:55 Places in Maharashtra என்று அந்த fileக்கு பெயரிடுவோம்
09:00 அந்த fileஐ சேமிக்க பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுக்கவும். நான் Desktop.ஐ தேர்ந்தெடுக்கிறேன்
09:07 இந்த fileஐ இரண்டு வேறுபட்ட file formatகளில் நீங்கள் சேமிக்கலாம்
09:12 Files of type” dropdownல், Kml மற்றும் Kmz தேர்வுகளை நீங்கள் காண்பீர்கள்
09:20 Kmz, Kml fileன் compressed பதிப்பாகும்
09:25 Kmz file format, பொதுவாக ஒரு பெரிய fileஐ சேமிக்க பயன்படுத்தப்படுகிறது
09:31 இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விருப்பங்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
09:36 நான் fileஐ சேமிக்க Kml format ஐ பயன்படுத்துகிறேன்
09:40 Files of type fieldல், Kml formatஐ க்ளிக் செய்யவும்
09:45 dialog-box ன் கீழ் வலது மூலையில் உள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும்
09:51 இவ்வாறே Boundary fileஐயும், Kml format ல் சேமிக்கவும்
09:56 Places in Maharashtra.kml மற்றும் Boundary.kml என்ற இரண்டு fileகள், Desktopல் சேமிக்கப்படுகின்றன
10:06 அடுத்து, Google Earth Proல் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு fileகளையும் QGISல் திறப்போம்
10:13 Open QGIS interface ஐ திறக்கவும்
10:17 இடது menuவில் Add Vector Layer tool ஐ க்ளிக் செய்யவும்
10:22 Add Vector Layer dialog-box திறக்கிறது
10:26 Source fieldல் Browse பட்டனை க்ளிக் செய்யவும்
10:31 Desktop folderக்கு செல்லவும்
10:35 Places in Maharashtra.kml மற்றும் Boundary.kml fileகள் இரண்டையும் தேர்ந்தெடுக்கவும்
10:42 Open பட்டனை க்ளிக் செய்யவும்
10:45 Add vector layer dialog-boxல், Open பட்டனை க்ளிக் செய்யவும்
10:50 Select vector Layers to add dailog-boxல், Select All பட்டனை க்ளிக் செய்யவும். OK பட்டனை க்ளிக் செய்யவும்
11:01 import செய்யப்பட்ட இரண்டு fileகளும், QGIS canvas ல் layerகளாக சேர்க்கப்படுகின்றன
11:08 இந்த layerகள், QGISல் உள்ள toolகளைப் பயன்படுத்தி மேலும் பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படலாம்.
11:15 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது, - Google Earth Proஐ தரவிறக்கி நிறுவுவது,
11:23 ஒரு datasetஐ உருவாக்கி செலவதற்கு Google Earth Proஐ பயன்படுத்துவது
11:29 Google Earth Proஐ பயன்படுத்தி, point மற்றும் polygon file களை Kml format ல் உருவாக்குவது
11:36 QGISல் Kml file களை திறப்பது
11:40 பயிற்சியாக, இந்தியாவில் உள்ள மாநில தலைநகரங்களின் ஒரு data setஐ உருவாக்கவும்.
11:46 point மற்றும் boundary fileகளை Kml format ல் சேமிக்கவும். குறிப்பு: அனைத்து மாநில தலைநகரங்களையும் கண்டுபிடித்து இந்தியாவின் boundaryஐ வரையவும்.
11:57 உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இவ்வாறு இருக்க வேண்டும்
12:03 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
12:11 Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
12:21 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
12:24 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
12:31 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree