QGIS/C4/Interpolation/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | QGISல், Interpolation Methods குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- Interpolation முறைகள் |
00:12 | Inverse Distance Weighting (IDW) மற்றும் Triangulated Irregular Network (TIN) |
00:18 | இங்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04, |
00:24 | QGIS பதிப்பு 2.18 |
00:28 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும் |
00:34 | முன்நிபந்தனை டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும் |
00:40 | இந்த டுடோரியலுக்கு தேவையான data fileகள் Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன |
00:46 | அதை தரவிறக்கி, folderன் contentகளை extract செய்யவும் |
00:51 | நான் Desktopல் இந்த folderஐ சேமித்துள்ளேன். folderஐ திறக்க, அதை டபுள்-க்ளிக் செய்யவும் |
00:59 | extract செய்யப்பட்ட folderல், Air Stations.shpஐ கண்டுபிடிக்கவும் |
01:04 | இந்த file மகாராஷ்டிராவில் அமைந்துள்ள வானிலை ஆய்வு நிலையங்களைக் காட்டுகிறது. |
01:10 | Interpolation தனித்துவமான புள்ளிகளிலிருந்து தொடர்ச்சியான மேற்பரப்பை உருவாக்குவதற்கான ஒரு முறை ஆகும் |
01:17 | QGISல், interpolationக்கு இரண்டு வகையான முறைகள் உள்ளன |
01:22 | Inverse Distance Weighting (IDW) மற்றும் Triangulated Irregular Network (TIN) |
01:28 | Interpolation Plugin, Point layerல் இருந்து interpolated rasterஐ உருவாக்க பயன்படுகிறது |
01:35 | QGIS interfaceஐ திறக்கவும் |
01:38 | நான் இங்கு QGIS interface ஐ திறந்துள்ளேன் |
01:43 | இங்கு காட்டியுள்ளபடி, Plugins menu வை பயன்படுத்தி interpolation plugin ஐ enable செய்யவும் |
01:49 | Interpolation pluginக்கான check-box ஐ check செய்யவும். dialog-box ஐ மூடவும் |
01:56 | Raster menuவை திறக்கவும் |
01:59 | Interpolationதேர்வு இப்போது Raster menu விற்கு சேர்க்கப்படுகிறது |
02:04 | Add Vector Layer toolஐ க்ளிக் செய்யவும். Add vector layer dialog-box திறக்கிறது |
02:11 | Browseபட்டனை க்ளிக் செய்து, Code files folderக்கு செல்லவும். இங்கு நாம் இரண்டு fileகளை தேர்ந்தெடுப்போம் |
02:20 | AirStations.shp fileஐ தேர்ந்தெடுக்கவும் |
02:24 | Keyboardல் Ctrl key ஐ அழுத்திக்கொண்டே, MH_Districts.shpஐ க்ளிக் செய்யவும் |
02:32 | Open பட்டனை க்ளிக் செய்யவும் |
02:35 | Add vector layer dialog-boxல் உள்ள, Open பட்டனை க்ளிக் செய்யவும் |
02:40 | Canvas ல் மகாராஷ்டிரா மாநிலத்தின் வரைபடத்தைக் காண்கிறோம். |
02:45 | ஒவ்வொரு மாவட்டத்திலும் Air stationகளின் இருப்பிடங்கள் புள்ளி அம்சங்களாகக் காட்டப்படுகின்றன. |
02:52 | இந்த புள்ளி அம்சங்களை label செய்வோம் |
02:56 | Air Stations layerஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
03:00 | Layer Properties dialog box ஐ திறக்க, Properties தேர்வை க்ளிக் செய்யவும் |
03:06 | இடது panelலில் உள்ள, Labels தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
03:11 | மேலே உள்ள drop-downஐ க்ளிக் செய்யவும் |
03:15 | Drop-downல் இருந்து, Show labels for this layerஐ தேந்தெடுக்கவும் |
03:20 | Label with drop-downல், Air underscore Pollut ஐ தேந்தெடுக்கவும். கீழே scroll செய்யவும் |
03:28 | label style ஐ மாற்றுவதற்கான பல்வேறு தேர்வுகளை நீங்கள் இங்கு பார்ப்பீர்கள் |
03:33 | தேவையான style ஐ தேர்வு செய்து, OK பட்டனை க்ளிக் செய்யவும் |
03:38 | Canvasல், புள்ளிகளுடன் கூடிய labelகள் காட்டப்படும் |
03:43 | Air Stations dot shp layer.க்கான attribute table ஐ திறக்கவும் |
03:49 | attribute tableலில், ஒவ்வொரு நிலையத்திற்குமான Nitrogen Oxides அளவுகள் வழங்கப்படுகின்றன. |
03:57 | Nox attributeனால், Air Stations layerஐ interpolate செய்வோம் |
04:03 | இங்கு interpolationக்கு IDW methodஐ பயன்படுத்துவோம். attribute tableஐ மூடவும் |
04:11 | Inverse Distance Weighting முறை மாதிரி புள்ளிகளுக்கு எடையை அளிக்கிறது. |
04:17 | வெப்பநிலை, மழை, மக்கள் தொகை போன்ற dataகளை interpolate செய்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. |
04:26 | QGIS interfaceக்கு திரும்பவும் |
04:29 | Raster menuவை க்ளிக் செய்யவும் |
04:32 | interpolation pluginஐ க்ளிக் செய்யவும் |
04:35 | Interpolation plugin dialog-box திறக்கிறது |
04:39 | Input பிரிவில், Vector layersக்கான தேர்வாக Air Stationsஐ தேர்ந்தெடுக்கவும் |
04:46 | இங்கு முன்னிருப்பாக, Air Stations layer ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது |
04:52 | Interpolation attributeக்கு NOxஐ தேர்ந்தெடுக்கவும் |
04:57 | Add பட்டனை க்ளிக் செய்யவும் |
05:00 | இது Air Stations dot shp layerஐ Nitrogen Oxide அம்சத்துடன் சேர்த்துவிடும் |
05:06 | Typedrop-downல், Points ஐ தேர்ந்தெடுக்கவும். இங்கு முன்னிருப்பாக Points தேர்ந்தெடுக்கப்படுகிறது |
05:14 | Output பிரிவுக்கு செல்லவும் |
05:17 | Interpolation methodஐ, Inverse Distance Weightingஆக தேர்ந்தெடுக்கவும். எல்லா settingகுகளையும் ஆக வைத்திருக்கவும் |
05:26 | Output fileக்கு அடுத்துள்ள மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்யவும் |
05:30 | விருப்பமான folderலில், outputஐ IDW underscore Stationsஆக சேமிக்கவும். நான் அதை Desktopல் சேமிக்கிறேன் |
05:40 | Add result to project uncheck செய்யப்படாமல் இருந்தால், அதை check செய்யவும் |
05:45 | OK பட்டனை க்ளிக் செய்யவும் |
05:47 | black மற்றும் white பகுதிகளைக் கொண்ட வரைபடம் திரையில் காண்பிக்கப்படும். |
05:53 | வெள்ளை பகுதிகள் அதிக அளவு Nitrogen Oxideகளை குறிக்கின்றன. |
05:58 | கறுப்புப் பகுதிகள் குறைந்த அளவு Nitrogen Oxideகளை 'குறிக்கின்றன. |
06:03 | மேலும் தெளிவுக்கு , layerன் symbology ஐ மாற்றுவோம். |
06:08 | IDW layerக்கான Layer propertiesகளை திறக்கவும் |
06:13 | இடது panelலில், Style தேர்வை க்ளிக் செய்யவும் |
06:17 | Render typeக்கு, Single band Pseudocolorஐ தேர்ந்தெடுக்கவும் |
06:22 | Interpolation drop-downல் இருந்து Discreteஐ தேர்ந்தெடுக்கவும் |
06:26 | நிற drop-down ல் இருந்து Spectralஐ தேர்வு செய்யவும். Invert check-boxஐ check செய்யவும் |
06:33 | Classify பட்டனை க்ளிக் செய்யவும் |
06:36 | மற்ற அனைத்து settingகளையும் முன்னிருப்பாக வைக்கவும் |
06:40 | Apply மற்றும் OK பட்டனை க்ளிக் செய்யவும் |
06:44 | Canvasல் Spectral வண்ணங்களில் உள்ள பகுதிகளுடன் வரைபடம் காட்டப்படும். |
06:50 | சிவப்பு நிறப் பகுதிகளில் Nitrogen Oxideகளின் அதிக செறிவு உள்ளது. |
06:56 | நீலப் பகுதிகளில் குறைந்த பட்சம் Nitrogen Oxideகள் உள்ளன. |
07:01 | tool bar ல் உள்ள Save toolஐ பயன்படுத்தி, projectஐ சேமிக்கவும் |
07:06 | பொருத்தமான பெயரைக் கொடுங்கள். தகுந்த இடத்தைத் தேர்வுசெய்க. |
07:12 | Save பட்டனை க்ளிக் செய்யவும் |
07:15 | இப்போது Triangulated Irregular Network interpolation முறையை கற்றுக்கொள்வோம் |
07:22 | முக்கோணங்களால் உருவான மேற்பரப்பை உருவாக்க TIN பயன்படுத்தப்படுகிறது. |
07:28 | இது nearest neighbor point தகவலை அடிப்படையாகக் கொண்டது. |
07:33 | TIN முறை பொதுவாக elevation dataக்கு பயன்படுத்தப்படுகிறது. |
07:38 | ஒரு புதிய QGIS window வை திறக்கவும். tool bar ல் உள்ள New tool ஐ க்ளிக் செய்யவும் |
07:45 | Points dot shp layer. ஐ load செய்ய, Add Vector Layer tool ஐ பயன்படுத்தவும் |
07:52 | Points layerன் Attribute tableஐ திறக்கவும் |
07:56 | ஒவ்வொரு புள்ளி அம்சத்திற்குமான Elevation data வை கவனிக்கவும் |
08:01 | Attribute tableஐ மூடவும் |
08:04 | மீண்டும் Raster menu வில் உள்ள Interpolation windowவை திறக்கவும் |
08:09 | Inputபிரிவில், Vector layers drop-down ல் Points layerஐ தேர்ந்தெடுக்கவும். Interpolation attributeஆக elevation ஐ தேர்ந்தெடுக்கவும் |
08:20 | Add பட்டனை க்ளிக் செய்யவும். இது interpolatingகுக்கு elevation attributeஉடன் கூடிய Points layerஐ சேர்க்கும் |
08:28 | Type drop-downல் உள்ள Points, தானாகவே தேர்வு செய்யப்படுகிறது. அதை அப்படியே விட்டுவிடவும் |
08:34 | Output பிரிவில், Interpolation methodஆக Triangular interpolationஐ தேர்ந்தெடுக்கவும் |
08:41 | output fileஐ TIN-Stations என சேமித்து, OK button. பட்டனை க்ளிக் செய்யவும் |
08:49 | Canvasல் triangulated interpolationஐக் காட்டும் வரைபடம் தோன்றுகிறது . |
08:54 | இந்த layerக்கான symbologyஐ மாற்றவும் |
08:58 | நாம் IDW layerக்கு செய்த அதே படிகளை பின்பற்றவும் |
09:12 | வரைபடம் இப்போது Spectral வண்ணங்களில் காட்டப்படுகிறது . சிவப்பு நிறத்தில் உள்ள பகுதிகள் அதிக உயரத்தைக் குறிக்கின்றன. |
09:21 | நீல நிறத்தில் உள்ள பகுதிகள் குறைந்த உயரத்தைக் குறிக்கின்றன. |
09:25 | toolbar ல் உள்ள Save tool ஐ பயன்படுத்தி, வரைபடங்களை சேமிக்கவும் |
09:30 | சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது, - Interpolationனின் இரண்டு முறைகள் |
09:37 | Inverse Distance Weighting (IDW) மற்றும் Triangulated Irregular Network (TIN) |
09:43 | பயிற்சியாக, SO2 attributeஉடன் கூடிய IDW interpolated வரைபடத்தை Air Stations layerக்காக உருவாக்கவும் |
09:52 | இங்கு காட்டியுள்ளபடி உங்கள் வரைபடம் இருக்கவேண்டும் |
09:56 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
10:03 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும் |
10:13 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
10:17 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |