QGIS/C4/DEM-Analysis/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:40, 3 February 2021 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 QGISல், DEM Analysis குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது-
00:11 SRTM data வலைத்தளத்திலிருந்து DEM data வை தரவிறக்குவது
00:16 DEMன் hill shadeஐ காட்டுவது
00:19 இங்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04,
00:25 QGIS பதிப்பு 2.18 மற்றும் ஒரு வேலை செய்கின்ற இணைய இணைப்பு
00:33 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும்
00:39 முன்நிபந்தனை டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும்
00:45 Digital Elevation Model அல்லது DEM என்பது ஒரு raster file ஆகும்
00:50 அது ஒவ்வொரு raster cell க்கான elevation dataவை காட்டுகிறது
00:55 DEMs வெற்று பூமி நிலப்பரப்பைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.
01:00 நிலப்பரப்பு பொதுவாக தாவரங்கள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட அம்சங்கள் இல்லாதது.
01:06 DEMகள் உயரத்தின் அடிப்படையில் ஒரு பகுதியின் கணக்கீடுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
01:14 'DEM' dataவை தரவிறக்குவோம்.
01:17 கொடுக்கப்பட்ட இணைப்பை ஏதேனும் web browserல் திறக்கவும்.
01:21 Shuttle radar topography mission (SRTM) data வலைத்தளம் திறக்கிறது
01:27 SRTM dataவை இந்த வலைத்தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கலாம்
01:32 Download Managerபக்கத்தில், elevation modelகள் tileகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன
01:39 Tile Size மற்றும் Formatக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன
01:44 ரேடியோ பட்டன்களை க்ளிக் செய்து, tileன் அளவு மற்றும் formatஐ நாம் தேர்வு செய்யலாம்
01:50 உலக வரைபடத்திற்கு, பக்கத்தின் கீழே scroll செய்யவும்
01:54 உலக வரைபடத்தை பெரிதாக்க, வரைபடத்தின் இடது மூலையில் உள்ள + குறியை பயன்படுத்தவும்
02:00 Maharashtra tileஐ க்ளிக் செய்யவும்
02:03 உலக வரைபடத்தின் மேல் இடது மூலையில் உள்ள Searchபட்டனை க்ளிக் செய்யவும்
02:09 Download window திறக்கிறது
02:12 Description தலைப்பிற்கு கீழே scroll செய்யவும். கீழயுள்ள Download SRTM இணைப்பை க்ளிக் செய்யவும்
02:20 ஒரு dialog-box திறக்கிறது, Save File தேர்வை தேர்ந்தெடுக்கவும். OK Searchபட்டனை க்ளிக் செய்யவும்
02:29 எனது கணினியில், zip file , Downloads folder க்கு தரவிறக்கப்படுகிறது
02:34 zip fileன் contentகளை extract செய்யவும்
02:38 ரைட்-க்ளிக் செய்து, Extract Here தேர்வை தேர்ந்தெடுக்கவும்
02:43 extract செய்யப்பட்ட folderஐ டபுள்-க்ளிக் செய்யவும். இது ஒரு DEM dataset
02:50 வெவ்வேறு file நீட்டிப்புகளுடன் பல fileகளை இங்கே காண்கிறோம்.
02:55 Folderஐ மூடவும்
02:57 QGIS interfaceஐ திறக்கவும்
03:00 menu barல் உள்ள Layer menu வை க்ளிக் செய்யவும்
03:04 sub-menuவில் இருந்து ஐ தேர்ந்தெடுக்கவும். Add Raster Layer தேர்வை க்ளிக் செய்யவும்
03:11 Data source dialog-box திறக்கிறது
03:14 SRTM வலைத்தளத்திலிருந்து தரவிறக்கப்பட்ட SRTM folder க்கு செல்லவும்
03:21 Folderன் contentல் இருந்து, .tif நீட்டிப்புடன் கூடிய fileஐ தேர்ந்தெடுக்கவும். Open பட்டனை க்ளிக் செய்யவும்
03:31 Canvasல் DEMன் நிலப்பரப்பை நீங்கள் பார்ப்பீர்கள்
03:36 நிலப்பரப்பு பற்றிய எல்லா 3D informationஐயும் DEM கொண்டிருக்கிறது
03:41 raster image ல் உள்ள ஒவ்வொரு pixelஉம் அந்த இடத்தின் சராசரி உயரத்தைக் குறிக்கிறது. இந்த உயரம் மீட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது.
03:52 இருண்ட pixelகள் குறைந்த உயரத்தில் உள்ள பகுதிகளைக் குறிக்கின்றன.
03:57 மெல்லிய pixelகள் அதிக உயரமுள்ள பகுதிகளைக் குறிக்கின்றன.
04:02 இந்த வரைபடத்தின் DEM பகுப்பாய்வைத் தொடங்குவோம்.
04:07 menu bar ல் உள்ள Raster menu வை க்ளிக் செய்யவும்
04:11 drop down ல் Analysisஐ க்ளிக் செய்யவும். sub-menu வில், DEM (Terrain models).ஐ க்ளிக் செய்யவும்
04:19 DEM dialog-box திறக்கிறது
04:22 Input file field, DEM layer ஐ முன்னிருப்பான தேர்ந்தெடுப்பாக கொண்டிருக்கிறது
04:28 Output fileக்கு அடுத்துள்ள Select பட்டனை க்ளிக் செய்யவும்
04:33 Save the results to.. Dialog-box திறக்கிறது
04:37 dialog-box ல், fileக்கு Hillshade.tif.என பெயரிடவும்
04:44 நான் Desktopல் அதை சேமிக்கிறேன்
04:47 Save பட்டனை க்ளிக் செய்யவும்
04:50 Hillshadeஐ, Mode தேர்வாக தேர்ந்தெடுக்கவும்
04:54 இங்கு முன்னிருப்பாக Hillshade ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
04:59 Load into canvas when finishedக்கு அடுத்துள்ள check-boxஐ check செய்யவும்
05:05 இங்கு முன்னிருப்பாக இது ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
05:09 முன்னிருப்பான settingகுகளை அப்படியே விட்டுவிடவும்
05:12 Ok பட்டனை க்ளிக் செய்யவும்
05:15 Processing Completed என்ற செய்தியை கொண்ட pop-up box திறக்கிறது. Ok பட்டனை க்ளிக் செய்யவும்
05:22 Qgis.bin dialog-boxல் உள்ள Ok பட்டனை க்ளிக் செய்யவும்
05:27 DEM dialog-boxன் Close பட்டனை க்ளிக் செய்யவும்
05:32 Hillshadeஎன்ற ஒரு புதிய layer, Layers panelக்கு சேர்க்கப்படுகிறது
05:37 Canvasல், Hillshade mode ல் ஒரு raster map ஐ நீங்கள் காண்பீர்கள்
05:42 ஒரு 3D படத்தை உருவாக்க ஒளி மற்றும் நிழலைப் பயன்படுத்தி இந்த வரைபடம் உருவாக்கப்படுகிறது.
05:48 மாதிரியை மேலும் முன்னிலைப்படுத்த, நாங்கள் Hillshadeஐ ஒரு overlay ஆக பயன்படுத்துவோம்.
05:54 இப்போது அசல் DEM layer ன் symbologyஐ நாம் மாற்றுவோம்
05:59 Layers Panelலில் srtm layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும்
06:04 context menu வில் இருந்து, Properties தேர்வை தேர்ந்தெடுக்கவும்
06:09 Layer Properties dialog-box திறக்கிறது
06:13 இடது panelலில் இருந்து Styleஐ தேர்ந்தெடுக்கவும்
06:17 Band Rendering பிரிவின் கீழ், Render type Singleband pseudocolor.க்கு மாற்றவும்
06:24 Load minimum/maximum valuesன் கீழ், minimum/maximum ரேடியோ பட்டனை க்ளிக் செய்யவும்
06:33 Interpolation drop-downல் இருந்து Linearஐ தேர்ந்தெடுக்கவும்
06:37 இங்கு ஒரு முன்னிருப்பான தேர்ந்தெடுப்பு இருக்கிறது. Color drop-downல் இருந்து Spectralஐ தேர்ந்தெடுக்கவும்
06:44 கீழே scroll செய்யவும். drop down ல் இருந்து, Mode Continuous ஆக தேர்ந்தெடுக்கவும்
06:50 Classify பட்டனை க்ளிக் செய்யவும்
06:53 5 புதிய வண்ண மதிப்புகள் உருவாக்கப்படுகின்றன
06:57 வண்ணங்கள் rasterன் உயரத்தின் மதிப்புகளை மிகக் குறைந்த அளவிலிருந்து அதிக அளவு வரை குறிக்கின்றன.
07:04 கீழ் வலது மூலையில் உள்ள Apply பட்டனையும், பின் OK பட்டனையும் க்ளிக் செய்யவும்
07:10 Layers panelலில், Hillshade layer ஐ disable செய்யவும்
07:14 Hillshade layerக்கு அடுத்துள்ள check-box ஐ uncheck செய்யவும்
07:18 இப்போது canvasல், நீங்கள் ஸ்பெக்ட்ரல் வண்ணங்களில் ஒரு வரைபடத்தைக் காண்பீர்கள்.
07:24 சிவப்பு நிழல் கொண்ட நிலப்பரப்பு குறைந்த உயரமாக உள்ளது மற்றும் நீலம் மிகவும் உயர்ந்தது.
07:30 Hillshade layerஐ enable செய்யவும்
07:33 Layers Properties dialog-boxஐ திறக்கவும்
07:37 இடது panel லில் இருந்து, Transparencyஐ தேர்ந்தெடுக்கவும்
07:41 slider ஐ இழுத்து, Global transparencyஐ 50%க்கு set செய்யவும்
07:47 Apply பட்டனையும், பின் OK பட்டனையும் க்ளிக் செய்யவும்
07:51 வரைபடத்தை பெரிதாக்கவும்
07:53 இப்போது canvasல், நிலப்பரப்பின் மேம்பட்ட நிலப்பரப்பைக் காண்கிறோம்.
08:00 சுருங்கச் சொல்ல,
08:03 இந்த டுடோரியலில் நாம் கற்றது, - SRTM data வலைத்தளத்திலிருந்து DEM data வை தரவிறக்குவது
08:11 DEMன் hill shadeஐ காட்டுவது
08:15 இதோ ஒரு பயிற்சி
08:17 Raster வரைபடத்திற்கான Slope mode ஐ பயன்படுத்தி நிலப்பரப்பைக் காட்சிப்படுத்தவும். Slope layerக்கான symbology ஐ மாற்றவும்
08:27 குறிப்பு: SlopeModeஆக தேர்ந்தெடுத்து, அதை overlayஆக பயன்படுத்தவும்
08:33 முடிவு பெற்ற பயிற்சி இவ்வாறு இருக்கவேண்டும்
08:38 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
08:45 நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்
08:54 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
08:58 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
09:06 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree