QGIS/C2/Plugins/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:15, 21 January 2021 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 QGISல் Plugins குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- Core Pluginகளை enable செய்வது
00:13 ஒரு External Pluginஐ நிறுவுவது
00:16 QGIS interface ல் ஒரு Pluginஐ கண்டுபிடிப்பது
00:20 QuickMapServices Pluginஐ நிறுவுவது
00:23 OpenStreetMap dataஐ தரவிறக்குவது
00:26 OSM dataவை shapefileஆக மாற்ற QuickOSM Plugin ஐ பயன்படுத்துவது
00:32 Qgis2threejs Pluginஐ பயன்படுத்தி, ஒரு வரைபட layerன் 3D visualization ஐ பார்ப்பது
00:39 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04,
00:47 QGIS பதிப்பு 2.18
00:51 Mozilla Firefox browser 54.0 மற்றும்
00:55 ஒரு வேலை செய்கின்ற Internet இணைப்பு
00:58 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும்
01:06 முன்நிபந்தனை QGIS டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும். https://spoken-tutorial.org/
01:12 pluginகளைப் பற்றி
01:14 QGIS Pluginகள் softwareக்கு பயனுள்ள அம்சங்களை சேர்க்கின்றன
01:19 அவை developerகள் மற்றும் பிற சுயாதீன userகளாலும் எழுதப்பட்டுள்ளன.
01:24 Plugins தேர்வு, QGIS interface ல் menu bar ல் இருக்கிறது
01:30 Interfaceல் பல்வேறு இடங்களில் menu itemகளை புகுத்தவும், புதிய panelகள் மற்றும் tool barகளை உருவாக்கவும் Pluginகளுக்கு திறன் உண்டு
01:42 நான் இங்கு QGIS interface ஐ திறந்துள்ளேன்
01:46 Menu barல் உள்ள Pluginsஐ க்ளிக் செய்யவும்
01:50 drop-down ல் இருந்து, Manage and Install pluginsஐ தேர்ந்தெடுக்கவும்
01:55 Plugins dialog-box திறக்கிறது
01:58 இங்கு user, pluginகளை, enable/disable செய்ய, நிறுவவும் / நிறுவலை நீக்கவும், upgrade செய்யவும் அனுமதிக்கின்ற menuக்கள் உள்ளன
02:08 ஒரு குறிப்பிட்ட pluginஐ கண்டுபிடிக்க, இடது panelகளில் உள்ள filterகளை நீங்கள் பயன்படுத்தலாம்
02:14 முன்னிருப்பாக All menu தேர்ந்தெடுக்கப்படுகிறது
02:18 வலது panelலில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை படிக்கவும்
02:22 இங்கு எல்லா pluginகளும் பட்டியலிடப்பட்டுள்ளன
02:25 இதில் Core pluginகள் மற்றும் வெளிப்புற pluginகளும் உள்ளடங்கும்
02:30 இடது panelலில் இருந்து, Installed menu வை க்ளிக் செய்யவும்
02:34 வலது panelலில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை படிக்கவும்
02:38 pluginஐ activate அல்லது deactivate செய்ய, check-box ஐ க்ளிக் செய்யவும் அல்லது பெயரை டபுள்-க்ளிக் செய்யவும்
02:45 உங்கள் QGISல் நிறுவப்பட்டுள்ள Pluginகள் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கின்றன
02:50 இந்த pluginகளில் சில, QGIS நிறுவுதலின் போது நிறுவப்பட்ட Core pluginகளாகும்
02:57 ஒரு Core pluginஐ பயன்படுத்த, நாம் pluginஐ enable அல்லது activate செய்யவேண்டும்
03:03 Processing pluginஐ கண்டுபிடிப்போம்
03:06 search barல், Processing. என டைப் செய்யவும்
03:10 பெயர் search barன் கீழே தோன்றுகிறது
03:13 pluginனின் பெயரை க்ளிக் செய்யவும்
03:16 அதன் விவரங்களை நீங்கள் வலது panel லில் காண்பீர்கள்
03:20 Processing plugin ஒரு Core plugin ஆகும்
03:23 pluginஐ enable அல்லது deactivate செய்ய, plugin பெயருக்கு அடுத்துள்ள check-boxஐ க்ளிக் செய்யவும்
03:30 Plugins dialog-boxஐ மூடவும்
03:33 Processing plugin, இப்போது menu bar ல் enable செய்யப்பட்டுவிட்டது
03:37 மீண்டும் Plugins dialog-box ஐ திறக்கவும்
03:41 search barஐ clear செய்து, டைப் செய்க: Spatial Query.
03:46 pluginனின் பெயர் search bar.ன் கீழ் தோன்றுகிறது
03:50 இந்த plugin ஏற்கனவே enable செய்யப்பட்டிருக்கிறது
03:54 pluginனின் பெயரை க்ளிக் செய்யவும்
03:57 இது QGIS நிறுவுதலின் போது நிறுவப்பட்ட Core plugin ஆகும்
04:03 Core pluginகளை enable அல்லது disable மட்டுமே செய்யலாம்
04:08 அவற்றை QGISல் இருந்து நிறுவுதல் நீக்க முடியாது
04:12 அதனால் இந்த பட்டன்கள் இங்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை
04:16 pluginவிளக்கத்தில் Category என்பது Vector ஆகும்
04:20 அதன் பொருள், Vector menu enable செய்யப்பட்டவுடன் இந்த pluginஐ அதில் பார்க்கலாம். dialog-box ஐ மூடவும்
04:29 Spatial Query tool, Vector menu விலும், tool ஆக tool barஇலும் இருக்கிறது
04:37 இப்போது ஒரு external pluginஐ நிறுவுவோம்
04:40 மீண்டும் Plugins dialog-box ஐ திறக்கவும். search bar.ஐ clear செய்யவும்
04:46 இடது panelலில் இருந்து, Not installed menu வை க்ளிக் செய்யவும்
04:50 நிறுவப்படாத, கிடைக்கின்ற எல்லா pluginகளின் பட்டியல் காட்டப்படுகிறது
04:56 QuickMapServices pluginஐ இப்போது நிறுவுவோம்
05:00 search boxல், Plugins dialog-box க்கு மேலே, டைப் செய்க: QuickMapServices.
05:07 கீழுள்ள தேடுதலின் முடிவுகளில், QuickMapServices pluginஐ க்ளிக் செய்யவும்
05:13 QuickMapServices plugin, எளிதாக சேர்க்கக்கூடிய basemapகளின் ஒரு சேகரிப்பை கொண்டிருக்கிறது
05:19 கீழ் வலது மூலையில் உள்ள Install plugin பட்டனை க்ளிக் செய்யவும்
05:24 நிறுவுதல் முடியும் வரை காத்திருக்கவும். Plugins dialog-boxஐ மூடவும்
05:30 menu bar ல் உள்ள Web menu வை க்ளிக் செய்யவும்
05:34 drop-down ல் புதிதாக நிறுவப்பட்ட QuickMapServices pluginஐ நீங்கள் காணலாம்
05:40 QuickMapServicesஐ க்ளிக் செய்யவும்
05:43 Landsat, NASA, OSM, போன்ற தேர்வுகளை கொண்ட ஒரு sub-menu திறக்கிறது
05:51 OSM என்பது Open Street Mapன் சுருக்கமாகும்
05:55 sub-menu வில், OSM Standard.ஐ க்ளிக் செய்யவும்
05:59 உலகின் Open Street Map, canvasல் load செய்யப்படும்
06:05 சாலைகள், கட்டிடங்கள் போன்ற தரையில் உள்ள உடல் ஃபிஸிக்கல் அம்சங்களைக் இது குறிக்கிறது.
06:13 Mumbai areaவை பெரிதாக்க, நடு mouse பட்டனை scroll செய்யவும்
06:19 மீண்டும் Thane regionஐ பெரிதாக்கவும்
06:23 status barல் உள்ள Current CRS பட்டனை க்ளிக் செய்யவும்
06:28 CRS selectorல், Enable On-The-Fly CRS transformation தேர்வுக்கான check-box ஐ check செய்யவும்
06:36 Coordinate Reference systemல் இருந்து WGS 84 EPSG 4326ஐ தேர்ந்தெடுக்கவும்
06:45 Boxஐ மூட, OK பட்டனை க்ளிக் செய்யவும்
06:49 வரைபடத்தை தரவிறக்க, Vector menu வை க்ளிக் செய்யவும்
06:53 drop-down ல் இருந்து, OpenStreetMap தேர்வை க்ளிக் செய்யவும். sub-menu வில் இருந்து, Download Dataவை தேர்ந்தெடுக்கவும்
07:03 Download OpenStreetMap data dialog-box திறக்கிறது
07:08 Extent from map canvasமுன்னிருப்பாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதை அப்படியே விட்டுவிடவும்
07:15 Output file fieldக்கு அடுத்துள்ள, 3 புள்ளிகளை கொண்ட பட்டனை க்ளிக் செய்யவும்
07:20 ஒரு dialog-box திறக்கிறது, fileன் பெயருக்கு Thane.osm என டைப் செய்யவும்
07:28 ஒரு பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுக்கவும்
07:31 நான் Desktopஐ தேர்ந்தெடுக்கிறேன். Save பட்டனை க்ளிக் செய்யவும்
07:36 Download OpenStreetMap data dialog-boxல், OK பட்டனை க்ளிக் செய்யவும்
07:42 fileன் அளவு மற்றும் தரவிறக்கம் பற்றிய முன்னேற்றத்தை நீங்கள் status barல் காணலாம்
07:49 தரவிறக்கம் முடிந்தவுடன், வெற்றிகரமாக தரவிறக்கப்பட்ட செய்தி காட்டப்படும். OK பட்டனை க்ளிக் செய்யவும்
07:58 Download OpenStreet Map dialog-boxஐ மூடவும்
08:02 நீங்கள் தரவிறக்கிய OSM file, ஒரு data file மட்டுமே
08:07 இந்த dataவை ஒரு shapefileஆக மாற்ற, QuickOSM என்ற plugin உங்களுக்கு தேவை
08:14 இந்த plugin, OSM data வை QGISல் import செய்ய உதவும்
08:20 QGIS interfaceக்கு திரும்பவும்
08:23 plugins menuவை க்ளிக் செய்யவும்
08:26 Manage and Install Pluginsஐ தேர்ந்தெடுக்கவும். Plugins window திறக்கிறது
08:33 search boxல், Not installed menu ன் கீழ், QuickOSM. என டைப் செய்யவும்
08:39 கீழுள்ள தேடுதலை முடிவுகளில், QuickOSMஐ க்ளிக் செய்யவும்
08:44 அதை நிறுவ, கீழ் வலது மூலையில் உள்ள, Install plugin பட்டனை க்ளிக் செய்யவும்
08:50 நிறுவுதல் முடியும் வரை காத்திருக்கவும். Close பட்டனை க்ளிக் செய்யவும்
08:57 menu bar ல் உள்ள Vector menu வை க்ளிக் செய்யவும்
09:01 QuickOSMஐ க்ளிக் செய்யவும். sub-menu வில், QuickOSMஐ க்ளிக் செய்யவும்
09:09 QuickOSM dialog-box திறக்கிறது
09:13 இடது panelலில், OSM file தேர்வை க்ளிக் செய்யவும்
09:17 OSM fileலில், browse ஐ க்ளிக் செய்து, Thane.osm file க்கு செல்லவும். Open பட்டனை க்ளிக் செய்யவும்
09:27 ஏற்கனவே check செய்யப்படவில்லையெனில், Points, Lines, Multilinestrings, Multipolygonsக்கான check-boxகளை க்ளிக் செய்யவும்
09:37 QuickOSM dialog-boxல், பட்டனை க்ளிக் செய்யவும்
09:42 இந்த செயல்முறை சிறிது நேரம் எடுத்துக்கொள்ளலாம்
09:45 செயல்முறை முடிந்தவுடன், status bar 100 சதவிகிதத்தை காட்டுகிறது
09:50 QuickOSM dialog-boxஐ மூடவும்
09:54 OSM data canvasல் load செய்யப்படுகிறது
09:58 layerகள், Layers Panelலில் சேர்க்கப்படுகின்றன என்பதை கவனிக்கவும்
10:03 இப்போது நாம் vector layerகளின் முப்பரிமாண காட்சிப்படுத்துதலை உருவாக்குவோம்
10:09 Plugins menu item ஐ க்ளிக் செய்யவும்
10:12 Manage and Install Pluginsஐ தேர்ந்தெடுக்கவும். Plugins window திறக்கிறது
10:19 search boxல், Plugins dialog-box ன் மேல் டைப் செய்க: Qgis2threejs
10:26 Qgis2threejs ஐ க்ளிக் செய்யவும்
10:30 வலது panelலில், Qgis2threejsனின் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது
10:36 அதை நிறுவ, கீழ் வலது மூலையில் உள்ள, Install plugin பட்டனை க்ளிக் செய்யவும்
10:42 நிறுவுதல் முடியும் வரை காத்திருக்கவும். Close பட்டனை க்ளிக் செய்யவும்
10:48 Qgis2threejs Plugin toolஐ toolbarல் காணலாம்
10:54 pluginஐ, menu bar ல் உள்ள Web menu விலும் காணலாம்
10:59 Layers Panelலில், Point, Lineகள் மற்றும் Multistrings layerகளை மறைக்கவும்
11:06 Lines, Points, Multilinestrings layerகளுக்கு அடுத்துள்ள, check-boxகளை uncheck செய்யவும்
11:14 Multipolygons layer மட்டுமே canvasல் தெரிகிறது
11:19 toolbar ல், Qgis2threejsஐ க்ளிக் செய்யவும்
11:24 Qgis2threejs dialog box திறக்கிறது
11:29 dialog-box ல், Polygon பிரிவில், OSMFileக்கு அடுத்துள்ள check-box ஐ க்ளிக் செய்யவும்
11:36 Output HTML file path text boxக்கு அடுத்துள்ள Browse பட்டனை க்ளிக் செய்யவும்
11:42 Output filename dialog-box திறக்கிறது. Fileக்கு Buildings என பெயரிடுவோம்
11:50 Fileஐ சேமிப்பதற்கு ஒரு பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுக்கவும்
11:54 நான் Desktopஐ தேர்ந்தெடுக்கிறேன்
11:57 dialog-box ன் கீழ் வலது மூலையில் உள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும்
12:03 Qgis2threejs dialog boxல், text box ல் fileன் path தோன்றுகிறது. Run பட்டனை க்ளிக் செய்யவும்
12:13 செய்முறை முடியும் வரை காத்திருக்கவும். இது, கீழுள்ள status bar ல் காட்டப்படுகிறது
12:19 Buildings html file, ஒரு புதிய browser window வில் திறக்கிறது
12:24 முப்பரிமாண கட்டிடங்களைக் காண பெரிதாக்கவும்.
12:29 QGIS canvasக்கு திரும்பவும்
12:33 Plugins dialog-boxஐ மீண்டும் திறக்கவும்
12:36 இடது panelலில் இருந்து, Settings menuவை க்ளிக் செய்யவும்
12:40 இந்த menuவின் கீழ், நீங்கள் பின்வரும் தேர்வுகளை பயன்படுத்தலாம். 1. Check for updates, 2. Show also experimental plugins, 3. Show also deprecated plugins.
12:52 வெளிப்புற ஆசிரியர் repositoryகளை சேர்க்க, இங்கேயும் பட்டன்கள் இருக்கின்றன
12:58 ஒரு புதிய pluginஐ எப்படி உருவாக்குவது என்பது பற்றிய செயல்விளக்கம் பின்வரும் டுடோரியல்களில் காட்டப்படும். dialog-box ஐ மூடவும்
13:08 சுருங்கச் சொல்ல,
13:10 இந்த டுடோரியலில் நாம் கற்றது, - Core Pluginகளை enable செய்வது, ஒரு External Pluginஐ நிறுவுவது, QGIS interface ல் ஒரு Pluginஐ கண்டுபிடிப்பது, QuickMapServices Pluginஐ நிறுவுவது,
13:27 OpenStreetMap dataஐ தரவிறக்குவது,
13:30 OSM dataவை shapefileஆக மாற்ற QuickOSM Plugin ஐ பயன்படுத்துவது,
13:35 Qgis2threejs Pluginஐ பயன்படுத்தி, ஒரு வரைபட layerன் 3D visualization ஐ பார்ப்பது
13:41 பெங்களூரு பகுதிக்கு பெரிதாக்கப்பட்ட OpenStreetMap data வை பயன்படுத்தவும்
13:53 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
14:01 Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
14:13 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
14:17 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்
14:31 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree