QGIS/C2/Installation-of-QGIS/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:13, 21 January 2021 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
TIme Narration
00:01 QGIS ஐ நிறுவுதல் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் QGISஐ, Ubuntu Linux
00:15 Windows மற்றும் Mac Operating System ல் நிறுவக் கற்போம்
00:20 நிறுவுதலுக்கு நான் பயன்படுத்துவது, Ubuntu Linux பதிப்பு 16.04
00:28 Windows 10
00:30 Mac OS X 10.10 மற்றும்
00:33 ஒரு வேலை செய்கின்ற Internet இணைப்பு
00:36 Ctrl, Alt மற்றும் T key களை ஒன்றாக அழுத்தி terminalஐ திறக்கவும்
00:43 Promptல் டைப் செய்க: sudo space su. பின், Enterஐ அழுத்தவும்
00:52 உங்கள் system passwordஐ enter செய்யத் தூண்டும் ஒரு செய்தி தோன்றுகிறது
00:58 passwordஐ டைப் செய்து, Enterஐ அழுத்தவும்
01:02 இப்போது நிறுவுதலுக்கு நாம் சில commandகளை செயல்படுத்த வேண்டும்
01:08 தேவையான commandகளை கொண்ட பட்டியலை பெற்றுள்ள file ஒன்றை நான் இங்கு கொண்டுள்ளேன்
01:13 இந்த file, QGIS Installation Repositories என்ற பெயருடன் Code files linkல் கொடுக்கப்பட்டுள்ளது
01:21 இப்போது, sources.list file க்கு QGIS repositoriesஐ சேர்ப்போம்
01:28 பின்வரும் commandஐ copy செய்யவும். Copy செய்வதற்கு Ctrl Cயை பயன்படுத்தவும்
01:34 terminal promptல் ரைட்-க்ளிக் செய்து paste ஐ தேர்ந்தெடுக்கவும். பின், ஐ அழுத்தவும்
01:43 Gedit editor, sources.list file லில் திறக்கும்
01:48 QGIS Installation Repositories fileக்கு திரும்பச் செல்லவும்
01:53 இப்போது, sources.list file லில் கீழே உள்ள இந்த இரண்டு சுட்டிக்காட்டப்பட்ட வரிகளை சேர்க்கவும்
02:00 இங்கே காட்டப்பட்டுள்ள இரண்டு வரிகளை copy செய்யவும்.
02:04 இதை sources.list file லில் கடைசியில் paste செய்யவும்
02:09 Fileஐ சேமிக்க Ctrl Sஐ அழுத்தவும்
02:13 இப்போது, windowவின் மேல் இடது மூலையில் உள்ள crossஐ க்ளிக் செய்து இந்த fileஐ மூடவும்
02:20 terminal promptல் டைப் செய்க: sudo space apt-get space update. பின் ஐ அழுத்தவும்
02:32 இந்த செயல்முறை சிறிது நேரம் எடுத்துக்கொள்ளலாம். இப்போது update முடிவடைந்து விட்டது
02:39 இந்நேரத்தில் நாம், மேலும் சில commandகளை செயல்படுத்த வேண்டும்
02:44 QGIS Installation Repositories fileக்கு திரும்பச் செல்வோம்
02:49 பின்வரும் மூன்று commandகள் இங்கு காட்டப்பட்டுள்ளன
02:53 நாம் அவற்றை ஒன்றன் பின் ஒன்று செயல்படுத்த வேண்டும்
02:57 ஒரு நேரத்தில் ஒரு commandஐ மட்டும் copy செய்து, அதை terminalலில் paste செய்யவும்
03:03 promptல் ஒவ்வொரு commandஐயும் paste செய்த பிறகு, Enterஐ அழுத்தவும்
03:27 மூன்றாவது commandஐ செயல்படுத்திய பிறகு, நீங்கள் ஒரு OK செய்தியை காண்பீர்கள்
03:32 இப்போது, QGIS Installation Repositories fileலில் இருந்து கடைசி commandஐ செயல்படுத்தவும். பின்வரும் commandஐ copy செய்யவும்
03:41 terminal promptல் அதை paste செய்து, பின் Enterஐ அழுத்தவும்
03:47 தொடர்வதற்கு Yஐ அழுத்தி, பின் Enterஐ அழுத்தவும்
03:53 இந்த செயல்முறை சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்
03:57 நிறுவுதல் இப்போது முடிவடைந்துவிட்டது
04:01 உங்கள் keyboardல் Windows key ஐ அழுத்தி, Search barல் QGIS என டைப் செய்யவும்
04:09 உங்களால் QGIS Desktop Applicationஐ காண முடிய வேண்டும். அதை திறக்க, QGISஐ அழுத்தவும்
04:18 இது QGIS interface ஆகும்
04:22 இப்போது, Windowsல் QGISன் நிறுவுதலுக்கு செல்வோம்
04:27 QGIS Installation Repositories fileக்கு திரும்பச் செல்லவும். பின்வரும் இணைப்பை copy செய்யவும்
04:35 உங்கள் கணினியில் ஏதேனும் ஒரு web browserஐ திறக்கவும். நான் Chromeஐ திறக்கிறேன்
04:42 copy செய்யப்பட்ட இணைப்பை ஏதேனும் ஒரு web browser ல் paste செய்து, Enterஐ அழுத்தவும்
04:49 இந்த பிழை செய்தியை புறக்கணித்து, OKஐ க்ளிக் செய்யவும்
04:55 Long term release repository most stable பிரிவுக்கு கீழே scroll செய்யவும்
05:01 உங்கள் கணினிக்கு ஏற்ப, 64 bit அல்லது 32 bitக்கு இடையே தகுந்த setupஐ தேர்வு செய்யவும்
05:09 தகுந்த setup file ன் இடது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள Download iconஐ க்ளிக் செய்யவும்
05:16 உங்கள் Internetன் வேகத்தை பொறுத்து, installer file ன் தரவிறக்கம் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்
05:23 நான் இந்த setup file ஐ ஏற்கனவே தரவிறக்கி Downloads folderலில் சேமித்துள்ளேன்
05:30 இப்போது, Downloads folderக்கு செல்வோம்
05:34 task barல் உள்ள search box ல், டைப் செய்க: downloads
05:40 Downloadsதேர்வை க்ளிக் செய்யவும்
05:43 Downloads folder திறக்கிறது
05:46 QGIS installer fileஐ கண்டுபிடிக்கவும்
05:50 நிறுவுதல் செயல்முறையை தொடங்க, அதை டபுள்-க்ளிக் செய்யவும்
05:55 உங்கள் கணினியில் ஒரு dialog-box திறக்கிறது. தொடர்வதற்கு, Yesஐ க்ளிக் செய்யவும்
06:02 Installation Wizard திறக்கிறது
06:05 வழிமுறைகளை படித்து, Next பட்டனை க்ளிக் செய்யவும்
06:10 software license agreement பக்கத்தில், I Agree பட்டனை க்ளிக் செய்யவும்
06:16 எங்கு softwareஐ நிறுவ வேண்டும் என்று தேர்வு செய்யவும், நீங்கள் உறுதியாக இல்லையெனில் முன்னிருப்பான இடத்தை அப்படியே வைக்கவும்
06:24 நிறுவலுக்கு ஏதேனும் கூடுதல் கூறுகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. QGISவுடன் தொடரவும்
06:32 Install பட்டனை க்ளிக் செய்யவும்
06:35 நிறுவுதல் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்
06:40 முடிந்தவுடன், நிறுவுதலை முடிக்க, Finish பட்டனை க்ளிக் செய்யவும். QGIS இப்போது உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும்
06:51 taskbarல் உள்ள search box ல், டைப் செய்க: QGIS
06:57 பட்டியலில், QGIS Desktop Applicationஐ நீங்கள் பார்க்க முடிய வேண்டும்
07:04 QGISஐ திறக்க, அதை க்ளிக் செய்யவும்
07:09 இது QGIS interface ஆகும்
07:13 இப்போது, Mac OSல் QGIS நிறுவுதலுக்கு செல்வோம்
07:19 நாம் முன்பு திறந்து வைத்த, QGIS download web பக்கத்திற்கு செல்லவும்
07:25 Mac OS X tabக்கு Downloadஐ திறக்கவும்
07:29 Long term release most stableபிரிவுக்கு scroll செய்யவும்
07:34 தகுந்த setupன் இடது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள download iconஐ க்ளிக் செய்யவும்
07:40 ஒரு dialog box திறக்கிறது
07:43 முன்னிருப்பான fileன் பெயரை நாம் மாற்ற வேண்டாம்
07:47 இந்த fileஐ சேமிக்க, Downloads folder இடத்தை தேர்வு செய்யவும்
07:52 Save பட்டனை க்ளிக் செய்யவும்
07:55 உங்கள் Internetன் வேகத்தை பொறுத்து, ன் தரவிறக்கம் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்
08:02 நான் இந்த setup file ஐ ஏற்கனவே தரவிறக்கி, அதை Downloadsலில் சேமித்துள்ளேன்
08:08 இப்போது, Downloads folder க்கு செல்வோம்
08:12 திரையின் மேல் வலது மூலையில் உள்ள, search icon ஐ க்ளிக் செய்யவும்
08:18 டைப் செய்க: Downloads, Downloads folderதேர்வை டபுள்-க்ளிக் செய்யவும்
08:25 QGIS Installer fileஐ கண்டுபிடித்து, நிறுவுதல் செயல்முறையை தொடங்க, அதை க்ளிக் செய்யவும்
08:33 நிறைய fileகளை கொண்ட ஒரு setup folder திறக்கிறது
08:37 நான்கு packageகள் இருக்கின்றன, ஒவ்வொன்றும் ஒரு எண்ணுடன் தொடங்குகிறது
08:42 இது, packageகளை நிறுவுவதற்கான கட்டளையை சொல்கிறது
08:46 Apple அல்லாத developer recognized software ன் நிறுவுதலை அனுமதிக்க, Mac Security PreferencesAllow apps downloaded from: Anywhereக்கு மாற்றவும்
08:58 திரையின் மேல் வலது மூலையில் உள்ள, search icon ஐ க்ளிக் செய்யவும். System Preferences என டைப் செய்து, Enterஐ அழுத்தவும்
09:09 system preferencesஐ கொண்ட window திறக்கும்
09:13 Security & Privacyஐ க்ளிக் செய்யவும்
09:17 மாற்றங்களை அனுமதிக்க, Security & Privacy window ல், General tab ல், கீழ் இடது மூலையில் உள்ள lock icon ஐ க்ளிக் செய்யவும்
09:28 dialog box ல் உங்கள் system passwordஐ enter செய்யவும்
09:32 பின், Unlock பட்டனை க்ளிக் செய்யவும்
09:35 Allow apps downloaded from பிரிவில், ரேடியோ Anywhere பட்டனை க்ளிக் செய்யவும்
09:42 திறக்கின்ற dialog box ல், Allow from anywhere பட்டனை க்ளிக் செய்யவும்
09:49 Settingகுகளை lock செய்ய, கீழ் இடது மூலையில் உள்ள, திறந்துள்ள lock iconஐ க்ளிக் செய்யவும்
09:55 Windowவை மூடவும்
09:57 இப்போது, setup folder க்கு சென்று package எண் 1ஐ டபுள்-க்ளிக் செய்யவும்
10:03 Installation wizardல் உள்ள வழிமுறைகளை பின்பற்றி, packageஐ நிறுவவும்
10:09 Continue ஐ க்ளிக் செய்யவும்
10:12 கொடுக்கப்பட்ட முக்கிய வழிமுறைகளை படித்து, Continue ஐ க்ளிக் செய்யவும்
10:17 license agreementஐ படித்து, Continue ஐ க்ளிக் செய்யவும்
10:22 திறக்கப்பட்டுள்ள dialog box ல், Agree பட்டனை க்ளிக் செய்து, software license agreementக்கு ஒத்துக்கொள்ளவும்
10:30 install ஐ க்ளிக் செய்யவும்
10:33 திறக்கப்பட்டுள்ள dialog box ல், system passwordஐ டைப் செய்யவும்
10:38 பின், Install Software பட்டனை க்ளிக் செய்யவும்
10:45 நிறுவுதல் முடிந்தவுடன், Close பட்டனை க்ளிக் செய்யவும்
10:50 எண்கள் 2,3மற்றும் 4க்கு இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும்
11:19 எல்லா நான்கு packageகளுக்கும் நிறுவுதல்கள் முடிந்தவுடன், QGIS உங்கள் கணினியில் நிறுவப்படும்
11:27 search icon ஐ க்ளிக் செய்யவும். QGIS என டைப் செய்யவும்
11:33 QGISஐ செயல்படுத்த, QGIS application ஐ டபுள்-க்ளிக் செய்யவும்
11:39 இது QGIS interface ஆகும்
11:43 பின்வரும் டுடோரியல்களில், interface பற்றிய மேலும் தகவல்கள் மற்றும் அம்சங்கள் பற்றி பார்ப்போம்
11:51 சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியலில் நாம் கற்றது:
11:57 Ubuntu Linux பதிப்பு 16.04, Windows 10 மற்றும் Mac OS X 10.10ல், QGIS version பதிப்பை நிறுவுவது
12:11 பயிற்சியாக, உங்கள் கணினியில் QGIS ஐ நிறுவவும்
12:17 QGIS interfaceஐ திறந்து அதை ஆராயவும்
12:21 menuக்கள் மற்றும் toolbarகளை பார்க்கவும்
12:25 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
12:34 Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
12:48 இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும்.
12:55 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் வினாடியை தேர்வு செய்யவும். எங்கள் குழுவில் இருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்
13:07 ஸ்போகன் டுடோரியல் மன்றம், இந்த டுடோரியலுக்கான குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டுமே ஆகும்
13:13 தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை கேட்க வேண்டாம். இது குழப்பத்தை குறைக்க உதவும்.
13:21 குழப்பம் குறைந்தால், இந்த விவாதங்களை நாம் பயிற்றுரையாக பயன்படுத்தலாம்
13:27 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
13:40 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree