QGIS/C2/Coordinate-Reference-Systems/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | QGISல் Coordinate Reference System குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- |
00:10 | QGISல் projectionகளுக்கு layerகளை சேர்ப்பது |
00:15 | layerகளுக்கான metadata தகவலை பார்ப்பது |
00:19 | ஒரு layerல் இருந்து மற்றொரு புதிய layerக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அம்சங்களை சேமிப்பது |
00:24 | Re-project செய்வது மற்றும் வெவ்வேறு projectionகளின் data layerகளை ஒன்றாக மேலடுக்குவது |
00:30 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04, QGIS பதிப்பு 2.18 |
00:42 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, GIS பற்றி தெரிந்து இருக்கவேண்டும் |
00:49 | இந்த தொடரில் உள்ள முந்தைய டுடோரியலை பார்க்கவும் |
00:54 | Coordinate Reference Systems பற்றி பார்ப்போம் |
00:57 | Coordinate Reference Systemகள் இரண்டு வகைப்படுகிறது- Geographic coordinate system, மற்றும் Projected Coordinate System |
01:06 | மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகின்ற geographic coordinate system, WGS 84 ஆகும் |
01:12 | மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகின்ற projected coordinate system, UTM ஆகும் |
01:18 | இங்கு நான் QGIS interface ஐ திறந்துள்ளேன் |
01:23 | canvasல், நாட்டு நிர்வாக எல்லைகளைக் கொண்ட உலக வரைபடம் காட்டப்படுகிறது. |
01:30 | Mapஐ எவ்வாறு தரவிறக்குவது மற்றும் QGISல் காண்பிப்பது பற்றிய செயல்விளக்கம் முன்நிபந்தனை டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளது. |
01:39 | முன்நிபந்தனை டுடோரியலை பார்க்கவும் |
01:43 | இந்த file, Code files இணைப்பிலிருந்தும் தரவிறக்கப்படலாம் |
01:48 | canvasன் இடது பக்கத்தில், layer என்ற fileன் பெயரை கொண்ட ஒரு உலக வரைபடத்தை Layers Panelலில் நீங்கள் காணலாம் |
01:57 | முன்னிருப்பாக, Layers Panel இங்கு enable செய்யப்பட்டிருக்கிறது |
02:02 | இல்லையெனில், View menu ஐ பயன்படுத்தி, Layers Panelஐ நாம் enable அல்லது disable செய்யலாம் |
02:08 | menu barல் உள்ள View menu வை க்ளிக் செய்யவும். கீழே scroll செய்து, Panels தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
02:16 | Sub-menu, panel பெயர்களின் ஒரு பட்டியலை காட்டுகிறது |
02:21 | panelஐ enable அல்லது disable செய்வதற்கு Layer Panel தேர்வை க்ளிக் செய்யவும் |
02:27 | எல்லையை இழுப்பதன் மூலம் panelன் அளவை நாம் சரிசெய்யலாம். |
02:32 | வரைபடத்தின் நிறத்தை மாற்ற விரும்பினால், Layers Panel.லில் உள்ள layerன் பெயரை ரைட்-க்ளிக் செய்யவும் |
02:39 | context menuவில் கீழே scroll செய்து, Styles தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
02:44 | Sub-menu ஒரு வண்ண முக்கோணத்தைக் காட்டுகிறது. |
02:48 | வண்ண முக்கோணத்தின் vertexஐ சுழற்றுவதன் மூலம் வண்ணத்தைத் தேர்வுசெய்க. |
02:53 | context menu ஐ மூட canvasன் மீது எங்கிலும் க்ளிக் செய்யவும் |
02:58 | QGIS window வின் status bar ல், கீழ் இடது மூலையில், Coordinate label ஐயும், எண்களைக் கொண்ட text boxஐயும் நீங்கள் காண்பீர்கள். |
03:09 | ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான, X மற்றும் Y coordinatesகளின் மதிப்புகள் இந்த text boxல் காடாப்படுகின்றன |
03:17 | Cursorஐ வரைபடத்தின் மேல் நகர்த்தவும். |
03:20 | , X மற்றும் Y coordinatesகளின் மதிப்புகள், cursorன் இடத்தை பொறுத்து மாறுவதை கவனிக்கவும் |
03:28 | முன்னிருப்பாக Render தேர்வு, status barல் check செய்யப்பட்டிருக்கும். அதை அப்படியே விட்டுவிடவும் |
03:37 | status barல், கீழ் வலது மூலையில், Current CRS என்ற மற்றொரு label இருப்பதை பார்க்கவும் |
03:44 | இந்த code , தற்போதைய Projection Coordinate Reference System.ஐ பிரதிநிதித்துவப்படுத்துகிறது |
03:50 | ஒரு layer’s projectionஐ தீர்மானிக்க, நாம் metadataவை பார்க்கலாம் |
03:56 | Layers Panelலில், layerன் பெயரை ரைட்-க்ளிக் செய்யவும் |
04:01 | context menu வில் இருந்து, Propertiesஐ தேர்ந்தெடுக்கவும். Layer Properties dialog-box திறக்கிறது |
04:09 | dialog-box லில், இடது பக்க panelலில், Metadata தேர்வை க்ளிக் செய்யவும் |
04:15 | Properties பிரிவில், slider ஐ கீழே scroll செய்யவும் |
04:20 | கீழே, Layer Spatial Reference System, என்ற தலைப்பின் கீழ், இந்த திட்டத்திற்கான வரையறையை நீங்கள் காண்பீர்கள். |
04:29 | geographic coordinate system.க்கு அது WGS84 என காட்டுகிறது |
04:35 | dialog box ஐ மூட, கீழுள்ள Ok பட்டனை க்ளிக் செய்யவும் |
04:41 | இப்போது, வரைபடத்திற்கு layerகளை சேர்த்து, projectionஐ மாற்றுவோம் |
04:47 | இப்போது data layerகளை பற்றி பார்ப்போம் |
04:50 | பொதுவாக geographical data, ஒரு GIS workspace ல் layerகளில் சேமிக்கப்படுகிறது |
04:57 | ஒவ்வொரு layerஉம் தனது attribute tableலில் dataவை கொண்டிருக்கிறது |
05:02 | பல layerகள், அதே புவியியல் இருப்பிடத்திற்கான dataவை சுட்டிக்காட்டலாம் |
05:08 | QGIS interfaceக்கு திரும்புவோம் |
05:12 | இப்போது, layer’s projection.ஐ எப்படி மாற்றுவது என்று பார்ப்போம் |
05:17 | இந்த செயல்முறை Re-Projection என்று அழைக்கப்படுகிறது |
05:21 | முழு layerஐயும் re-project செய்வதற்கு பதிலாக, சில அம்சங்களை நாம் re-project செய்வோம் |
05:27 | Tool bar மேல் வலது மூலையில் உள்ள, Select features by area or single click tool ஐ க்ளிக் செய்யவும் |
05:35 | இந்த toolக்கு அடுத்துள்ள கருப்பு முக்கோணத்தை க்ளிக் செய்யவும் |
05:39 | Drop-downல் இருந்து Select featuresஐ தேர்வு செய்யவும் |
05:44 | canvasன் மீது காட்டப்பட்டுள்ள உலக வரைபடத்தில், United States of America அம்சத்தை க்ளிக் செய்து தேர்ந்தெடுக்கவும் |
05:52 | United States of America ஒரு வேறுபட்ட நிறத்தில் கட்டப்பட்டுள்ளதை கவனிக்கவும் |
05:58 | இப்போது இந்த layerன் projected coordinate systemஐ மாற்றி, பின் அதை சேமிப்போம் |
06:04 | Layers Panelலில், layerன் பெயரை ரைட்-க்ளிக் செய்யவும் |
06:08 | கீழே scroll செய்து, Save As தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
06:12 | Save Vector Layer as... dialog box திறக்கிறது |
06:17 | முன்னிருப்பான format தேர்வு, ESRI Shapefile. ஆகும். அதை அப்படியே விடவும் |
06:26 | File name text boxக்கு அடுத்ததாக உள்ள Browse பட்டனை க்ளிக் செய்யவும் |
06:31 | Save layer as... dialog-box திறக்கிறது. output layer க்கு USA-1.shp. என பெயரிடவும் |
06:41 | அதை சேமிக்க ஒரு தகுந்த இடத்தை கண்டுபிடிக்கவும். நான் அதை Desktopல் சேமிக்கிறேன் |
06:48 | கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும் |
06:52 | Save Vector Layer as.... dialog-boxல், File name text box ல் file path தோன்றுகிறது |
06:59 | இந்த layerக்கான புதிய projectionஐ நாம் தேர்வு செய்வோம் |
07:03 | CRS drop down boxக்கு அடுத்ததாக, Select CRS பட்டனை க்ளிக் செய்யவும் |
07:10 | Coordinate Reference System Selectorல், Filter search boxல், North America என enter செய்யவும் |
07:17 | உலகத்தின் Coordinate reference systemsன் கீழ், Projected Coordinate System, தலைப்பின் கீழ், பதில்களை scroll செய்யவும் |
07:27 | North_America_Albers_Equal_Area_Conic (EPSG:102008) projectionஐ தேர்ந்தெடுக்கவும் |
07:37 | கீழுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
07:41 | CRS drop down boxல், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட CRS காட்டப்படுகிறது |
07:47 | Save only selected features தேர்வை check செய்ய, check box ஐ க்ளிக் செய்யவும் |
07:53 | தேர்ந்தெடுக்கப்பட்ட feature மட்டுமே, re-project செய்யப்பட்டு, export செய்யப்படுவதற்கு இது உறுதிப்படுத்துகிறது |
08:00 | இங்கு முன்னிருப்பாக, Add saved file to map தேர்வு check செய்யப்பட்டிருக்கும் |
08:06 | இல்லையெனில், இந்த தேர்வை check செய்ய check boxஐ க்ளிக் செய்யவும் |
08:11 | OK பட்டனை க்ளிக் செய்யவும் |
08:14 | re-projected layer ஒரு வேறுபட்ட நிறத்தில் load செய்யப்படுகிறது |
08:19 | இந்த இரண்டு layerகளும் இப்போது வெவ்வேறு projectionகளில் இருக்கிறது |
08:24 | Layers Panel,லில் இப்போது நீங்கள் 2 entryக்களை பார்க்கலாம் |
08:30 | புதிய United States layer , world map layerன் மீது சரியாக மேலடுக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும் |
08:38 | இது ஏனெனில் QGIS, On-the-fly CRS transformation. என்று அழைக்கப்படுகின்ற ஒரு featureஐ கொண்டிருக்கிறது |
08:45 | QGIS windowவின் கீழ் வலது மூலையில் உள்ள projection text, EPSG:4326க்கு அடுத்து OTF என்ற சொற்களை பெற்றிருக்கிறது |
08:56 | Layers Panel லில் உள்ள United-States layer ஐ க்ளிக் செய்து தேர்ந்தெடுக்கவும் |
09:02 | status barன் கீழ் வலது மூலையில் உள்ள Current CRS text, EPSG:4326,ஐ க்ளிக் செய்யவும் |
09:11 | Project Properties CRS dialog-box திறக்கிறது |
09:16 | Enable on-the-fly CRS transformationஐ turn-off செய்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம் |
09:23 | Enable on the fly CRS transformation check boxஐ க்ளிக் செய்து, அதை uncheck செய்யவும். கீழுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
09:34 | main QGIS windowவில், உலக வரைபடம் மறைவதை நீங்கள் பார்க்கலாம் |
09:40 | நீங்கள் canvasல், United States வரைபடத்தை மட்டுமே பார்க்கமுடியும் |
09:45 | இது ஏனெனில், இந்த layerக்கான Projected CRS, Albers Projection.க்கு மாறிவிட்டது |
09:52 | coordinateகள் மற்றும் அளவு இப்போது வேறுபட்டதாகும் |
09:56 | Layers Panelலில் உள்ள United States layerஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
10:01 | Zoom to Layer தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
10:05 | தேர்ந்தெடுக்கப்பட்ட projectionல் இப்போது நீங்கள் United Statesஐ காண்பீர்கள் |
10:10 | Project Properties dialog-boxஐ திறக்க மீண்டும், Current CRS text ஐ க்ளிக் செய்யவும் |
10:17 | Enable ‘on the fly’ CRS transformation தேர்வை turn-on செய்யவும் |
10:23 | Recently used Coordinate Reference Systems,தலைப்பின் கீழ், WGS 84ஐ தேர்ந்தெடுக்கவும். கீழுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
10:35 | canvasல் காட்டப்பட்டுள்ளது, உலக வரைபடத்துடன் அதன் முந்தைய நிலைக்குத் திரும்பும். |
10:41 | datasetல் இருந்து vector layerஐ நீக்க, Layers panelலில் உள்ள பெயரை ரைட்-க்ளிக் செய்யவும் |
10:48 | context menuல், Remove தேர்வை க்ளிக் செய்யவும் |
10:52 | செயலை உறுதிப்படுத்த ஒரு prompt தோன்றுகிறது. OK பட்டனை க்ளிக் செய்யவும் |
10:59 | layer, datasetல் இருந்து நீக்கப்படுவதை கவனிக்கவும் |
11:04 | சுருங்கச் சொல்ல- |
11:07 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, QGISல் projectionகளுக்கு layerகளை சேர்ப்பது |
11:15 | layerகளுக்கான metadata தகவலை பார்ப்பது |
11:19 | ஒரு layerல் இருந்து மற்றொரு புதிய layerக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அம்சங்களை சேமிப்பது |
11:24 | Re-project செய்வது மற்றும் வெவ்வேறு projectionகளின் data layerகளை ஒன்றாக மேலடுக்குவது |
11:30 | பயிற்சியாக- United States ஐ North_America_Lambert_Conformal_Conic projection உடன் Project செய்து வேறுபாட்டை கவனிக்கவும் |
11:43 | முழு உலக வரைபட layerஐ World Mercator projection அமைப்பிற்குள் Re-project செய்யவும் |
11:50 | உங்கள் முடிவுபெற்ற பயிற்சி இவ்வாறு இருக்கவேண்டும் |
11:55 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
12:03 | Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
12:15 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
12:19 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும் |
12:31 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |