Health-and-Nutrition/C2/Feeding-expressed-breastmilk-to-babies/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:08, 24 January 2020 by Arthi (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பாலை குழந்தைகளுக்கு கொடுப்பது குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: சேமிக்கப்பட்ட தாய்ப்பாலை ஒரு குழந்தை குடிப்பதற்கு ஏற்ப எப்படி தயாராக வைப்பது
00:14 மற்றும் வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பாலை ஒரு குழந்தைக்கு எப்படி கொடுப்பது.
00:19 இப்போது தொடங்குவோம். தாய்ப்பாலை வெளிக்கொணர்வது குழந்தைக்கும் தாய்க்கும் பல நன்மைகளைத் தருகிறது.
00:26 தாய்ப்பாலை வெளிக்கொணர்வதும் பாதுகாப்பாக சேமிப்பதும் மற்ற பயிற்சிகளில் விளக்கப்பட்டுள்ளன.
00:34 இப்போது, சேமிக்கப்பட்ட தாய்ப்பாலை ஒரு குழந்தை குடிப்பதற்கு ஏற்ப எப்படி தயாராக வைப்பது என்று கற்போம்.
00:42 தாய்ப்பாலைக் கையாளும் முன், பராமரிப்பாளர்-சோப்பு மற்றும் தண்ணீரில் தங்கள் கைகளை கழுவி, கைகளை நன்றாக உலர்த்தி கொள்ள வேண்டும்.
00:52 மிகவும் பழைய, சேமிக்கப்பட்ட தாய்ப்பால் எப்போதும் முதலில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
00:59 உறைந்த தாய்ப்பாலைப் பயன்படுத்தும் போது, ​​அதை ஒரே இரவில் குளிர்சாதன பெட்டியின் மிகக் குறைந்த அலமாரியில் வைப்பதன் மூலம் பனி நீக்கம் செய்வது சிறந்ததாகும்.
01:08 மேலும், இந்த பனி நீக்கம் செய்யப்பட்ட பாலை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தவும்.
01:15 ஆனால் உறைந்த தாய்ப்பால் விரைவாக தேவைப்பட்டால், அதை குளிர்சாதன பெட்டியின் வெளியே வைத்து பனி நீக்கம் செய்யவும்- முதலில், குளிர்ந்த நீரை கொண்ட ஒரு பாத்திரத்தில் அதை வைத்து,
01:25 பின்னர், சற்று வெதுவெதுப்பான நீரை கொண்ட ஒரு பாத்திரத்தில் அதை வைக்கவும்.
01:31 வெதுவெதுப்பான நீரில் அதை பனி நீக்கம் செய்யும்போது- தாய்ப்பாலை கொண்ட பாத்திரத்தை மெதுவாகவும் அவ்வப்போதும் அசைக்கவும்.
01:38 அதை வேகமாகவும் தொடர்ச்சியாகவும் அசைக்க வேண்டாம்.
01:42 தாய்ப்பாலை கொண்ட பாத்திரத்தை பயன்படுத்துவதற்கு முன் , அதன் வெளிப்புறத்தை சுத்தமான துணியால் துடைக்கவும்.
01:48 இந்த பனி நீக்கப்பட்ட தாய்ப்பாலை 2 மணி நேரத்திற்குள் பயன்படுத்தவும், பயன்படுத்தப்படாத பாலை கொட்டி விடவும்.
01:56 பனி நீக்கப்பட்ட தாய்ப்பால் புதிய தாய்ப்பாலைக் காட்டிலும் வித்தியாசமாக வாசனை மற்றும் சுவை கொண்டதாக இருக்கும்.
02:03 குழந்தை அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் கொடுக்கலாம்.
02:08 தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுப்பதற்கு முன், பராமரிப்பாளர் எப்போதும் அதை நுகர்ந்து பார்க்க வேண்டும்.
02:16 பாலில் புளிப்பு வாசனை இருந்தால், அதைப் பயன்படுத்த வேண்டாம்.
02:20 தாய்ப்பால் சேமிக்கப்படும் போது, அதன் பாலேடு தனித்து, மேலே உயர்ந்து நிற்கும்.
02:28 இது சாதாரணமானது. பாலேடு மீண்டும் பாலில் கலக்க மெதுவாக குலுக்கவும்.
02:36 குழந்தைக்கு கொடுப்பதற்கு சற்று முன்பு தாய்ப்பாலை சூடேற்ற- தாய்ப்பாலை கொண்ட பாத்திரத்தை, 20 முதல் 30 நிமிடங்கள் சற்று வெதுவெதுப்பான தண்ணீரை கொண்ட ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.
02:47 மணிக்கட்டில் சிறிது பாலை ஊற்றி, அது எவ்வளவு சூடாக இருக்கிறது என்பதை சோதிக்கவும். அது இளஞ்சூட்டில் இருந்தால், சரியாக உள்ளது என்பதாகும்.
02:56 தாய்ப்பாலை சூடாக்க சூடான நீரைப் பயன்படுத்த வேண்டாம். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்த முயற்சிக்கவும்.
03:05 அதிக வெப்பம் மற்றும் தீக்காயங்கள் ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க இது உதவும்.
03:12 தாய்ப்பாலை நேரடியாக அடுப்பில் அல்லது மைக்ரோவேவில் வைத்து அதை சூடாக்க வேண்டாம்.
03:19 நேரடி வெப்பம் தாய்ப்பாலில் உள்ள பல தொற்று-விரட்டும் குணங்களை அழிக்கிறது.
03:27 தாய்ப்பால் தயாரானதும், அதை குழந்தைக்கு கொடுக்கவும்.
03:32 அவ்வாறு செய்ய, பின்வரும் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்:ஒரு பாலாடை, ஒரு சிறிய கிண்ணம், ஒரு கரண்டி அல்லது ஒரு நிஃப்டி கப்.
03:42 ஒரு கரண்டி அல்லது ஒரு கிண்ணத்தை பயன்படுத்துவது மேலும் பொருத்தமாக இருக்கும்.
03:49 முதலாவதாக, பராமரிப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரத்தை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும். பின்னர் காற்றினால் அதை முழுமையாக உலர வைக்க வேண்டும் அல்லது சுத்தமான பயன்படுத்தப்படாத துணியால் நன்கு துடைக்கவும்.
04:02 பின்னர், பராமரிப்பாளர் தங்கள் கைகளை நன்றாக கழுவி உலர்த்தி கொள்ள வேண்டும்.
04:10 அவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரத்தில் தாய்ப்பாலை, அரை அல்லது மூன்றில் இரண்டு பங்கு நிரப்ப வேண்டும்.
04:16 பின்னர், அவர்கள் குழந்தையை கிட்டத்தட்ட நிமிர்ந்த நிலையில் தங்கள் மடியில் வைக்க வேண்டும்.
04:23 அவர்களின் கை குழந்தையின் தலை மற்றும் கழுத்தை தாங்க வேண்டும்.
04:28 குழந்தைக்கு கொடுக்க அவர்கள் ஒரு பாலாடாயைப் பயன்படுத்தினால்- அவர்கள் குழந்தையின் வாயின் மூலையில் பாலாடையின் நுனியை வைக்க வேண்டும்.
04:39 இது குழந்தையின் உதடுகளுக்கு இடையில் லேசாகப் பிடிக்கப்பட வேண்டும்.
04:45 பாலாடையின் நுனி குழந்தையின் மேல் உதட்டை லேசாகத் தொட வேண்டும்.
04:50 இந்த நிலையில், பால் பாலடாயின் கொக்கின் விளிம்பில் இருக்க வேண்டும்.
04:58 குழந்தை பாலைத் உறிஞ்சும் போது - பராமரிப்பாளர் பாலாடாயை சிறிது சாய்த்து, பாலை விளிம்பில் நகர்த்த வேண்டும்.


05:07 பரமளிப்பாளர் குழந்தைக்கு ஒரு கிண்ணத்தை பயன்படுத்தி பாலூட்டினால் அதனை குழந்தையின் வாயினுள் மென்மையாக பிடிக்க வேண்டும்.
05:17 கிண்ணத்தின் விளிம்பு குழந்தையின் மேல் உதட்டை லேசாகத் தொட வேண்டும்.
05:22 பால், கிண்ணத்தின் மேல் விளிம்பை அடையும் வரை அவர்கள் கிண்ணத்தை சிறிது சாய்க்க வேண்டும்.
05:28 இது குழந்தை, கிண்ணத்தின் விளிம்பிலிருந்து பாலை கொடுக்க எளிதாக இருக்கும்.
05:33 பராமரிப்பாளர் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்க ஒரு கரண்டியை பயன்படுத்தினால்- அவர்கள் குழந்தையின் உதடுகளுக்கு இடையில் கரண்டியைப் பிடிக்க வேண்டும்.
05:42 கரண்டியின் விளிம்பு குழந்தையின் மேல் உதட்டை லேசாகத் தொட வேண்டும்.
05:47 பால் கரண்டியின் விளிம்பிற்கு வரும் வரை அவர்கள் கரண்டியை சிறிது சாய்க்க வேண்டும்.
05:54 பிறந்த பிறகு முதல் சில நாட்களுக்கு ஒரு கரண்டியால் பாலூட்டுவதே நல்லது.
05:59 ஏனெனில் இந்த நாட்களில் ஒரு சிறிய அளவு பால் மட்டுமே தேவைப்படுகிறது.
06:07 பராமரிப்பாளர் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்க, ஒரு நிஃப்டி கப்பை பயன்படுத்துகிறார் என்றால் - அவர்கள் நிஃப்டி கப்பின் சிறிய தேக்கத்தை குழந்தையின் வாய்க்குள் வைக்க வேண்டும்.
06:19 குழந்தை பாலைத் உறிஞ்சும் போது, ​​அவர்கள் கப்பை சற்று மேலே சாய்க்க வேண்டும். இது காலியாகும் போது, தேக்கத்தில் பாலை சேர்க்கும்.
06:31 வெளிக்கொணர்ந்த தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கும் போது, குழந்தையின் வாயினுள் பாலை ஒருபோதும் கொட்டக்கூடாது.
06:38 இதனால் குழந்தைக்கு மூச்சுத் திணறக்கூடும்.
06:40 அதற்கு பதிலாக, பாலை விளிம்பில் வைத்து, பாலூட்டல் முழுவதும் அதே நிலையில் வைக்கவும்.
06:47 குழந்தை முழுமையாக விழித்திருப்பதையும், எச்சரிக்கையாக இருப்பதையும், பாலருந்துவதில் ஆர்வமாகவும் இருப்பதையும் எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
06:54 தேவைப்பட்டால், ஊட்டுபவர் கையில் இருந்து குழந்தை கிண்ணத்தை தட்டுவதைத் தடுக்க, குழந்தைக்கு போர்த்தி விடவும்.
07:03 எப்போதும் குழந்தையை, தனது வேகத்தில் பாலை குடிக்க விடவும்.
07:08 குழந்தை போதுமான பாலை எடுத்துக்கொண்டதா என்பதைக் காட்டும் அறிகுறிகளை கவனிக்கவும்.
07:13 அவள் கைகளை உயர்த்திப் பிடிப்பது.
07:16 தூங்குவது அல்லது வாயை மூடுவது, போன்ற அறிகுறிகள்.
07:21 குழந்தையின் கீழ் உதட்டில் அதிக அழுத்தம் கொடுக்க கூடாது.
07:28 பாத்திரத்தின் விளிம்பு எப்போதும் குழந்தையின் மேல் உதட்டை லேசாகத் தொடுமாறு வைக்கவும்.
07:34 கிண்ணம், பாலாடை அல்லது கரண்டி ஆகியவற்றை குழந்தையின் வாய்க்குள் அதிக ஆழமாக செலுத்த வேண்டாம்.
07:41 படுத்திருக்கும் நிலையில் ஒரு குழந்தைக்கு ஒருபோதும் தாய்ப்பாலூட்டக்கூடாது.
07:45 வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்க, ஃபீடிங் பாட்டிலை பயன்படுத்த வேண்டாம்.
07:51 குழந்தைக்கு பாலூட்டிய பிறகு, கிண்ணம், பாலாடை அல்லது கரண்டியை சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். மற்றும் காற்றினால் முழுவதுமாக உலர விடவும்.
08:04 சில குழந்தைகள் வெளிப்படுத்திய தாய்ப்பாலை சிலரிடமிருந்து எடுத்துக்கொள்ள தயங்கும்.
08:12 சிலரிடமிருந்து எடுத்துக்கொள்ள தயங்காது.
08:17 வெளிப்படுத்தப்பட்ட பால் குழந்தையால் மறுக்கப்பட்டால், கவலைப்பட வேண்டாம்.
08:22 தாய் வேலையில் இருந்து திரும்பும்போது, குழந்தைக்கு அடிக்கடி அல்லது அதிக நேரம் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தவறவிட்ட ஊட்டச்சத்தை குழந்தை பெற்றுக்கொள்ளும்.
08:32 பின்வருவனவற்றை பின்பற்றி, தாய்ப்பாலை பாதுகாப்பாக வைத்திருக்க நினைவில் கொள்ளவும்: கைகள், கிண்ணங்கள் மற்றும் பாத்திரங்களை கழுவுதல், குழந்தையின் தேவைக்கு விரைவில் பால் கொடுத்தல் அல்லது பாதுகாப்பாக சேமித்தல்.
08:44 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Arthi, Jayashree