Health-and-Nutrition/C2/Vegetarian-recipes-for-7-month-old-babies/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:00 | 7 மாத குழந்தைகளுக்கான சைவ சமையல் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, 7 மாத குழந்தைகளுக்கான கூடுதல் உணவின் முக்கியத்துவம் மற்றும் |
00:16 | பின்வரும் சைவ உணவுகளை எப்படி தயாரிப்பது- பலாப்பழ விதைகள் கஞ்சி |
00:23 | கொள்ளு தண்டு கீரை கஞ்சி |
00:26 | தண்டு கீரை காராமணி கஞ்சி |
00:28 | வெந்தய இலைகள் பீன்ஸ் கஞ்சி மற்றும் வரகு கடலை பருப்பு கஞ்சி |
00:35 | தொடங்குவோம். முதல் வருடம், குழந்தை தவழ்ந்து நகர தொடங்கும் போது, அவளது வளர்ச்சி அதிக விரைவாக இருக்கிறது. |
00:43 | குழந்தைக்கு தேவையான சக்தி தேவைகளும் அதிகரிக்கின்றன. |
00:48 | 6-8 மாத வயது குழந்தைகளுக்கு கூடுதல் உணவுகளிலிருந்து, 200 கலோரி வரை தேவைப்படுகிறது. |
00:55 | கொடுக்கப்படுகின்ற உணவின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டும். |
00:59 | போதுமான கூடுதல் உணவோடு தாய்ப்பால் கொடுப்பதும் மிக முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளவும் |
01:07 | ஆகையால், குழந்தைக்கு ஏழு மாதங்கள் நிறைவடையும் போது,ஒரு நாளைக்கு மூன்று முறை அரை கப் கூடுதல் உணவைக் கொடுக்கத் தொடங்கவும் |
01:16 | அரை கப் என்பது சுமார் 125 மில்லிலிட்டர்கள் அல்லது 8 மேசைக்கரண்டிகள் உணவாகும் |
01:22 | இப்போது, குழந்தை பல்வேறு உணவுப் வகைகளை ஏற்றுக்கொள்ள பழகி இருக்கும் |
01:28 | ஏனெனில், ஆறாவது மாதத்திலிருந்தே அவள், கூடுதல் உணவை உட்கொள்ள தொடங்கிவிட்டாள் |
01:33 | இப்போது குழந்தைக்கு உணவுகளின் கலவையை அறிமுகப்படுத்தத் தொடங்குங்கள். |
01:38 | பிசைந்த மற்றும் கூழாக்கப்பட்ட உணவு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும் |
01:44 | குழந்தையின் உணவின் நிலைத்தன்மை போதுமான அளவு கெட்டியாகவும், முழுதும் நீராக இல்லாமலும் இருக்க நினைவில் கொள்ளவும் |
01:52 | குழந்தையின் உணவைத் தயாரிக்கும் போது - எப்போதும் உள்ளூர் மற்றும் பருவகாலப் பொருட்களைப் பயன்படுத்தவும் |
01:59 | மேலும், பின்வரும் பல்வேறு ஊட்டச்சத்து மிக்க பொடிகளை சேர்க்க நினைவில் கொள்க- கொட்டைகள் மற்றும் விதைகளின் தூள், முளைத்த பீன்ஸ் தூள் |
02:08 | கறிவேப்பிலை தூள், முருங்கை இலை தூள் |
02:11 | இதே தொடரின் மற்றொரு டுடோரியலில் இது விளக்கப்பட்டுள்ளது |
02:17 | குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை குழந்தையின் உணவில் உப்பு சேர்க்க வேண்டாம் |
02:21 | குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை குழந்தையின் உணவில் சர்க்கரை, வெல்லம் சேர்க்க வேண்டாம். |
02:27 | இப்போது- குழந்தைக்கு கூடுதல் உணவாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு சில சைவ உணவு வகைகளை நாம் பார்ப்போம் |
02:35 | நமது முதலாவது உணவு, பலாப்பழ விதைகள் கஞ்சி |
02:39 | இதற்கு தேவையான பொருட்கள்: 15-20 பலாப்பழ விதைகள், ஒரு சிறிய வாழைப்பழம் அல்லது ½ வாழைப்பழம் |
02:48 | தேங்காய் பால் அல்லது தாய்ப்பால் |
02:50 | ஒரு தேக்கரண்டி கொட்டைகள் மற்றும் விதைகளின் தூள் |
02:53 | பலாப்பழ விதைகள் கஞ்சியை தயாரிக்க- பலாப்பழ விதைகளை நன்கு கழுவவும். |
02:59 | இந்த விதைகளை ஸ்டீல் பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். விதைகள் மூடும் வரை தண்ணீரை சேர்க்கவும். |
03:06 | 5-6 விசில் வரை பிரஷர் குக்கரில் சமைக்கவும். |
03:09 | இந்த விதைகளை ஒரு தட்டில் வைத்து, சிறிது நேரம் ஆற விடவும். |
03:16 | பின், வெளிப்புற தோலை அகற்ற அவற்றை உரிக்கவும். |
03:20 | அடுத்து, மிக்சி அல்லது அம்மியை பயன்படுத்தி அதை கூழாக்கவும் |
03:25 | இதனுடன், ஒரு பழுத்த வாழைப்பழத்தை தோலுரித்து ஒரு கரண்டியால் மசிக்கவும் |
03:32 | இப்போது பிசைந்த வாழைப்பழம் மற்றும் பலாப்பழ விதைகளின் கூழை ஒன்றாக கலக்கவும். |
03:37 | அதில் 2 மேசைக்கரண்டி தேங்காய் பால் அல்லது தாய்ப்பாலை சேர்க்கவும். |
03:42 | அதில், கொட்டைகள் மற்றும் விதைகளின் தூளை சேர்க்கவும் |
03:45 | அதை நன்றாக கலக்கவும் |
03:47 | இந்த கலவையை 3-4 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும். |
03:52 | பலாப்பழ விதைகள் கஞ்சி தயார். |
03:56 | இந்த பலாப்பழ விதைகள் கஞ்சியில் பின்வருபவை நிறைந்துள்ளதுள்ளன- Protein |
03:59 | Omega 3 fatty acids |
04:02 | Potassium மற்றும் Phosphorus |
04:06 | இரண்டாவது உணவு, கொள்ளு தண்டு கீரை கஞ்சி |
04:11 | இதை தயாரிக்க நமக்கு தேவையானவை- 2 மேசைக்கரண்டிகள் கொள்ளு பொடி, 2 கப் கழுவிய தண்டு கீரை |
04:19 | ¼ தேக்கரண்டி கறிவேப்பிலை தூள், ½ தேக்கரண்டி நெய் |
04:24 | செய்முறை: முதலில், கொள்ளை 7 முதல் 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். |
04:31 | பின், அதை ஒரு வடிகட்டியில் வைத்து தண்ணீரில் நன்கு கழுவவும், |
04:37 | எல்லா நீரும் வடிந்த பிறகு, அதை ஒரு சுத்தமான பருத்தி துணியில் கட்டி, முளை கட்டும் வரை ஒரு ஓரமாக வைக்கவும் |
04:47 | இந்த முளை கட்டிய கொள்ளை, ஓரிரு நாள் சூறிய ஒளியில் காய வைக்கவும் |
04:52 | அதை குறைந்த தீயில் 8-10 நிமிடங்கள் வறுக்கவும். பின், ஆற வைக்கவும் |
04:58 | பின் அதனை அரைத்து பொடியாக்கவும். இந்த முழு செயல்முறை malting. என அழைக்கப்படுகிறது. |
05:05 | அதே நேரத்தில், ஒரு கடாயில் நெய்யை சூடாக்கவும். |
05:10 | அதில், கழுவிய தண்டு கீரையை சேர்க்கவும் |
05:13 | இதை 4-5 நிமிடங்கள் வதக்கி, ஆற வைக்கவும் |
05:17 | பின், ஒரு மிக்சி அல்லது அம்மியை பயன்படுத்தி அதை கூழாக்கவும் |
05:23 | அடுத்து, கொள்ளு பொடியில் 2 மேசைக்கரண்டிகள் தண்ணீரை சேர்க்கவும். |
05:28 | கட்டி தட்டாமல் இருக்க, அதை நன்கு கலக்கவும் |
05:32 | இந்த நீர்த்த விழுதை குறைந்த தீயில் 6-7 நிமிடங்கள் சமைக்கவும். |
05:37 | இப்போது, தண்டு கீரை கூழை இந்த கொள்ளு விழுதுடன் சேர்த்து நன்கு கலக்கவும் |
05:43 | அடுத்த 2-3 நிமிடங்களுக்கு அதை குறைந்த தீயில் சமைக்கவும். |
05:48 | அதில் கறிவேப்பிலை தூளை சேர்த்து மீண்டும் கலக்கவும். |
05:52 | அதை தீயிலிருந்து நீக்கவும். நமது கொள்ளு தண்டு கீரை கஞ்சி தயார் |
05:59 | இந்த கஞ்சியில் பின்வருபவை நிறைந்துள்ளதுள்ளன- Protein, Omega 3 fatty acids, Calcium |
06:06 | Phosphorus, Iron மற்றும் Potassium |
06:10 | இத்தகைய கஞ்சிகளை செய்ய, உள்ளூரில் கிடைக்கின்ற எந்த வகையான பீன்ஸ் மற்றும் இலை காய்கறிகளையும் ஒருவர் பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளவும் |
06:20 | எப்போதும், சோளம், கேழ்வரகு, கம்பு போன்ற பல்வேறு சிறுதானியங்கள் மற்றும் தானியங்களுடன் பீன்ஸை சேர்க்க முயற்சிக்கவும் |
06:31 | இந்த கலவை குழந்தைக்கு முழுமையான புரதத்தை வழங்குகிறது. |
06:35 | இந்த தானியங்கள் மற்றும் சிறுதானியங்களின்malt செய்யப்பட்ட பொடிகளை குழந்தையின் உணவில் அல்லது |
06:42 | சமைக்கப்பட்ட முளைகட்டிய சிறுதானியங்களை பிசைந்து இத்தகைய கஞ்சிகளில் நீங்கள் சேர்க்கலாம் |
06:48 | மூன்றாவது உணவு, தண்டு கீரை காராமணி கஞ்சி |
06:53 | இதற்கு தேவையான பொருட்கள்: 2 மேசைக்கரண்டிகள்malt செய்யப்பட்ட தண்டு கீரை பொடி |
06:59 | 2 மேசைக்கரண்டிகள் முளைக்கட்டிய காராமணி கூழ், ¼ தேக்கரண்டி முருங்கை இலை பொடி |
07:06 | செய்முறை: malt செய்யப்பட்ட தண்டு கீரை பொடியை செய்ய, இதே டுடோரியலின் முந்தைய செயல்முறையில் விளக்கப்பட்டுள்ள அதே வழிமுறையை பின்பற்றவும் |
07:17 | பின், முளைகட்டிய காராமணியை ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். 4 முதல் 5 விசில் வரை அதை பிரஷர் குக்கரில் சமைக்கவும். |
07:26 | இப்போது, இந்த சமைக்கப்பட்ட காராமணியை ஒரு கூழாக்கவும் |
07:30 | பின், இரண்டு மேசைக்கரண்டிகள் malt செய்யப்பட்ட தண்டு கீரை பொடியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில், போதுமான அளவு தண்ணீரை சேர்க்கவும் |
07:38 | கட்டி தட்டாமல் இருக்க, அதை நன்கு கலக்கவும் |
07:42 | இந்த தண்டு கீரை பொடியின் நீர்த்த விழுதை, 2-3 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் சமைக்கவும் . இதில் காராமணி கூழை சேர்க்கவும் |
07:52 | இதை நன்கு கலக்கி, 4-5 நிமிடங்களுக்கு சமைக்கவும். பின், தீயிலிருந்து நீக்கவும் |
07:58 | இறுதியாக, இந்த சமைத்த கஞ்சியில், ¼ தேக்கரண்டி முருங்கை இலை பொடியை சேர்க்கவும். தண்டு கீரை காராமணி கஞ்சி தயார் |
08:09 | இந்த தண்டு கீரை காராமணி கஞ்சியில் பின்வருபவை நிறைந்துள்ளன- Protein, Omega-3 fatty acids |
08:17 | Phosphorus , Magnesium |
08:20 | Iron, Potassium மற்றும் Calcium |
08:24 | இத்தகைய கஞ்சிகளை செய்ய, பின்வரும் பொருட்களின் ஒரு கலவையை ஒருவர் பயன்படுத்தலாம்- கேழ்வரகு, சோளம் |
08:32 | தட்டை பயறு, கடலை பருப்பு போன்றவை |
08:37 | நான்காவது உணவு- வெந்தய இலைகள் பீன்ஸ் கஞ்சி |
08:41 | இதற்கு தேவையான பொருட்கள்: 2 கப்கள் நறுக்கி, கழுவிய வெந்தய இலைகள், 1 தேக்கரண்டி நெய் |
08:49 | 2 மேசைக்கரண்டிகள் புதிதாக அரைத்த தேங்காய் விழுது |
08:52 | 2 மேசைக்கரண்டிகள் முளைக்கட்டிய பீன்ஸ் பொடி |
08:56 | பீன்ஸ் பொடியை செய்ய, இதே தொடரின் மற்றொரு டுடோரியலில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும் |
09:04 | செய்முறை: கடாயில் 1 தேக்கரண்டி நெய்யை சூடாக்கவும். |
09:09 | வெந்தய இலைகளை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும் |
09:13 | அதை ஒரு சுத்தமான தட்டில் கொட்டி, சிறிது நேரம் ஆற விடவும் |
09:18 | பின், ஒரு மிக்சி அல்லது அம்மியை பயன்படுத்தி அதை கூழாக்கவும் |
09:23 | இந்த கூழை குறைந்த தீயில் ஒரு நிமிடம் சமைக்கவும். அதில் 2 மேசைக்கரண்டிகள் பொடித்த பீன்ஸை சேர்க்கவும். |
09:31 | கட்டி தட்டாமல் இருக்க, அதை நன்கு கலக்கவும் |
09:35 | தேவைப்பட்டால், அதில் சிறிது அளவு கொதித்து, ஆறிய நீரைச் சேர்க்கவும். |
09:40 | இப்போது, இதில் 2 மேசைக்கரண்டிகள் தேங்காய் விழுதை சேர்க்கவும் |
09:44 | தேங்காய் விழுதை செய்ய, புதிதாய் துருவிய தேங்காயை அரைத்து விழுதாக்கவும் |
09:51 | அடுத்து,இந்த கலவையை அடுத்த 7-8 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் தொடர்ந்து கிளறவும். |
09:58 | வெந்தய இலைகள் பீன்ஸ் கஞ்சி தயார் |
10:03 | இந்த வெந்தய இலைகள் பீன்ஸ் கஞ்சியில் பின்வருபவை நிறைந்துள்ளன- Protein, Omega-3 fatty acids |
10:10 | Folate, Iron |
10:12 | Calcium, Phosphorus |
10:14 | Zinc மற்றும் Potassium |
10:16 | இந்த உணவை தயாரிக்கும் போது, முன்பு விளக்கியுள்ளது போல், பல்வேறு தானியங்கள் மற்றும் சிறுதானியங்களை கலக்க நினைவில் கொள்ளவும் |
10:27 | ஐந்தாவது உணவு, வரகு கடலை பருப்பு கஞ்சி |
10:32 | தேவையான பொருட்கள்: 2 மேசைக்கரண்டிகள் வரகு |
10:35 | 2 மேசைக்கரண்டிகள் முளைக்கட்டிய கடலை பருப்பு |
10:38 | 3 மேசைக்கரண்டிகள் தேங்காய் பால், 1 தேக்கரண்டி நெய் |
10:43 | செய்முறை: ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டிகள் வரகை எடுத்துக்கொள்ளவும். |
10:48 | அதை நன்கு கழுவவும். பின், அதில் 3-4 மேசைக்கரண்டிகள் தண்ணீரை சேர்க்கவும் |
10:55 | 3-4 விசில்கள் வரும் வரை, அதை பிரஷர் குக்கரில் சமைக்கவும் |
10:58 | இதற்கிடையில், முளைக்கட்டிய கடலை பருப்பை 4-5 விசில்கள் வரும் வரை, அதை பிரஷரில் சமைக்கவும் |
11:04 | பின், அதனை ஒரு கூழாக்கவும் |
11:07 | ஒரு ஸ்டீல் பாத்திரத்தில், 1 தேக்கரண்டி நெய்யை சூடாக்கவும் |
11:11 | அதில், சமைத்த வரகு, கடலை பருப்பு கூழ் மற்றும் தேங்காய் பாலை சேர்க்கவும். அதை நன்கு கலக்கவும் |
11:18 | அடுத்த 4-5 நிமிடங்களுக்கு அதை சமைக்கவும். பின், ஆற விடவும். இப்போது, வரகு கடலை பருப்பு கஞ்சி தயார் |
11:27 | இந்த கூழில், பின்வருபவை நிறைந்துள்ளன- Protein, Iron |
11:30 | Phosphorus, Magnesium |
11:33 | Calcium மற்றும்Potassium |
11:36 | இத்துடன், 7 மாத குழந்தைகளுக்கான சைவ சமையல் குறித்த குறித்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |