Health-and-Nutrition/C2/Non-vegetarian-recipes-for-pregnant-women/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | கர்ப்பிணி பெண்களுக்கான அசைவ சமையல் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: கர்ப்பிணி பெண்களுக்கான அசைவ உணவுகளின் முக்கியத்துவம் மற்றும் பல்வேறு அசைவ உணவுகள் |
00:15 | முதலில், பல்வேறு அசைவ உணவுகளின் முக்கியத்துவத்தை பற்றி கற்போம் |
00:20 | சிக்கன், இறைச்சி, மீன், இறால்கள், உறுப்பு இறைச்சி போன்ற அசைவ உணவுகளில், Protein, Zinc, Choline, Iron மற்றும் Calcium நிறைந்துள்ளன |
00:30 | இந்த ஊட்டச்சத்துக்கள் கருவின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு அவசியம் |
00:35 | இவை குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் தாயின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன |
00:41 | இந்த ஊட்டச்சத்துக்களைப் பெற, அசைவ உணவுகளை கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டும் |
00:46 | இப்போது,ஒரு சில அசைவ உணவுகளை பார்ப்போம்: |
00:50 | நமது முதல் உணவான, "கேரள பாணி முட்டை கறி"யுடன் தொடங்குவோம் |
00:55 | இந்த செய்முறைக்கு நமக்கு தேவையானவை- 2 முழு வேகவைத்த முட்டைகள், 1 நடுத்தர அளவிலான நறுக்கிய வெங்காயம் |
01:02 | 1 நறுக்கிய தக்காளி, 2 பற்கள் பூண்டு |
01:06 | ½ அங்குல துண்டு இஞ்சி, ½ கறிவேப்பிலை |
01:11 | பின்வரும் ஒவ்வொன்றிலும்¼ தேக்கரண்டி- கரம் மசாலா தூள் |
01:14 | மிளகு தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் |
01:18 | மஞ்சள் தூள், 1 மேசைக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி இலைகள் |
01:22 | 1 மேசைக்கரண்டி எண்ணெய் மற்றும் தேவைக்கேற்ப உப்பு |
01:26 | முதலில், முட்டைகளை எவ்வாறு வேக வைப்பது என்று பார்ப்போம் |
01:29 | 1 அங்குலம் வரை குளிர்ந்த நீரை ஒரு கிண்ணத்தில் நிரப்பவும். அதில் முட்டைகளை வைத்து ஒரு மூடியால் மூடவும். |
01:36 | அதிக தீயில் நீரை கொதிக்க விடவும். பின், முழுவதுமாக வெந்த முட்டைகளை பெற, நடுத்தர வெப்பத்தில் 6 முதல் 7 நிமிடங்களுக்கு சமைக்கவும் |
01:44 | இப்போது முட்டைகளின் கடினமான கூட்டை அகற்றி ஓரமாக வைக்கவும் |
01:48 | அடுத்து, ஒரு கடாயில் எண்ணையை சூடாக்கவும். இதில், இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும் |
01:54 | மிதமான தீயில், வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும் |
01:59 | இதன் பின், உலர்ந்த மசாலாக்களைச் சேர்த்து, வாசனை வரும் வரை வதக்கவும் |
02:04 | பின், நறுக்கிய தக்காளி மற்றும் உப்பை சேர்க்கவும் |
02:07 | இப்போது 1 கப் தண்ணீரை சேர்த்து கலவையை கொதிக்க வைக்கவும் |
02:12 | தக்காளி கொதிக்க தொடங்கும் வரை சில நிமிடங்கள் குறைந்த தீயில் வைக்கவும். இதற்குப் பிறகு, வேகவைத்த முட்டைகளை அதில் சேர்க்கவும் |
02:18 | கடாயை மூடி, 10 முதல் 15 நிமிடங்கள் வரை முட்டைகளை குறைந்த தீயில் வேக வைக்கவும் |
02:23 | தீயை அணைத்து நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும் |
02:26 | முட்டைகள் நொறுங்காதபடி கிரேவியை மெதுவாக கிளறவும். அதை ஒரு பரிமாறும் கிண்ணத்தில் வைக்கவும் |
02:32 | அடுத்து, நமது இரண்டாவது உணவான சிக்கன் செட்டிநாடுஐ பற்றி கற்போம் |
02:37 | இதற்கு நமக்கு தேவையானவை- 100 கிராம் சிக்கன் மார்பகம் |
02:42 | 1 மேசைக்கரண்டி எண்ணெய், 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது |
02:46 | 1 நடுத்தர அளவிலான தக்காளி |
02:48 | 1ல் இருந்து 2 கறிவேப்பிலை குச்சிகள், 1 பிரிஞ்சி இலை |
02:52 | இதை ஊற வைக்க நமக்கு தேவையானவை- ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள் |
02:56 | ¼ தேக்கரண்டி மிளகாய் தூள் |
02:58 | 1 மேசைக்கரண்டி இஞ்சி- பூண்டு விழுது மற்றும் உப்பு தேவைக்கேற்ப |
03:03 | கிரேவிக்கு, நமக்கு தேவையானவை - ½ மேசைக்கரண்டி தனியா, ½ தேக்கரண்டி சோம்பு |
03:10 | 1 தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் |
03:14 | 2 ஏலக்காய், 2 கிராம்பு |
03:17 | ½ அங்குலம் பட்டை மற்றும் 2 மேசைக்கரண்டி துருவிய தேங்காய் |
03:22 | முதலில், சிக்கன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி- பூண்டு விழுது மற்றும் உப்பை ஒன்றாக கலந்து, ஒரு கிண்ணத்தில் ஊற வைக்கவும் |
03:31 | அதை அறையின் வெப்பநிலையில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை வைக்கவும் |
03:34 | குறைந்த தீயில், தனியாவை எண்ணெய் விடாமல் வறுக்கவும் |
03:38 | 2 முதல் 3 நிமிடங்களுக்குப் பிறகு, மீதமுள்ள மசாலாப் பொருள்களைச் சேர்க்கவும் |
03:42 | மசாலாக்கள் வாசனை வரும் வரை வறுத்து, பின் அதை ஒரு ஓரமாக வைக்கவும் |
03:47 | பின்னர் தேங்காயை சில நிமிடங்களுக்கு வறுக்கவும் |
03:50 | வறுத்த மசாலாக்கள் மற்றும் தேங்காயை ஆற வைக்கவும் |
03:53 | 1 மேசைக்கரண்டி தண்ணீரை சேர்த்து, ஒரு அம்மி அல்லது மிக்சியை பயன்படுத்தி, அவற்றை ஒரு விழுதாக அரைக்கவும் |
04:00 | இந்த விழுதை ஒரு ஓரமாக வைக்கவும். தக்காளிகளை ஒரு மிக்சியில் அரைத்து கூழாக்கவும் |
04:06 | இப்போது ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும் |
04:12 | சிக்கனை சேர்த்து மீண்டும் 4 முதல் 5 நிமிடங்களுக்கு நடுத்தர தீயில் வதக்கவும் |
04:16 | தக்காளி கூழ், மஞ்சள், உப்பு மற்றும் மிளகாய் தூளை சேர்க்கவும் |
04:21 | நன்கு கலந்து எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். இதன் பிறகு, அரைத்த விழுது மற்றும் கறிவேப்பிலைகளை சேர்க்கவும் |
04:27 | இந்த கலவையை 2 முதல் 3 நிமிடங்களுக்கு வதக்கவும் |
04:30 | ¼ கப் நீரை ஊற்றி, சிக்கன் மென்மையாகும் வரை மூடியபடி சமைக்கவும் |
04:37 | கிரேவி கெட்டியாவும் வரை, குறைந்த தீயில் வைக்கவும். கறிவேப்பிலைகளை சேர்த்து பரிமாறவும் |
04:42 | இந்த உணவை, மட்டன், உறுப்பு இறைச்சி, இறால் அல்லது மீனை பயன்படுத்தி தயாரிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும் |
04:52 | இப்போது, மூன்றாவது உணவை பார்ப்போம்- சிக்கன் கல்லீரல் சுக்கா |
04:56 | இந்த உணவிற்கு தேவையான பொருட்கள்: 100 கிராம் சிக்கன் கல்லீரல், 1 பொடியாக நறுக்கிய வெங்காயம் |
05:03 | 1 நறுக்கிய தக்காளி, 6 பற்கள் பூண்டு |
05:07 | ¼ அங்குலம் இஞ்சி, 2 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் |
05:12 | 1 மேசைக்கரண்டி எண்ணெய், உப்பு சுவைக்கேற்ப மற்றும் 1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு |
05:18 | தொடங்குவதற்கு- ஒரு பிளெண்டரில் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும் |
05:25 | இந்த கலவையை ஒரு விழுதாக அரைக்கவும். இந்த விழுதை சிக்கன் கல்லீரலின் மீது தடவி 10 முதல் 15 நிமிடங்களுக்கு அறையின் வெப்பநிலையில் வைக்கவும் |
05:34 | இப்போது,ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் விழுது தடவிய கல்லீரலை சேர்க்கவும். நன்றாக கலக்கவும் |
05:40 | ¼ கப் தண்ணீர் சேர்த்து, குறைந்த தீயில் 10 நிமிடங்கள் சமைக்கவும். இதற்குப் பிறகு, தீயை அதிகரித்து நன்கு சமைக்கவும் |
05:49 | நன்கு சமைத்ததும், தீயை அணைக்கவும். ஆறியவுடன்,எலுமிச்சை சாறு சேர்த்து, கழுவி நறுக்கிய கொத்தமல்லி இலைகளுடன் பரிமாறவும் |
05:57 | இந்த உணவிற்கு நீங்கள், மட்டனின் கல்லீரலையும் பயன்படுத்தலாம் |
06:00 | அடுத்த உணவு- கீரை கறியில் மீன் |
06:04 | இதற்கு நமக்கு தேவையானவை- 2 சிறிய துண்டுகள் கானாங்கெளுத்தி மீன் |
06:08 | 1 கப் கீரை, 1 நறுக்கிய வெங்காயம் |
06:12 | 1 நறுக்கிய தக்காளி, 1 தேக்கரண்டி சீரகம் |
06:16 | 2 முதல் 3 பற்கள் பூண்டு |
06:18 | ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் |
06:23 | 1 தேக்கரண்டி சீரக தூள், ¼ தேக்கரண்டி கருப்பு மிளகு தூள் |
06:28 | ½ தேக்கரண்டி தனியா, 1 மேசைக்கரண்டி வெள்ளை எள் |
06:33 | 1 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் உப்பு சுவைக்கேற்ப |
06:37 | தொடங்குவதற்கு- கானாங்கெளுத்தியை கழுவி, சுத்தம் செய்து, இரண்டு பகுதிகளாக வெட்டி ஓரமாக வைக்கவும் |
06:43 | ஒரு கடாயில், எண்ணெயை சூடாக்கி, சீரகத்தை சேர்க்கவும் |
06:46 | அது வெடித்ததும், கீரையை சேர்த்து ஒரு நிமிடம் சமைக்கவும் |
06:51 | இப்போது, ஆற வைக்கவும் |
06:53 | அடுத்து, சமைத்த கீரை, தக்காளி மற்றும் எள்ளை ஒரு மிக்சியில் சேர்த்து ஒரு கூழாக்கவும் |
06:59 | ஒரு கடாயில் எண்ணையை சூடாக்கி, அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் |
07:03 | வெங்காயம் இளஞ்சிவப்பாக மாறியதும், நறுக்கிய பூண்டை சேர்த்து பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும் |
07:09 | அனைத்து உலர்ந்த மசாலாப் பொருட்களையும் சேர்த்து, அவற்றின் வாசனை வரும் வரை வதக்கவும் |
07:14 | இப்போது கீரை கூழை சேர்த்து சில நிமிடங்களுக்கு சமைக்கவும் |
07:17 | அடுத்து, மீன் துண்டுகளை சேர்த்து நன்கு சமைக்கவும் |
07:20 | இப்போது, ¼ கப் தண்ணீர் மற்றும் உப்பை சேர்க்கவும். 5 முதல் 7 நிமிடங்களுக்கு மூடியபடி சமைக்கவும் |
07:28 | மூடியை திறந்து, நடுத்தர தீயில் 15 நிமிடங்களுக்கு சமைக்கவும். பின், சூடாக பரிமாறவும் |
07:35 | இந்த செய்முறைக்கு, உள்ளூரில் கிடைக்கின்ற எந்த மீனையும் பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்க |
07:40 | இறுதியாக, இறைச்சி உருண்டை கறியை எப்படி தயாரிப்பதென கற்போம் |
07:44 | இந்த செய்முறைக்கு நமக்கு தேவையானவை- 100 கிராம் கொத்திறைச்சி கறி, 1 பொடியாக நறுக்கிய வெங்காயம் |
07:51 | 1 நறுக்கிய தக்காளி, ½ மேசைக்கரண்டி இஞ்சி விழுது |
07:55 | 1 மேசைக்கரண்டி பூண்டு விழுது, 1 மேசைக்கரண்டி கரம் மசாலா |
07:59 | ¼ கப் புதிய கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு சுவைக்கேற்ப |
08:04 | கிரேவிக்கு- 1 மேசைக்கரண்டி எண்ணெய், 1 பொடியாக நறுக்கிய வெங்காயம் |
08:10 | 1 மேசைக்கரண்டி பூண்டு விழுது, ½ மேசைக்கரண்டி இஞ்சி விழுது |
08:14 | ½ தேக்கரண்டி சீரகப்பொடி |
08:16 | ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள் |
08:19 | மற்றும் ஒவ்வொன்றிலும் ½ தேக்கரண்டி- மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தனியா பொடி |
08:25 | 1 பெரிய நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சுவைக்கேற்ப |
08:29 | தொடங்குவதற்கு, கொத்திறைச்சி கறியை கழுவி, ஒரு மல் துணியினால் நன்கு துடைக்கவும் |
08:34 | இப்போது,ஒரு பாத்திரத்தில் கொத்திறைச்சி கறி மற்றும் நறுக்கிய வெங்காயத்தை கலக்கவும் |
08:38 | இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலா, கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பை சேர்க்கவும் |
08:44 | இந்த கலவையை ஆறு சம பாகங்களாக பிரித்து, உருண்டைகளாக பிடிக்கவும் |
08:48 | ஒரு கடாயில் எண்ணையை சூடாக்கி, மீதமுள்ள நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் |
08:52 | வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை அதை வதக்கவும் |
08:56 | இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து மீண்டும் சில நிமிடங்களுக்கு வதக்கவும் |
08:59 | அனைத்து பொடி செய்யப்பட்ட மசாலாப் பொருட்களையும் சேர்க்கவும் - தனியா பொடி, சீரக தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் |
09:08 | இப்போது,இதை 2 முதல் 3 நிமிடங்களுக்கு வறுக்கவும் |
09:11 | தக்காளியைச் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு வதக்கவும். பின்னர், மசாலாவில் ½ கப் தண்ணீர் மற்றும் உப்பை சேர்க்கவும் |
09:18 | இந்த கட்டத்தில், மெதுவாக இறைச்சி உருண்டைகளை சேர்த்து, குறைந்த தீயில் வைக்கவும் |
09:23 | 5 நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக கிளறி, இறைச்சி உருண்டைகள் வேகும் வரை சமைக்கவும். பின், பரிமாறும் கிண்ணத்தில் சூடாக பரிமாறவும் |
09:30 | மேலும், இந்த உணவை தயாரிப்பதற்கு கொத்திய சிக்கனை நீங்கள் பயன்படுத்தலாம் |
09:34 | இந்த உணவுகள் அனைத்திலும், பின்வருபவை நிறைந்துள்ளன என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும்- Protein, Omega-3 fatty acids , Vitamin A, Vitamin B12 |
09:45 | Folic acid and iron , Zinc, Magnesium, Sulphur மற்றும்Choline |
09:52 | இத்துடன், கர்ப்பிணி பெண்களுக்கான அசைவ சமையல் குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |