Health-and-Nutrition/C2/Vegetarian-recipes-for-6-month-old-babies/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | 6 மாத குழந்தைகளுக்கான சைவ சமையல் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
00:09 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, கூடுதல் உணவுக்கு அறிமுகம் மற்றும் |
00:15 | பின்வரும் சைவ உணவுகளை எப்படி தயாரிப்பது- காராமணி கூழ் |
00:22 | பூசணிக்காய் கூழ் |
00:24 | ராகி கஞ்சி, சோளக்கஞ்சி |
00:27 | மற்றும் கீரை கூழ். |
00:31 | தொடங்குவதற்கு முன், முதல் 6 மாதங்களுக்கு பிரத்யேக தாய்ப்பாலூட்டல் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும். |
00:41 | 6 மாதங்களுக்கு பிறகு, தாய்ப்பால் மட்டும் குழந்தைக்கு போதாது. |
00:47 | அதனால், தாய்ப்பாலூட்டலுடன், குழந்தைக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவும் கொடுக்கப்பட வேண்டும். |
00:53 | இது, கூடுதல் உணவூட்டுதல் எனப்படுகிறது. |
00:57 | ஒரு கூடுதல் உணவை குழந்தைக்கு அறிமுகப்படுத்தும் போது, ஒரு நேரத்தில் ஒரு உணவை கொடுக்கத் தொடங்கவும். |
01:04 | இது, குழந்தை ஏதேனும் உணவிற்கு ஒவ்வாமை கொண்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க உதவும். குழந்தைக்கு அது பழகியவுடன், பொருட்களின் கலவையை கொடுக்கத் தொடங்கவும். |
01:15 | முதலில், நாளொன்றைக்கு இருமுறை, 1 மேசைக்கரண்டி என்று தொடங்கவும். பின், படிப்படியாக, நாளொன்றைக்கு இருமுறை, 4 மேசைக்கரண்டி வரை செல்லவும். |
01:24 | இவைகளைத் தவிர, குழந்தையின் உணவை தயாரிக்கும் போது, எப்போதும் உள்ளூர், பிராந்திய மற்றும் பருவகால பொருட்களைப் பயன்படுத்தவும். |
01:34 | குழந்தைக்கு 1 வயது முடியும் வரை, சர்க்கரை, உப்பு அல்லது மசாலா பொருட்களை குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டாம். |
01:43 | 6 மாதங்களுக்கு பிறகு, கூடுதல் உணவுகளிலிருந்து குழந்தைக்கு, 200 கிலோ கலோரிகள் வரை சக்தி தேவைப்படுகிறது. |
01:52 | நன்கு சமைக்கப்பட்ட மற்றும் கூழ் வடிவிலான உணவு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். |
01:57 | நமது சமையல் குறிப்புகளை தொடங்குவதற்கு முன், பின்வரும் உணவுகளை தயாரிக்க, தாய்ப்பால், தேங்காய்ப்பால், அல்லது கொதிக்கவிட்டு பின் குளிர வைக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளவும். |
02:12 | முதல் உணவு, காராமணி கூழ். |
02:16 | அதை தயாரிக்க நமக்கு, ஒரு மேசைக்கரண்டி காராமணி அல்லது தட்டைப்பயறு தேவை. |
02:23 | இதே தொடரின் மற்றொரு டுடோரியலில், முளைக்கட்டுதலின் செயல்முறை விளக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். |
02:31 | முளைக்கட்டிய காராமணியை மெதுவாக கழுவி, தயாரிப்பை தொடங்குவோம். |
02:37 | இந்த பீன்களை ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதை ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்திற்கு ஊற வைக்கவும். |
02:44 | பின், விரல்களுக்கிடையே அவற்றை தேய்த்து, மெதுவாக வெளிப்புற தோலை நீக்கவும். |
02:49 | வெளிப்புற தோலை விலக்கி, இந்த பீன்களை ஒரு ஸ்டீல் பானையில் எடுத்துக்கொள்ளவும். |
02:54 | பீன்கள் மூடும் வரை, அதில் தண்ணீரை சேர்க்கவும். இந்த ஸ்டீல் பானையை ஒரு பிரஷர் குக்கரில் வைக்கவும். |
03:01 | 4-5 விசில்கள் வரும் வரை சமைக்கவும். அதை தீயிலிருந்து நீக்கி, சிறிது நேரம் குளிர வைக்கவும். |
03:09 | இப்போது, ஏதேனும் சமைக்கப்பட்ட வெளிப்புற தோல்கள் இருந்தால், அவற்றை மெதுவாக பிரித்தெடுக்கவும். |
03:14 | பின், மிக்ஸர் அல்லது ஸ்டோன் கிரைண்டரை பயன்படுத்தி, சமைக்கப்பட்ட பீன்களின் ஒரு கூழை செய்யவும். |
03:21 | சிறிதளவு கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர் அல்லது மீதமுள்ள பிரஷரில் சமைக்கப்பட்ட தண்ணீரை சேர்க்கவும். |
03:27 | காராமணி கூழ் இப்போது தயாராகிவிட்டது. |
03:32 | இந்த காராமணி கூழ், பின்வருவனவற்றை அதிக அளவில் கொண்டுள்ளது- Protein |
03:36 | Phosphorus |
03:39 | Iron |
03:42 | Zinc மற்றும் Magnesium. |
03:46 | இவை போன்ற கூழ்களை செய்ய, பின்வரும், உள்ளூரில் கிடைக்கின்ற மாற்றுப்பொருட்களை நீங்கள் பயன்படுத்தலாம்- பயறு, கொத்துக்கடலை, கடலைப்பருப்பு |
03:59 | மைசூர் பருப்பு, பச்சை பட்டாணி, |
04:02 | சிவப்பு காராமணி, கொண்டக்கடலை, கொள்ளு போன்றவை. |
04:07 | இரண்டாவது உணவு, பூசணிக்காய் கூழ். |
04:10 | நமக்கு, 250 கிராம்கள் மஞ்சள் பூசணிக்காய் தேவை. |
04:14 | அதன் தயாரிப்புக்கு, கழுவப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பூசணியை எடுத்துக்கொள்ளவும். விதைகளை நீக்கவும். |
04:20 | அதை, சிறு சதுரத் துண்டுகளாக வெட்டவும். |
04:23 | பின் அதை நீராவியில் 15 நிமிடங்களுக்கு சமைக்கவும். |
04:28 | அதை தீயிலிருந்து நீக்கி, சிறிது நேரம் குளிர வைக்கவும். |
04:32 | இப்போது, ஒரு மிக்ஸர் அல்லது ஸ்டோன் கிரைண்டரை பயன்படுத்தி, இந்த சமைக்கப்பட்ட பூசணிக்காயின் கூழை செய்யவும். |
04:39 | பூசணிக்காய் கூழ் தயாராகி விட்டது. |
04:42 | இந்த பூசணிக்காய் கூழ், பின்வருவனவற்றின் ஒரு மூலமாகும்- Vitamine A |
04:45 | Folate |
04:48 | Choline |
04:50 | Potassium மற்றும்Sulphur |
04:54 | பூசணிக்காய் கிடைக்கவில்லையெனில், பச்சை பூசணி, வெள்ளை பூசணி போன்ற மற்ற காய்கறிகளை பயன்படுத்தலாம். |
05:04 | மூன்றாவது உணவான, ராகி கஞ்சியை இப்போது பார்ப்போம். |
05:08 | இதற்கு, ஒரு மேசைக்கரண்டி ராகிப்பொடி நமக்கு தேவை. |
05:13 | ராகிப்பொடி, ராகி மாவிலிருந்து வேறுபட்டது என்பதை நினைவில் கொள்ளவும். |
05:18 | இந்த உணவிற்கு, நமக்கு ராகிப்பொடி தேவை. அதனால், ராகிப்பொடியை எப்படி செய்வதென முதலில் காண்போம். |
05:27 | அதை தயாரிப்பதற்கு, முதலில் ராகியை 9 ல் இருந்து 12 மணிநேரத்திற்கு ஊற வைக்கவும். |
05:33 | அதை ஒரு வடிகட்டியில் மாற்றி, தண்ணீரால் நன்றாக அலசவும். |
05:38 | எல்லா தண்ணீரும் வடியட்டும். |
05:41 | பின் அதை, ஒரு சுத்தமான பருத்தி துணியில் கட்டி வைக்கவும். |
05:45 | அது முளை கட்டும் வரை, ஒரு ஓரமாக வைக்கவும். இந்த செயல்முறை ஜெர்மினேஷன் எனப்படுகிறது. |
05:51 | அதற்குப்பிறகு, ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு அதை சூரிய ஒளியில் உலர வைக்கவும். |
05:57 | பிறகு, 10 ல் இருந்து 12 நிமிடங்களுக்கு, அதை குறைந்த தீயில் வறுக்கவும். |
06:03 | இடைவிடாமல் கிளறுவது அவசியம் என்பதை நினையவில் கொள்க. |
06:06 | இந்த முழு செயல்முறை, உணவிலிருக்கும் பைட்டிக் அமிலத்தை குறைக்கும். |
06:11 | இப்போது, ஒரு மிக்ஸர் அல்லது ஸ்டோன் கிரைண்டரை பயன்படுத்தி, அதனை பொடிக்கவும். |
06:17 | இந்த பொடியை, ஒரு வாரத்திற்கு, காற்றுப்புகாத கொள்கலனில் நாம் சேமித்து வைக்கலாம். |
06:24 | அடுத்து, ராகி கஞ்சியை செய்ய, ஒரு மேசைக்கரண்டி, இந்த ராகிப்பொடியை எடுத்துக்கொள்ளவும். |
06:30 | கொதித்த, குளிர்ந்த நீர் அல்லது முன்பு கூறிய வேறு மாற்றுப்பொருளை சேர்க்கவும். |
06:36 | கட்டிகளை தவிர்க்க, அதை நன்கு கலக்கவும். |
06:39 | இந்த கலவையை, குறைந்த தீயில், 7 ல் இருந்து 10 நிமிடங்களுக்கு சமைக்கவும். |
06:44 | தேவைப்பட்டால், சமைக்கும் போது, சிறிதளவு நீரை சேர்க்கவும். |
06:48 | அது கஞ்சியின் கெட்டித்தன்மையை குறைக்கும். |
06:52 | ஆனால், கஞ்சியின் தன்மை, தண்ணியாக இல்லாமல் இருக்க உறுதிபடுத்திக்கொள்ளவும். |
07:00 | ராகி கஞ்சி இப்போது தயாராக உள்ளது. |
07:03 | இந்த ராகி கஞ்சி பின்வரும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது- Protein |
07:08 | Calcium, Iron |
07:13 | Potassium மற்றும்Sulphur |
07:19 | நான்காவது உணவு, சோளக்கஞ்சி. |
07:23 | அதற்கு நமக்கு, இரண்டு மேசைக்கரண்டிகள் சோளப்பொடி தேவைப்படுகிறது. அந்தப்பொடியை செய்ய, சோளத்தை நீரில் 7 ல் இருந்து 8 மணிநேரங்கள் வரை ஊற வைக்கவும். |
07:34 | பின், அதை நாம் ஒரு வடிகட்டியில் போட்டு, நீரினால் நன்கு அலசுகிறோம். |
07:39 | எல்லா நீரும் வடியட்டும். |
07:42 | இப்போது அதை, சுத்தமான, உலர்ந்த பருத்தி துணியில் கட்டி, அது முளைக்கட்டும் வரை ஒரு ஓரமாக வைக்கவும். |
07:50 | இந்த முளைக்கட்டிய சோளத்தை, சூரிய ஒளியின் கீழ் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு உலர வைக்கவும் . |
07:55 | அதை ஒரு குறைந்த தீயில் 10 ல் இருந்து 12 நிமிடங்களுக்கு வறுக்கவும். |
08:01 | பின், அதை அரைத்து பொடியாக்கவும். |
08:05 | இந்த பொடியை, காய்ந்த, குளிர்ந்த இடத்தில், ஒரு வாரத்திற்கு, காற்றுப்புகாத கொள்கலனில் நாம் சேமித்து வைக்கலாம். |
08:12 | இரண்டு மேசைக்கரண்டிகள், இந்த சோளப்பொடியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். |
08:17 | 4 அல்லது 5 தேக்கரண்டிகள், கொதித்த, குளிர வைக்கப்பட்ட நீர் அல்லது முன்பு கூறியது போல் வேறு மாற்றுப்பொருட்களை சேர்க்கவும். |
08:25 | கட்டிகள் சேராமல் இருக்க, அதை நன்கு கலக்கவும். |
08:27 | இப்போது, இந்த கலவையை, குறைந்த தீயில், 4 ல் இருந்து 6 நிமிடங்களுக்கு சமைக்கவும். |
08:33 | இப்போது, சோளக்கஞ்சி தயாராகிவிட்டது. |
08:36 | சோளக்கஞ்சி, பின்வருவனவற்றை அதிக அளவில் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்- Protein |
08:40 | Phosphorus |
08:43 | Potassium |
08:46 | Magnesium |
08:48 | Selenium |
08:52 | Sulphur மற்றும் Iron |
08:58 | ஐந்தாவது உணவு, கீரை கூழ்: |
09:02 | கீரை கூழை செய்ய நமக்கு, நறுக்கி, கழுவப்பட்ட 2 கப் கீரை மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் தேவை. |
09:12 | செயல்முறை: கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை சூடாக்கவும். |
09:16 | நறுக்கி, கழுவப்பட்ட கீரையை சேர்க்கவும். |
09:20 | குறைந்த தீயில் அதை, 5-7 நிமிடங்களுக்கு வதக்கவும். |
09:24 | இப்போது, வதங்கிய கீரையை ஒரு தட்டில் எடுத்துவைக்கவும். ஒரு ஸ்டோன் கிரைண்டர் அல்லது மிக்ஸரை பயன்படுத்தி, அதை கூழாக்கவும். |
09:34 | இப்போது, நமது கீரை கூழ் தயாராகிவிட்டது. |
09:38 | கீரை, பின்வருவனவற்றின் மூலமாகும்- Vitamin A, Folate |
09:43 | Vitamin C, Iron |
09:48 | Magnesium மற்றும் Calcium |
09:52 | இம்மாதிரி கூழை செய்ய, ஒருவர் உள்ளூரில் கிடைக்கின்ற இலை காய்கறியை பயன்படுத்தலாம். |
09:59 | உதாரணத்திற்கு: தண்டு கீரை |
10:02 | முருங்கைக்கீரை, முள்ளங்கி கீரை |
10:05 | வெந்தயக்கீரை, மற்றும் கடுகு கீரை. |
10:10 | இத்துடன், 6 மாத குழந்தைகளுக்கான சைவ சமையல் குறித்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |