Linux/C2/Installing-Software-16.04/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Ubuntu Linux 16.04 Operating Systemல் Softwareஐ நிறுவுவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:10 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Terminalவழியாக Ubuntu Linux 16.04 Operating Systemல், Softwareஐ எப்படி நிறுவுவது, |
00:21 | Synaptic Package Manager மற்றும் Ubuntu Software Center |
00:27 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், Ubuntu Linux 16.04 Operating System.ஐ பயன்படுத்துகிறேன். |
00:34 | இந்த டுடோரியலை தொடர நீங்கள், Internetஉடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். |
00:39 | Softwareஐ நிறுவ, நீங்கள் System Administratorஆக இருக்கவேண்டும் அல்லது Administrator rightகளை கொண்டிருக்க வேண்டும். |
00:46 | Synaptic Package Manager, a p tக்கான, ஒரு graphical program ஆகும். |
00:51 | இது, apt-get command line utilityக்கான ஒரு GUI ஆகும். |
00:57 | Synaptic Package Manager, முன்னிருப்பாக Ubuntu Linux 16.04.ல் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்காது. |
01:05 | அதனால், terminal வழியாக அதை நிறுவக்கற்போம். |
01:10 | உங்கள் keyboardல், Ctrl, Alt மற்றும் T keyகளை ஒன்றாக அழுத்தி terminalஐ திறக்கவும். |
01:18 | இப்போது, terminalலில் டைப் செய்க: sudo space a p t hyphen get space install space s y n a p'. பின், Tab keyஐ அழுத்தவும். |
01:34 | இது, s y n a p.உடன் தொடங்குகின்ற softwareன் பட்டியலை காட்டும். |
01:40 | இப்போது, சொல்லை synaptic. என முடிக்கவும். பின், Enter.ஐ அழுத்தவும். |
01:46 | உங்கள் administrator passwordஐ enter செய்ய நீங்கள் தூண்டப்படுவீர்கள். |
01:51 | உங்கள் admin password.ஐ enter செய்யவும். |
01:54 | Terminalலில் passwordஐ டைப் செய்யும் போது, அது எங்களுக்கு புலனாகாது. அதனால், கவனமாக டைப் செய்யவும். |
02:02 | Enter.ஐ அழுத்தவும். |
02:04 | இப்போது, நிறுவப்பட வேண்டிய packageகளின் பட்டியல், |
02:09 | தரவிறக்கப்பட வேண்டிய fileகளின் அளவு பற்றிய தகவல், மற்றும் நிறுவதலுக்கு பிறகு உள்ள disk spaceஐ , terminal காட்டும். |
02:17 | இதை உறுதிப்படுத்த Yஐ அழுத்தவும். |
02:19 | Enter.ஐ அழுத்தவும். |
02:22 | நிறுவுதல் இப்போது தொடங்குகிறது. உங்கள் internetன் வேகத்தை பொறுத்து, இது நிறைவு பெற சிறிது நேரம் எடுக்கலாம். |
02:31 | இப்போது நாம், Synaptic Package Managerஐ வெற்றிகரமாக நிறுவிவிட்டோம். |
02:36 | Terminalஐ மூடுவோம். |
02:39 | நிறுவுதலை உறுதிப்படுத்த, Dash homeக்கு செல்லவும். Search barல், டைப் செய்க: synaptic. |
02:46 | தேடுதலின் முடிவில் நாம், Synaptic Package Manager icon ஐ காணலாம். |
02:51 | இப்போது, Synaptic Package Managerஐ பயன்படுத்தி softwareஐ நிறுவக்கற்போம். |
02:57 | Synaptic Package Manager iconஐ க்ளிக் செய்யவும். |
03:01 | Passwordஐ கேட்கின்ற ஒரு authentication dialog box தோன்றுகிறது. |
03:06 | admin password ஐ டைப் செய்து, Enterஐ அழுத்துவோம். |
03:10 | Synaptic Package Managerஐ முதல் முறையாக நாம் பயன்படுத்தும் போது, ஒரு introduction dialog box தோன்றுகிறது. |
03:17 | Synaptic Package Managerஐ எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய தகவலை இந்த dialog box கொண்டிருக்கிறது. |
03:23 | இந்த dialog boxஐ மூட, Close பட்டனை க்ளிக் செய்யவும். |
03:27 | Synaptic Package Manager.ல் உள்ள, Proxy மற்றும் Repositoryஐ configure செய்வோம். |
03:33 | ஒரு application அல்லது packageஐ நிறுவுவதற்கு முன், நாம் இதை செய்யவேண்டும். |
03:38 | Settingsக்கு சென்று, Preferencesஐ க்ளிக் செய்யவும். |
03:42 | திரையில் தோன்றுகின்ற Preferences windowவில், பல tabகள் இருக்கின்றன. |
03:48 | Proxy settingsஐ configure செய்ய, Networkஐ க்ளிக் செய்யவும். |
03:52 | Proxy Server ன் கீழ், இரண்டு தேர்வுகள் இருக்கின்றன- Direct Connection மற்றும் Manual Proxy. |
04:00 | நான் Direct Connection.ஐ பயன்படுத்தப்போகின்றேன். உங்களுக்கு விருப்பமான தேர்வை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். |
04:06 | Windowவை மூட, கீழுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும். |
04:11 | இப்போது, மீண்டும் Settingகுக்கு சென்று, Repositoriesஐ க்ளிக் செய்யவும். |
04:16 | Software Sources window, திரையில் தோன்றுகிறது. |
04:20 | Ubuntu software.ஐ தரவிறக்க, பல sourceகள் இருக்கின்றன. |
04:24 | Drop down menuவிலிருந்து Download Fromஐ க்ளிக் செய்து, repositoryக்களின் பட்டியலை காண, mouse பட்டனை அழுத்திக்கொண்டே இருக்கவும். |
04:31 | Other, உலகம் முழுவதிலும் உள்ள serverகளின் ஒரு பட்டியலை காட்டுகிறது. |
04:36 | இந்த windowவை மூட, கீழுள்ள Cancel பட்டனை க்ளிக் செய்யவும். |
04:41 | இங்கு கட்டப்பட்டுள்ளபடி, நான் Server for Indiaஐ பயன்படுத்துகிறேன். |
04:45 | Software Sources windowவை மூட, Close பட்டனை க்ளிக் செய்யவும். |
04:50 | Synaptic Package Manager ஐ நீங்கள் முதல் முறையாக பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் packageகளை மீண்டும் load செய்யவேண்டும். |
04:57 | அதைச் செய்ய, toolbarல் உள்ள Reload பட்டனை க்ளிக் செய்யவும். |
05:02 | இது, சில நொடிகளை எடுத்துக்கொள்ளலாம். |
05:05 | Packageகள், Internet வாயிலாக இடமாற்றப்படுவதையும், அவைகள் update செய்யப்படுவதையும் நாம் இங்கு காண்கிறோம். |
05:13 | உதாரணத்திற்கு, ஒரு VLC player ஐ இப்போது நான் நிறுவுகிறேன். |
05:18 | Toolbarல் உள்ள Search field,க்கு நாம் செல்வோம். |
05:23 | Search dialog boxல் டைப் செய்க: vlc. பின், Search பட்டனை க்ளிக் செய்யவும். |
05:29 | பட்டியலிடப்பட்ட எல்லா VLC packageகளையும் நாம் இங்கு காணலாம். |
05:34 | VLC packageஐ தேர்ந்தெடுக்க, check boxஐ ரைட்-க்ளிக் செய்யவும். பின், தோன்றுகின்ற menuவில் இருந்து Mark for installation தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
05:45 | Repository packageகளின் பட்டியல் அனைத்தையும் காட்டுகின்ற ஒரு dialog box தோன்றுகிறது. |
05:51 | Dependencies packageகளை தானாகவே mark செய்ய, Mark பட்டனை க்ளிக் செய்யவும். |
05:57 | Toolbarக்கு சென்று, Apply பட்டனை க்ளிக் செய்யவும். |
06:01 | நிறுவப்பட வேண்டிய packageகளின் பட்டியலை காட்டுகின்ற ஒரு Summary window தோன்றுகிறது. |
06:07 | நிறுவுதலைத் தொடங்க, கீழுள்ள Apply பட்டனை க்ளிக் செய்யவும். |
06:12 | நிறுவுதல் செயல்முறை, சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். |
06:16 | இது, நிறுவப்பட வேண்டிய packageகளின் எண்ணிக்கை மற்றும் அளவை பொறுத்திருக்கிறது. |
06:21 | நிறுவுதல் முழுவதுமாக முடிந்தவுடன், Applying Changes window மூடிவிடும். |
06:27 | Synaptic Package Manager windowவை மூடவும். |
06:31 | இப்போது, VLC player வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டதா என்று சரிபார்ப்போம். |
06:37 | Dash homeக்கு செல்லவும். |
06:39 | Search bar,ல் டைப் செய்க: vlc. |
06:42 | காட்டப்படுகின்ற பட்டியலில் நாம் VLC iconஐ காணலாம். அதை திறக்க, க்ளிக் செய்யவும். |
06:49 | இவ்வாறு, Synaptic Package Manager.ஐ பயன்படுத்தி, மற்ற applications களை நாம் நிறுவலாம். |
06:56 | அடுத்து, Ubuntu Software Center. மூலமாக softwareஐ நிறுவக்கற்போம். |
07:02 | Ubuntu Software Centre, Ubuntu Linux OSல் softwareஐ கையாள அனுமதிக்கின்ற ஒரு application ஆகும். |
07:10 | ஒரு softwareஐ தேட, தரவிறக்க, நிறுவ, update செய்ய அல்லது uninstall செய்ய இதை நீங்கள் பயன்படுத்தலாம். |
07:17 | மேலும், நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பே, அந்த software பற்றிய தகவலை அது உங்களுக்கு கொடுக்கிறது. |
07:23 | Ubuntu Software Centerஐ திறக்க, launcherக்கு செல்லவும். |
07:27 | Ubuntu Software. iconஐ க்ளிக் செய்யவும். |
07:31 | Ubuntu Software Centre window திறக்கிறது. |
07:35 | மேலே, நாம் 3 tabகளை காணலாம்- All, Installed மற்றும் Updates |
07:42 | All tabஐ க்ளிக் செய்யவும். |
07:44 | மேலே, ஒரு search barஐ நாம் காணலாம். |
07:47 | இது, ஏற்கனவே உள்ள softwareஐ தேட நமக்கு உதவி புரியும். |
07:51 | இப்போது, software Inkscapeஐ நிறுவுவோம். |
07:55 | Search barல், டைப் செய்க: inkscape. |
07:59 | Inkscape பற்றிய ஒரு குறுந்தகவல் காட்டப்படுகிறது. |
08:03 | இப்போது, வலது மூலையில் உள்ள Install பட்டனை க்ளிக் செய்யவும். |
08:07 | Authentication dialog box திறக்கிறது. |
08:10 | உங்கள் admin password.ஐ enter செய்து, பின் Authenticate பட்டனை க்ளிக் செய்யவும். |
08:16 | Inkscape நிறுவப்பட்டுக்கொண்டிருப்பதை, progress bar குறித்துக்காட்டுகிறது. |
08:21 | நிறுவப்படும் packageகளின் எண்ணிக்கை மற்றும் அளவை பொறுத்து, நிறுவுதலுக்கு சிறிது நேரம் ஆகலாம். |
08:28 | மேலிருக்கும் Installed tab-உம், முன்னேற்றத்தை குறிக்கிறது. அதை க்ளிக் செய்யவும். |
08:35 | எந்த நிறுவுதல் நடந்துகொண்டிருக்கும் போதும், நீங்கள் மற்ற applicationகளை அணுகலாம். |
08:41 | Inkscape சொல்லை க்ளிக் செய்யவும். |
08:44 | இது, Inkscape பற்றிய தகவலை காட்டும். |
08:48 | Inkscape நிறுவப்பட்டவுடன், அதன் பக்கத்தில், Remove மற்றும் Launch என்ற இரண்டு பட்டன்களை நாம் காணலாம். |
08:55 | நீங்கள் softwareஐ uninstall செய்ய விரும்பினால், Remove பட்டனை க்ளிக் செய்யவும். |
09:00 | Applicationஐ செயல்படுத்த, Launch பட்டனை க்ளிக் செய்யவும். நான் அதை க்ளிக் செய்கிறேன். |
09:06 | இது Inkscape applicationஐ தொடக்கும். |
09:10 | Ubuntu Software Centerக்கு திரும்பச் செல்லவும். மேல் இடது மூலையில் உள்ள, பின்னோக்கிய arrow பட்டனை க்ளிக் செய்து, முதல் திரைக்கு வரவும். |
09:18 | இப்போது, Updates tabஐ க்ளிக் செய்யவும். |
09:21 | அது, Software is up to date எனக் கூறுவதை நாம் காணலாம். |
09:25 | மேல் இடது பக்கத்தில் உள்ள, refresh iconஐ க்ளிக் செய்யவும். இது, ஏதேனும் புதிய updateகள் இருக்கிறதா என்று சரிபார்க்கும். |
09:31 | இப்போது நாம் ஒரு, OS updates.ஐ பெற்றுள்ளோம். |
09:34 | விவரங்களை காண, அதை க்ளிக் செய்யவும். நான் இதை மூடுகிறேன். |
09:39 | இந்த updateஐ நீங்கள் நிறுவ விரும்பினால், Install பட்டனை க்ளிக் செய்யவும். இல்லையெனில், இதை தவிர்க்கவும். |
09:46 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
09:52 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Terminalவழியாக Ubuntu Linux 16.04 Operating Systemல், Softwareஐ எப்படி நிறுவுவது, |
10:02 | Synaptic Package Manager மற்றும் Ubuntu Software Center . |
10:07 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
10:15 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
10:24 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
10:28 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில், முன்வைக்கவும். |
10:32 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
10:44 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ரிஷிதா. கலந்துகொண்டமைக்கு நன்றி. |