Linux-AWK/C2/More-on-Single-Dimensional-Array-in-awk/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Awkல், Single dimensional array பற்றி மேலும் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- fileஉடன் awk array ஐ பயன்படுத்துவது |
00:13 | ஒரு arrayன் elementகளை ஸ்கேன் செய்வது |
00:16 | Delete statement |
00:18 | ARGV array மற்றும்ENVIRON array |
00:22 | இதை சில உதாரணங்கள் மூலம் நாம் செய்வோம். |
00:25 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், Ubuntu Linux 16.04 Operating System மற்றும் gedit text editor 3.20.1ஐ பயன்படுத்துகிறேன். |
00:37 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். |
00:41 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, எங்கள் வலைத்தளத்தில் உள்ள, array பற்றிய முந்தையawk டுடோரியலை நீங்கள் படித்திருக்க வேண்டும். |
00:48 | C அல்லதுC++ போன்ற ஏதேனும் ஒரு programming languageன் அடிப்படை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும். |
00:55 | இல்லையெனில், எங்கள் வலைத்தளத்தில் உள்ள அதற்கான டுடோரியல்களை படிக்கவும். |
01:00 | இந்த டுடோரியலில் பயன்படுத்தப்பட்டுள்ள fileகள், இந்த டுடோரியல் பக்கத்தில் உள்ள Code Files இணைப்பில் உள்ளது. அவற்றை தரவிறக்கி, extract செய்துகொள்ளவும். |
01:10 | முன்பு, நாம் awk arrayக்களின் சில அம்சங்களை பார்த்தோம். |
01:14 | இப்போது, ஒரு fileஉடன் awk arrayஐ எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். |
01:19 | நாம் முன்பு பயன்படுத்திய, awkdemo.txt என்ற அதே fileஐ பயன்படுத்துவோம். |
01:25 | இங்கு, முதல் field , roll number மற்றும் ஆறாவது field , மாணவரின் உதவித்தொகை ஆகும். |
01:32 | முதலில், எல்லா மாணவர்களுக்குமான HRA ஐ கணக்கிடுவோம். |
01:36 | இங்கு HRA , உதவித்தொகையின் 30 சதவிகிதம் ஆகும். |
01:41 | நான் ஏற்கனவே codeஐ எழுதி, அதை calculate_hra.awk என சேமித்துள்ளேன். இப்போது, அந்த fileஐ பார்ப்போம். |
01:51 | BEGIN sectionனுள், field separator , Pipe symbolஉடன் initialize செய்யப்படுகிறது. |
01:57 | பின், action section ல் நாம் array elementகளை initialize செய்கிறோம். |
02:02 | ஒரு input fileன் ஒவ்வொரு வரிக்கும், இந்த section , ஒருமுறை செயல்படுத்தப்படும். |
02:08 | நான் HRAஐ ஒரு array variableஆகவும், dollar one ஐ indexஆகவும் declare செய்துள்ளேன். |
02:14 | இங்கு, dollar 1 , முதல் field , அதாவது ரோல் நம்பரை குறிக்கிறது. மற்றும் மதிப்புக்கு, dollar 6ஐ பூஜ்யம் புள்ளி 3 இனால் பெருக்கவும். இங்கு, dollar six என்பது உதவித்தொகையின் மதிப்பாகும். |
02:27 | அதனால், index roll numberல் உள்ள array HRA, அதற்குரியHRA தொகையை ஒரு மதிப்பாக கொண்டிருக்கும். |
02:35 | இந்த arrayன் எல்லா elementகளையும் எப்படி ஸ்கேன் செய்வது? |
02:39 | for loopன் இந்த மாறுநிலையை நீங்கள் பயன்படுத்த வேண்டும். |
02:43 | arrayல் உள்ள ஒவ்வொரு indexற்கும், இந்தloop, statementகளை ஒருமுறை செயல்படுத்துகிறது. |
02:48 | Variable var க்கு, index ன் மதிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக set செய்யப்படும். |
02:53 | Code, END sectionஇனுள் எழுதப்படுகிறது. |
02:57 | Input fileன் எல்லா வரிகளையும்awk process செய்த பிறகு, இந்த section செயல்படுத்தப்படும். |
03:04 | Variable i க்கு, ஒவ்வொரு indexன் மதிப்பு அல்லதுroll number ஒன்றன் பின் ஒன்று initialize செய்யப்படும். |
03:10 | for loopன் ஒவ்வொரு iterationலும், ஒரு குறிப்பிட்ட roll numberக்கான HRA print செய்யப்படும். |
03:16 | Terminalக்கு திரும்பி, fileஐ செயல்படுத்தவும். CTRL, ALT மற்றும் T keyகளை அழுத்தி, terminalஐ திறக்கவும். |
03:24 | cd commandஐ பயன்படுத்தி, நீங்கள் தரவிறக்கி, extract செய்த Code Fileகளை வைத்துள்ள folderக்கு செல்லவும். |
03:31 | இப்போது டைப் செய்க: awk space hyphen சிறியf space calculate_hra.awk space awkdemo.txt . Enter.ஐ அழுத்தவும். |
03:45 | Output , எல்லா மாணவர்களுக்குமானroll number மற்றும் HRAஐ காட்டுகிறது. |
03:50 | Roll S02ஐ கொண்ட மாணவருக்கான recordஐ நான் நீக்கவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். |
03:56 | அதனால், index S02.ல் உள்ள array elementஐ நாம் நீக்கவேண்டும். |
04:01 | calculate_hra.awk codeஐ பயன்படுத்தி நான் இதை செய்கிறேன். |
04:06 | for loopக்கு முன் Enterஐ அழுத்தி, பின்வரும் codeஐ டைப் செய்யவும்: delete space hra சதுர அடைப்புக்குறிகளினுள் இரட்டை மேற்கோள்களினுள் S02 |
04:19 | Fileஐ சேமித்து, terminal.க்கு மாறவும். |
04:23 | Terminalஐ clear செய்கிறேன். |
04:26 | முன்பு செயல்படுத்தப்பட்டcommandஐ பெற, Up arrow key ஐ அழுத்தவும். Enterஐ அழுத்தவும். |
04:33 | Roll number S02ஐ கொண்ட மாணவருக்கானrecord, outputல் print செய்யப்படவில்லை. |
04:39 | அதனால், delete commandஐ பயன்படுத்தி, எந்த array element ஐயும் நீக்கலாம். |
04:44 | Indexஉடன், arrayன் பெயரை நீங்கள் குறிப்பிடவேண்டும். |
04:48 | ஒரு arrayஐ நான் நீக்க விரும்பினால், என்ன செய்யவேண்டும்? delete statementல், array ன் பெயரை மட்டும் குறிப்பிடுவதன் மூலம் இதை செய்யலாம். |
04:56 | இதை முயற்சிக்க, codeக்கு மாறுவோம். |
04:59 | delete statement.ல் இருந்து, மேற்கோள்கள் மற்றும் சதுர அடைப்புக்குறிகளுடன், index S02 ஐ நீக்கவும். |
05:07 | Fileஐ சேமித்து, terminal.க்கு மாறவும். |
05:10 | Terminalஐ clear செய்யவும். முன்பு செயல்படுத்தப்பட்டcommandஐ பெற, Up arrow key ஐ அழுத்தவும். இப்போது, Enterஐ அழுத்தவும். |
05:19 | நாம் எந்த outputஐயும் பெறவில்லை என்பதை நீங்கள் காணலாம். முழு arrayயும் நீக்கப்பட்டுவிட்டது. |
05:25 | awk built-in variables குறித்த ஒரு முந்தைய டுடோரியலில், ARGC என்பது command line argumentகளின் எண்ணிக்கையை உணர்த்துகிறது என்று நாம் கூறியதை நினைவு கூறவும். |
05:36 | ARGV என்பது, command line argumentகளை சேமிக்கின்ற ஒரு array ஆகும். அதன் மதிப்புகளை நாம் எப்படி காட்டமுடியும்? பார்ப்போம். |
05:45 | நான் argc_argv.awk.ல் ஏற்கனவே codeஐ எழுதிவிட்டேன். அதன் உள்ளுறையை சரிப்பார்ப்போம். |
05:53 | Code, awk BEGIN section.னுள் எழுதப்பட்டுள்ளது. |
05:57 | முதலில், நாம் argumentகளின் எண்ணிக்கையை, அதாவது, ARGV.ன் மதிப்பை print செய்கிறோம். |
06:03 | அடுத்து, for loop, ஐ பயன்படுத்தி, i ன் மதிப்பு, 0ல் இருந்துARGC-1. வரை இருக்கின்ற வரைக்கும் loop செய்கிறோம். |
06:11 | மேலும், index iல் நாம் ARGVஐ print செய்கிறோம். Terminalக்கு மாறி, fileஐ செயல்படுத்தவும். |
06:19 | இப்போது, terminalலில் டைப் செய்க: awk space hyphen சிறியf space argc underscore argv dot awk space one space two space three |
06:35 | இங்கு, one two three என்பன, command line argumentகள் ஆகும். Commandஐ செயல்படுத்த Enterஐ அழுத்தவும். |
06:43 | Argumentகளின் எண்ணிக்கையை4 ஆக நாம் பெறுகிறோம். ஆனால் நாம், 3 argumentகளை மட்டுமே கொடுத்தோம் என்பதை நினைவு கூறவும். |
06:50 | தனிப்பட்ட argumentகளைப் பார்ப்போம். index 0 ல் உள்ள, முதல் argument அல்லது argv, உண்மையாக awk, அதாவது commandன் பெயராகும். |
07:02 | அடுத்து, நாம் command line.ல் கொடுத்த மூன்று argumentகளை கொண்டுள்ளோம். |
07:07 | அதனால் தான், ARGCன் மதிப்பு, நாம் கொடுத்த command line argumentகளின் எண்ணிக்கை plus ஒன்று ஆகும். |
07:16 | மேலும் ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். Built-in variable ENVIRON , environment variableகளின் ஒரு associative array ஆகும். |
07:24 | array element indexகள், environment variable ன் பெயர்களாகும். Array elementன் மதிப்புகள், குறிப்பிட்ட environment variableகளின் மதிப்புக்களாகும். |
07:35 | வெவ்வேறு environment variableகளின் மதிப்புகளை எப்படி காணலாம் என்று பார்ப்போம். |
07:40 | முதலில், நமது usernameஐ print செய்வோம். |
07:43 | environment variable USERன் மதிப்பை நாம் print செய்யவேண்டும். |
07:48 | Command promptல், பின்வருவனவற்றை டைப் செய்யவும். |
07:53 | Enterஐ அழுத்தவும். |
07:55 | Loginன் செய்த userன் பெயரை output காட்டும். |
08:00 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல. |
08:05 | இந்த டுடோரியல் நாம் கற்றது- fileஉடன் awk array ஐ பயன்படுத்துவது |
08:11 | ஒரு arrayன் elementகளை ஸ்கேன் செய்வது |
08:14 | Delete statement, ARGV array மற்றும்ENVIRON array |
08:20 | பயிற்சியாக- தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, குறிப்பிட்ட சலுகைகளை கணக்கிடவும். |
08:25 | உதவித்தொகையின் 80 சதவிகிதம், Paper presentation சலுகையாக இருக்கவேண்டும். |
08:30 | உதவித்தொகையின் 20 சதவிகிதம், performance incentiveஆக இருக்கவேண்டும். |
08:35 | சலுகைகளை, இரண்டு வெவ்வேறு arrayக்களில் சேமிக்கவும். |
08:38 | ஒவ்வொரு சலுகைக்கும் தேவையான மொத்த தொகையையும், averageஐயும் print செய்யவும். |
08:43 | awk programல் இருந்து, environment variable PATH ன் மதிப்பை print செய்யவும். |
08:48 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
08:56 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு , ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
09:05 | மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
09:08 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
09:12 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
09:24 | இந்த ஸ்கிரிப்ட், அந்தராவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து பிரவீன். கலந்துகொண்டமைக்கு நன்றி. |