Health-and-Nutrition/C2/Non-vegetarian-recipes-for-6-month-old-babies/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:00 | 6 மாத குழந்தைகளுக்கான அசைவ சமையல் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, அசைவ உணவுகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் |
00:17 | பின்வரும் அசைவ உணவுகளை எப்படி தயாரிப்பது- |
00:22 | முட்டை கூழ் |
00:24 | மீன் கூழ், வாழைக்காய் மீன் கஞ்சி |
00:27 | கோழி கல்லீரல் கூழ் மற்றும் கோழி கேரட் கூழ் |
00:31 | தொடங்குவோம்- குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்தவுடன், குழந்தையின் ஊட்டச்சத்து தேவை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும். |
00:42 | கூடுதல் உணவுகளிலிருந்து அவளுக்கு, 200 கலோரிகள் வரை சத்து தேவைப்படும். |
00:48 | தாய்ப்பாலூட்டுதலுடன், கூடுதல் உணவும் தொடங்கப்பட வேண்டும். |
00:53 | இதைத் தவிர, குழந்தையின் வயது படிப்படியாக அதிகரிக்க- உணவின் அளவு மற்றும் நிலைத்தன்மை மாற்றப்பட வேண்டும். |
01:03 | குழந்தைக்கு உணவு கொடுக்கும்போது, கிண்ணங்கள் மற்றும் கரண்டிகளை பயன்படுத்தி, உணவின் அளவு அளவிடப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். |
01:12 | இதே தொடரின், மற்றொரு டுடோரியலில், இது விளக்கப்பட்டுள்ளது. |
01:18 | குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்தவுடன்- முதலில், ஒரு நாளைக்கு, இரண்டு முறை, 1 தேக்கரண்டி வீதம் தொடங்கவும். பின்னர் படிப்படியாக ஒரு நாளைக்கு, இரண்டு முறை, 4 தேக்கரண்டி வரை செல்லலாம். |
01:29 | மேலும், நன்கு சமைக்கப்பட்ட, கூழ் உணவு வகை மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். |
01:35 | இப்போது, அசைவ உணவுகள் குழந்தைக்கு ஏன் முக்கியம் என்பதை பார்ப்போம். |
01:40 | எல்லா அசைவ உணவுகளும், நல்ல கொழுப்புகள், புரதம் மற்றும் பல நுண் ஊட்டச்சத்துகளை அதிகம் கொண்டிருக்கின்றன. |
01:48 | இந்த ஊட்டச்சத்துக்கள், குழந்தையின் சரியான வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், மற்றும் அவர்களின் மூளை வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம். |
01:57 | பின்வருவனவை, குழந்தைக்கு பரிந்துரைக்கப்படுகின்ற உணவுகள் ஆகும்-நாட்டு கோழியினம், |
02:02 | முட்டை, இறைச்சி மற்றும் அனைத்து வகை மீன்கள், நண்டு வகைகளை தவிர. இது, 1 வயதிற்கு பின்னரே அறிமுகப்படுத்தப்பட வேண்டும். |
02:12 | அசைவ உணவுகளை அறிமுகப்படுத்தும் போது, பின்வருவனவற்றை நினைவில் கொள்ளவும்- |
02:18 | குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் சமைக்கப்படாத உணவு கொடுக்க கூடாது. |
02:23 | முழுவதுமாக சமைக்கப்பட்ட உணவையே கொடுக்க வேண்டும். |
02:26 | மிகவும் முக்கியமாக, குழந்தையின் உணவை சமைக்கும் போது- நுண்ணலை அடுப்பை பயன்படுத்துவதை எப்போதும் தவிர்க்கவும். |
02:34 | குழந்தையின் தேவையான கூடுதல் அசைவ உணவுகளின் முக்கியத்துவத்தை பற்றி பார்த்தோம். |
02:43 | இப்போது, இந்த கூடுதல் அசைவ உணவுகளை எப்படி செய்வதென பார்ப்போம். |
02:48 | நமது முதல் உணவு, முட்டை கூழிலிருந்து தொடங்குவோம். |
02:53 | இந்த முட்டை கூழை செய்ய நமக்கு, 1 முட்டை மற்றும் அரை தேக்கரண்டி வெண்ணை அல்லது நெய் தேவைப்படும். |
03:01 | அதை தயாரிக்க, முட்டையை ஒரு கிண்ணத்தில் போட்டு, நன்றாக கலக்கவும். |
03:06 | பின், ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் நெய்யை சூடாக்கவும். கலக்கிய முட்டையை, இந்த ஸ்டீல் பாத்திரத்தில் ஊற்றி, குறைந்த தீயில் கிளறத் தொடங்கவும். |
03:15 | தொடர்ந்து சமைத்தால், அது முட்டை கூழை எரித்துவிடும் ஆகையால், இடையே தீயிலிருந்து அதை நீக்கவும். |
03:21 | கெட்டியாகும் வரை, அந்த கலவையை கிளறிக்கொண்டே சமைக்கவும். |
03:25 | தீயை அணைக்கவும். முட்டை கூழ் தயாராகிவிட்டது. |
03:30 | அது ஆறிய பிறகு, குழந்தைக்கு ஊட்டவும். |
03:34 | நாம் பார்க்கப்போகின்ற இரண்டாவது உணவு, மீன் கூழ். |
03:37 | இதற்கு, நமக்கு தேவை- பின்வரும் உள்ளூரில் கிடைக்கின்ற மீன்களில், ஏதேனும் ஒன்றின் 2 துண்டுகள்-கருப்பு வெளவால், வங்கவராசி, வெள்ளை வெளவால் மற்றும் கணவாய் மீன். |
03:50 | கழுவப்பட்டு மற்றும் சுத்தப்படுத்தப்பட்ட, மீனின் 2 துண்டுகளை, ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். |
03:54 | மீன் மூடப்படும் வரை தண்ணீரை சேர்க்கவும். இந்த ஸ்டீல் பாத்திரத்தை, ஒரு பிரஷர் குக்கரில் வைக்கவும். |
04:00 | 3 அல்லது 4 விசில்கள் வரும் வரை, அதை சமைக்கவும். |
04:04 | ஆறிய பிறகு, அந்த மீன் துண்டுகளை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். |
04:10 | இப்போது, எல்லா எலும்புகளையும் கவனமாக நீக்கவும். |
04:13 | எலும்புகள், குழந்தையை மூச்சு திணற வைக்குமாதலால், குழந்தைக்கு ஊட்டும் முன்பு அவற்றை நீக்குவது மிகவும் முக்கியமாகும். |
04:22 | இப்போது, சமைத்த மீனை, ஒரு மிக்ஸரில் போட்டு கூழாக செய்து, பின் குழந்தைக்கு ஊட்டவும். |
04:28 | மூன்றாவது உணவு, வாழைக்காய் மீன் கஞ்சி. |
04:32 | அதை தயாரிக்க, 2 தேக்கரண்டிகள் வாழைக்காய் பொடி, உள்ளூரில் கிடைக்கின்ற மீன் அல்லது வங்கவராசி மீன் 2 துண்டுகள் தேவை. |
04:41 | முதலில், வாழைக்காய் பொடியை தயார் செய்வதிலிருந்து தொடங்குவோம். |
04:46 | உங்கள் பகுதியில் கிடைக்கின்ற ஏதேனும் ஒரு வகையில், 2 வாழைக்காயை எடுத்துக்கொள்ளவும். |
04:51 | ஒரு தோலுரிப்பானை பயன்படுத்தி, அவற்றின் தோலை எடுக்கவும். இப்போது, இவற்றை மெல்லிய துண்டுகளாக வெட்டவும். |
04:58 | இந்த துண்டுகளை 1 முதல் 2 நாட்களுக்கு நிழலில், முருகலாகும் வரை உலர வைக்கவும். |
05:05 | பின்னர், இந்த உலர வைத்த வாழைக்காய் துண்டுகளை, ஒரு மிக்ஸரில் போட்டு பொடிக்கவும். |
05:10 | இந்த பொடியை சலித்து, விதைகளை அகற்றவும். |
05:13 | வாழைக்காய் பொடி, பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. |
05:17 | அடுத்து, ஒரு மீன் கூழை செய்ய-முந்தைய உணவு செய்முறையில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். |
05:24 | அதற்குப் பிறகு, 2 தேக்கரண்டிகள் வாழைக்காய் பொடியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். |
05:29 | 3 தேக்கரண்டிகள் தண்ணீரை சேர்த்து, கட்டிதட்டாமல் இருக்க நன்றாக கலக்கவும். |
05:35 | தேவைப்பட்டால், மேலும் தண்ணீரை சேர்க்கவும். |
05:38 | இப்போது, இந்த கலவையை சிறிய தீயில் 5ல் இருந்து 7 நிமிடங்களுக்கு சமைக்கவும். |
05:43 | அதற்குப் பிறகு, சமைக்கப்பட்ட மீன் கூழை அதனுடன் சேர்க்கவும். |
05:47 | கலவையை கிளறிக்கொண்டே, அடுத்த 4-5 நிமிடங்களுக்கு சிறிய தீயில் சமைக்கவும். |
05:53 | வாழைக்காய் மீன் கூழ் தயாராகி விட்டது. அதை ஆற வைத்து, பின் குழந்தைக்கு ஊட்டவும். |
06:01 | இப்போது, நான்காவது சமையல் குறிப்பிற்கு வருகிறோம்- கோழி கல்லீரல் கூழ். |
06:06 | இதைச் செய்ய, ஒரு கோழியின் கல்லீரல் தேவை. |
06:09 | செய்முறை: கழுவிய கோழியின் கல்லீரலை, ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் வைத்து தொடங்கவும். |
06:15 | அது மூடும் வரை, தண்ணீரை சேர்க்கவும். |
06:18 | இப்போது இந்த ஸ்டீல் பாத்திரத்தை, ஒரு பிரஷர் குக்கரில் வைக்கவும். |
06:21 | 3ல் இருந்து 4 விசில்கள் வரும் வரை, அதை சமைக்கவும். |
06:25 | ஆறிய பிறகு, அதனை ஒரு தட்டில் எடுத்துவைக்கவும். |
06:29 | ஒரு மிக்ஸரை பயன்படுத்தி, சமைக்கப்பட்ட கோழியின் கல்லீரலை கூழாக்கி, குழந்தைக்கு ஊட்டவும். |
06:37 | இப்போது, ஐந்தாவது சமையல் குறிப்பை பார்ப்போம்- கோழி கேரட் கூழ். |
06:43 | நமக்கு தேவையானவை: 4-5 சிறிய துண்டுகள் கோழி மார்பு அல்லது எலும்பில்லாத கோழி மற்றும் 1 கேரட். |
06:50 | கழுவிய கோழி துண்டுகளை, ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் வைத்து தொடங்கவும். பின்னர், அது மூடும் வரை, தண்ணீரை சேர்க்கவும். |
07:00 | இந்த பாத்திரத்தை, ப்ரெஷர் குக்கரில் வைத்து, 3ல் இருந்து 4 விசில்கள் வரும் வரை சமைக்கவும். |
07:07 | அதை ஆற வைக்கவும். பின்னர், அந்த கோழி துண்டுகளை தட்டில் எடுத்து வைக்கவும். |
07:15 | அடுத்து, கேரட்டை 10 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைத்து, ஆற வைக்கவும். |
07:20 | ஒரு மிக்ஸரை பயன்படுத்தி, சமைக்கப்பட்ட கோழி துண்டுகள் மற்றும் வெந்த கேரட்டின் கூழை செய்யவும். |
07:26 | இந்த உணவுகளின் ஊட்டச்சத்து பற்றி பார்ப்போம். பின்வருவன இவற்றில் அதிகமாக இருக்கின்றன- புரதம், |
07:36 | Omega 3 Fatty acidகளான, DHA மற்றும்EPA |
07:42 | Choline, |
07:45 | Vitamin A, |
07:49 | Vitamin D, |
07:52 | Vitamin B3, |
07:57 | Vitamin B6, |
08:01 | Folate, |
08:04 | Vitamin B12, |
08:08 | Zinc, |
08:11 | Magnesium, |
08:14 | Iron, |
08:18 | Phosphorus, |
08:21 | Copper மற்றும் Selenium. |
08:28 | அசைவ உணவுளில், இந்த சத்துக்கள் எளிதாக கிடைக்கின்றன. |
08:33 | எனவே குழந்தையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், இவை உதவுகின்றன. |
08:40 | இத்துடன், 6 மாத குழந்தைகளுக்கான அசைவ சமையல் குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |