Moodle-Learning-Management-System/C2/Question-bank-in-Moodle/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Moodle.லில், Question bank குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Moodle.லில், Question bank , |
00:12 | questionகளின் Categoryக்கள் மற்றும் question bankகுக்கு எப்படி கேள்விகளை சேர்ப்பது. |
00:19 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04, |
00:26 | XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP, |
00:34 | Moodle 3.3 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். |
00:44 | எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும். |
00:52 | உங்கள் site administrator, உங்களை ஒரு teacher.ஆக பதிவு செய்துள்ளதாகவும், குறைந்தபட்சம் ஒரு course ஐ உங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் இந்த டுடோரியல் அனுமானித்து கொள்கிறது. |
01:03 | மற்றும் தங்களுக்குரியcourseக்கு ஏதேனும்course materialஐ , நீங்கள் upload செய்திருப்பதாகவும் அது அனுமானித்து கொள்கிறது. |
01:09 | இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள அதற்கானMoodle டுடோரியல்களை பார்க்கவும். |
01:16 | Browserக்கு மாறி, ஒரு teacherஆக, உங்கள் moodle site.இனுள் login செய்யவும். |
01:24 | இந்த டுடோரியலில் பயன்படுத்தப்பட்டுள்ள எல்லா textஐயும் கொண்ட ஒரு text fileஐ , Code files இணைப்பில் நான் கொடுத்துள்ளேன். “Mytextfile.txt”என்று பெயரிடப்பட்ட fileஐ தரவிறக்கி, அதை உங்கள் கணினியில் திறக்கவும். |
01:40 | இடது navigation menu.வில் உள்ள, Calculus course ஐ க்ளிக் செய்யவும். |
01:45 | Question bankகுகளை கற்பதிலிருந்து தொடங்குவோம். |
01:49 | Question bank என்பது, பெரும்பாலாக தலைப்புகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்ட கேள்விகளின் ஒரு சேகரிப்பாகும். |
01:55 | Question bankல் உள்ள கேள்விகளை, பல quizகளில் மீண்டும் பயன்படுத்தலாம். |
02:01 | ஒவ்வொரு கல்வியாண்டு அல்லது வெவ்வேறு batchகளுக்கு, வெவ்வேறு quizகளை உருவாக்க இது உதவுகிறது. |
02:09 | Browserக்கு திரும்பவும். |
02:11 | மேல் வலது பக்கத்தில் உள்ள gear icon ஐ முதலில் க்ளிக் செய்து, பின் இறுதியில் உள்ள More… இணைப்பை க்ளிக் செய்யவும். |
02:18 | நாம் Course Administration பக்கத்திற்கு கொண்டு வரப்படுகிறோம். |
02:22 | கீழே scroll செய்து, Question bank என்று பெயரிடப்பட்ட பிரிவை கண்டுபிடிக்கவும். |
02:27 | இந்த பிரிவில் உள்ள Categories இணைப்பை க்ளிக் செய்யவும். |
02:30 | Add category பிரிவை பார்க்கவும். |
02:34 | Parent category dropdownஐ க்ளிக் செய்யவும். |
02:37 | இங்கு Top என்பது, இந்த courseக்கான உயர் நிலை வகையாகும். |
02:42 | முன்னிருப்பாக தேந்தெடுக்கப்படவில்லையெனில், Default for Calculus, ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:49 | Name fieldல் டைப் செய்க: Basic Calculus. |
02:54 | பின், பக்கத்தின் கீழுள்ள, Add Category பட்டனை க்ளிக் செய்யவும். இவ்வாறு, மேலும் categoryக்களை நாம் சேர்க்கலாம். |
03:04 | இங்கு நான் செய்துள்ளது போல், Calculus course,க்கு categoryக்களின் ஒரு hierarchy ஐ உருவாக்கவும். |
03:11 | Questions tabஐ க்ளிக் செய்து, கேள்விகளை உருவாக்குகின்ற பக்கத்திற்கு செல்லவும். |
03:17 | கீழுள்ள, Create a new question பட்டனை க்ளிக் செய்யவும். |
03:22 | ஒரு pop-up window திறக்கிறது. |
03:25 | நீங்கள் சேர்க்க விரும்புகின்ற கேள்வியின் typeஐ தேர்ந்தெடுக்கவும். |
03:29 | question typeன் விரிவான விளக்கம், வலது பக்கத்தில் தெரிகிறது. |
03:35 | நான் Multiple choiceஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03:39 | Pop-upன் கீழ் உள்ள, Add பட்டனை க்ளிக் செய்யவும். |
03:43 | இப்போது, நீங்கள் கேள்வியை சேர்க்க விரும்புகின்ற categoryஐ தேர்ந்தெடுக்கவும். நான் Evolutes.ஐ தேர்வு செய்கிறேன். |
03:51 | Question name fieldல் டைப் செய்க: MCQ with single correct answer. |
03:57 | Question text பகுதியில் பின்வரும் கேள்வியை டைப் செய்யவும். Mytextfile.txt fileலிலிருந்து நீங்கள் textஐ , copy மற்றும் paste செய்யலாம். |
04:07 | Default Mark, 1க்கு set செய்யப்படுகிறது மற்றும் அதை நான்1 ஆகவே வைக்கிறேன். |
04:12 | அடுத்த தேர்வு, General feedback. அவன்/அவள், quizஐ சமர்ப்பித்த பிறகு, இங்குள்ளtext மாணவருக்கு காட்டப்படுகிறது. |
04:23 | கேள்விக்கான விரிவான தீர்வை காட்டவும் இதை பயன்படுத்தலாம். இங்கு நான் செய்துள்ளது போல், textஐ டைப் செய்க அல்லது copy-paste செய்க. |
04:34 | இப்போது, One or multiple answers dropdownஐ க்ளிக் செய்யவும். |
04:39 | இங்கு 2 தேர்வுகளை நாம் காண்கிறோம்- Multiple answers allowed, One answer only |
04:46 | இரண்டு தேர்வுகளும் எப்படி வேலை செய்யும் என்பதை நான் உங்களுக்கு காட்டுகிறேன். |
04:49 | முதலில், One answer only.ஐ நான் தேர்வு செய்கிறேன். |
04:53 | முன்னிருப்பாக, Shuffle the choices checkbox check செய்யப்படுகிறது. ஒவ்வொரு quiz attemptற்கும், கேள்வியினுள் உள்ள பதிலின் தேர்வுகளை மாற்றியமைக்க இது உறுதிப்படுத்துகின்றது. |
05:06 | Answers பிரிவை பார்க்க, கீழே scroll செய்யவும். |
05:10 | இங்குள்ள ஒவ்வொரு தேர்வும், ஒரு grade மற்றும் feedbackவுடன் தொடர்புள்ளது என்பதை கவனிக்கவும். |
05:17 | இங்கு காட்டப்பட்டுள்ளபடி, Choice 1 என டைப் செய்யவும். |
05:20 | இப்போது, இந்த கேள்விக்கு, Choice 1 சரியான பதிலாகும். |
05:25 | அதனால், நான் Gradeல் 100%ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
05:30 | Grade dropdownல், ஒவ்வொரு choiceற்கும், பகுதி மதிப்பெண்கள் அல்லது எதிர்மறை மதிப்பெண்களையும் நாம் பிரித்தளிக்கலாம். |
05:38 | Moodleலில் நீங்கள் மேலும் கைதேர்ந்த பின்னர், இவைகளை பின்னர் நீங்கள் ஆராயலாம். |
05:43 | இந்த பதிலை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கான feedbackஐ , Feedback textபகுதியில் எழுதலாம். நான்“Correct” என டைப் செய்கிறேன். |
05:53 | இங்கு நான் செய்துள்ளது போல், மீதமுள்ள choiceகள் மற்றும் gradeகளை பூர்த்தி செய்யவும். |
06:01 | இப்போது, கீழே scroll செய்து, Multiple Tries பிரிவை விரிவாக்க, அதை க்ளிக் செய்யவும். |
06:08 | Penalty for each incorrect try field , முன்னிருப்பாக 33.33% க்கு set செய்யப்படுகிறது என்பதை கவனிக்கவும். |
06:18 | இதன் பொருள், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மாணவர் தண்டிக்கப்படுவார் என்பதாகும். |
06:24 | நீங்கள் அதை அப்படியே விட்டுவிடலாம் அல்லது இங்கு காட்டப்பட்டுள்ள வேறு சதவிகித தேர்வுகளுக்கு அதை மாற்றிக்கொள்ளலாம். |
06:31 | தவறான பதில்களுக்கு எனது மாணவர்களை தண்டிக்க எனக்கு விருப்பமில்லாததால், நான் 0%, ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
06:39 | பின், கீழே scroll செய்து, பக்கத்தின் கீழ் உள்ள Save changes பட்டனை க்ளிக் செய்யவும். |
06:46 | நமது கேள்வி, Question Bankக்கு சேர்க்கப்பட்டுவிட்டதை நாம் காணலாம். |
06:51 | கேள்வியின், கேள்வி தலைப்புக்கு அடுத்து, 4 iconகள் இருப்பதை கவனிக்கவும். |
06:57 | இவை, கேள்வியைedit, duplicate, preview மற்றும்delete செய்வதற்காகும். |
07:06 | quizல் கேள்வி எப்படி தோன்றும் என்பதை காண, Preview iconஐ க்ளிக் செய்யவும். |
07:13 | தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் அதன் தேர்வுகள், ஒரு pop-up windowவில் தோன்றுகின்றன. |
07:19 | Fill in correct responses பட்டனை க்ளிக் செய்யவும். கேள்விகள், தேர்வுகள் மற்றும் சரியான பதிலை ஒப்பிட்டு பார்ப்பதற்கு இது உதவுகிறது. |
07:29 | Submit and finish பட்டனை க்ளிக் செய்யவும். |
07:32 | கேள்விக்கு பதிலளித்த பிறகு மாணவர் பார்க்கப்போகின்ற feedbackஐ , இது காட்டும். |
07:38 | நீங்கள் ஒரு புதிய கேள்வியை சேர்க்கும்போதெல்லாம், சரிபார்க்க அதை மீண்டும் பார்க்கவும். |
07:44 | இந்த pop-up window வை மூட, Close preview பட்டனை க்ளிக் செய்யவும். |
07:49 | ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான பதிலை கொண்ட ஒரு MCQஐ இப்போது நாம் உருவாக்குவோம். |
07:54 | முந்தைய படிகளை பின்பற்றி, நான் மற்றொரு MCQஐ உருவாக்கியுள்ளேன். நீங்களும் அவ்வாறே செய்யவும். |
08:01 | One or multiple answers dropdownல், இம்முறை நான் Multiple answers allowed.ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
08:10 | கட்டப்பட்டுள்ளபடி, choices 1 மற்றும் 2, மற்றும் அவற்றின் உரிய gradeகளை enter செய்யவும். இங்கு நான், இரண்டிற்கும் 50% gradeஐ தேர்ந்தெடுத்துள்ளேன். |
08:20 | ஒரு சரியான பதிலை மட்டும் mark செய்கின்ற மாணவர்க்கு 0.5 markகுகள் கிடைக்கின்றன. |
08:26 | இரண்டு சரியான பதில்களையும் mark செய்கின்ற மாணவர்க்கு 1 mark கிடைக்கிறது. |
08:32 | கட்டப்பட்டுள்ளபடி, choices 3 மற்றும் 4, மற்றும் அவற்றின் உரிய gradeகளை enter செய்யவும். |
08:38 | மேலும், Penalty for each incorrect try fieldஐ நான் 0%ஆக வைக்கிறேன். |
08:44 | பின், கீழே scroll செய்து, Save changes பட்டனை க்ளிக் செய்யவும். |
08:49 | அடுத்து ஒரு Short answer கேள்வியை சேர்ப்போம். |
08:53 | ஒரு கேள்விக்கு பதிலாக, மாணவர் ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடரை டைப் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. |
09:00 | Create a new question பட்டனை க்ளிக் செய்து, Short answer தேர்வை டபுள்-க்ளிக் செய்யவும். |
09:08 | காட்டப்பட்டுள்ளபடி கேள்வியை உருவாக்கவும். |
09:11 | Case sensitivity dropdownல், No, case is unimportant.ஐ தேர்ந்தெடுக்கவும். |
09:18 | இந்த கேள்விக்கான சரியான பதில், “same logarithmic spiral” ஆகும். |
09:24 | மாணவரின் பதில், “same spiral” அல்லது “same logarithmic spiral”ஆக இருந்தால், அவருக்கு முழு மதிப்பெண்களை கொடுக்க நான் தயாராக உள்ளேன். |
09:35 | ஆனால் மாணவர், “logarithmic spiral”ஐ பதிலாக எழுதினால், நான் பாதி மதிப்பெண்ணை கொடுப்பேன். |
09:43 | பதில்களின் பிரிவுக்கு, கீழே scroll செய்யவும். |
09:46 | கட்டப்பட்டுள்ளபடி, Answer 1 மற்றும் 2, மற்றும் அவற்றின் உரிய gradeகளை பூர்த்தி செய்யவும். |
09:52 | Answer 1 textல் உள்ள asterixஐ கவனிக்கவும். எந்த characterஐயும் பொறுத்த, Asterix ஐ ஒரு wildcardஆக பயன்படுத்தலாம். |
10:02 | உதாரணத்திற்கு: The evolute of a logarithmic spiral is the same logarithmic spiral. என்று ஒரு மாணவர் எழுதுகிறார். இந்த பதிலுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். |
10:15 | கட்டப்பட்டுள்ளபடி, Answer 3 மற்றும் அதற்குரிய gradeஐ பூர்த்தி செய்யவும். |
10:20 | பதிலின் textக்கு முன் எந்த asterixஉம் இல்லை என்பதை கவனிக்கவும். |
10:24 | உதாரணத்திற்கு: The evolute of a logarithmic spiral is not the same logarithmic spiral. என்று ஒரு மாணவர் எழுதுகிறார். இந்த பதிலுக்கு எந்த மதிப்பெண்ணும் வழங்கப்பட மாட்டாது. |
10:37 | கட்டப்பட்டுள்ளபடி, Answer 4 மற்றும் அதற்குரிய gradeஐ பூர்த்தி செய்யவும். |
10:43 | இந்த பதிலுக்கு, 50% மதிப்பெண்களை மட்டுமே நான் வழங்கியுள்ளேன் என்பதை கவனிக்கவும். |
10:48 | Feedback text பகுதியில், டைப் செய்க: “You need to specify that it’s the same spiral and not any spiral.” |
10:57 | இந்த விளக்கம் மாணவருக்கு, feedbackஆக காட்டப்படும். |
11:02 | மீண்டும், Penalty for each incorrect try fieldஐ நான் 0%ஆக வைக்கிறேன். |
11:09 | பின், கீழே scroll செய்து, Save changes பட்டனை க்ளிக் செய்யவும். |
11:14 | இப்போது, ஒரு Numerical கேள்வியை சேர்ப்போம். |
11:18 | Create a new question பட்டனை க்ளிக் செய்து, பின் Numerical தேர்வை டபுள்-க்ளிக் செய்யவும். |
11:26 | காட்டப்பட்டுள்ளபடி, கேள்வியை உருவாக்கவும். |
11:29 | இந்த கேள்விக்கான பதில், 5mm ஆகும். எனினும், மாணவரின் பதில், 4.5mm மற்றும் 5.5mm க்கு இடையே எதுவாக இருந்தாலும், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். |
11:41 | இங்குள்ள error margin 0.5 ஆகும். |
11:45 | Answers பிரிவுக்கு, கீழே scroll செய்யவும். |
11:48 | காட்டப்பட்டுள்ளபடி, Answers, Error மற்றும் gradeகளை enter செய்யவும். |
11:53 | Unit handling பிரிவை விரிவாக்கவும். Unit handling dropdownல், 3 தேர்வுகள் உள்ளன. |
12:00 | நான், The unit must be given, and will be graded என்ற தேர்வை தேர்ந்தெடுக்கிறேன். |
12:07 | Unit penalty field, முன்னிருப்பாக 0.1ஐ காட்டுகிறது. நான் அதை, 0.5 ஆக்குகிறேன். |
12:16 | அதனால், unitஐ குறிப்பிடாமல் பதிலை எழுதினால், மாணவருக்கு பாதி மதிப்பெண்கள் கிடைக்கும். |
12:23 | Units are input using dropdownல், the text input elementஐ நான் தேர்ந்தெடுக்கிறேன். |
12:31 | இதன் பொருள், பதிலுடன் மாணவர், unitஐயும் சேர்த்து டைப் செய்யவேண்டும். |
12:37 | Units பிரிவை விரிவாக்கவும். |
12:40 | Unitஐ mmஆக எழுதவும் மற்றும் multiplier, 1 ஆகும். இதன் பொருள், பதிலுக்கான தேர்வுகள் mmல் உள்ளன. |
12:50 | மீண்டும், Penalty for each incorrect try fieldஐ 0%ஆக நான் வைக்கிறேன். |
12:57 | பின், கீழே scroll செய்து, Save changes பட்டனை க்ளிக் செய்யவும். |
13:02 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
13:08 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Moodle.லில், Question bank |
13:14 | questionகளின் Categoryக்கள் மற்றும் question bankகுக்கு எப்படி கேள்விகளை சேர்ப்பது. |
13:22 | உங்களுக்கான ஒரு சிறிய பயிற்சி: Question bankல் மேலும் கேள்விகளை சேர்க்கவும். |
13:28 | விவரங்களுக்கு, இந்த டுடோரியலின்Assignment இணைப்பை பார்க்கவும். |
13:34 | இந்த டுடோரியலை இடைநிறுத்தி, முடித்தவுடன் பின் தொடரவும். |
13:38 | இந்த question bankல் நாம் 10 கேள்விகளை கொண்டிருக்கவேண்டும். அதில், 6 Evolutesல் உள்ளன மற்றும் 4 Involutes subcategory.ல் உள்ளன. |
13:51 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
14:00 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
14:10 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
14:14 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
14:27 | இந்த ஸ்கிரிப்ட், நான்ஸி மற்றும் ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி. |