Moodle-Learning-Management-System/C2/Uploading-and-editing-resources-in-Moodle/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:43, 16 May 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodle.லில், resourcesகளை upload மற்றும் edit செய்வது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: URL resource , Book resource மற்றும் Moodle.லில் resourcesகளை edit செய்வது.
00:19 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04,
00:25 XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP,
00:33 Moodle 3.3 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
00:43 எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும்.
00:51 உங்கள் site administrator, ஒரு Moodle websiteஐ set செய்துள்ளதாகவும், உங்களை ஒரு teacher.ஆக பதிவு செய்துள்ளதாகவும், இந்த டுடோரியல் அனுமானித்து கொள்கிறது.
01:01 இந்த டுடோரியலை கற்பவர்களுக்கு, Moodleலில் ஒரு teacher login இருக்கவேண்டும், அவர்களுக்கு, administratorஆல் குறைந்தபட்சம் ஒரு course ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்,
01:11 மற்றும் தங்களுக்குரிய courseக்கு ஏதேனும்material, upload செய்யப்பட்டிருக்க வேண்டும்.
01:16 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள அதற்கானMoodle டுடோரியல்களை பார்க்கவும்.
01:22 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் courseற்கு ஒரு மாணவரை நீங்கள் சேர்க்க வேண்டும்.
01:28 ஒரு மாணவரை எப்படி சேர்க்கவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள, Users in Moodle டுடோரியலை பார்க்கவும்.
01:35 நான் எனது courseக்கு, Priya Sinha என்ற மாணவரை ஏற்கனவே சேர்த்துவிட்டேன்.
01:41 Browserக்கு மாறி, ஒரு teacher.ஆக, உங்கள் moodle site.இனுள் login செய்யவும்.
01:48 இடது navigation menu.வில் உள்ள, Calculus course ஐ க்ளிக் செய்யவும்.
01:53 இந்த தொடரில் முன்பே, ஒரு page resource மற்றும் ஒரு folder resourceஐ நாம் சேர்த்துவிட்டோம்.
02:00 இப்போது, சில கூடுதல் course material. ஐ நாம் சேர்ப்போம். மேல் வலது பக்கத்தில் உள்ள gear icon ஐ முதலில் க்ளிக் செய்து, பின் Turn Editing On.ஐ க்ளிக் செய்யவும்.
02:11 Basic Calculus section. ன் கீழ் வலது பக்கத்தில் உள்ள Add an activity or resource இணைப்பை க்ளிக் செய்யவும்.
02:19 Resourcesகளின் பட்டியலை கொண்ட ஒரு pop-up தோன்றுகிறது. அது, activity chooser எனப்படுகிறது.
02:26 கீழே scroll செய்து, பட்டியலிலிருந்து URLஐ தேர்ந்தெடுக்கவும். resourceன் விரிவான விளக்கம், வலது பக்கத்தில் தெரிகிறது.
02:37 ஒரு URL resourceஐ வைத்து, online resourceகளுக்கு ஒருவர் இணைப்புகளை சேர்க்கலாம்.
02:43 இவை, documents, online videos, wiki pages, open educational resources, போன்றவைகளாக இருக்கலாம்.
02:52 Activity chooserன் கீழே உள்ள Add button பட்டனை க்ளிக் செய்யவும்.
02:57 Name fieldல், Evolutes of basic curves என நான் டைப் செய்கிறேன்.
03:03 பின், External URL textboxல் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள URL ஐ டைப் செய்யவும்.
03:10 Description text பகுதி, ஒரு கட்டாயமற்ற field ஆகும். இங்கு காட்டப்பட்டுள்ளபடி நான் textஐ enter செய்கிறேன்.
03:17 இந்த text பகுதிக்கு கீழ் உள்ள Display description on course page checkboxஐ க்ளிக் செய்யவும்.
03:24 இப்போது, பிரிவை விரிவாக்க Appearance ஐ க்ளிக் செய்யவும்.
03:29 இங்குள்ள Display தேர்வு, காணொளி எவ்வாறு காட்டப்படும் என்பதை தீர்மானிக்கிறது.
03:35 Dropdownல் 4 தேர்வுகள் உள்ளன. browser settingகள் மற்றும் screen resolutionனின் அடிப்படையில், Automatic தேர்வு, சிறந்த தேர்வை தேர்ந்தெடுக்கிறது.
03:45 Embed, காணொளியை courseன் உள்ளே திறக்கிறது. அதே windowவினுள் இருக்கின்ற URLக்கு, Open, userஐ திருப்பி அனுப்புகிறது.
03:55 In pop-up, காணொளியை ஒரு புதிய pop-up windowவில் திறக்கிறது.
04:00 In pop-upஐ நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது, Pop-up width மற்றும்Pop-up height தேர்வுகள் enable செய்யப்படுகின்றன. உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல், மதிப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.
04:12 நான் Display தேர்வாக, Embedஐ தேர்ந்தெடுக்கிறேன்.
04:17 Activity completion sectionக்கு கீழே scroll செய்து, அதை விரிவாக்க, அதை க்ளிக் செய்யவும்.
04:24 ஒரு activityன் நிறைவு பெறுதலை கண்காணிக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க, இந்த section, ஆசிரியருக்கு உதவி புரிகிறது.
04:32 Completion trackingன் கீழ், 3 தேர்வுகள் உள்ளன. resourceன் அடிப்படையில், நீங்கள் கண்காணிக்கும் நுட்பத்தை தீர்மானிக்கலாம்.
04:41 இங்கு, மூன்றாவது தேர்வை நான் தேர்ந்தெடுக்கிறேன். மற்றும் Student must view this activity to complete it checkboxஐ க்ளிக் செய்கிறேன்.
04:51 கீழே scroll செய்து, Save and return to course பட்டனை க்ளிக் செய்யவும்.
04:58 Activityன் பெயருக்கு அடுத்துள்ள checkmark, activity எப்போது நிறைவு பெறுகிறது என்பதை குறிக்கிறது.
05:05 இப்போது, ஒரு book resourceஐ உருவாக்குவோம். பெயர் குறிப்பிடுவது போல, இது பல பக்கங்கள், chapterகள் மற்றும் subchapterகளைக் கொண்டிருக்கும்.
05:16 அது multimedia contentஐயும் கொண்டிருக்கலாம்.
05:20 இப்போது, browser windowவுக்கு திரும்பச் செல்லவும்.
05:23 Basic Calculus section. ன் கீழ் வலது பக்கத்தில் உள்ள Add an activity or resource இணைப்பை க்ளிக் செய்யவும்.
05:30 கீழே scroll செய்து, Resourcesகளின் பட்டியலிலிருந்து Bookஐ தேர்ந்தெடுக்கவும்.
05:34 Activity chooserக்கு கீழே உள்ள Add பட்டனை க்ளிக் செய்யவும்.
05:39 Name fieldல், டைப் செய்க: Iterating evolutes and involutes
05:45 இங்கு காட்டப்பட்டுள்ளபடி, descriptionஐ டைப் செய்யவும்.
05:48 Sectionஐ விரிவாக்க, Appearanceஐ க்ளிக் செய்யவும்.
05:51 முதல் தேர்வு, Chapter formatting ஆகும். Chapterகள் மற்றும் sub chapterகளை நாம் எப்படி காணப்போகிறோம் என்பதை இது தீர்மானிக்கிறது.
05:59 தேர்வுகள், சுய விளக்கம் கொண்டனவாக இருக்கின்றன. விளக்கங்களை படிக்க, dropdownக்கு முன் உள்ள Help icon ஐ நீங்கள் க்ளிக் செய்யலாம்.
06:08 அதை நான், Numbers.ஆக வைக்கிறேன்.
06:11 அடுத்த தேர்வு, Style of navigation. நாம், முந்தைய மற்றும் அடுத்த linkகளை எவ்வாறு காட்டப்போகிறோம் என்பதை இது தீர்மானிக்கிறது.
06:19 TOC என்பதுTable of Contents ஆகும்.
06:23 நாம் Imagesஐ தேர்ந்தெடுத்தால், முந்தைய மற்றும் அடுத்ததாக இருப்பது arrowக்களாக காட்டப்படும்.
06:29 Text என்பது, முந்தைய மற்றும் அடுத்த chapterகளை navigationல் காட்டும்.
06:34 ஒவ்வொரு chapter navigation னுக்கும், ஒரு custom titleஐ கொடுப்பதற்கான தேர்வும் நமக்கு உள்ளது.
06:40 Textஆக காட்டப்படுகின்ற chapterன் பெயரை, இது பின்னர் ரத்து செய்துவிடும்.
06:45 Style of navigationக்கு, நான் Textஐ தேர்ந்தெடுக்கிறேன்.
06:49 அடுத்து, Restrict Access பிரிவை விரிவாக்க, அதை க்ளிக் செய்யவும். இந்த resourceக்கு, எவர் அணுகலை பெற்றுள்ளார் என்பதை தீர்மானிக்க இது நமக்கு உதவுகிறது.
06:59 முன்னிருப்பாக, எந்த கட்டுப்பாடும் கிடையாது. இதன் பொருள், இந்த course,க்கு பதிவு செய்துள்ள எவரும் இந்த புத்தகத்தை காணலாம்.
07:08 Add restriction பட்டனை க்ளிக் செய்கிறேன்.
07:12 இங்கு சில தேர்வுகள் உள்ளன. ஒவ்வொன்றின் விளக்கத்தையும் நீங்கள் படித்து, எந்த கட்டுப்பாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக்கொள்ளலாம்.
07:21 நாம் முன்னர் உருவாக்கிய URL resourceக்கு, ஒரு activity completion contitionஐ நாம் வைக்கலாம்.
07:27 ஒரு மாணவர் அதை நிறைவு பெற்றதாக குறியிடும் வரை இந்த புத்தகத்திற்கான அணுகலை நாம் தடை செய்வோம்.
07:33 Activity completionஐ க்ளிக் செய்யவும். நாம் தேர்ந்தெடுக்கின்ற தடைக்கான தேர்வின் அடிப்படையில், இங்குள்ள fieldகள் வேறுபட்டதாக இருக்கும்.
07:42 Activity completion dropdownனிலிருந்து, Evolutes of basic curveஐ தேர்வு செய்யவும். பின், conditonக்கு Must be marked completeஐ தேர்ந்தெடுக்கவும்.
07:54 கீழே scroll செய்து, பக்கத்தின் கீழுள்ள Save and display பட்டனை க்ளிக் செய்யவும்.
08:00 இந்த புத்தகத்திற்கு இப்போது, chapterகள் மற்றும் sub chapterகளை நாம் சேர்க்கலாம்.
08:05 Chapter title லில், Introduction என டைப் செய்யவும்.
08:09 Content க்கு, Introduction to evolutes and involutes என டைப் செய்யவும். விரிவுரையின் குறிப்பு ஏதேனும் இருந்தால், அதை copy மற்றும் paste செய்யவும்.
08:19 பக்கத்தின் கீழுள்ள Save changes பட்டனை க்ளிக் செய்யவும்.
08:24 இப்போது இந்த chapterஐ , pageன் நடுவில் நீங்கள் காணலாம். மேலும், வலது பக்கத்தில் ஒரு table of contents உள்ளது.
08:32 Exit Book இணைப்பை க்ளிக் செய்தால், நாம் Calculus courseக்கு திரும்ப அனுப்பப்படுவோம்.
08:38 Introduction chapterன் கீழ், வலது பக்கத்தில், Table of Contents blockஇனுள், 4 iconsகள் இருப்பதை கவனிக்கவும்.
08:46 Edit, Delete, Hide மற்றும்Add new chapter.
08:55 இப்போது, ஒரு subchapter ஐ சேர்க்கிறேன். Add new chapterஐ குறிக்கின்ற plus icon ஐ க்ளிக் செய்யவும். Subchapterகள், chapterகள் போலவே உருவாக்கப்படுகின்றன.
09:07 அவைகள் subchapterகள் என்பதை குறிக்க, அவை ஒரு கூடுதல் checkboxஐ கொண்டிருக்கின்றன. இந்த checkboxஐ க்ளிக் செய்யவும்.
09:15 Chapter titleலில், Classical evolutes and involutes என டைப் செய்யவும். இங்கு காட்டப்பட்டுள்ளபடி, contentஐ copy மற்றும் paste செய்யவும்.
09:24 Book-IteratingEvolutesAndInvolutes.odtக்கான contentஐ , நீங்கள் இந்த டுடோரியலின் Code filesலில் காணலாம்.
09:31 பக்கத்தின் கீழுள்ள Save changes பட்டனை க்ளிக் செய்யவும்.
09:37 இப்போது, subchapterஐ நீங்கள் காணலாம். மேலும், முந்தைய chapterக்கான navigationஐ கவனிக்கவும்.
09:44 வலது பக்கத்தில், iconsக்கு அடுத்ததாக ஒரு கூடுதல்icon இருப்பதை கவனிக்கவும்.
09:49 மேல் மற்றும் கீழ் அம்புக்குறிகள், chapterகளை மறுவரிசைப்படுத்துவதற்காகும்.
09:54 இந்த chapterஐ மேலே நகர்த்தினால், என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். Up arrowஐ க்ளிக் செய்யவும்.
10:01 Introduction, ஒரு subchapterக்கு பதிலாக, இரண்டாவது chapterஆக மாறியிருப்பதை கவனிக்கவும்.
10:08 மீண்டும் அதை, முதலாவது chapterஆக நகர்த்தவும்.
10:11 Classical evolutes and involutesஐ மீண்டும் ஒரு subchapterஆக எப்படி மாற்றுவது? தலைப்புக்கு கீழே உள்ள gear iconஐ க்ளிக் செய்யவும்.
10:21 இப்போது, அதை ஒரு subchapter ஆக்க, Subchapter ஐ க்ளிக் செய்யவும்.
10:26 கீழே scroll செய்து, Save changes பட்டனை க்ளிக் செய்யவும்.
10:30 மீண்டும், Calculus courseக்கு திரும்பச் செல்வோம்.
10:34 Basic Calculus தலைப்புக்கு, இப்போது கீழுள்ள resourceகளை நாம் கொண்டுள்ளோம்.
10:40 இந்த resourcesகளை இழுத்து, அவற்றை மறுவரிசைப்படுத்தலாம்.
10:45 மற்ற இரண்டு resourceகளுக்கும் மேலே, Evolutes of Basic curves URL resourceஐ இழுக்கிறேன்.
10:52 ஒவ்வொரு resourceன் வலது பக்கம், ஒரு Edit இணைப்பு உள்ளது. அதை க்ளிக் செய்யவும்.
10:58 resourceஐ , edit, hide, duplicate மற்றும் delete செய்ய, settingகுகள் உள்ளன. அவை சுய விளக்கத்துடன் உள்ளன.
11:09 மேலும் 2 தேர்வுகள் உள்ளன: Move right மற்றும் Assign roles.
11:14 Move rightஐ க்ளிக் செய்யவும். இது resourceக்கு, சிறிது indentationஐ கொடுக்கும்.
11:21 மற்றொரு resourceன் ஒரு பகுதியான ஒரு resourceன் காட்சி உருவமைப்புக்கு இது உதவுகிறது.
11:28 இந்த resourceஐ திரும்ப அதன் பழைய நிலைக்கு கொண்டுவர, நான் Move left ஐ க்ளிக் செய்கிறேன்.
11:34 இப்போது நாம், Moodle.லிலிருந்து logout செய்யலாம்.
11:38 இப்போது மாணவர் Priya Sinhaவாக நான் login செய்கிறேன்.
11:41 மாணவர் Priya Sinha, இவ்வாறு இந்த பக்கத்தை பார்ப்பார்.
11:46 completion boxகள், முதல் முறையாக tick செய்யப்படவில்லை என்பதை கவனிக்கவும்.
11:51 இந்த resourceஐ நிறைவு பெற்றதாக குறியிட, அவள் இந்த URLஐ பார்க்கவேண்டும்.
11:56 மற்றும், URL resource, நிறைவு பெற்றதாக குறியிடப்படும் வரை, book resourceஐ க்ளிக் செய்யமுடியாது.
12:02 Evolutes of basic curves resourceஐ நான் க்ளிக் செய்கிறேன்.
12:07 இப்போது, breadcrumbல் உள்ள Calculusஐ க்ளிக் செய்யவும். resource இப்போது நிறைவு பெற்றதாக குறியிடப்பட்டு, மாணவருக்கு கிடைக்கிறது.
12:17 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
12:23 இந்த டுடோரியலில் நாம் கற்றது: URL resource , Book resource மற்றும் Moodle.லில் resourcesகளை edit செய்வது.
12:34 உங்களுக்கான ஒரு சிறிய பயிற்சி: நாம் முன்பு உருவாக்கிய புத்தகத்தில், மேலும் chapterகள் மற்றும் subchapterகளை சேர்க்கவும்.
12:42 கூறப்பட்டுள்ளவாறு அவற்றை மறுவரிசைப்படுத்தவும். விவரங்களுக்கு, இந்த டுட்டோரியலின்Assignment இணைப்பை பார்க்கவும்.
12:50 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
12:59 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
13:09 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
13:14 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
13:26 இந்த ஸ்கிரிப்ட், நான்ஸி மற்றும் ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree