Moodle-Learning-Management-System/C2/Teachers-Dashboard-in-Moodle/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:05, 13 May 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodle.லில், Teacher’s dashboard குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், ஒரு வழக்கமான Moodle course overview.ஐ பற்றி கற்போம்.
00:14 பின்வருவனவற்றையும் கற்போம்: teachers’ dashboard , profile ஐ எப்படி edit செய்வது மற்றும் preferencesகளை எப்படி edit செய்வது.
00:25 இறுதியாக, Moodle.லில் உள்ள நமது course க்கு தொடர்புள்ள சில தொடக்க நிலை விவரங்களை சேர்க்கக்கற்போம்.
00:33 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04, XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP, Moodle 3.3 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
00:59 எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும்.
01:07 உங்கள் site administrator, ஒரு Moodle websiteஐ set செய்துள்ளதாகவும், உங்களுக்கு teacher privilegeகள் உள்ள ஒரு புதிய வெறுமையான course ஐ ஒதுக்கியுள்ளதாகவும், இந்த டுடோரியல் அனுமானித்து கொள்கிறது. எனது system administrator , ஏற்கனவே பின்வருவனவற்றை செய்துவிட்டார்.
01:26 course “Calculus”.க்கான Teacher role , user “Rebecca Raymond” க்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்கவும்.
01:34 உங்கள் site administrator ஐ, இந்த வலைத்தளத்தில் உள்ள Moodle டுடோரியல்களை பார்க்கச் சொல்லவும்.
01:41 மேலும், குறைந்தபட்சம் ஒரு courseக்கு, teacher privilegeகளை கொண்ட ஒரு user ஐ உருவாக்கச் சொல்லவும்.
01:48 Moodle , மிகவும் இளக்கமான, படைப்பாற்றல் மிக்க மற்றும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளில் ஒன்றாகும்.
01:56 வழக்கமாக , ஆசிரியர்களால் பின்வருவனவற்றிக்காக பயன்படுத்தப்படுகிறது- தங்கள் கற்பித்தல்-கற்றல் வளங்களை upload செய்ய, fileகள், காணொளிகள் போன்ற multimedia e-resourceக்களின் தங்கள் சேகரிப்பை சமாளிக்க.
02:12 இணைய வளங்கள் மற்றும் திறந்த கல்வி வளங்களை பகிர்ந்துகொள்ள, YouTube / Vimeo காணொளிகளை உட்பொதிக்க,
02:22 quizகள் மற்றும் assignmentகளை நிர்வாகிக்க, Wiki, Glossary போன்ற கூட்டு உள்ளடக்கத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்க,
02:34 மாணவர்களுடன், ஒத்திசைந்து மற்றும் ஒத்தியங்காமல், தொடர்புகொள்ள மற்றும் மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தை கண்காணிக்க.
02:44 என்னுடைய Calculus courseன் course overviewஐ நான் கொண்டுள்ளேன்.
02:50 நான் பின்வருவனவற்றையும் கொண்டுள்ளேன்- விளக்கப்படப்போகின்ற topicகுகள், ஒரு வாரத்தில் உள்ள lectureகளின் எண்ணிக்கை, courseக்கான assignmentகளின் மொத்த எண்ணிக்கை,
03:01 quizகளின் மொத்த எண்ணிக்கை, (வாராந்திர அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறை), end of course examகளின் மொத்த எண்ணிக்கை, மதிப்பெண்களின் விநியோகம், courseக்கான புத்தகங்கள், புத்தக மேற்கோள்கள்
03:18 நான் எனது course ஐ கட்டமைத்து, அதற்கேற்றாற் போல் எல்லா பொருட்களையும், Moodleலில் upload செய்யவேண்டும்.
03:25 Browserக்கு மாறி, Moodle site.ஐ திறக்கவும்.
03:30 ஒரு header மற்றும் கிடைக்கின்ற courseக்களுடன் ஒரு பக்கம் காட்டப்படும்.
03:35 Windowவின் மேல் வலது மூலையில் உள்ள Login இணைப்பை க்ளிக் செய்யவும்.
03:40 நான் teacher Rebecca Raymond. ஆக login செய்கிறேன்.
03:44 நமது passwordஐ மாற்றத் தூண்டுகின்ற ஒரு பக்கத்தில் நாம் உள்ளோம். இது ஏனெனில், Force password change தேர்வு, admin ஆல் முன்னர் activate செய்யப்பட்டது.
03:57 தற்போதைய password ஐ டைப் செய்து, அதனை பின்தொடர்ந்து புதிய password ஐ டைப் செய்யவும். நான் Spokentutorial12 # என டைப் செய்கிறேன்.
04:07 புதிய password.ஐ மீண்டும் டைப் செய்யவும். பின், கீழுள்ள Save changes பட்டனை க்ளிக் செய்யவும்.
04:15 மாற்றப்பட்டுவிட்டது என்பதை உறுதிப்படுத்துகின்ற ஒரு வெற்றிச் செய்தி தோன்றுகிறது. Continue பட்டனை க்ளிக் செய்யவும்,
04:24 நாம் தற்போது இருக்கின்ற பக்கம், dashboard எனப்படுகிறது.
04:29 நமது dashboard, 3 columnகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
04:34 இடது பக்கத்தில் இருப்பது, Navigation menu ஆகும். நடுவில் அகலமாக இருப்பது, 'Timeline' மற்றும் 'Course'களை கொண்ட முக்கிய Course overview பகுதியாகும்.
04:47 வலது பக்கத்தில் இருப்பது, Blocks column.
04:51 Courses tab, நீங்கள் பதிவாகியுள்ள courseகளை பட்டியலிடுகிறது. Course overview பகுதியில் உள்ள Courses tabஐ க்ளிக் செய்யவும்.
05:02 In Progress tabல், இங்கு 2 courseகளை நாம் காண்கிறோம்: Calculus மற்றும் Linear Algebra. இந்த courseகள், adminஆல் teacher Rebecca Raymond க்கு ஒதுக்கப்பட்டவையாகும்.
05:17 பிற்காலத்திக்கு அவளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் courses கள், Future tabல் புலனாகும். அதே போல், அவளுடைய முடிந்த courseகள், Past tabன் கீழ் காணப்படும்.
05:30 இப்போது, pageன் headerஐ பார்ப்போம். மேல் இடது மூலையில், Navigation Drawer அல்லது Navigation menu.ஐ நாம் காணலாம்.
05:41 இது, Calendar, Private Fileகள் மற்றும் My courses இணைப்புகளுக்கு அணுகலை நமக்கு கொடுக்கும்.
05:48 இது ஒரு toggle menu. ஆகும். இதன் பொருள், க்ளிக் செய்யப்படும் போது, தனது status ஐ, இது open ல் இருந்து close , மற்றும் அதற்கு நேர்மாறாகவும் மாற்றிக்கொள்ளும்.
05:58 மேல் வலது பக்கத்தில், notificationகள் மற்றும் messageகளுக்கு விரைவு அணுகல் iconகள் உள்ளன.
06:06 மேல் வலது பக்கத்தில் உள்ள profile pictureஐ க்ளிக் செய்தால், அது user menuஐ நாம் அணுக நம்மை enable செய்யும். அது, quick access user menu எனவும் அழைக்கப்படுகிறது.
06:18 அதை க்ளிக் செய்யவும். இடது பக்கத்தில் உள்ளது போல், இந்த menu itemகள் அனைத்தும் toggle menuக்களாகும்.
06:28 Profile தேர்வை க்ளிக் செய்யவும். Moodleலில் உள்ள ஒவ்வொரு userக்கும் ஒரு profile page உள்ளது.
06:36 Usersகள், பின்வருவனவற்றை செய்ய அனுமதிப்பதற்கு, இது இணைப்புகளை கொண்டிருக்கிறது- தங்கள் profile தகவலை edit செய்ய, தாங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள courseகளை பார்க்க,
06:46 தங்கள் blog அல்லது forum postகளை பார்க்க, தங்களுக்கு அணுகல் உள்ள எந்த reportகளையும் சரிபார்க்க, முந்தைய முறை login செய்ய பயன்படுத்தப்பட்ட தங்கள் access logகளை காண.
07:01 இப்போது, Edit Profile இணைப்பை க்ளிக் செய்வோம்.
07:06 Edit Profile page திறக்கிறது. இந்த பக்கம், 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது: General, User Picture, Additional Names, Interests, Optional
07:24 General மற்றும்User picture பிரிவுகள், முன்னிருப்பாக விரிவாக்கப்பட்டிருக்கின்றன.
07:30 வலது பக்கத்தில் உள்ள ‘Expand all’ இணைப்பு, எல்லா sectionகளையும் விரிவாக்குகிறது.
07:36 மேலும், எந்த ஒரு section பெயரையும் க்ளிக் செய்தால், அது அதனை விரிவாக்குகிறது அல்லது சுருக்குறுகிறது.
07:42 இங்கு, எல்லா fieldகளும் edit செய்யக்கூடியவையாகும்.
07:45 நான் இப்போது செய்தது போல், உங்கள் தனிப்பட்ட விவரங்களை நீங்கள் General sectionல் enter செய்யலாம்.
07:52 ஒரு teacherஆக, எனது மாணவர்கள் என்னை பற்றி சிறிது தெரிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகிறேன்.
07:58 அதனால் இங்கு Description fieldல், நான் சில விவரங்களை பூர்த்தி செய்கிறேன்.
08:04 டுடோரியலை இடைநிறுத்தி, நான் இங்கு செய்துள்ளது போல், உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
08:10 மற்ற fieldகள் மற்றும் பிரிவுகளில், நீங்கள் மேலும் சில தகவலை சேர்க்கலாம். உங்கள் படத்தையும் நீங்கள் upload செய்யலாம்.
08:19 General மற்றும்Optional பிரிவுகளில், நான் மேலும் சில விவரங்களை சேர்த்துள்ளேன்.
08:25 பின், Update Profile பட்டனை க்ளிக் செய்து, பக்கத்தை சேமிக்கவும்.
08:30 மேல் வலது பக்கத்தில் உள்ள, quick access user menuஐ மீண்டும் க்ளிக் செய்யவும். பின், Preferences இணைப்பை க்ளிக் செய்யவும்.
08:40 தாங்கள் edit செய்ய விரும்புகின்ற பல்வேறு settingகளுக்கான விரைவு அணுகுதலை, userகளுக்கு, Preferences பக்கம் கொடுக்கிறது.
08:48 ஒரு teacher’s account க்கான Preferences பக்கம், பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது: User account, Blogs and Badges
09:00 நாம் Edit Profile மற்றும் Change Passwordஐ முன்பே பார்த்துவிட்டோம்.
09:06 பின்வருவனவற்றிக்கு, வேறு சில preferenceகள் உள்ளன: Language, Forum, Editor, Course, Calendar, Message, Notification.
09:19 Calendar preferencesஐ க்ளிக் செய்வோம்.
09:23 நேரத்தை 24 மணிநேர formatல் காட்ட, நாம் calendarஐ set செய்வோம்.
09:29 மேலும், Upcoming events look-aheadஐ 2 வாரங்களுக்கு set செய்வோம்.
09:35 இதன் பொருள், அடுத்து 2 வாரங்களுக்கு நடக்கப்போகின்ற எல்லா நிகழ்ச்சிகளுக்கான notificationகளையும் நாம் calenderல் பார்ப்போம்.
09:43 Save changes பட்டனை க்ளிக் செய்யவும்.
09:46 இந்த தொடரின் பிற்பகுதியில், அந்த அம்சங்களை பார்க்கும் போது, மீதமுள்ள preferencesகளை நாம் பார்ப்போம்.
09:54 இங்குள்ள தகவலை கவனிக்கவும்.
09:57 இது breadcrumb navigation. ஆகும். இது, Moodle siteன் வரிசையில், நாம் எந்த பக்கத்தில் உள்ளோம் என்பதை குறிக்கின்ற ஒரு visual aid ஆகும் .
10:09 ஒரு ஒற்றை க்ளிக்கினால், ஒரு உயரிய-நிலையில் உள்ள பக்கத்திற்கு திரும்பச் செல்ல, இது நமக்கு உதவி புரிகிறது.
10:15 dashboard.க்கு செல்ல, breadcrumbsல் உள்ள, Dashboard இணைப்பை க்ளிக் செய்யவும்.
10:21 இப்போது, Calculus courseக்கு ஒரு தலைப்பு மற்றும் சுருக்கத்தை சேர்க்கக்கற்போம்.
10:28 இடது பக்கத்தில், Navigation menu ல் உள்ள, Calculus course ஐ க்ளிக் செய்வோம்.
10:34 புதிய பக்கத்தில், மேல் வலது புறம் உள்ள gear iconஐ க்ளிக் செய்யவும்.
10:40 பின், Turn editing on தேர்வை க்ளிக் செய்யவும்.
10:45 பக்கம், இப்போது மேலும் edit தேர்வுகளை காட்டுகிறது.
10:50 Topic 1க்கு அடுத்துள்ள, pencil icon ஐ க்ளிக் செய்யவும்.
10:55 இப்போது, தோன்றுகின்ற text boxல், டைப் செய்க: Basic Calculus. Enter.ஐ அழுத்தவும்.
11:03 தலைப்பின் பெயர் மாறுவதை கவனிக்கவும்.
11:06 இப்போது, அந்த தலைப்பின் வலது முனைக்கோடியில் உள்ள, Edit இணைப்பை க்ளிக் செய்யவும்.
11:11 பின், Edit topic தேர்வை க்ளிக் செய்யவும்.
11:15 இது நம்மை, Summary பக்கத்திற்கு கொண்டுவருகிறது.
11:18 இங்கு, Summary fieldல், நாம் தலைப்பின் ஒரு சுருக்கத்தை கொடுக்கலாம். நான், காட்டப்பட்டுள்ளவாறு டைப் செய்கிறேன்.
11:27 கீழே scroll செய்து, Save Changes பட்டனை க்ளிக் செய்யவும்.
11:32 மாற்றத்தை கவனிக்கவும்.
11:34 இவ்வாறு, நமது course ன் விவரங்களை, Moodleலில் நாம் சேர்க்கத் தொடங்குகிறோம்.
11:40 இப்போது நாம், Moodleலிலிருந்து logout செய்வோம். அதைச் செய்ய, மேல் வலது பக்கத்தில் உள்ள user icon ஐ க்ளிக் செய்யவும். இப்போது, Log out தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
11:50 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
11:56 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Course overviewன் விவரங்கள், teachers’ dashboard ,
12:05 Edit profile setting கள் மற்றும், Preferences settingகள் மற்றும், Moodleலில் course ன் தொடக்க நிலை விவரங்களை சேர்ப்பது
12:16 பயிற்சியாக, Calculus courseல் உள்ள எல்லா தலைப்புகளின் பெயர்களையும் மாற்றவும், எல்லா தலைப்புகளுக்கு உரிய summaryகளை சேர்க்கவும், விவரங்களுக்கு இந்த டுடோரியலின்Assignment இணைப்பை பார்க்கவும் .
12:31 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
12:39 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
12:49 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
12:53 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
13:06 இந்த ஸ்கிரிப்ட், ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே.
13:17 கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree