Moodle-Learning-Management-System/C2/Installing-Moodle-on-Local-Server/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 09:07, 6 May 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Local serverல் Mooldeஐ நிறுவுவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் Moodleஐ தரவிறக்க மற்றும் நிறுவக் கற்போம்.
00:15 Moodleஐ நிறுவ, பின்வருவனவற்றை ஆதரிக்கின்ற ஒரு கணினியை நீங்கள் கொண்டிருக்கவேண்டும்: Apache 2.x (அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு)
00:23 MariaDB 5.5.30 (அல்லது அதற்கு மேற்பட்ட எந்த ஒரு பதிப்பு) மற்றும் PHP 5.4.4 +(அல்லது அதற்கு மேற்பட்ட எந்த ஒரு பதிப்பு)
00:36 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04
00:44 XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP
00:53 Moodle 3.3 மற்றும் Firefox web browser.
00:59 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
01:03 எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும்.
01:11 தொடங்குவதற்கு முன் Internetஉடன் தொடர்பு உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
01:16 மேலும், இத்தொடரில் உள்ள முந்தைய டுடோரியல்களை பார்க்கவும். மற்றும் முன்நிபந்தனைகள் எல்லாம் செயல்படுத்தப்பட்டுவிட்டனவா மற்றும் database ஒழுங்காக அமைக்கப்பட்டுவிட்டதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
01:27 XAMPP செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும் மற்றும் username moodle-stஉடன் ஒரு database அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
01:37 முதலில், நான் web browserக்கு சென்று, XAMPP.ஐ தொடக்குகிறேன்.
01:42 Address barல் டைப் செய்க: http colon double slash 127 dot 0 dot 0 dot 1 . பின், Enterஐ அழுத்தவும்.
01:56 திரையின் மேல் வலது பக்கத்தில் உள்ள menuவில், PHPinfo.ஐ க்ளிக் செய்யவும்.
02:02 இப்போது, Ctrl + F keyகளை அழுத்தி DOCUMENT underscore ROOT.ஐ தேடவும்.
02:10 அது, Apache Environment என்ற tableலில் காணப்படும்.
02:14 DOCUMENT underscore ROOTன் மதிப்பு, slash opt slash lampp slash htdocs அல்லது slash var slash wwwஆக இருக்கும்.
02:30 எனது கணினியில், அது slash opt slash lampp slash htdocs. ஆகும்.
02:37 இந்த pathஐ குறித்துக்கொள்ளவும். நாம் இங்கு Moodleஐ நிறுவப்போகிறோம்.
02:43 இப்போது, Moodleஐ தரவிறக்கத் தொடங்குவோம். moodle.org என்ற Moodleன் அலுவல்சார் வலைத்தளத்திற்கு செல்லவும்.
02:53 மேல் menuவில் உள்ள Downloads இணைப்பை க்ளிக் செய்யவும். பின், சமீபத்திய ரிலீஸ் பட்டன், MOODLE 3.3+. ஐ க்ளிக் செய்யவும்.
03:04 இந்த டுடோரியலை பதிவு செய்யும் போது, Moodleன் சமீபத்திய நிலையான பதிப்பு 3.3 ஆகும். நீங்கள் முயற்சிக்கும் போது, அது வேறாக இருக்கலாம்.
03:15 Download zip பட்டனை க்ளிக் செய்யவும். இது, Moodleஐ நமது கணினியில் தரவிறக்கத் தொடங்கும்.
03:22 நான் ஏற்கனவே இந்த fileஐ தரவிறக்கிவிட்டேன் மற்றும் அது எனது Downloads folderல் உள்ளது. அதனால், இந்த படியை நான் தவிர்க்கிறேன்.
03:30 Ctrl + Alt + T keyகளை ஒன்றாக அழுத்தி terminalஐ திறக்கவும்.
03:36 Terminalலில், directoryஐ நான் Downloads.க்கு மாற்றுகிறேன்.
03:40 அதைச் செய்ய, cd space Downloadsஎன்ற commandஐ டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்.
03:48 உங்கள் கணினியில் Moodleஐ தரவிறக்கியதற்கான pathஐ நீங்கள் டைப் செய்ய வேண்டும்.
03:53 நீங்கள் அந்த directoryக்கு வந்தவுடன், அங்குள்ள fileகளை பட்டியலிட, ls என டைப் செய்து, Enterஐ அழுத்தவும்.
04:01 இதுவே எனது Moodle installation file. அது moodle hyphen latest hyphen 33 dot zip என்ற பெயரை கொண்டிருக்கிறது.
04:11 தரவிறக்கிய போது, அதற்கு வேறொரு பெயரை நீங்கள் வைத்திருந்தால், பின் உங்கள் folderல் அந்த fileஐ கண்டறியவும்.
04:19 அடுத்து, இந்த zip fileலில் உள்ள contentகளை extract செய்து, moodle folderலினுள் நாம் வைக்க வேண்டும்.
04:26 command promptல் டைப் செய்க: sudo space unzip space moodle hyphen latest hyphen 33 dot zip space hyphen d space slash opt slash lampp slash htdocs slash. பின், Enterஐ அழுத்தவும்.
04:51 Ctrl + L.ஐ அழுத்தி, terminalஐ clear செய்வோம்.
04:56 இப்போது, டைப் செய்க: cd space slash opt slash lampp slash htdocs. பின், Enterஐ அழுத்தவும்.
05:06 இந்த directoryல் உள்ள fileகளை பட்டியலிட, டைப் செய்க: ls. பின், Enterஐ அழுத்தவும்.
05:12 Moodle என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய folder உருவாகியிருப்பதை நீங்கள் காணலாம்.
05:18 Moodle folderன் owner மற்றும் group memberகளுக்கு, read, write மற்றும் execute permissionகளை நாம் கொடுப்போம்.
05:27 அதற்கு டைப் செய்க- sudo space chmod space 777 space moodle slash. பின், Enterஐ அழுத்தவும்.
05:39 தூண்டப்பட்டால், administrative passwordஐ enter செய்து, பின், Enterஐ அழுத்தவும்.
05:45 இப்போது browserக்கு சென்று, டைப் செய்க-http colon double slash 127.0.0.1 slash moodle or http colon double slash localhost slash moodle
06:06 நான் இங்கு எனது localhost IPஐ டைப் செய்துள்ளேன்.
06:10 இந்த IP, moodle நிறுவப்பட்டுள்ள அந்த கணினியின் IPஆக கண்டிப்பாக இருக்க வேண்டும். moodle folderலினுள் தான், நாம் முன்பு extract செய்துள்ளோம் என்பதை கவனிக்கவும்.
06:23 Enter ஐ அழுத்தினால், Moodle நிறுவதல் பக்கத்தை நீங்கள் காணலாம்.
06:29 முன்னிருப்பாக, நாம் ஒன்றாம் படி, அதாவது Configuration.ல் இருக்கின்றோம். Moodleஐ பல மொழிகளில் நிறுவலாம் என்பதை கவனிக்கவும்.
06:40 ஆனால் நாம், ஆங்கில மொழியுடன் நிறுத்திக்கொள்வோம். அதனால், இங்கு English ஐ தேர்ந்தெடுக்கவும். மொழி drop downனின் கீழ் உள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
06:52 அடுத்தது, Paths பக்கமாகும். இங்கு தான், web address, moodle directory மற்றும்data directory வரையறுக்கப்பட்டுள்ளது.
07:02 Moodleஐ நிறுவியவுடன், அதை அணுகுவதற்கான Web address, URL ஆகும்.
07:08 இங்கு காட்டப்பட்டுள்ளது , மேலே நாம் enter செய்த அதே URL ஆகும்:
07:14 எல்லா Moodle codeஉம் கிடைக்கின்ற folder , Moodle directory ஆகும்.
07:20 Web address மற்றும்Moodle directory இரண்டுமே non-editable fieldகளாகும். இவற்றை நம்மால் மாற்ற முடியாது.
07:31 அடுத்தது, Data directory ஆகும். இந்த folderல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் upload செய்யப்பட்ட எல்லா file contentஉம் சேமிக்கப்பட்டிருக்கும்.
07:42 இங்கு fileகளை சேமிக்க, இந்த folderக்கு read மற்றும் write permission தேவை.
07:50 எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக இது, இணையத்தில் நேரடியாக அணுகும்படியாக இருக்கக்கூடாது.
07:57 அதனால், இது installation folder க்கு வெளியே வைக்கப்படுகிறது.
08:03 lampp folderஇனுள் இருக்கின்ற moodledata, installer உருவாக்க முயற்சிக்கின்ற முன்னிருப்பான data directory ஆகும்.
08:11 எனினும், இங்கு ஒரு folderஐ உருவாக்க அதற்கு அனுமதி கிடையாது. அதனால், இந்த folderஐ நாம் கைமுறையாக உருவாக்கி, அதற்கு தேவையான permissionகளை கொடுக்க வேண்டும்.
08:23 Terminal windowக்கு செல்லவும். promptல் டைப் செய்க: sudo space mkdir space slash opt slash lampp slash moodledata. பின், Enterஐ அழுத்தவும்.
08:41 இப்போது, டைப் செய்க: sudo space chmod space 777 space slash opt slash lampp slash moodledata. பின், Enterஐ அழுத்தவும்.
08:57 இப்போது, browserக்கு திரும்பச் சென்று Next பட்டனை க்ளிக் செய்யவும்.
09:02 இதற்கு பின் வருவது, database configuration பக்கம். Dropdownனிலிருந்து MariaDBஐ தேர்ந்தெடுத்து, பின், Next பட்டனை க்ளிக் செய்யவும்.
09:13 Database Host Name.ஆக localhostஐ enter செய்யவும்.
09:18 இப்போது, நாம் database name, username மற்றும் passwordஐ enter செய்ய வேண்டும். இவைகளை நாம் ஏற்கனவே phpMyAdmin.ல் உருவாக்கியிருந்தோம்.
09:30 database name.ஆக நான் moodle-stஐ enter செய்கிறேன்.
09:36 பின், database username.ஆக moodle-st.
09:41 மற்றும் எனது database password.ஆக, moodle-st.
09:46 Table Prefix மற்றும் மற்ற fieldகளை அப்படியே விட்டுவிட்டு, Next.ஐ க்ளிக் செய்யவும்.
09:54 ஒரு terms and conditions பக்கத்தை நாம் காணலாம்.
09:59 இப்படியில், நீங்கள் உரிம ஒப்பந்தத்தை படித்து, அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். உரையை படித்து, பின் Continue.ஐ க்ளிக் செய்யவும்.
10:10 அடுத்து, Server Checks பக்கத்தை நாம் காணலாம். Your server environment meets all minimum requirements என்ற செய்தியை காண கீழே scroll செய்யவும்.
10:23 காட்டப்பட்டுள்ளபடி, வேறு errorகளையும் நீங்கள் காணலாம்: தீர்வுக்கு, இந்த டுடோரியலின்Additional reading material இணைப்பை பார்க்கவும்.
10:33 Continue.ஐ க்ளிக் செய்யவும்.
10:36 உங்கள் இணையத்தின் வேகத்தை பொறுத்து, இந்த பணிக்கு சிறிது நேரம் ஆகலாம். இந்த பக்கத்தை refresh செய்தால், Site is being upgraded, please retry later என்ற ஒரு error செய்தியை நீங்கள் பெறலாம்.
10:50 அப்படி ஆனால், சிறிது நேரத்திற்கு பிறகு refresh செய்யவும்.
10:54 நிறுவுதலுக்கான ஒரு வெற்றிச் செய்தியை பெற்ற பிறகு, Continue.ஐ க்ளிக் செய்யவும்.
11:00 அடுத்த பக்கம், administrator configuration.க்கானதாகும்.
11:05 Moodle Administrativeபக்கத்திற்கு, நீங்கள் விரும்புகின்ற usernameஐ enter செய்யவும். நான் usernameஐ, admin. என enter செய்கிறேன்.
11:15 இப்போது, Moodle Administrator.க்கு ஒரு passwordஐ enter செய்யவும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள விதிகளை, இந்த password பின்பற்ற வேண்டும்.
11:26 Passwordஐ enter செய்ய, Click to enter text இணைப்பை க்ளிக் செய்யவும்.
11:32 எனது admin password.ஆக, Spokentutorial1@ஐ நான் enter செய்கிறேன். Passwordஐ வெளிப்படுத்த, Unmask iconஐ க்ளிக் செய்யவும்.
11:43 பிற்கால தேவைக்கு, நீங்கள் உருவாக்கியusername மற்றும் passwordஐ குறித்து வைத்துக்கொள்ளவும்.
11:49 Email address, ஒரு கட்டாயமான field ஆகும். இங்கு நான், priyankaspokentutorial@gmail.com என enter செய்கிறேன்.
11:59 Select a country dropdownனிலிருந்து, India.ஐ தேர்ந்தெடுக்கவும். Timezoneஐ, Asia/Kolkata என தேர்ந்தெடுக்கவும்.
12:08 மற்ற fieldகளை, அதன் முன்னிருப்பு மதிப்புகளுடன் அப்படியே விட்டுவிடுவோம்.
12:13 கீழே scroll செய்து, Update Profile பட்டனை க்ளிக் செய்யவும்.
12:18 Moodle, ஒரு வளம் உட்கொள்கின்ற software ஆகும் என்பதை கவனிக்கவும். ஒவ்வொரு படியும் நிறைவு பெற, சில நேரம் எடுத்துக்கொள்ளலாம்.
12:27 அடுத்த பக்கம் load ஆவதற்கு காத்திருக்கவும் மற்றும் பக்கத்தை மூடவோ, refresh செய்யவோ வேண்டாம்.
12:34 அடுத்த திரை, Front page settingகளுக்காகும். நமது moodle site.ஐ பார்க்கும் போது, மக்கள் இந்தப்பக்கத்தை தான் பார்ப்பார்கள்.
12:45 Full Site Name.ஆக, Digital India LMSஐ enter செய்யவும்.
12:50 Short name for site. க்கு, மீண்டும் Digital India LMSஐ enter செய்யவும். Navigation barல், moodle siteன் பெயராக இதுவே காணப்படும்.
13:03 இப்போதைக்கு, Front Page Summaryஐ காலியாக விடுவோம். Timezoneக்கு, Asia/Kolkata.ஐ தேர்ந்தெடுக்கவும்.
13:11 அடுத்த dropdown, Self Registration. Self Registration enableஆகியிருந்தால், புதிய userகள் தாங்களே, தம்மை பதிவு செய்துக்கொள்ளலாம்.
13:23 Dropdownனிலிருந்து, Disable ஐ தேர்ந்தெடுக்கவும். அடுத்தது, no-reply address என்ற text box ஆகும்.
13:31 இந்த fieldன் முன்னிருப்பான மதிப்பு, noreply@localhost. ஆகும். இது ஒரு செல்லுபடியாகாத email ID ஆதலால், அதை noreply@localhost.com க்கு மாற்றவும்.
13:46 Moodleக்கு, காட்டுவதற்கு எந்த email ID ஐயும் இல்லாமல் இருந்தால், இந்த email ID, From முகவரியாக காட்டப்படும்.
13:55 உதாரணத்திற்கு, எனது முகவரியை privateஆக வைத்திருக்க நான் குறிப்பிட்டிருந்தால், எனது தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட எல்லா மின்னஞ்சல்களும் இந்த email ID ஐ கொண்டிருக்கும். இறுதியாக, Save Changes பட்டனை க்ளிக் செய்யவும்.
14:10 இப்போது, Moodle. ஐ பயன்படுத்த நாம் தயாராக உள்ளோம். புதிய தளத்தின் முன் பக்கத்தை இங்கு நீங்கள் காணலாம்.
14:17 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
14:23 இந்த டுடோரியலில் நாம் கற்றது: moodle.orgலிருந்து Moodleஐ தரவிறக்குவது மற்றும் local server ல் Moodleஐ நிறுவுவது.
14:33 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
14:41 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
14:51 இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? http://forums.spoken-tutorial.orgஐ பார்க்கவும்.
15:00 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
15:10 ஸ்போகன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலுக்கான குறிப்பிட்ட கேள்விகளுக்காகும்.
15:15 இதில் தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை கேட்க வேண்டாம்.
15:21 இது குழப்பத்தை குறைக்க உதவும். குழப்பம் குறைந்தால், இந்த விவாதத்தை நாம் பயிற்றுரையாக பயன்படுத்தலாம்.
15:31 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
15:45 இந்த ஸ்கிரிப்ட், ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree