Health-and-Nutrition/C2/Side-lying-hold-for-breastfeeding/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:29, 3 May 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 தாய்ப்பாலூட்டுவதற்கான சைடு-லைஇங் பிடிமானம் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, தாய் தன் குழந்தைக்கான சரியான தாய்ப்பாலூட்டுகின்ற பிடிமானத்தை தேர்வு செய்வது.
00:13 தாய்ப்பாலூட்டும் முன் தாய் தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டிய முறை மற்றும் சைடு-லைஇங் பிடிமானத்தை செய்யும் முறை.
00:20 இப்போது தொடங்கலாம். உலகெங்கிலும் தாய்மார்கள், பல்வேறு பிடிமானங்களை பயன்படுத்தி தன் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுகின்றனர்.
00:27 முந்தைய ஒரு டுட்டோரியலில் நாம் கற்றது போல், சிறந்த தாய்ப்பாலூட்டுகின்ற பிடிமானம் எதுவெனில், தாய் மற்றும் குழந்தை இருவரும் தாய்ப்பாலூட்டுகின்ற நேரம் முழுவதும் சௌகர்யமாக இருக்க வேண்டும்.
00:40 குழந்தையால், தாயின் மார்பகத்தை ஆழமாக இணைத்துக்கொண்டு,
00:45 போதிய அளவு பாலை பெற முடிய வேண்டும்.
00:49 சைடு-லைஇங் எனும் ஒரு புதிய பிடிமான முறையை கற்போம்.
00:54 சைடு-லைஇங் பிடிமானம் பின்வரும் நிலைமைகளில் பரிந்துரைக்கப்படுகிறது- இரவு நேர தாய்ப்பாலூட்டலின் போது
00:59 அல்லது தாய்க்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்திருந்தால்
01:03 அல்லது தாய் சோர்வாக இருந்தால்
01:06 தாய்ப்பாலூட்டுவதற்கு முன்பு, தாய் தன் கைகளை சோப்பு மற்றும் நீரினால் கழுவி, பின் தன் கைகளை ஒழுங்காக உலர்த்திக்கொள்ள வேண்டும்.
01:14 பின் அவள், கொதிக்கவிடப்பட்டு, பின் குளிரவைக்கப்பட்ட, ஒரு குவளை நீரை அருந்த வேண்டும்.
01:18 தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்கள், நாளொன்றுக்கு சுமார் 750ல் இருந்து 850 மில்லிலிட்டர் வரை பாலை உற்பத்தி செய்வதால் அவர்கள், அதிக நீரை அருந்த வேண்டும்.
01:30 அடுத்து, தாய் குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட விரும்புகின்ற மார்பகத்தை திறக்க வேண்டும்.
01:35 தனது ப்ரா மற்றும் ரவிக்கையின் அழுத்தம், மார்பகத்தின் மீது படாமலிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
01:41 அடுத்து, தான் தாய்ப்பாலூட்டப்போகின்ற பக்கம், தாய் சௌகர்யமாக படுத்துக்கொள்ள வேண்டும்.
01:48 தனது தலைக்கடியில், ஒரு தலையணையையும் மற்றும், தூக்கத்தில் உருளாமல் இருக்க, தனது கால்களுக்கிடையே ஒரு தலையணையையும் அவள் வைத்துக்கொள்ள வேண்டும்.
01:57 இந்தப்படத்தில், தாய் தனது வலது மார்பகத்திலிருந்து குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுகிறாள். அதனால், அவள் வலது பக்கமாக படுத்துக்கொண்டிருக்கிறாள்.
02:06 அடுத்து, குழந்தையின் உடம்பை எவ்வாறு சரியான நிலையில் வைப்பது என்று கற்போம்.
02:12 குழந்தையின் வயிற்றின் மீது, தாயின் உடம்பு மென்மையாக அழுத்தம் கொடுக்குமாறு குழந்தையை, தாயின் பக்கத்தில் வைக்கவும்.
02:21 தாய், தான் படுத்துக்கொண்டிருக்கிற பக்கத்தின் கையை வைத்து, குழந்தையின் முதுகை தாங்கிக்கொள்ள வேண்டும்.
02:29 இப்படத்தில், தாய் தனது வலது கையை வைத்து குழந்தையின் முதுகை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறாள்.
02:36 தாய், குழந்தையை தன்னுடன் நெருக்கமாக வைத்துக்கொள்ள, குழந்தையின் முதுகிற்கு பின்னால் ஒரு தலையணையை வைக்கலாம்.
02:42 அவர்களுக்கிடையே உள்ள இடைவெளி குறைந்தால், அது மார்பகத்தை அடைய குழந்தை எடுக்கும் முயற்சியை குறைக்கும்.
02:49 அதனால், குழந்தை மார்பகத்துடன் ஆழமாக இணைத்துக்கொள்வது எளிதாகும்.
02:55 தாய், ஒருபோதும், முதுகை வளைத்து தனது மார்பத்தை குழந்தையிடம் கொண்டு வரக்கூடாது. இது, குழந்தையின் வயிறு மற்றும் தாயின் உடம்பிற்கும் இடையே உள்ள தூரத்தை அதிகப்படுத்தும்.
03:06 அவள் தனது முதுகை எப்போதும் நேராக வைத்து, குழந்தையை தனது மார்பகத்திற்கு கொண்டு வர வேண்டும்.
03:12 குழந்தையின் முழு உடம்பு எந்த திசையில் பிடித்துக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது இரண்டாவது முக்கிய குறிப்பாகும்.
03:21 நாம் உணவு உண்கையில், நமது தலை, கழுத்து மற்றும் உடம்பு, ஒரே திசையில் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
03:31 அவ்வாறே, தாய்பாலூட்டலின்போது குழந்தையின் தலை, கழுத்து மற்றும் உடம்பு, ஒரே திசையில் இருக்க வேண்டும்.
03:39 இது குழந்தை பாலை விழுங்குவதற்கு எளிதாக இருக்கும்.
03:44 குழந்தையின் உடம்பை வைத்திருக்கும் முறையில், மூன்றாவது குறிப்பிற்கு நாம் இப்போது வருகிறோம்.
03:50 தாய், குழந்தையின் முதுகை தன் கையினால் தாங்க வேண்டும்.
03:54 இல்லையெனில், குழந்தை மார்பகத்துடன் ஆழமாக இணைத்துக்கொள்ள அதிக முயற்சி எடுத்துக்கொள்ளும்.
04:01 அடுத்து, குழந்தையின் மூக்கு மற்றும் கன்னத்தின் நிலைப்படுதலை பற்றி பார்ப்போம்.
04:07 குழந்தையின் மூக்கும் முலைக்காம்பும் ஒரே கோட்டில் இருக்க வேண்டும்.
04:13 மேலும் அவளது கன்னம் முன்னுக்கு கொண்டுவரப்பட்டு, மார்பகதிற்கு மிக அருகே வைக்கப்பட வேண்டும்.
04:17 இது, குழந்தை, ஏரியோலாவின் கீழ்ப்பகுதியை அதிகமாக பற்றிக்கொள்வதை உறுதிப்படுத்தும்.
04:25 அதனால், அதிக பாலை குடிக்க, குழந்தை தனது கீழ்த்தாடையை திறமையாகப் பயன்படுத்தும்.
04:32 ஏரியோலா என்பது முலைக்காம்பை சுற்றியிருக்கின்ற கருமையான பகுதியாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
04:39 இப்போது, குழந்தை சரியாக பிடித்துக்கொள்ளப்பட்டுள்ளதால், மார்பகத்தை எவ்வாறு பிடித்துக்கொள்ள வேண்டும் என்று கற்போம்.
04:46 மற்றொரு கையின் விரல்களை பயன்படுத்தி தாய், மார்பகத்தை ஓரத்திலிருந்து தள்ளி அதை, சி வடிவான பிடிமானத்தில் வைக்க வேண்டும்.
04:55 இப்படத்தில் உள்ள தாய், தனது வலது மார்பகத்தை பிடித்துக்கொள்ள, தனது இடது கையை பயன்படுத்துகிறார்.
05:05 மார்பகத்தை பிடித்துக்கொள்கின்ற விரல்களும், குழந்தையின் உதடுகளும் ஒரே திசையில் இருக்க வேண்டும்.
05:13 எதற்கு? ஒரு எளிய உதாரணத்தை பயன்படுத்தி இதைப்புரிந்து கொள்வோம்.
05:18 ஒரு வடா பாவ் அல்லது பர்கர் சாப்பிடுகையில், நமது உதடுகள் கிடைமட்டமாக திறக்கின்றன.
05:25 ஒரு பெரிய கடியை எடுத்துக்கொள்ள, நாம் வடா பாவ் அல்லது பர்கரை கிடைமட்டமாக பிடித்துக்கொள்கிறோம்.
05:31 இங்கு, கட்டை விரலும் மற்ற விரல்களும், உதடுகள் இருக்கின்ற அதே திசையில் வைக்கப்படுகின்றன.
05:37 வடா பாவ் அல்லது பர்கரை நாம் செங்குத்தாக பிடித்துக்கொண்டால், நம்மால் ஒரே வாயில் அதிகமாக உட்கொள்ள முடியாது.
05:44 இவ்வாறே, குழந்தையின் உதடுகளை பார்க்கவும். இங்கு, உதடுகள் கிடைமட்டமாக இருக்கின்றன.
05:51 ஆகையால், தாயின் கட்டை விரலும், மற்ற விரல்களும் மார்பகத்தின் மீது கிடைமட்டமாக வைக்கப்பட வேண்டும்.
05:59 இது, கீழ் ஏரியோலாவின் ஒரு பெரிய பகுதியை, குழந்தை தன் வாயினுள் எடுத்துக்கொள்ள உதவி புரியும்.
06:05 குழந்தையின் உதடுகள் இருக்கின்ற அதே திசையில் இருப்பது மட்டுமன்றி, தாயின் கட்டை விரலும், மற்ற விரல்களும் முலைக்காம்பிலிருந்து, மூன்று விரல்களின் அளவு தூரத்தில் எப்போதும் இருக்க வேண்டும்.
06:18 மீண்டும், ஒரு வடா பாவ் அல்லது பர்கர் சாப்பிடுகையில், அதை மிக அருகில் நாம் பிடித்துக்கொண்டால், ஒரு பெரிய கடி எடுத்துக்கொள்ளும் போது நமது விரல்கள் நமது வாயை தடுக்கும்.
06:28 அதை அதிக தூரத்தில் நாம் பிடித்துக்கொண்டால், நமது வாயினுள் புக, அது சரியாக அமையாது.
06:34 அதனால், ஒரு பெரிய கடி எடுத்துக்கொள்ள, அதை சரியான தூரத்தில் நாம் பிடித்துக்கொள்கிறோம்.
06:40 இவ்வாறே குழந்தைக்கும், படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, முலைக்காம்பிலிருந்து மூன்று விரல்கள் தூரமே, சரியான இடைவெளியாகும்.
06:49 கீழ் ஏரியோலாவை குழந்தை தன் வாயினுள் எடுத்துக்கொள்வதற்கு, தாயின் விரல்கள் தடுக்காமல் இருக்க, இந்த தூரம் உறுதிப்படுத்தும்.
06:58 இதனால், மிகவும் சிறிய அளவு பாலை கொடுக்கக்கூடிய முலைக்காம்பை மட்டும் தாய் அழுத்துவதில்லை.
07:05 மேலும் அதிக பாலை வெளிக்கொணர, ஏரியோலாவின் கீழ் இருக்கின்ற பெரிய பால் நாளங்களை தாய் அழுத்துகிறார்.
07:12 மேலும், குழந்தை ஆழமாக இணைத்துக்கொள்ள மார்பகம் சரியாக வடிவமைக்கப்படுகிறது.
07:19 வடா பாவ் அல்லது பர்கர் பற்றிய உதாரணத்திற்கு திரும்பச்செல்வோம்.
07:24 வடா பாவ் அல்லது பர்கரை சரியாக பிடித்துக்கொண்ட பின்னர், ஒரு பெரிய கடியை எடுத்துக்கொள்ள நாம் எப்போதும், அதை அழுத்துகிறோம்.
07:32 அதே போல், தாய் மார்பகத்தை சி வடிவு பிடிமானத்திற்கு கொண்டு வர, அதை ஓரத்திலிருந்து சிறிது அழுத்த வேண்டும். மார்பகத்தின் ஒரு பெரிய பகுதியை தன் வாயினுள் புகுத்திக்கொள்ள, இது குழந்தைக்கு உதவி புரியும்.
07:46 ஆனால், தாய் தனது மார்பகத்தை கத்திரி வடிவு பிடிமானத்தில் அழுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.
07:53 கத்திரி வடிவ அழுத்துதல், மார்பகத்தை கிள்ளி, முலைக்காம்பின் மூலம் தாய்ப்பாலூட்டுதலை தோற்றுவிக்கும்.
08:00 மேலும், கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களின் மூலம் மார்பகத்திற்கு கொடுக்கப்படுகின்ற அழுத்தம் சமமாக இருக்க உறுதிபடுத்திக்கொள்ளவும்.
08:07 இல்லையெனில், முலைக்காம்பு மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கிய திசையில் நகர்ந்துவிடும்.
08:14 மேலும், குழந்தையினால் மார்பகத்துடன் ஆழமாக இணைத்துக்கொள்ள முடியாது.
08:19 இப்போது, குழந்தை சைடு லைஇங் பிடிமானத்தில் இருக்கிறது, மற்றும் தாய்ப்பாலூட்டுதலுக்கு மார்பகத்துடன் இணைத்துக்கொள்ள தயாராக உள்ளது.
08:27 இதே தொடரின் மற்றொரு காணொளியில், குழந்தை மார்பகத்தோடு சரியாக இணைத்துக்கொள்ளுதல் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
08:34 குழந்தை மார்பகத்தோடு ஆழமாக இணைத்துக்கொண்டவுடனே, தாய் மார்பத்திலிருந்து தன் கையை விலக்கிக்கொள்ள வேண்டும்.
08:41 அவள், இந்தக்கையை பயன்படுத்தி குழந்தையின் முதுகை பிடித்து, குழந்தையை தன் உடம்பிற்கு அருகே வைத்துக்கொள்ள வேண்டும்.
08:49 அது மட்டுமன்றி, அவள் தனது மற்றொரு கையை குழந்தையின் முதுகில் இருந்து விலக்கிக்கொண்டு, அதை தன் உடம்பிற்கு டிகிரியில் வைக்க வேண்டும்.
08:58 அந்தக்கையின் முழங்கையை அவள் வளைத்து, பின் தலையணைக்கு கீழ் வைக்க வேண்டும்.
09:04 இப்படத்தில் உள்ள தாய், தன் இடது கையை, தனது வலது மார்பகத்திலிருந்து விலக்கிவிட்டார்.
09:11 அவள் தனது இடது கையை, குழந்தையின் முதுகை பிடித்துக்கொள்ள பயன்படுத்தி, குழந்தையை தனது உடம்பிற்கு அருகே வைத்துக்கொண்டிருக்கிறார்.
09:19 அவள் தனது வலது கையை, குழந்தையின் முதுகிலிருந்து நீக்கிவிட்டார்.
09:22 அதை தன் உடம்பிற்கு தொண்ணூறு டிகிரியில் வைத்திருக்கிறார்.
09:26 அவளின் வலது முழங்கை வளைந்திருக்கிறது.
09:29 அவளின் வலது கை, தலையணைக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கிறது.
09:33 முதல் மார்பகத்திலிருந்து தாய்ப்பாலூட்டிய பிறகு, தனது மற்றொரு மார்பகத்திலிருந்து தாய்ப்பாலூட்டவேண்டுமெனில், பின் அவள் தனது மற்றொரு பக்கமாக படுத்துக்கொள்ள வேண்டும்.
09:43 இப்படத்தில் உள்ள தாய், தனது இடது மார்பகத்திலிருந்து தாய்ப்பாலூட்டுவதற்கு, தனது இடது பக்கம் திரும்பியுள்ளார்.
09:50 இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Arthi, Jayashree