Joomla/C2/Installing-Joomla-on-Windows/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 17:18, 26 July 2018 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | வணக்கம். Windowsல் Joomlaஐ நிறுவுதல் குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorial ல் நாம் கற்கபோவது:Joomla ஐ பெறுவது, database ஐ உருவாக்குவது , மற்றும் Joomla ஐ நிறுவுவது |
00:16 | Joomla ஐ நிறுவ உங்கள் கணினி பின்வருவனவற்றை கொண்டிருத்தல் வேண்டும்: Apache 2.x plus அல்லது IIS 7 (or any higher version) MySQL 5.0.4 (or any higher version) மற்றும் PHP 5.2.4 (or any higher version). |
00:38 | MySQL 6 மற்றும் higher version கள் தற்பொழுது ஒத்துழைக்கவில்லை என்பதை கவனிக்கவும். |
00:45 | Web-server distribution கள் Apache, MySQL/MariaDB மற்றும் PHP ஆகியவற்றை ஒன்றுசேர்த்து கொடுக்கிறது. |
00:53 | நீங்கள் இவற்றை தனியாக நிறுவலாம் அல்லது , XAMPP WAMP அல்லது LAMPP போன்ற web-server distribution களை பயன்படுத்தலாம் |
01:02 | இந்த tutorial ஐ பதிவு செய்ய நான் பயன்படுத்துவது : Windows 8 OS, Joomla 3.7.2, XAMPP 5.6.2 மூலம் பெற்ற Apache, MySQL மற்றும் PHP |
01:19 | முதலில் , என் கணினியில் XAMPP நிறுவப்பட்டுள்ளதா என்று பார்க்கிறேன். |
01:24 | keyboard ல் Windows icon ஐ click செய்து பிறகு type செய்க XAMPP. |
01:29 | உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையெனில் , XAMPP நிறுவப்படவில்லை என்று பொருள். |
01:34 | நீங்கள் XAMPP நிறுவுதலை மேற்கொள்ள வேண்டும் . |
01:37 | அதற்கு இந்த வலைத்தளத்தின் PHP & MySQL series ல் உள்ள XAMPP installation tutorial ஐ அணுகவும். |
01:44 | Latest version ஐ நிறுவ இந்த tutorial ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றவும். |
01:50 | இந்த tutorial ஐ பதிவு செய்யும்போது latest version 5.6.28 ஆகும். |
01:56 | நான் எனது கணினியில் XAMPP ஐ ஏற்கனவே நிறுவிவிட்டேன். |
02:00 | XAMPP Control Panel ஐ click செய்யவும். |
02:03 | Apache மற்றும் MySQL serviceகளின் START button ஐ click செய்வதன் மூலம் அவற்றை தொடங்கலாம். |
02:11 | serviceகளை நிறுத்த , நாம் STOP button ஐ click செய்யலாம் |
02:16 | உங்களுக்கு சில error message கள் வரலாம். |
02:19 | “Apache shutdown unexpectedly” |
02:22 | அல்லது “Port 80 in use for Apache Server'” |
02:26 | அல்லது “Unable to connect to any of the specified MySQL hosts for MySQL database.” |
02:34 | இது ஏனெனில் Apache மற்றும் MySQL க்கு ஒதுக்கப்பட்ட default ஆன port களை, மற்ற softwareகள் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். |
02:42 | Apache க்கான default port number 80 ஆகும் MySQL க்கு 3306 ஆகும் . |
02:51 | இந்த port களை மாற்ற, இந்த வலைத்தளத்தின் PHP & MySQL series ல் உள்ள XAMPP Installation tutorial ஐ பார்க்கவும் |
02:59 | மேலும் தொடரும் முன் அவற்றிற்கு சரியான port எண்களை அமைக்கவும். |
03:04 | நீங்கள் XAMPP ஐ நிறுவி தொடங்கியதும், browser க்கு திரும்பவும் . |
03:09 | XAMPP home page ஐ காண address bar ல் type செய்க localhost . |
03:15 | Menu ல் மேலே வலதுபுறத்தில் ,phpinfo() ஐ click செய்க. |
03:21 | இப்போது , CTRL+ F key களை அழுத்தி DOCUMENT underscore ROOT ஐ தேட வேண்டும் . |
03:28 | C:/xampp/htdocs , இது , உங்கள் கணினியில் எங்கு XAMPP நிறுவப்பட்டுள்ளது என்பதை பொறுத்து இருக்கும். |
03:37 | இதை குறித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாம்Joomla ஐ இந்த குறிப்பிட்ட folder ல் நிறுவ வேண்டும். |
03:44 | இப்போது , நாம் Joomla ஐ தரவிறக்கலாம். |
03:47 | Joomla ன் official website ஆன http://www.joomla.org க்கு செல்லவும். |
03:54 | மேலே menu வில் Download & Extend ஐclick செய்யவும். |
03:59 | Joomla Downloads ஐ click செய்து பிறகு “Download Joomla 3.7.2 Full Package, ZIP” ஐ click செய்யவும். |
04:10 | உடனே , ஒரு சிறிய dialog box திறக்கும். |
04:14 | இங்கே Save File option ஐ click செய்யவும். பிறகு ”Ok” button ஐ click செய்யவும். |
04:22 | இது Joomla ஐ தரவிறக்கம் செய்யும். |
04:25 | இந்த tutorial ஐ பதிவுசெய்யும் போது , latest stable version 3.7.2 ஆகும். |
04:32 | நான் ஏற்கனவே அந்த file ஐ தரவிறக்கிவிட்டேன் மற்றும் அது எனது Downloads folder ல் உள்ளது. |
04:37 | Downloads folder க்கு செல்லலாம் . இங்கு , நாம் தரவிறக்கிய file உள்ளது. |
04:44 | Zip file ன் மீது right-click செய்து Extract All ஐ தேர்வு செய்யவும். |
04:49 | சேமிக்கும் இடத்தை தேர்வு செய்ய ‘Browse’ ஐ click செய்யவும். |
04:53 | இப்பொது , webserver ன் root directory ல் இந்த folder ஐ paste செய்யவும். |
04:59 | C:\xampp\htdocs என்ற இடத்திற்கு செல்லவும். |
05:06 | ‘Make a new folder’ ஐ click செய்து பிறகு type செய்க ‘Joomla’ |
05:12 | ‘ok’ ஐ click செய்யவும். பிறகு ‘Extract’ ஐ click செய்யவும். |
05:18 | இது Joomla எனும் புதிய folder ஐ உருவாக்கி zip file ன் content களை extract செய்யும் . |
05:26 | Installation ஐ தொடரும் முன்பு , Joomla க்கான database ஐ உருவாக்கவும். |
05:33 | நாம் இதை phpmyadmin ல் செய்யலாம். |
05:37 | Phpmyadmin என்பது MySQL க்கான graphical user interface ஆகும். |
05:43 | மற்றும் அது XAMPP installation உடன் வருகிறது . |
05:47 | Browser க்கு சென்று பிறகு XAMPP homepage க்கு செல்லவும். |
05:52 | XAMPP page ன் மேல் வலது புறத்தில் , phpmyadmin க்கான இணைப்பை காணலாம்.அதை click செய்யவும். |
06:00 | மேலே menu ல் User accounts ஐ click செய்யவும். Scroll down செய்து Add User account ஐ click செய்யவும். |
06:10 | username ஐ enter செய்யவும், உதாரணத்திற்கு Joomla hyphen 1. |
06:15 | Host dropdown list ல் , Local ஐ தேர்வு செய்யவும். |
06:19 | Password text-box ல் password ஐ enter செய்யவும் , உதாரணத்திற்கு joomla123. |
06:25 | நீங்கள் விரும்பும் password ஐ enter செய்யலாம். |
06:29 | அதே password ஐ Re-type textbox ல் enter செய்யவும். |
06:33 | இப்போது கேட்கப்படும் Generate Password க்கு பதிலளிக்க வேண்டாம். |
06:38 | Database for user account ன் கீழ் , நாம் “Create a database with the same name and grant all privileges” எனும் option ஐ காணலாம். |
06:49 | நாம் அந்த option ஐ check செய்து page ன் கீழே செல்ல scroll down செய்யலாம். |
06:55 | Page ன் கீழே வலதுபுறத்தில் Go button ஐ click செய்யவும். |
07:00 | அது Joomla hyphen 1 எனும் பெயருடைய user மற்றும் புதிய database ஐ உருவாக்கும். |
07:08 | username, password மற்றும் database ன் பெயர்களை குறித்துக்கொள்ளவும். |
07:13 | Joomla நிறுவலை நிறைவு செய்ய பின்னர் இவை தேவைப்படும். |
07:18 | Database ன் பெயர் மற்றும் username ஒரே மாதிரி இருக்க தேவையில்லை என்பதை கவனிக்கவும். |
07:24 | வெவ்வேறு பெயர்கள் வேண்டுமெனில், நீங்கள் முதலில் database ஐ உருவாக்கி பிறகு அதற்கான user ஐ உருவாக்கவும். |
07:32 | மேலும், பெயரிடும் முறைப்படி , username ன் இடையில் இடைவெளி இருக்க கூடாது. |
07:39 | இப்போது நாம் Joomla ஐ நிறுவ தயாராக உள்ளோம். |
07:42 | XAMPP செயல்பட்டுக்கொண்டிருக்கிறது மற்றும் நமது database தயாராக உள்ளது. |
07:47 | நாம் Joomla ஐ DOCUMENT underscore ROOT ன் joomla folder உள் extract செய்துவிட்டோம். |
07:54 | Browser க்கு செல்லலாம். |
07:56 | புதிய tab ல் type செய்க localhost slash Joomla. |
08:01 | Joomla folder உள் extract செய்யப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
08:06 | Enter ஐ அழுத்தவும் பிறகு Joomla நிறுவுதல் பக்கத்தை நீங்கள் காண்பீர்கள். |
08:11 | முன்னிருப்பாக , நாம் படி எண் ஒன்று அதாவது Configuration ல் உள்ளோம். |
08:17 | Joomla ஐ பல மொழிகளில் நிறுவலாம். |
08:21 | நாம் இங்கே English (United states) ஐ தேர்வு செய்யலாம். |
08:26 | Main Configuration பிரிவை காண scroll down செய்யவும். |
08:30 | நீங்கள் விரும்பிய Site ன் பெயரை enter செய்யவும். |
08:34 | நான் "Digital India" என கொண்டுள்ளேன். |
08:38 | Description ஐ காலியாக வைக்கலாம். |
08:41 | Email-id என்பது கட்டாயமானதாகும் . இங்கே சரியான email-id ஐ enter செய்யவும். |
08:48 | நான் "priyanka@spoken-tutorial.org" எனும் id ஐ கொடுக்கிறேன். |
08:55 | அடுத்து, Joomla Administrative பக்கத்திற்கான username ஐ enter செய்யவும். |
09:01 | நான் username ஐ admin என enter செய்கிறேன். |
09:05 | Joomla Administrator க்கான password ஐ enter செய்யவும். |
09:09 | நான் எனது admin password ஆக admin123 ஐ enter செய்கிறேன். |
09:14 | Confirmation box ல் password ஐ மீண்டும் type செய்யவும். |
09:19 | Site Offline (Yes/No) ல், No ஐ தேர்வு செய்யவும். |
09:24 | இப்போது, கீழே வலதுபுறம் Next button ஐ click செய்யவும். |
09:29 | ஆகவே , நாம் Database Configuration page க்கு வருவோம். |
09:33 | Database Type ஆக "MySQL" ஐ தேர்வு செய்யலாம். |
09:37 | Host Name ஆக "localhost" ஐ தேர்வு செய்யவும். |
09:41 | இப்போது , username, password மற்றும் database name கள் ஆகியவற்றை enter செய்யலாம். |
09:47 | இவை phpmyadmin ல் நாம் முன்னரே உருவாக்கியவையாகும். |
09:52 | நான் username ஆக Joomla hyphen 1 ஐ enter செய்கிறேன். |
09:57 | Joomla ல் capital letter J ஐ கவனிக்கவும். |
10:01 | பிறகு password ஆக joomla123 |
10:05 | மற்றும் database name ஆக Joomla hyphen 1. |
10:09 | Table Prefix ஐ அப்படியே விடவும். |
10:13 | Old Database Process ல் Backup ஐ தேர்வு செய்யவும். |
10:17 | இது Joomla ஐ upgrade செய்யும்போது , database ல் உள்ளதுபோல் ஒரே மாதிரியான பெயர்களை கொண்ட table களை backup செய்வதற்காகும். |
10:25 | கீழே வலதுபுறத்தில் உள்ள Next button ஐ click செய்யவும். |
10:29 | நாம் இப்போது Finalisation and Overview பக்கத்தில் உள்ளோம். |
10:34 | Finalisation section ல் Install Sample Data ஐ கண்டறியவும். |
10:39 | முன்னிருபாக, radio button களில் ஒன்று தேர்வுசெய்யப்பட்டிருக்கும். |
10:43 | இங்கே பட்டியலிடப்பட்டுள்ள option கள் , site ல் சில sample article கள், menu கள், plugin கள், ஆகியவற்றை நிறுவும். |
10:52 | இது தொடக்க நிலையில் உள்ளவர்க்ளுக்கு Joomla ஐ புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். |
10:56 | முதல் முறை Joomla ஐ நிறுவும் போது , ஏதாவது ஒரு option ஐ தேர்வு செய்யலாம். |
11:00 | நான் அதை செய்ய விரும்பவில்லை. ஆகவே நான் None option ஐ தேர்வு செய்கிறேன். |
11:06 | கீழே scroll செய்து அங்கே கொடுக்கப்பட்டுள்ள Overview தகவலை பார்க்கவும். |
11:12 | இப்போது கீழே வலதுபுறத்தில் உள்ள Install button ஐ click செய்யவும் |
11:17 | இந்த படி சிறிது நேரமெடுக்கலாம். |
11:20 | அனைத்தும் முடிந்த பின் நாம் "Congratulations! Joomla is now installed" எனும் தகவலை காணலாம். |
11:27 | Scroll down செய்க , அங்கு Remove Installation Folder button இருக்கும். |
11:32 | installation folder ஐ நீக்க அதை click செய்யவும். |
11:36 | இந்த படியில் ஏதேனும் பிழை வந்தால் , நாமாகவே folder ஐ நீக்கலாம். |
11:41 | installation folder வெற்றிகரமாக நீக்கப்பட்ட பிறகு , site button ஐ click செய்யவும். |
11:47 | நாம் நமது இணையதளத்தை அடைந்து விட்டோம் |
11:50 | நான் sample data ஐ நிருவாததால் , menuகள் , articleகள் போன்றவற்றை தற்சமயம் காண இயலாது. |
11:57 | இப்போது administrator page க்கு செல்லலாம். |
12:00 | URL ல் type செய்க localhost slash Joomla slash administrator |
12:07 | Enter ஐ அழுத்தவும். |
12:09 | administrator login மற்றும் password உடன் login செய்யவும். |
12:13 | நான் username ஐ admin எனவும் பிறகு password ஐ admin123 எனவும் type செய்கிறேன். |
12:19 | ‘Log in’ button ஐ click செய்யவும். |
12:21 | நமது இணையத்தளம் நிறுவப்பட்டுவிட்டதால் , நம்மிடம் administrator access உள்ளது. |
12:27 | நாம் கற்றதை நினைவு கூருவோம். |
12:29 | இந்த tutorial ல் நாம் கற்றது : Joomla website ல் இருந்து Joomla ஐ தரவிறக்குவது.
phpmyadmin ல் database ஐ உருவாக்குவது. மற்றும் Windows ல் Joomla ஐ நிறுவுவது. |
12:42 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது.அதை தரவிறக்கி காணவும். |
12:49 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது மற்றும் சான்றிதழ்கள் தருகிறது. |
12:56 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
13:00 | இந்த Spoken Tutorial ல் ஏதேனும் கேள்விகள் உள்ளதா ? கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும். |
13:06 | கேள்விகள் எழும் நேரம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும் .உங்கள் கேள்விகளை சுருக்கமாக கேட்கவும் . எங்கள் குழுவில் எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். |
13:16 | Spoken Tutorial forum ஆனது குறிப்பிட்ட கேள்விகளுக்கானது. |
13:21 | பொருந்தாத மற்றும் பொதுவான கேள்விகளை post செய்ய வேண்டாம். இது குழப்பத்தை குறைக்க உதவும். |
13:29 | இந்த கேள்வி பதில்களை instructional material ஆகவும் நாம் பயன்படுத்தலாம் |
13:35 | Spoken Tutorial Project க்கு NMEICT, MHRD, Government of India நிதியுதவி அளிக்கிறது. மேலதிக விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும். |
13:47 | இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |