Health-and-Nutrition/C2/Powder-recipes-for-6-to-24-months-old-children/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 16:50, 15 June 2018 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:00 | 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கான சத்துமாவுகள் தயாரிக்கும் முறை பற்றிய ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு |
00:08 | இந்த டுட்டோரியலில் நாம் பல்வேறு சத்துமாவுகள் தயாரிக்கும் முறை பற்றி கற்போம் அவை |
00:15 | Amylase மாவு |
00:17 | விதைகள் அடங்கிய மாவு |
00:19 | கொட்டைகளும் விதைகளும் அடங்கிய மாவு |
00:20 | தானியப்பொடி |
00:22 | கறிவேப்பிலை பொடி |
00:24 | முருங்கை இலை பொடி |
00:27 | பல்வேறு சத்துமாவுகளை சிரமம் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம் |
00:33 | இந்த சத்துமாவுகளை எவ்வாறு செய்வது என பார்ப்போம் |
00:38 | கைக்குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவும் ஊட்டச்சத்துகள், இந்த சத்துமாவுகளில் உள்ளன |
00:44 | 6 மாதங்கள் முடிந்த குழந்தைகளுக்கு மட்டுமே இந்த சத்துமாவுகளை ஊட்ட பரிந்துரைக்கப்படுகிறது |
00:52 | எப்போதும் குழந்தைக்கு புது உணவை ஊட்ட ஆரம்பிக்கும்போதும் 3 அல்லது 4 நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும் |
01:00 | பிறகு வேறொரு புதிய உணவை, 3 அல்லது 4 நாட்களுக்கு பிறகு ஊட்டலாம் |
01:05 | இரண்டு சத்துமாவுகளை கலந்தும் கொடுக்கலாம். ஆனால் அவற்றை முதலில் தனித்தனியாக கொடுத்துபார்க்க வேண்டும். அதனால் குழந்தைக்கு உடலில் ஏதேனும் சரும அரிப்பு அல்லது வீக்கம் போன்ற பிரச்சனைகள் வந்திருக்க கூடாது. |
01:20 | ஒவ்வாமை உருவாக்கும் கொட்டைகள் அல்லது புதிய உணவுகளை குழந்தைக்கு முதல் முறை கொடுக்கும் போது குறைந்த அளவாக, கால் டீஸ்பூன் கொடுத்து ஆரம்பிக்க வேண்டும் |
01:30 | 10 நிமிடங்கள் காத்திருந்து, கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு ஊட்ட வேண்டும் |
01:35 | குழந்தைக்கு 1 வயது ஆகும் வரை குழந்தையின் உணவில் சர்க்கரை, உப்பு அல்லது எந்த வகை மசாலாவையும் சேர்க்க வேண்டாம் |
01:44 | நாம் Amylase பொடி தயாரிப்பு முறையில் இருந்து ஆரம்பிக்கலாம் |
01:49 | முதலில் அதன் நன்மைகளைப் பார்க்கலாம் |
01:53 | Amylase என்பது உணவை செரிக்க தேவையான என்சைம் அல்லது வேதி பொருள் ஆகும் |
01:59 | குழந்தையின் உடலில் அது குறைந்த அளவே உற்பத்தியாகிறது. |
02:03 | இந்த சத்துணவு, உடலின் amylase அளவை அதிகரிக்கிறது. உணவில் உள்ள ஊட்டச்சத்தையும், அதை உடல் உறிஞ்சிக்கொள்வதையும் அதிகரிக்கிறது |
02:12 | எனவே amylase சத்துமாவை குழந்தைக்கு கொடுக்க வேண்டும் |
02:18 | amylase சத்துமாவுக்கான தயாரிப்பு முறையை பார்ப்போம் |
02:22 | amylase சத்துமாவை தயாரிக்க தேவையான பொருட்கள்-கோதுமை 1/2 கிண்ணம் |
02:27 | பச்சைப்பயிறு 1/2 கிண்ணம் மற்றும் |
02:29 | கேழ்வரகு 1/2 கிண்ணம் |
02:32 | செய்முறை: முதலில் அனைத்து பொருட்களையும் தனித்தனியே நீரில் 10 மணிநேரம் ஊற வைக்கவும் |
02:39 | ஊறவைப்பதனால் அவற்றின் ஈரப்பதம் அதிகமாகும் |
02:42 | 10 மணி நேரத்திற்கு பிறகு அனைத்து பொருட்களையும் நீக்கவும் |
02:46 | வடிகட்டி மூலம் அவற்றில் இருந்து நீரை வடிகட்டவும் |
02:50 | பின்னர் சுத்தமான உலர்ந்த காட்டன் துணியில் அவற்றை ஒவ்வொன்றாக கட்டவும் |
02:55 | அவை முளைக்கும் வரை அப்படியே வைக்கவும் |
02:58 | இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படும் |
03:01 | குறிப்பு: முளைக்கட்ட சில பொருட்கள் நீண்ட நேரம் எடுக்கும் சில பொருட்கள் குறைந்த நேரம் எடுக்கும் |
03:08 | இங்கு கேழ்வரகு, மற்ற பொருட்களை விட அதிக நேரம் எடுக்கும் |
03:14 | முளைக்கட்டிய பிறகு அவற்றை வெயிலில் ஒரிரு நாட்கள் காய வைக்கவும் |
03:19 | காய்ந்த பிறகு, அனைத்து பொருட்களும் முற்றிலும் உலரும் வரை அவற்றை குறைந்த தீயில் வறுக்க வேண்டும் |
03:25 | வறுக்கும் போது இடைவிடாமல் கிளற வேண்டும் என்பதை நினைவுகொள்க |
03:30 | அடுத்து சுத்தமான கைகளால் அவற்றை நன்கு தேய்த்து மேல் தோலை நீக்க வேண்டும் |
03:36 | தோலை நீக்கிய பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும் |
03:41 | இப்போது கல்உரல் மூலம் அனைத்தையும் மாவாக்கவும். |
03:45 | amylase மாவு தயாராகிவிட்டது |
03:48 | இந்த amylase மாவை ஒரு காற்றுபுகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும் |
03:52 | குழந்தைக்கு உணவு சமைக்கும் போது இந்த amylase மாவை ஒரு டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது |
03:59 | amylase மாவில் கஞ்சி செய்யலாம் |
04:03 | 1 டீஸ்பூன் amylase மாவில், கிட்டத்தட்ட 18 கலோரிகளும் 0.6 கிராம் புரதமும் உள்ளது |
04:10 | 100 கிராம் amylase மாவில், கிட்டத்தட்ட 360 கலோரிகளும் 12 கிராம் புரதமும் உள்ளது |
04:17 | Amylase மாவில் குழந்தைக்கு தேவையான சில சிறப்பு பண்புகள் உள்ளன |
04:23 | இது உணவின் அடர்த்தியை குறைத்து குழந்தைக்கு சுவையான உணவாக மாற்றுகிறது |
04:28 | இது உணவின் அளவை குறைத்து குழந்தையின் உணவுக்கு ஆற்றலை அதிகரிக்கிறது |
04:34 | அடுத்து விதைகளினால் ஆன மாவை தயாரிக்கும் முறையை பார்ப்போம் |
04:38 | இந்த மாவில் துத்தநாகம், நார்சத்து, மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது |
04:44 | இந்த ஊட்டச்சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தையின் வலிமையை அதிகரிக்கிறது. |
04:50 | மேலும் இந்த மாவில் உள்ள நல்ல கொழுப்பு குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது |
04:57 | இந்த மாவை தயாரிக்க தேவையான பொருட்கள்: கருப்பு எள்ளு ½ கிண்ணம் |
05:03 | ஆளி விதை ½ கிண்ணம் |
05:05 | பூசணி விதை பச்சையாக ½ கிண்ணம் |
05:08 | செய்முறை: அனைத்து பொருட்களையும் குறைந்த தீயில் ஒவ்வொன்றாக 4, 5 நிமிடங்கள் வறுக்க வேண்டும் |
05:16 | வறுத்த பொருட்கள் ஆறியதும் அவற்றை மாவாக்கவும் |
05:20 | இந்த மாவை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும் |
05:23 | உணவு ஊட்டும் முன் குழந்தையின் உணவில் இந்த மாவை ஒரு டீஸ்பூன் சேர்க்க வேண்டும் |
05:29 | இதில் 30 கலோரிகளும் 2.7 கிராம் புரதமும் உள்ளது |
05:36 | 100 கிராம் மாவில், கிட்டத்தட்ட 600 கலோரிகளும் 55 கிராம் புரதமும் உள்ளது |
05:43 | அடுத்து கொட்டைகளும் விதைகளும் அடங்கிய மாவை தயாரிக்க கற்போம் |
05:47 | இந்த மாவில் துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு போன்ற தாதுசத்துகள் உள்ளன |
05:53 | ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய இந்த தாதுசத்துகள் உதவுகின்றன |
05:57 | மேலும் இந்த மாவில் உள்ள நல்ல கொழுப்பு, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது |
06:04 | இந்த மாவை தயாரிக்க தேவையான பொருட்கள் |
06:08 | நிலக்கடலை ½ கிண்ணம் |
06:10 | காய்ந்த தேங்காய் துறுவல் ½ கிண்ணம் |
06:12 | ஆளி விதை ½ கிண்ணம் |
06:15 | கருப்பு எள்ளு ½ கிண்ணம் |
06:18 | செய்முறை: அனைத்து பொருட்களையும் குறைந்த தீயில் ஒவ்வொன்றாக 4 ல் இருந்து 6 நிமிடங்கள் வறுக்க வேண்டும் |
06:26 | பிறகு ஒரு கல்உரல் அல்லது mixer grinderஐ பயன்படுத்தி அனைத்தையும் மாவாக்கவும் |
06:33 | இந்த மாவை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும் |
06:36 | உணவு ஊட்டும் முன் குழந்தையின் உணவில் இந்த மாவை ஒரு டீஸ்பூன் சேர்க்க வேண்டும் |
06:42 | இதில் 28 கலோரிகளும் 0.9 கிராம் புரதமும் உள்ளது |
06:48 | 100 கிராம் மாவில், கிட்டத்தட்ட 600 கலோரிகளும் 19 கிராம் புரதமும் உள்ளது |
06:56 | இப்போது நாம் தானியப்பொடியை தயாரிக்க கற்போம் |
06:59 | இந்த பொடியில் பொட்டாசியம், புரதம், ஃபோலேட், மெக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளன |
07:05 | இந்த ஊட்டச்சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தையின் வலிமையை அதிகரிக்கிறது |
07:11 | நம் உடலில் ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய இவை உதவுகின்றன |
07:16 | தானியப்பொடியை தயாரிக்க தேவையான பொருட்கள்: பச்சைபயிறு ½ கிண்ணம் |
07:22 | காய்ந்த பச்சை பட்டாணி ½ கிண்ணம் |
07:24 | கொண்டைக்கடலை ½ கிண்ணம் |
07:27 | Moth beans ½ கிண்ணம் |
07:30 | செய்முறை: முதலில் அனைத்து பொருட்களையும் தனித்தனியே நீரில் 10 மணிநேரம் ஊற வைக்கவும் |
07:35 | ஊறவைப்பதனால் அவற்றின் ஈரப்பதம் அதிகமாகும் |
07:40 | 10 மணி நேரத்திற்கு பிறகு |
07:43 | அவற்றில் இருந்து நீரை வடிகட்டவும் |
07:47 | பின்னர் சுத்தமான உலர்ந்த காட்டன் துணியில் அவற்றை ஒவ்வொன்றாக கட்டவும் |
07:52 | அவை முளைக்கும் வரை அப்படியே வைக்கவும் |
07:55 | இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படும் |
07:59 | ஏற்கனவே சொன்னது போல முளைக்கும் நேரம் ஒவ்வொரு பொருளுக்கும் வேறுபடும் என்பதை நினைவுகொள்க |
08:06 | முளைக்கட்டிய பிறகு அவற்றை வெயிலில் ஒரிரு நாட்கள் காய வைக்கவும் |
08:12 | காய்ந்த பிறகு, அனைத்து பொருட்களும் முற்றிலும் உலரும் வரை அவற்றை மிதமான தீயில் வறுக்க வேண்டும் |
08:17 | வறுக்கும் போது இடைவிடாமல் கிளற வேண்டும் |
08:20 | இதனால் பொருட்கள் கருகாமல் இருக்கும் |
08:24 | வறுத்த பிறகு, சுத்தமான கைகளால் அவற்றை நன்கு தேய்த்து தோலை நீக்க வேண்டும் |
08:30 | இப்போது அனைத்து தானியங்களையும் ஒன்றாகசேர்த்து பொடியாக்கவும். |
08:34 | இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும் |
08:38 | குழந்தைக்கு உணவு சமைக்கும் போது இந்த பொடியை இரண்டு டீஸ்பூன் சேர்க்க வேண்டும் |
08:43 | இரண்டு டீஸ்பூன் பொடியில், கிட்டத்தட்ட 33 கலோரிகளும் 1.8 கிராம் புரதமும் உள்ளது |
08:49 | 100 கிராம் பொடியில், கிட்டத்தட்ட 250 கலோரிகளும் 15 கிராம் புரதமும் உள்ளது |
08:57 | அடுத்து கறிவேப்பிலை பொடி தயாரிப்பு முறை பற்றி கற்போம் |
09:00 | கறிவேப்பிலையில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் சி உள்ளது |
09:06 | இந்த அனைத்து ஊட்டச்சத்துகளும், உணவு செரிமானத்திற்கும் பல் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது |
09:12 | மேலும் இவை குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது |
09:16 | இந்த பொடியை தயாரிக்க நமக்கு கறிவேப்பில்லை தேவை |
09:19 | செய்முறை - சுத்தமான நீரில் கறிவேப்பிலையை நன்றாக அலசவும் |
09:23 | அதை நிழலில் உலர வைக்கவும் |
09:26 | இப்போது உலர்ந்த கறிவேப்பிலையை பொடியாக்கவும். இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும் |
09:33 | உணவு ஊட்டும் முன் குழந்தையின் உணவில் இந்த பொடியை ¼ டீஸ்பூன் சேர்க்கலாம் |
09:39 | இதில் 9 மில்லி கிராம் கால்சியம் உள்ளது |
09:42 | 100 கிராம் பொடியில் கிட்டத்தட்ட 700 மில்லிகிராம் கால்சியம் உள்ளது |
09:48 | அடுத்து முருங்கை இலை பொடியை தயாரிக்க கற்போம் |
09:53 | இந்த பொடியில் கால்சியம், இரும்பு, விட்டமின் சி, விட்டமின் எ, புரதம் மற்றும் கந்தகம் உள்ளது |
10:01 | குழந்தையின் பல்ஈறுகள் வளர்ச்சியடையவும் கண்களின் ஆரோக்கியத்திற்கும் இந்த ஊட்டச்சத்துக்கள் தேவை |
10:07 | இவை நோய்தொற்றிலிருந்து பாதுகாத்து குழந்தையின் வலிமையை அதிகரிக்கிறது |
10:12 | இந்த பொடியை தயாரிக்க நமக்கு முருங்கை இலை தேவை |
10:17 | செய்முறை: சுத்தமான நீரில் முருங்கை இலையை நன்றாக அலசவும் |
10:22 | அதை நிழலில் உலர வைக்கவும் |
10:25 | இப்போது உலர்ந்த முருங்கை இலையை பொடியாக்கவும். முருங்கை இலை பொடி தயார் |
10:31 | இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும் |
10:33 | உணவு ஊட்டும் முன் குழந்தையின் உணவில் இந்த பொடியை ¼ டீஸ்பூன் சேர்க்க வேண்டும் |
10:40 | இதில் 5 மில்லிகிராம் கால்சியம் உள்ளது |
10:44 | 100 கிராம் பொடியில் கிட்டத்தட்ட 350 மில்லிகிராம் கால்சியம் உள்ளது |
10:50 | பின்வருவனவற்றை எப்போதும் நினைவுகொள்ளவும். இந்த சத்துமாவுகளை தயாரிக்க உங்கள் ஊரில் கிடைக்கும் கொட்டைகள், விதைகள் மற்றும் தானியங்களை பயன்படுத்தவும் |
10:58 | ஒவ்வொரு வேளை உணவிற்கும் வெவ்வேறு மாவுகளை பயன்படுத்தவும் |
11:01 | உதாரணமாக; 1 டீஸ்பூன் கொட்டைகள் அல்லது விதைகளால் ஆன மாவை சமைத்த உணவில் சேர்க்கலாம் அல்லது |
11:08 | ¼ டீஸ்பூன் கறிவேப்பிலை பொடி அல்லது முருங்கை இலை பொடியை சமைத்த உணவில் சேர்க்கலாம் அல்லது |
11:14 | 2 டீஸ்பூன் தானியப்பொடியை உணவுடன் சேர்த்து சமைக்கலாம் |
11:21 | பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி இந்த சத்துமாவுகள் தயாரிக்கப்பட்டன என்பதை குறித்துக்கொள்ளவும் |
11:26 | ஊறவைத்தல், வறுத்தல் மற்றும் |
11:28 | முளைக்கவைத்தல் |
11:30 | இந்த அனைத்து முறைகளும், உணவில் இருந்து தாதுசத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்வதை தடுக்கும் Phytic acidஐ குறைத்து.... |
11:38 | உணவில் இருந்து ஊட்டச்சத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்வதை அதிகரிக்கிறது |
11:42 | 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கான சத்துமாவுகள் தயாரிக்கும் முறை பற்றிய ஸ்போக்கன் டுட்டோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம் |
11:51 | இந்த டுடோரியலில் நாம் பல்வேறு சத்துமாவுகளை தயாரிக்க கற்றோம் அவை |
11:57 | Amylase மாவு, விதைகள் அடங்கிய மாவு |
12:00 | கொட்டைகளும் விதைகளும் அடங்கிய மாவு |
12:02 | தானியப்பொடி |
12:04 | கறிவேப்பிலை பொடி மற்றும் |
12:06 | முருங்கை இலை பொடி |
12:08 | இந்த டுடோரியல், Spoken Tutorial Project, IIT Bombayஆல் பங்களிக்கப்பட்டது |
12:14 | Spoken Tutorial Project க்கு நிதியுதவி, இந்திய அரசாங்கத்தின் NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் கிடைக்கும். |
12:21 | இந்த tutorial ன் ஒருபகுதி நிதி, WHEELS Global Foundationன் பெருந்தன்மையான பங்களிப்பாகும். |
12:32 | இந்த tutorial, Maa aur Shishu Poshan projectன் ஒரு பகுதி ஆகும். |
12:36 | இந்த tutorialக்கான domain reviewerகள், Dr. Rupal Dalal, MD Pediatrics மற்றும் Ms. Deepali Fargade, Nutritionist |
12:46 | இந்த tutorial, Nutritionist Rajani Sawant மற்றும் animator Arthi anbalagan ஆல் உருவாக்கப்பட்டது.
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா, நன்றி. |