Health-and-Nutrition/C2/Powder-recipes-for-6-to-24-months-old-children/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கான சத்துள்ள பொடிகள் தயாரிக்கும் முறை பற்றிய ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு |
00:08 | இந்த டுட்டோரியலில் நாம் பல்வேறு சத்துள்ள பொடிகள் தயாரிக்கும் முறை பற்றி கற்போம் அவை |
00:14 | Amylase பொடி |
00:17 | விதைகளின் பொடி |
00:19 | கொட்டைகள் மற்றும் விதைகளின் பொடி |
00:22 | தானியப்பொடி |
00:24 | கறிவேப்பிலை பொடி |
00:26 | முருங்கை இலை பொடி |
00:29 | பல்வேறு சத்துள்ள பொடிகளை சிரமம் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம் |
00:36 | கைக்குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவும் ஊட்டச்சத்துகள், இந்த சத்துள்ள பொடிகளில் உள்ளன |
00:42 | குழந்தைளுக்கு 6 மாதங்கள் முடிந்த உடனேயே |
00:44 | இந்த சத்துள்ள பொடிகளை கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது |
00:51 | எப்போதும் குழந்தைக்கு 1 புது பொடியை கொடுக்க ஆரம்பிக்கும்போது |
00:54 | குழந்தையின் உணவில் அதை சேர்த்து, 3 அல்லது 4 நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும் |
00:59 | 3 அல்லது 4 நாட்களுக்கு பிறகு வேறொரு புதிய பொடியை கொடுக்க தொடங்கலாம் |
01:05 | இரண்டு பொடிகளை கலந்தும் கொடுக்கலாம். ஆனால் அவற்றை முதலில் தனித்தனியாக கொடுத்துபார்க்க வேண்டும். |
01:10 | அதனால் குழந்தைக்கு உடலில் ஏதேனும் சரும அரிப்பு அல்லது வீக்கம் போன்ற பிரச்சனைகள் வந்திருக்க கூடாது. |
01:19 | ஒவ்வாமை உருவாக்கும் கொட்டைகள் நிறைந்த பொடிகளை குழந்தைக்கு முதல் முறை கொடுக்கும் போது |
01:26 | குறைந்த அளவாக, கால் தேக்கரண்டி கொடுத்து ஆரம்பிக்க வேண்டும் |
01:31 | 10 நிமிடங்கள் காத்திருந்து, கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும் |
01:36 | குழந்தைக்கு 1 வயது ஆகும் வரை குழந்தையின் உணவில் உப்பு சேர்க்க வேண்டாம் |
01:41 | குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை குழந்தையின் உணவில் சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்க்க வேண்டாம் |
01:47 | இப்பொழுது சத்துக்கள் அடங்கிய பொடிகளை எப்படித் தயாரிப்பதெனப் பார்ப்போம் |
01:52 | நினைவில் கொள்க |
01:54 | இந்த டுட்டோரியலில் உணவுகள் பின்வரும் முறைகளை பின்பற்றி தயாரிக்கப்பட்டன |
02:00 | ஊறவைத்தல், வதக்குதல் |
02:03 | முளைக்கட்டுதல் |
02:05 | மற்றும் சமைத்தல் |
02:07 | சமைக்கும் முறை பின்வரும் ஒன்று அல்லது இணைந்த முறைகளை பின்பற்றியதாகும்: |
02:12 | வருத்தல் |
02:14 | வேக வைத்தல் மற்றும் கொதிக்க வைத்தல் |
02:17 | இந்த அனைத்து முறைகளும் உணவிலிருந்து தாதுக்களை உறிஞ்சுவதை கட்டுப்படுத்தும் phytatesகள் மற்றும் oxalatesகளை குறைக்கின்றன |
02:26 | மற்றும் உணவிலிருந்து ஊட்டச்சத்து உறுஞ்சுதலையும் அதிகரிக்கின்றன |
02:30 | இப்பொழுது நம் முதல் உணவிலிருந்து தொடங்குவோம்: |
02:33 | Amylase பொடி. முதலில் அதன் நன்மைகளைப் பார்க்கலாம் |
02:39 | Amylase என்பது செரிமானத்திற்கு தேவையான என்சைம் அல்லது வேதி பொருள் ஆகும் |
02:45 | குழந்தையின் உடலில் அது குறைந்த அளவே உற்பத்தியாகிறது. |
02:50 | இந்த பொடி, உடலின் amylase அளவை அதிகரிக்கிறது. |
02:53 | உணவில் உள்ள ஊட்டச்சத்தையும், அதை உடல் உறுஞ்சுதலையும் அதிகரிக்கிறது |
02:59 | எனவே amylase சத்துமாவு அல்லது பொடியை குழந்தைக்கு கொடுக்க வேண்டும் |
03:05 | amylase பொடித் தயாரிப்பு முறையை பார்ப்போம் |
03:08 | amylase பொடியைத் தயாரிக்க தேவையான பொருட்கள்- |
03:13 | கோதுமை 1/2 கிண்ணம் |
03:15 | பச்சைப்பயிறு 1/2 கிண்ணம் மற்றும் |
03:17 | கேழ்வரகு 1/2 கிண்ணம் |
03:19 | செய்முறை: முதலில் அனைத்து பொருட்களையும் தனித்தனியே நீரில் 10 மணிநேரம் ஊற வைக்கவும் |
03:25 | ஊறவைப்பதனால் அவற்றின் ஈரப்பதம் அதிகமாகும் |
03:29 | 10 மணி நேரத்திற்கு பிறகு அனைத்து பொருட்களையும் நீக்கவும் |
03:33 | வடிகட்டி மூலம் அவற்றில் இருந்து நீரை வடிகட்டவும் |
03:38 | பின்னர் சுத்தமான உலர்ந்த பருத்தி துணியில் அவற்றை ஒவ்வொன்றாக கட்டவும் |
03:43 | அவை முளைக்கும் வரை அப்படியே வைக்கவும் |
03:46 | இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படும் |
03:49 | குறிப்பு: |
03:51 | முளைக்கட்ட சில பொருட்கள் நீண்ட நேரம் எடுக்கும் |
03:53 | சில பொருட்கள் குறைந்த நேரம் எடுக்கும் |
03:57 | இங்கு கேழ்வரகு, மற்ற பொருட்களை விட அதிக நேரம் எடுக்கும் |
04:02 | முளைக்கட்டிய பிறகு அவற்றை வெயிலில் ஒரிரு நாட்கள் காய வைக்கவும் |
04:07 | காய்ந்த பிறகு, அனைத்து பொருட்களும் முற்றிலும் உலரும் வரை அவற்றை குறைந்த தீயில் வறுக்க வேண்டும் |
04:14 | வறுக்கும் போது இடைவிடாமல் கிளற வேண்டும் என்பதை நினைவுகொள்க |
04:20 | அடுத்து சுத்தமான கைகளால் அவற்றை நன்கு தேய்த்து மேல் தோலை நீக்க வேண்டும் |
04:26 | தோலை நீக்கிய பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும் |
04:30 | இப்போது mixer அல்லது உரலைப் பயன்படுத்தி அனைத்தையும் பொடியாக்கவும். |
04:35 | amylase பொடி தயாராகிவிட்டது |
04:39 | இந்த amylase பொடியை ஒரு காற்றுபுகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும் |
04:43 | பின்வரும் குழந்தையின் உணவை சமைக்கும் போது இந்த amylase பொடியை 1 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளலாம் |
04:49 | பருப்பு |
04:51 | காய்கறி கூழ் அல்லது பருப்பு சாதம் |
04:54 | amylase கஞ்சியையும் தயாரிக்கலாம் |
04:59 | 1 தேக்கரண்டி amylase பொடியில், |
05:02 | கிட்டத்தட்ட 18 கலோரிகளும் |
05:04 | 0.6 கிராம் புரதமும் உள்ளது |
05:07 | Amylase பொடியில் குழந்தைக்கு தேவையான சில சிறப்பு பண்புகள் உள்ளன |
05:13 | இது உணவின் அடர்த்தியை குறைத்து |
05:16 | அதனால், அதிக amylase பொடியை குழந்தையின் உணவில் சேர்க்கலாம் |
05:20 | இது உணவின் அடர்த்தியை குறைத்து ஊட்டச்சச்தை அதிகரிக்கிறது |
05:27 | அடுத்து விதைகளின் பொடியை தயாரிக்கும் முறையை பார்ப்போம் |
05:35 | இந்த பொடியில் துத்தநாகம், நார்சத்து, மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது |
05:38 | இந்த ஊட்டச்சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. வலிமையை அதிகரிக்கிறது. |
05:43 | மேலும் இந்த பொடியில் உள்ள நல்ல கொழுப்பு குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது |
05:50 | இந்த பொடியை தயாரிக்க தேவையான பொருட்கள்: |
05:54 | கருப்பு எள் ½ கிண்ணம் |
05:57 | ஆளி விதைகள் ½ கிண்ணம் |
05:59 | பச்சை பூசணி விதைகள் ½ கிண்ணம் |
06:02 | செய்முறை: அனைத்து பொருட்களையும் குறைந்த தீயில் ஒவ்வொன்றாக 4-5 நிமிடங்கள் வறுக்க வேண்டும் |
06:10 | வறுத்த பொருட்கள் ஆறியதும் அவற்றை அரைத்து பொடியாக்கவும் |
06:14 | இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும் |
06:18 | குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை 1 தேக்கரண்டி சேர்க்கவும் |
06:23 | இதில் 30 கலோரிகளும் |
06:26 | 2.7 கிராம் புரதமும் உள்ளது |
06:30 | அடுத்து கொட்டைகள் மற்றும் விதைகளின் பொடியை தயாரிக்க கற்போம் |
06:34 | இந்த பொடியில் துத்தநாகம் |
06:37 | மெக்னீசியம் |
06:39 | Iron போன்ற சத்துகள் உள்ளன |
06:41 | சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இந்த தாதுசத்துகள் உதவுகின்றன |
06:46 | மேலும் இந்த பொடியில் உள்ள நல்ல கொழுப்பு, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது |
06:53 | இந்த பொடியைத் தயாரிக்க தேவையான பொருட்கள் |
06:58 | வேர்க்கடலை ½ கிண்ணம் |
07:00 | காய்ந்த தேங்காய் துறுவல் ½ கிண்ணம் |
07:02 | ஆளி விதைகள் ½ கிண்ணம் |
07:05 | கருப்பு எள் ½ கிண்ணம் |
07:08 | செய்முறை: அனைத்து பொருட்களையும் குறைந்த தீயில் ஒவ்வொன்றாக 4 ல் இருந்து 6 நிமிடங்கள் வறுக்க வேண்டும் |
07:16 | பிறகு ஒரு உரல் அல்லது mixerஐ பயன்படுத்தி அனைத்தையும் பொடியாக்கவும் |
07:23 | இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும் |
07:26 | குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை 1 தேக்கரண்டி சேர்க்கவும் |
07:32 | இதில் 28 கலோரிகளும் |
07:35 | 0.9 கிராம் புரதமும் உள்ளது |
07:38 | இப்போது நாம் தானியப்பொடியை தயாரிக்க கற்போம் |
07:42 | இந்த பொடியில் பொட்டாசியம், |
07:45 | புரதம், ஃபோலேட், |
07:47 | மெக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளன |
07:49 | இந்த ஊட்டச்சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. வலிமையை அதிகரிக்கிறது |
07:54 | நம் உடலில் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இவை உதவுகின்றன |
07:59 | தானியப்பொடியை தயாரிக்க தேவையான பொருட்கள்: |
08:02 | பச்சைபயிறு ½ கிண்ணம் |
08:05 | பட்டாணி ½ கிண்ணம் |
08:07 | கொண்டைக்கடலை ½ கிண்ணம் |
08:09 | நரி பயிறு ½ கிண்ணம் |
08:11 | செய்முறை: முதலில் அனைத்து பொருட்களையும் தனித்தனியே நீரில் 10 மணிநேரம் ஊற வைக்கவும் |
08:17 | ஊறவைப்பதனால் அவற்றின் ஈரப்பதம் அதிகமாகும் |
08:20 | 10 மணி நேரத்திற்கு பிறகு நீரிலிருந்து எடுத்து விடவும் |
08:23 | வடிகட்டியின் மூலம் நீரை வடிகட்டவும் |
08:27 | பின்னர் சுத்தமான உலர்ந்த பருத்தி துணியில் அவற்றை ஒவ்வொன்றாக கட்டவும் |
08:32 | அவை முளைக்கும் வரை அப்படியே வைக்கவும் |
08:34 | இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படும் |
08:38 | முளைக்கும் நேரம் ஒவ்வொரு பொருளுக்கும் வேறுபடும் என்பதை நினைவுகொள்க |
08:45 | முளைக்கட்டிய பிறகு அவற்றை வெயிலில் ஒரிரு நாட்கள் காய வைக்கவும் |
08:50 | காய்ந்த பிறகு, அனைத்து பொருட்களும் முற்றிலும் உலரும் வரை அவற்றை மிதமான தீயில் வறுக்க வேண்டும் |
08:55 | வறுக்கும் போது இடைவிடாமல் கிளற வேண்டும் |
08:59 | இதனால் பொருட்கள் கருகாமல் இருக்கும் |
09:02 | வறுத்த பிறகு, சுத்தமான கைகளால் அவற்றை நன்கு தேய்த்து தோலை நீக்க வேண்டும் |
09:09 | இப்போது அனைத்து தானியங்களையும் ஒன்றாக சேர்த்து பொடியாக்கவும். |
09:13 | இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும் |
09:16 | குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை 2 தேக்கரண்டி சேர்க்கவும் |
09:21 | இந்த பொடியின் 2 தேக்கரண்டியில், |
09:23 | கிட்டத்தட்ட 33 கலோரிகளும் |
09:26 | 1.8 கிராம் புரதமும் உள்ளது |
09:28 | அடுத்து கறிவேப்பிலை பொடி தயாரிப்பு முறை பற்றி கற்போம் |
09:32 | கறிவேப்பிலையில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் |
09:36 | மற்றும் விட்டமின் சி உள்ளது |
09:38 | இந்த அனைத்து ஊட்டச்சத்துகளும், உணவு செரிமானத்திற்கும் பல் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது |
09:43 | நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது |
09:46 | இந்த பொடியை தயாரிக்க நமக்கு கறிவேப்பில்லை தேவை |
09:49 | செய்முறை - சுத்தமான நீரில் கறிவேப்பிலையை நன்றாக கழுவவும் |
09:53 | நிழலில் உலர வைக்கவும் |
09:55 | இப்போது உலர்ந்த கறிவேப்பிலையை பொடியாக்கவும். |
09:58 | இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும் |
10:01 | குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை ¼ தேக்கரண்டி சேர்க்கவும் |
10:07 | இதில் 9 மில்லி கிராம் கால்சியம் உள்ளது |
10:10 | அடுத்து முருங்கை இலை பொடியை தயாரிக்க கற்போம் |
10:15 | இந்த பொடியில் கால்சியம், |
10:18 | Iron, Vitamin C, |
10:20 | Vitamin A, Protein |
10:22 | மற்றும் Sulphur உள்ளது |
10:23 | குழந்தையின் பல்ஈறுகள் வளர்ச்சியடையவும் |
10:27 | கண்களின் ஆரோக்கியத்திற்கும் இந்த ஊட்டச்சத்துக்கள் தேவை |
10:30 | இவை நோய்தொற்றிலிருந்து பாதுகாத்து குழந்தையின் வலிமையை அதிகரிக்கிறது |
10:35 | இந்த பொடியை தயாரிக்க நமக்கு முருங்கை இலை தேவை |
10:39 | செய்முறை: சுத்தமான நீரில் முருங்கை இலையை நன்றாக கழுவவும் |
10:45 | அதை நிழலில் உலர வைக்கவும் |
10:47 | இப்போது உலர்ந்த முருங்கை இலையை பொடியாக்கவும். முருங்கை இலை பொடி தயார் |
10:50 | இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும் |
10:54 | குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை ¼ தேக்கரண்டி சேர்க்கவும் |
10:59 | இதில் 5 மில்லிகிராம் கால்சியம் உள்ளது |
11:03 | பின்வருவனவற்றை நினைவில் கொள்ளவும் |
11:07 | கருவேப்பிலைபொடி மற்றும் முருங்கைஇலைப்பொடியை பின்வரும் Calcium நிறைந்த உணவுப்பொருட்களுடன் சேர்த்து கொடுக்கவும் |
11:13 | வறுத்த எள் |
11:15 | முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை |
11:17 | முளைகட்டிய கொண்டைக்கடலை |
11:20 | குழந்தைக்கு 9 மாதங்கள் முடிந்தவுடன், |
11:23 | இந்த பொடிகளை தயிருடன் சேர்த்துக் கொடுக்கலாம் |
11:26 | இந்த பொடிகளை தயாரிக்க உள்ளூரில் கிடைக்கும் கொட்டைகள், விதைகள் மற்றும் தானியங்களை பயன்படுத்தவும் |
11:34 | ஒவ்வொரு வேளை உணவிற்கும் வெவ்வேறு பொடிகளை பயன்படுத்தவும் |
11:38 | ஒவ்வொரு பொடியையும் உணவை சமைப்பதற்கு முன் சேர்க்க வேண்டும். ஏனனெனில் உணவுடன் சேர்ந்து பொடியும் நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும் |
11:47 | இத்துடன் இந்த டுட்டோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது ஆர்த்தி, நன்றி. |