Avogadro/C2/Hydrogen-Bonding/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 11:05, 2 January 2018 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | அனைவருக்கும் வணக்கம். மூலக்கூறுகளில் Hydrogen Bonding குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Avogadroவை Configure செய்தல் |
00:11 | மூலக்கூறில் hydrogen பிணைப்பை காட்டுதல். |
00:14 | Hydrogen பிணைப்பின் நீளத்தை அளத்தல். |
00:16 | மூலக்கூறுகளில் Force display type மற்றும் dipole moments ஐ காட்டுதல் |
00:22 | இங்கு நான் பயன்படுத்துவது Linux OS version 14.04 |
00:27 | Avogadro version 1.1.1. மற்றும் இணைய இணைப்பு. |
00:34 | இந்த டுடோரியலைப் புரிந்துகொள்ள Avogadro interface குறித்து பரிச்சயம் இருக்க வேண்டும். |
00:40 | அது சம்பந்தமான டுடோரியலுக்கு திரையில் தோன்றும் இணைப்பிற்கு செல்க. |
00:45 | இந்த டுடோரியலில் பயன்படுத்தப்படும் மூலக்கூறின் அமைப்புகள் உங்கள் வசதிக்காக code files ஆக கொடுக்கப்பட்டுள்ளன. |
00:52 | ஒரு புதிய Avogadro விண்டோவைத் திறந்துள்ளேன். |
00:56 | Draw Tool ஐகானை கிளிக் செய்து, Panel ஐ கிளிக் செய்யவும். |
01:01 | Panelஇல் methane' வரையப்பட்டுள்ளது. |
01:04 | நாம் இப்போது Avogadro வை configure செய்ய கற்போம். |
01:08 | Settings மெனுவிற்கு சென்று Configure Avogadro வை கிளிக் செய்யவும். |
01:13 | Settings dialog box தோன்றும். |
01:16 | Dialog boxல் மூன்று தேர்வுகள் உள்ள ஒரு பக்க menu தோன்றுகிறது
General Plugins Project tree. |
01:24 | முன்னிருப்பாக Generalமெனு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். |
01:28 | General மெனுவில் Quality மற்றும் Fogஎன்ற இரண்டு ஸ்லைடர்கள் உள்ளன. |
01:34 | Low இல் இருந்து High க்கு slider ஐ நகர்த்தும் பொழுது rendering இன் தரம் மேம்படுகிறது. |
01:41 | Quality slider ஐ Low க்கு நகர்த்தி Apply பட்டனை கிளிக் செய்யவும். |
01:47 | மூலக்கூறின் வடிவம் சரியாக Render செய்யப்படிருப்பதை கவனிக்கவும். |
01:51 | Quality slider ஐ Highக்கு நகர்த்தி, Applyபட்டனை கிளிக் செய்யவும். |
01:56 | High quality rendering இல் மூலக்கூறு தெளிவாகத் தோன்றுவதை கவனிக்கவும். |
02:02 | வடிவத்தை அச்சிடவும், பதிப்பிக்கவும் High quality rendering அமைக்கப்படுகிறது. |
02:07 | இது அதிக CPU சக்தியை எடுத்துக்கொள்கிறது |
02:11 | Quality slider ஐ Mediumக்கு நகர்த்தி Applyபட்டனை கிளிக் செய்யவும். |
02:16 | அன்றாட பயன்பாட்டுக்கு Medium quality செட்டிங்கே போதுமானது. |
02:21 | இனி Fog slider ஐ பற்றி காணலாம். |
02:24 | Fog' slider ஐ ‘Lots க்கு நகர்த்தி Apply பட்டனை கிளிக் செய்யவும். |
02:28 | இப்போது மூலக்கூறு Fog செய்யப்பட்டிருப்பதை காணலாம். |
02:32 | Fog slider ஐ Some க்கு நகர்த்தி Apply இன் மீது கிளிக் செய்யவும். இப்போது மூலக்கூறு தெளிவாக தோன்றுகிறது. |
02:40 | அடுத்ததாக Plugins மெனு |
02:43 | Display Types drop downs தோன்றுகிறது. |
02:46 | Display Types இல் அனைத்து check box களும் enable செய்யப்பட்டிருக்கும். |
02:51 | Axes ஐ கிளிக் செய்க. Axes Display Type பற்றிய விவரங்கள் Details text box இல் காட்டப்படுகிறது. |
02:59 | இதேபோல் மற்ற Display Typeகளின் விவரங்களையும் காணலாம். |
03:04 | நான் அனைத்து check box களையும் un-check செய்து Applyபட்டனை கிளிக் செய்கிறேன். |
03:11 | Ball and Stick check box மட்டும் Display Types menu வில் தோன்றுகிறது. |
03:16 | Ball and Stick Display Type checkbox ஐ Uncheck செய்யவும். |
03:20 | Ball and Stick disable செய்யப்பட்டிருந்தது எனில் Panel இல் இருந்து மூலக்கூறு மறைந்துவிடும். |
03:26 | Ball and Stick check box ஐ கிளிக் செய்து மூலக்கூறை திரையில் வர வைக்கவும். |
03:30 | அனைத்து Display Typesயும் enable செய்ய Pluginsக்கு செல்லவும். |
03:33 | Display Types drop down இல் அனைத்து check box களையும் கிளிக்செய்யவும். |
03:39 | Applyபட்டனை கிளிக் செய்யவும். |
03:41 | அனைத்து Display Type களும் Display Types drop downஇல் தோன்றுகின்றன. |
03:46 | OK ஐ கிளிக் செய்து Settings dialog box ஐ மூடவும். |
03:50 | Display Types மெனுவில் ஏதேனும் ஒரு Display Type activate செய்யப்படவில்லை எனில் Add பட்டனை கிளிக் செய்யவும். |
03:58 | Add Display Type dialog box தோன்றும். |
04:02 | Types drop down இல் கிளிக் செய்து தேவையான Display Type ஐத் தெர்ந்தெடுக்கவும் |
04:07 | நான் Hydrogen Bond ஐ தேர்வு செய்து OKஐ கிளிக் செய்கிறேன். |
04:11 | Display Typesமெனுவில் Hydrogen Bond Display Type தோன்றுகிறது. |
04:16 | இப்போது polar methanolமூலக்கூறுகளில் hydrogen bonding ஐ செய்து காட்டுகிறேன். |
04:22 | ஏற்கனவே'Panelஇல் methane மூலக்கூறு உள்ளது. |
04:26 | பயிற்சிக்காக methane தொகுதி மூலக்கூறுகள் நமக்கு தேவை. |
04:31 | methaneமூலக்கூறை எளிதாக Draw toolஐப் பயன்படுத்தி வரையலாம். |
04:36 | முன்னிருப்பாக Draw Settings மெனுவில், Element இல் Carbon என்றும் Bond Order இல்Singleஎன்றும் இருக்கும் . |
04:43 | Panelஐ கிளிக் செய்யவும். |
04:46 | Element drop down ஐ கிளிக் செய்து Oxygenஐ தேர்ந்தெடுக்கவும். |
04:50 | பின்னர் methane மூலக்கூறில் ஏதேனும் ஒரு Hydrogen ஐ கிளிக் செய்யவும். |
04:56 | இப்போது Panelஇல்Methanol தொகுதி மூலக்கூறு உள்ளது. |
05:00 | Display Typesஇல் Hydrogen Bond check box ஐ கிளிக் செய்யவும். |
05:04 | நாம் மூலக்கூறின் சரியான இணக்கத்தை optimize செய்யலாம். |
05:08 | Tool bar இல் Auto Optimization Tool ஐ கிளிக் செய்யவும். |
05:12 | Auto Optimization Settings மெனு இடதுபக்கத்தில் தோன்றும். |
05:17 | Force Field drop down இல் MMFF94என்பதைத் தேர்ந்தெடுக்கவும். |
05:22 | optimize செய்வதற்கு Start ஐ கிளிக் செய்யவும். |
05:26 | hydrogen bond மஞ்சள் நிற கோட்டுத்துண்டுகளாக உருவாவதைக் காணலாம். |
05:31 | இந்த கோட்டுத்துண்டுகள் ஒரு மூலக்கூறின் hydrogen க்கும் மற்றொரு மூலக்கூறின் oxygen க்கும் இடையே உருவாகிறது. |
05:38 | Auto optimizationஐ நிறுத்த Stop ஐ கிளிக் செய்யவும். |
05:42 | இப்போது ortho-nitrophenol இல் intramolecular hydrogen bonding ஐ செய்து காட்டுகிறேன். |
05:48 | இதற்காக நான் Chemical structure database இல் இருந்து மூலக்கூறை பதிவிறக்குகிறேன். |
05:54 | முன்னர் திறந்து வைத்துள்ள அனைத்து விண்டோக்களையும் மூடி ஒரு புதிய விண்டோவைத் திறக்கவும். |
05:59 | File மெனு வை கிளிக் செய்து Importக்கு செல்லவும். Fetch by Chemical nameஎன்பதைத் தேர்வு செய்யவும். |
06:06 | Chemical Name text box தோன்றுகிறது. |
06:09 | ortho-nitrophenol என சிறிய எழுத்துகளில் டைப் செய்து OK பட்டனை கிளிக் செய்யவும். |
06:15 | Ortho-nitrophenol மூலக்கூறு Panel இல் தோன்றுகிறது. |
06:19 | hydrogen bonding ஐ காட்ட, Panelஇல் Ortho-nitrophenol தொகுதி மூலக்கூறுகள் தேவை. |
06:26 | நான் Panel இல் copy செய்து paste செய்துள்ளேன். |
06:30 | selection toolஐப் பயன்படுத்தி மூலக்கூறை தேர்வு செய்யவும். |
06:34 | Copy செய்வதற்கு CTRL + Cஐ அழுத்தவும். paste க்கு CTRL + V ஐ அழுத்தவும். |
06:39 | Hydrogen Bond check box இன் மீது கிளிக் செய்யவும். |
06:42 | தேவைப்பட்டால் மூலக்கூறை சரியான இணக்கத்திற்கு Optimize செய்துகொள்ளவும். |
06:46 | optimization செயல்பாட்டின் பொழுது, மூலக்கூறுகளுக்கிடையே Intra molecular Hydrogen bond உருவாகிறது. |
06:54 | மூலக்கூறில் உள்ள nitro தொகுதியின் Oxygen க்கும் Hydroxy தொகுதியின் Hydrogen க்கும் இடையே Hydrogen bond உருவாகிறது. |
07:02 | நாம் hydrogen bond இன் பிணைப்பின் நீளத்தை அளக்கலாம் |
07:06 | tool bar இல் Click to Measure icon ஐ கிளிக் செய்யவும்
. |
07:10 | Hydrogenஅணுவையும் Oxygen அணுவையும் கிளிக் செய்யவும். |
07:14 | Hydrogen பிணைப்பின் நீளம் Panel இன் கீழே தோன்றுகிறது. |
07:19 | இந்த slide, hydrogen bonding இன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. |
07:23 | Hydrogen bond கள்: நீரின் தனித்துவமான கரை திறன்களையும், பனிக்கட்டியின் படிக அமைப்பையும் நிர்ணயிக்கின்றன. |
07:32 | DNA இன் complementary strand களை இறுக்கமாக பிடித்துக்கொள்கின்றன. |
07:36 | Proteins மற்றும் nucleic acid களின் வடிவமைப்பை நிர்ணயிக்கவும் நிலைப்படுத்தவும் செய்கின்றன. |
07:41 | Enzyme catalysis இல் வினையூக்கியாக செயல்புரிகின்றன. |
07:46 | பயிற்சிக்காக கீழ்கண்ட மூலக்கூறுகளில் Hydrogen bonding ஐ காட்டவும்
1. Para-hydroxybenzoic acid. 2. Nucleobases, adenine மற்றும் uracil. |
07:56 | உங்கள் பயிற்சிகளுக்கான விடை பின்வருமாறு தோன்ற வேண்டும் |
08:00 | Para-hydroxybenzoic acid மூலக்கூறில் inter molecular hydrogen bonding உருவாவதைக் கவனிக்கவும்.
அதேபோல adenine மற்றும் uracil மூலக்கூறுகளிலும். |
08:10 | Display Types இல் மூலக்கூறுகளுக்கான force ஐ காட்டும் ஒரு option உள்ளது. |
08:15 | சில நீர் மூலக்கூறுகளுடன் ஒரு விண்டோவைத் திறக்கிறேன். |
08:19 | Display Types இல் Force checkbox ஐ கிளிக் செய்யவும். |
08:23 | Hydrogen Bond checkboxஐ கிளிக் செய்யவும். |
08:26 | Tool bar இல் Auto Optimization Tool ஐகானை கிளிக் செய்யவும். |
08:30 | MMFF94 Force Field ஐ தேர்வு செய்து Start பட்டனை கிளிக் செய்யவும். |
08:36 | Optimization செயல் நடக்கும் பொழுது ஒவ்வொரு அணுவிலும் செயல்படும் விசைகளை பச்சை நிற அம்புக்குறியுடன் Force display type காட்டுகிறது. |
08:45 | அம்புக்குறிகள் விசையின் திசையையும், அளவையும் குறிக்கின்றன. |
08:49 | ஒரு மூலக்கூறு optimization ஐ நெருங்கும் பொழுது, அம்புக்குறிகள் சிறிதாகி மறைகின்றன. |
08:55 | இனி மூலக்கூறின் dipole momentபற்றி பார்க்கலாம். |
08:59 | polar மூலக்கூறுகளின் மின்விசை பிரிவினால்Dipole moment உருவாகிறது. |
09:04 | Dipole moment(μ) = charge(Q) times, distance of separation(r) |
09:09 | Dipole moment ஆனது Debye units ஆல் குறிக்கப்படுகிறது. |
09:13 | நான் ஹைட்ரஜன் சயனைடு (HCN) மற்றும் நீர் மூலக்கூறுகளின் dipole moment ஐ காட்டுகிறேன். |
09:20 | ஒரு புதிய விண்டோவைத் திறக்கவும்.
Draw tool ஐ பயன்படுத்தி, ஹைட்ரஜன் சயனைடு மூலக்கூறின் அமைப்பை (HCN) Panel இல் வரையவும். |
09:27 | Hydrogen ஐ தேர்வு செய்து carbon க்கு ஒரு பிணைப்பை வரையவும். |
09:31 | Nitrogenஐ தேர்வு செய்யவும். bond order ஐ triple என தேர்வு செய்து கொண்டு திரையில் காட்டியவாறு பிணைப்பை வரையவும். |
09:38 | MMFF94 Force Fieldஐ பயன்படுத்தி வடிவமைப்பை Optimize செய்யவும். |
09:44 | dipole moment ஐக் காண்பதற்கு Display Typesஇல் Dipole check box இல் கிளிக் செய்யவும். |
09:50 | Dipole ஒரு சிவப்பு அம்புக்குறியுடன் காட்டப்படுகிறது. |
09:54 | dipole moment பற்றிய கணிப்புக்கு View மெனுவிற்கு செல்லவும். |
09:57 | Properties க்கு சென்று Molecule Propertiesஐ தேர்ந்தெடுக்கவும்.
Molecule Properties விண்டோ திறக்கிறது. |
10:05 | விண்டோவில் hydrogen cyanide இன் கணிக்கப்பட்ட dipole moment 0.396Dஎன்று காட்டப்படுகிறது. |
10:13 | அதேபோல நீர் மூலக்கூறின் dipole moment ஆனது 0.245D. |
10:21 | சுருங்கக்கூற வேண்டும் எனில். |
10:23 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, -
Avogadroஐ Configure செய்வது, |
10:27 | Methanol இல் intermolecular hydrogen bonding ஐ காட்டுவது, |
10:31 | ortho-nitrophenol இல் intramolecular hydrogen bonding ஐ காட்டுவது, |
10:35 | hydrogen bonds இன் நீளத்தை அளத்தல், |
10:38 | நீர் மூலக்கூறின் Force display type ஐ காட்டுவது, |
10:42 | HCN மற்றும் நீர் மூலக்கூறுகளின் dipole moments ஐக் காண்பது. |
10:48 | தன்னறிவு சோதனைக்காக,
1. carbon dioxide மற்றும் methyl chloride மூலக்கூறுகளின் dipole moments ஐ காட்டவும். 2. Ammonia மூலக்கூறுகளுக்குForce Display Type ஐ காட்டவும். |
10:59 | இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்களிடம் நல்ல bandwidth இல்லை எனில் இதை download செய்து பார்த்துக்கொள்ளலாம். |
11:06 | Spoken Tutorialகளை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகள் நடத்தி சான்றிதழ் அளிக்கிறோம்.
எங்களைத் தொடர்பு கொள்ளவும். |
11:12 | இந்திய அரசின் NMEICT, MHRD இந்த spoken tutorial திட்டத்திற்க்கு தேவையான நிதியுதவியை அளிக்கிறது. |
11:18 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பாலசுப்பிரமணியம். குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா….. நன்றி. |