Avogadro/C2/Hydrogen-Bonding/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 அனைவருக்கும் வணக்கம். மூலக்கூறுகளில் Hydrogen Bonding குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Avogadroவை Configure செய்தல்
00:11 மூலக்கூறில் hydrogen பிணைப்பை காட்டுதல்.
00:14 Hydrogen பிணைப்பின் நீளத்தை அளத்தல்.
00:16 மூலக்கூறுகளில் Force display type மற்றும் dipole moments ஐ காட்டுதல்
00:22 இங்கு நான் பயன்படுத்துவது Linux OS version 14.04
00:27 Avogadro version 1.1.1. மற்றும் இணைய இணைப்பு.
00:34 இந்த டுடோரியலைப் புரிந்துகொள்ள Avogadro interface குறித்து பரிச்சயம் இருக்க வேண்டும்.
00:40 அது சம்பந்தமான டுடோரியலுக்கு திரையில் தோன்றும் இணைப்பிற்கு செல்க.
00:45 இந்த டுடோரியலில் பயன்படுத்தப்படும் மூலக்கூறின் அமைப்புகள் உங்கள் வசதிக்காக code files ஆக கொடுக்கப்பட்டுள்ளன.
00:52 ஒரு புதிய Avogadro விண்டோவைத் திறந்துள்ளேன்.
00:56 Draw Tool ஐகானை கிளிக் செய்து, Panel ஐ கிளிக் செய்யவும்.
01:01 Panelஇல் methane' வரையப்பட்டுள்ளது.
01:04 நாம் இப்போது Avogadro வை configure செய்ய கற்போம்.
01:08 Settings மெனுவிற்கு சென்று Configure Avogadro வை கிளிக் செய்யவும்.
01:13 Settings dialog box தோன்றும்.
01:16 Dialog boxல் மூன்று தேர்வுகள் உள்ள ஒரு பக்க menu தோன்றுகிறது

General

Plugins

Project tree.

01:24 முன்னிருப்பாக Generalமெனு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
01:28 General மெனுவில் Quality மற்றும் Fogஎன்ற இரண்டு ஸ்லைடர்கள் உள்ளன.
01:34 Low இல் இருந்து High க்கு slider ஐ நகர்த்தும் பொழுது rendering இன் தரம் மேம்படுகிறது.
01:41 Quality slider ஐ Low க்கு நகர்த்தி Apply பட்டனை கிளிக் செய்யவும்.
01:47 மூலக்கூறின் வடிவம் சரியாக Render செய்யப்படிருப்பதை கவனிக்கவும்.
01:51 Quality slider ஐ Highக்கு நகர்த்தி, Applyபட்டனை கிளிக் செய்யவும்.
01:56 High quality rendering இல் மூலக்கூறு தெளிவாகத் தோன்றுவதை கவனிக்கவும்.
02:02 வடிவத்தை அச்சிடவும், பதிப்பிக்கவும் High quality rendering அமைக்கப்படுகிறது.
02:07 இது அதிக CPU சக்தியை எடுத்துக்கொள்கிறது
02:11 Quality slider ஐ Mediumக்கு நகர்த்தி Applyபட்டனை கிளிக் செய்யவும்.
02:16 அன்றாட பயன்பாட்டுக்கு Medium quality செட்டிங்கே போதுமானது.
02:21 இனி Fog slider ஐ பற்றி காணலாம்.
02:24 Fog' slider ஐ ‘Lots க்கு நகர்த்தி Apply பட்டனை கிளிக் செய்யவும்.
02:28 இப்போது மூலக்கூறு Fog செய்யப்பட்டிருப்பதை காணலாம்.
02:32 Fog slider ஐ Some க்கு நகர்த்தி Apply இன் மீது கிளிக் செய்யவும். இப்போது மூலக்கூறு தெளிவாக தோன்றுகிறது.
02:40 அடுத்ததாக Plugins மெனு
02:43 Display Types drop downs தோன்றுகிறது.
02:46 Display Types இல் அனைத்து check box களும் enable செய்யப்பட்டிருக்கும்.
02:51 Axes ஐ கிளிக் செய்க. Axes Display Type பற்றிய விவரங்கள் Details text box இல் காட்டப்படுகிறது.
02:59 இதேபோல் மற்ற Display Typeகளின் விவரங்களையும் காணலாம்.
03:04 நான் அனைத்து check box களையும் un-check செய்து Applyபட்டனை கிளிக் செய்கிறேன்.
03:11 Ball and Stick check box மட்டும் Display Types menu வில் தோன்றுகிறது.
03:16 Ball and Stick Display Type checkbox ஐ Uncheck செய்யவும்.
03:20 Ball and Stick disable செய்யப்பட்டிருந்தது எனில் Panel இல் இருந்து மூலக்கூறு மறைந்துவிடும்.
03:26 Ball and Stick check box ஐ கிளிக் செய்து மூலக்கூறை திரையில் வர வைக்கவும்.
03:30 அனைத்து Display Typesயும் enable செய்ய Pluginsக்கு செல்லவும்.
03:33 Display Types drop down இல் அனைத்து check box களையும் கிளிக்செய்யவும்.
03:39 Applyபட்டனை கிளிக் செய்யவும்.
03:41 அனைத்து Display Type களும் Display Types drop downஇல் தோன்றுகின்றன.
03:46 OK ஐ கிளிக் செய்து Settings dialog box ஐ மூடவும்.
03:50 Display Types மெனுவில் ஏதேனும் ஒரு Display Type activate செய்யப்படவில்லை எனில் Add பட்டனை கிளிக் செய்யவும்.
03:58 Add Display Type dialog box தோன்றும்.
04:02 Types drop down இல் கிளிக் செய்து தேவையான Display Type ஐத் தெர்ந்தெடுக்கவும்
04:07 நான் Hydrogen Bond ஐ தேர்வு செய்து OKஐ கிளிக் செய்கிறேன்.
04:11 Display Typesமெனுவில் Hydrogen Bond Display Type தோன்றுகிறது.
04:16 இப்போது polar methanolமூலக்கூறுகளில் hydrogen bonding ஐ செய்து காட்டுகிறேன்.
04:22 ஏற்கனவே'Panelஇல் methane மூலக்கூறு உள்ளது.
04:26 பயிற்சிக்காக methane தொகுதி மூலக்கூறுகள் நமக்கு தேவை.
04:31 methaneமூலக்கூறை எளிதாக Draw toolஐப் பயன்படுத்தி வரையலாம்.
04:36 முன்னிருப்பாக Draw Settings மெனுவில், Element இல் Carbon என்றும் Bond Order இல்Singleஎன்றும் இருக்கும் .
04:43 Panelஐ கிளிக் செய்யவும்.
04:46 Element drop down ஐ கிளிக் செய்து Oxygenஐ தேர்ந்தெடுக்கவும்.
04:50 பின்னர் methane மூலக்கூறில் ஏதேனும் ஒரு Hydrogen ஐ கிளிக் செய்யவும்.
04:56 இப்போது Panelஇல்Methanol தொகுதி மூலக்கூறு உள்ளது.
05:00 Display Typesஇல் Hydrogen Bond check box ஐ கிளிக் செய்யவும்.
05:04 நாம் மூலக்கூறின் சரியான இணக்கத்தை optimize செய்யலாம்.
05:08 Tool bar இல் Auto Optimization Tool ஐ கிளிக் செய்யவும்.
05:12 Auto Optimization Settings மெனு இடதுபக்கத்தில் தோன்றும்.
05:17 Force Field drop down இல் MMFF94என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
05:22 optimize செய்வதற்கு Start ஐ கிளிக் செய்யவும்.
05:26 hydrogen bond மஞ்சள் நிற கோட்டுத்துண்டுகளாக உருவாவதைக் காணலாம்.
05:31 இந்த கோட்டுத்துண்டுகள் ஒரு மூலக்கூறின் hydrogen க்கும் மற்றொரு மூலக்கூறின் oxygen க்கும் இடையே உருவாகிறது.
05:38 Auto optimizationஐ நிறுத்த Stop ஐ கிளிக் செய்யவும்.
05:42 இப்போது ortho-nitrophenol இல் intramolecular hydrogen bonding ஐ செய்து காட்டுகிறேன்.
05:48 இதற்காக நான் Chemical structure database இல் இருந்து மூலக்கூறை பதிவிறக்குகிறேன்.
05:54 முன்னர் திறந்து வைத்துள்ள அனைத்து விண்டோக்களையும் மூடி ஒரு புதிய விண்டோவைத் திறக்கவும்.
05:59 File மெனு வை கிளிக் செய்து Importக்கு செல்லவும். Fetch by Chemical nameஎன்பதைத் தேர்வு செய்யவும்.
06:06 Chemical Name text box தோன்றுகிறது.
06:09 ortho-nitrophenol என சிறிய எழுத்துகளில் டைப் செய்து OK பட்டனை கிளிக் செய்யவும்.
06:15 Ortho-nitrophenol மூலக்கூறு Panel இல் தோன்றுகிறது.
06:19 hydrogen bonding ஐ காட்ட, Panelஇல் Ortho-nitrophenol தொகுதி மூலக்கூறுகள் தேவை.
06:26 நான் Panel இல் copy செய்து paste செய்துள்ளேன்.
06:30 selection toolஐப் பயன்படுத்தி மூலக்கூறை தேர்வு செய்யவும்.
06:34 Copy செய்வதற்கு CTRL + Cஐ அழுத்தவும். paste க்கு CTRL + V ஐ அழுத்தவும்.
06:39 Hydrogen Bond check box இன் மீது கிளிக் செய்யவும்.
06:42 தேவைப்பட்டால் மூலக்கூறை சரியான இணக்கத்திற்கு Optimize செய்துகொள்ளவும்.
06:46 optimization செயல்பாட்டின் பொழுது, மூலக்கூறுகளுக்கிடையே Intra molecular Hydrogen bond உருவாகிறது.
06:54 மூலக்கூறில் உள்ள nitro தொகுதியின் Oxygen க்கும் Hydroxy தொகுதியின் Hydrogen க்கும் இடையே Hydrogen bond உருவாகிறது.
07:02 நாம் hydrogen bond இன் பிணைப்பின் நீளத்தை அளக்கலாம்
07:06 tool bar இல் Click to Measure icon ஐ கிளிக் செய்யவும்

.

07:10 Hydrogenஅணுவையும் Oxygen அணுவையும் கிளிக் செய்யவும்.
07:14 Hydrogen பிணைப்பின் நீளம் Panel இன் கீழே தோன்றுகிறது.
07:19 இந்த slide, hydrogen bonding இன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
07:23 Hydrogen bond கள்: நீரின் தனித்துவமான கரை திறன்களையும், பனிக்கட்டியின் படிக அமைப்பையும் நிர்ணயிக்கின்றன.
07:32 DNA இன் complementary strand களை இறுக்கமாக பிடித்துக்கொள்கின்றன.
07:36 Proteins மற்றும் nucleic acid களின் வடிவமைப்பை நிர்ணயிக்கவும் நிலைப்படுத்தவும் செய்கின்றன.
07:41 Enzyme catalysis இல் வினையூக்கியாக செயல்புரிகின்றன.
07:46 பயிற்சிக்காக கீழ்கண்ட மூலக்கூறுகளில் Hydrogen bonding ஐ காட்டவும்

1. Para-hydroxybenzoic acid.

2. Nucleobases, adenine மற்றும் uracil.

07:56 உங்கள் பயிற்சிகளுக்கான விடை பின்வருமாறு தோன்ற வேண்டும்
08:00 Para-hydroxybenzoic acid மூலக்கூறில் inter molecular hydrogen bonding உருவாவதைக் கவனிக்கவும்.

அதேபோல adenine மற்றும் uracil மூலக்கூறுகளிலும்.

08:10 Display Types இல் மூலக்கூறுகளுக்கான force ஐ காட்டும் ஒரு option உள்ளது.
08:15 சில நீர் மூலக்கூறுகளுடன் ஒரு விண்டோவைத் திறக்கிறேன்.
08:19 Display Types இல் Force checkbox ஐ கிளிக் செய்யவும்.
08:23 Hydrogen Bond checkboxஐ கிளிக் செய்யவும்.
08:26 Tool bar இல் Auto Optimization Tool ஐகானை கிளிக் செய்யவும்.
08:30 MMFF94 Force Field ஐ தேர்வு செய்து Start பட்டனை கிளிக் செய்யவும்.
08:36 Optimization செயல் நடக்கும் பொழுது ஒவ்வொரு அணுவிலும் செயல்படும் விசைகளை பச்சை நிற அம்புக்குறியுடன் Force display type காட்டுகிறது.
08:45 அம்புக்குறிகள் விசையின் திசையையும், அளவையும் குறிக்கின்றன.
08:49 ஒரு மூலக்கூறு optimization ஐ நெருங்கும் பொழுது, அம்புக்குறிகள் சிறிதாகி மறைகின்றன.
08:55 இனி மூலக்கூறின் dipole momentபற்றி பார்க்கலாம்.
08:59 polar மூலக்கூறுகளின் மின்விசை பிரிவினால்Dipole moment உருவாகிறது.
09:04 Dipole moment(μ) = charge(Q) times, distance of separation(r)
09:09 Dipole moment ஆனது Debye units ஆல் குறிக்கப்படுகிறது.
09:13 நான் ஹைட்ரஜன் சயனைடு (HCN) மற்றும் நீர் மூலக்கூறுகளின் dipole moment ஐ காட்டுகிறேன்.
09:20 ஒரு புதிய விண்டோவைத் திறக்கவும்.

Draw tool ஐ பயன்படுத்தி, ஹைட்ரஜன் சயனைடு மூலக்கூறின் அமைப்பை (HCN) Panel இல் வரையவும்.

09:27 Hydrogen ஐ தேர்வு செய்து carbon க்கு ஒரு பிணைப்பை வரையவும்.
09:31 Nitrogenஐ தேர்வு செய்யவும். bond order ஐ triple என தேர்வு செய்து கொண்டு திரையில் காட்டியவாறு பிணைப்பை வரையவும்.
09:38 MMFF94 Force Fieldஐ பயன்படுத்தி வடிவமைப்பை Optimize செய்யவும்.
09:44 dipole moment ஐக் காண்பதற்கு Display Typesஇல் Dipole check box இல் கிளிக் செய்யவும்.
09:50 Dipole ஒரு சிவப்பு அம்புக்குறியுடன் காட்டப்படுகிறது.
09:54 dipole moment பற்றிய கணிப்புக்கு View மெனுவிற்கு செல்லவும்.
09:57 Properties க்கு சென்று Molecule Propertiesஐ தேர்ந்தெடுக்கவும்.

Molecule Properties விண்டோ திறக்கிறது.

10:05 விண்டோவில் hydrogen cyanide இன் கணிக்கப்பட்ட dipole moment 0.396Dஎன்று காட்டப்படுகிறது.
10:13 அதேபோல நீர் மூலக்கூறின் dipole moment ஆனது 0.245D.
10:21 சுருங்கக்கூற வேண்டும் எனில்.
10:23 இந்த டுடோரியலில் நாம் கற்றது, -

Avogadroஐ Configure செய்வது,

10:27 Methanol இல் intermolecular hydrogen bonding ஐ காட்டுவது,
10:31 ortho-nitrophenol இல் intramolecular hydrogen bonding ஐ காட்டுவது,
10:35 hydrogen bonds இன் நீளத்தை அளத்தல்,
10:38 நீர் மூலக்கூறின் Force display type ஐ காட்டுவது,
10:42 HCN மற்றும் நீர் மூலக்கூறுகளின் dipole moments ஐக் காண்பது.
10:48 தன்னறிவு சோதனைக்காக,

1. carbon dioxide மற்றும் methyl chloride மூலக்கூறுகளின் dipole moments ஐ காட்டவும்.

2. Ammonia மூலக்கூறுகளுக்குForce Display Type ஐ காட்டவும்.

10:59 இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்களிடம் நல்ல bandwidth இல்லை எனில் இதை download செய்து பார்த்துக்கொள்ளலாம்.
11:06 Spoken Tutorialகளை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகள் நடத்தி சான்றிதழ் அளிக்கிறோம்.

எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

11:12 இந்திய அரசின் NMEICT, MHRD இந்த spoken tutorial திட்டத்திற்க்கு தேவையான நிதியுதவியை அளிக்கிறது.
11:18 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பாலசுப்பிரமணியம். குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா….. நன்றி.

Contributors and Content Editors

Balasubramaniam, Venuspriya