OpenModelica/C3/Component-oriented-modeling/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Componentஐ சார்ந்த modeling குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு modelஐ எப்படி instantiate செய்வது. |
00:12 | connector classஐ எப்படி வரையறுப்பது, மற்றும், component modelகளை பயன்படுத்தி, ஒரு simple electric circuitன் modelஐ எப்படி உருவாக்குவது. |
00:21 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica 1.9.2, Ubuntu Operating System பதிப்பு14.04ஐ பயன்படுத்துகிறேன். |
00:31 | ஆனால், இந்த செயல்முறை, பின்வரும் எல்லா operating systemகளிலும், ஒரே மாதியாக இருக்கும். |
00:39 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, மற்றும் பயிற்சி செய்ய, Modelicaவில், ஒரு ஐ எப்படி வரையறுப்பது என்று தெரிந்து இருக்க வேண்டும். |
00:45 | ஒரு package மற்றும் Icon and Diagram Viewsஐ எப்படி வரரையறுப்பது என்று உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். |
00:51 | முன்நிபந்தனை டுடோரியல்கள், எங்கள் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றை பார்க்கவும். |
00:57 | இப்போது, Class Instantiation பற்றி மேலும் கற்போம். |
01:02 | Modelica classகளை instantiate செய்யலாம். |
01:06 | உதாரணத்திற்கு, ஒரு தனி நபரை, மனித classன் ஒரு instanceஆக கருதலாம். ஒரு class கொண்டுள்ள, அதே variableகள் மற்றும் equationகளை, அந்த classன் , Instance கொண்டிருக்கிறது. |
01:20 | Class Instantiationக்கான syntax, இங்கு காட்டப்பட்டுள்ளது. |
01:25 | இப்போது, இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்வோம். எங்கள் வலைதளத்தில் இருக்கின்ற எல்லா fileகளையும் தரவிறக்கி சேமித்துக் கொள்ளவும். |
01:34 | OMEditக்கு மாறுகிறேன். பின்வரும் fileகள், ஏற்கனவே OMEditல் திறந்தபடி உள்ளன: classInstantiationExample மற்றும்simpleCircuit. |
01:48 | classInstantiationExampleஐ டபுள்-க்ளிக் செய்யவும். இப்போது, இந்த classஐ பற்றி மேலும் விவாதிப்போம். |
01:56 | சிறந்த பார்வைக்கு, OMEdit windowஐ இடது பக்கம் நகர்த்துகிறேன். |
02:02 | object1 மற்றும்object2 என்ற பெயருடைய இரண்டு objectகளை உருவாக்க, இங்கு, bouncingBall classஐ நான் instantiate செய்துள்ளேன். |
02:12 | Height variable hக்கு, ஒவ்வொரு instanceஉம், வேறுபட்டstart மதிப்புகளை கொண்டிருப்பதை கவனிக்கவும். |
02:20 | BouncingBall model பற்றிய மேலும் விவரங்களுக்கு, முன்நிபந்தனை டுடோரியல்களை பார்க்கவும். |
02:27 | இந்த classஐ இப்போதுsimulate செய்வோம். |
02:30 | Tool barல் இருக்கின்றSimulate பட்டனை க்ளிக் செய்யவும். |
02:34 | Class, simulate செய்யாமல், ஒரு errorஐ காட்டுகிறது. |
02:39 | இது ஏனெனில், bouncingBall class, OMEditல் திறந்து இல்லை. |
02:45 | நீங்கள், வலைதளத்தில் இருந்து தரவிறக்கிய bouncingBall classஐ திறக்கவும். |
02:50 | இப்போது, இந்த class மீண்டும் simulate செய்யவும். Pop up windowஐ மூடவும். |
02:56 | இம்முறை, class, வெற்றிகரமாகsimulate செய்வதை கவனிக்கவும். |
03:01 | ஒரு classஐ instantiate செய்ய, அது OMEditல் திறந்து இருக்க வேண்டும் என்பதை இந்த பயிற்சி விளக்குகிறது. |
03:09 | Variables browserல், object1 variablesஐ விரிவாக்கவும். |
03:14 | இங்கு பட்டியலிடப்பட்ட variableகள், bouncingBall classல் declare செய்யப்பட்டுள்ளதை கவனிக்கவும். |
03:20 | இந்த variableகள், object1 மற்றும் object2ன் ஒரு பகுதியுமாகும். ஏனெனில், அவை bouncingBall classன், வெறும் instanceகளாகும். |
03:30 | இப்போது, முடிவை நீக்கி, slideகளுக்கு திரும்பவும். |
03:37 | Component orientation, Modelicaவை, மற்ற modeling மற்றும் simulation softwareகளில் இருந்து பிரித்துக் காட்டுகிறது. |
03:43 | இது Modelicaவின், மிக முக்கியமான ஒற்றை அம்சமாகும். |
03:48 | Component modelகள், ஒற்றைphysical நிகழ்வை வர்ணிக்கின்றன. |
03:53 | விருப்பமான விளைவை உருவாக்க, அவற்றைinstantiate செய்து, இணைக்கலாம். |
03:59 | உதாரணத்திற்கு, resistor, inductor மற்றும் capacitor modelகளில் இருந்து, ஒரு RLC circuitஐ உருவாக்கலாம். |
04:08 | Component instanceகளுக்கிடையே, Acausal connectorகள், interfaceஆக வேலை செய்கின்றன. |
04:15 | அவை, connector classஐ பயன்படுத்தி வரையறுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, மின் componentகளுக்கு, pinகளை, connectorகளாக பயன்படுத்தலாம். |
04:24 | ஒரு electric circuitக்கான உதாரணத்தைsimulate செய்ய முயற்சிக்கும் போது, இதைப் பற்றி மேலும் கற்போம். |
04:30 | Connectorகள், across மற்றும் flow variableகளை கொண்டிருக்கின்றன, மற்றும், அவை equationகளை கொண்டிருக்க முடியாது. |
04:38 | இப்போது, slideல் காட்டப்பட்டுள்ள, இந்த Electric Circuitஐ simulate செய்வோம். |
04:43 | Batteryன் voltage, {VoSin(2pift)} என கொடுக்கப்படுகிறது. இங்கு, Vo, 10 Voltகள், f, 1 Hz, மற்றும், resistance, 5 ohm ஆகும். |
04:59 | முந்தைய slideல் காட்டப்பட்ட electric circuitஐ model செய்ய, Solution Methodologyஐ பார்ப்போம்: எந்த Resistor மற்றும் Voltage Sourceஉம், இரண்டு pinகளை கொண்டிருக்கின்றன என்பதை கவனிக்கவும்: Positive மற்றும்Negative. |
05:14 | அதனால், pin என்று பெயரிடப்பட்ட ஒரு connectorஐ வரையறுக்கவும். |
05:18 | Ground என்று பெயரிடப்பட்ட ஒரு classஐ , pin connectorன் ஒரு instanceஉடன் வரையறுக்கவும். |
05:24 | Resistor என்று பெயரிடப்பட்ட ஒரு classஐ வரையறுக்கவும். |
05:28 | Resistor class, pin connectorன் இரண்டு instanceகளை கொண்டிருக்க வேண்டும்: Positive pin மற்றும்Negative pin. |
05:36 | Resistor classல் நாம் பார்த்தது போல், VoltageSource என்று பெயரிடப்பட்ட ஒரு classஐ , pin connectorன் இரண்டு instanceகளுடன் வரையறுக்கவும். |
05:46 | simpleCircuit என்று பெயரிடப்பட்ட ஒரு classஐ வரையறுக்கவும். SimpleCircuit, Resistor மற்றும்VoltageSourceன் instanceகளை கொண்டிருக்க வேண்டும். |
05:56 | Resistor, ground மற்றும்VoltageSourceன், அந்தந்த pinகளை இணைக்கவும். |
06:02 | தேவையான component modelகள், ஏற்கனவே program செய்யப்பட்டுவிட்டன. |
06:07 | அதனால், நான் Solution Methodologyன், கடைசி இரண்டு படிகளை மட்டும் விளக்குகிறேன். |
06:13 | OMEditக்கு திரும்புகிறேன். Modeling perspectiveக்கு திரும்பிச் செல்லவும். |
06:19 | OMEdit windowஐ நான் வலது பக்கம் நகர்த்துகிறேன். |
06:23 | Libraries Browserல், simpleElectricCircuitpackageஐ விரிவாக்கவும். |
06:29 | பின்வருமாறு பெயரிடப்பட்ட ஐந்து classகளை இந்த package கொண்டிருப்பதை கவனிக்கவும்: pin, Ground, Resistor, Voltage Source மற்றும்circuit. |
06:40 | simpleElectricCircuitஐ டபுள்-க்ளிக் செய்யவும். ClassinstantiationExampleஐ மூடவும். |
06:48 | சிறந்த பார்வைக்கு, OMEdit windowஐ மீண்டும் இடது பக்கம் நகர்த்துகிறேன். |
06:54 | Modelica.SIunits package, simpleElectricCircuit packageல், import செய்யப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
07:02 | அதனால், அந்த packageல் இருக்கின்ற type definitionகளை, அதன் முழு பெயர்களை குறிக்காமல், பயன்படுத்தலாம். |
07:10 | Pin connectorஐ புரிந்துகொள்ள முயற்சிப்போம். சிறிது கீழே scroll செய்யவும். |
07:17 | Pin, connector classஐ பயன்படுத்தி வரையறுக்கப்படுகிறது. |
07:21 | ஒரு pin, தனது சுற்றுச்சூழலுடன், Voltage மற்றும் current variableகளை பரிமாறிக்கொள்கிறது. |
07:27 | Pinல், Potential, vஆல் வரையறுக்கப்படுகிறது. Voltage மற்றும்Current, Modelica libraryன், SIunits packageல், வரையறுக்கப்பட்டுள்ளtypeகள் ஆகும். |
07:40 | ஒரு componentல் இருக்கின்ற voltage, அதன் வழியாக ஒரு current பாய்வதற்கு காரணமாக இருக்கிறது. |
07:44 | அதனால், current ஒரு , flow variable, மற்றும், அது flow keywordஐ பயன்படுத்தி வரையறுக்கப்படுகிறது. |
07:50 | Pin connector ஒரு Icon viewஐயும் கொண்டிருக்கிறது. அது, காட்டப்பட்டுள்ளபடி, annotationகளால் குறிப்பிடப்படுகிறது. |
07:57 | இப்போது, Resistor class.ஐ பற்றி சிறிது விவாதிப்போம். மேலும், சிறிது கீழே scroll செய்யவும். |
08:04 | Solution Methodologyல் விவாதித்தது போல், Resistor class, pin connectorன் இரண்டு instanceகளை கொண்டிருக்கிறது. |
08:12 | p, positive pinஐ குறிக்கிறது, மற்றும், n, negative pinஐ குறிக்கிறது. |
08:18 | இப்போது, OMEditன், drag and drop செயல்பாட்டை பயன்படுத்தி, எப்படி ஒரு classஐ செய்வது என்று உங்களுக்கு காட்டுகிறேன். |
08:26 | அதை விளக்க, Ctrl + Nஐ பயன்படுத்தி, ஒரு புது classஐ திறக்கிறேன். |
08:32 | இந்த class'க்கு, example1' என பெயரிட்டு, Okஐ அழுத்தவும். OMEdit windowஐ வலது பக்கம் நகர்த்தவும். |
08:41 | Class, Text Viewல் திறந்தால், Diagram Viewக்கு செல்லவும். |
08:46 | இப்போது, pin classஐ instantiate செய்கிறேன். |
08:51 | Libraries Browserல், pin iconஐ லெப்ட்-க்ளிக் செய்யவும். |
08:55 | அழுத்திக் கொண்டே, iconஐ , diagram layerக்கு இழுக்கவும். Canvasல் எவ்விடத்திலும் அதை விடவும். |
09:04 | இப்போது, pin classன் ஒரு instanceஐ நான் உருவாக்கிவிட்டோம். |
09:09 | அதை விட்ட பிறகு, காட்டப்பட்டுள்ளபடி, dimensionகள் மற்றும் இடத்தை நீங்கள் மாற்றலாம். |
09:16 | Text Viewல் இந்த class, எப்படி instantiate செய்யப்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம். Text Viewக்கு செல்லவும். |
09:22 | Class pinனின், instantiationக்கான, command, மற்றும், Diagram Viewல், அதன் இடத்தை அடிப்படையாகக் கொண்ட ஒருannotationஐயும் கவனிக்கவும். |
09:33 | அதனால், Diagram Viewல், ஒரு classன், ஒரு instanceஐ உருவாக்குவது, Text Viewல், தானாகவே பிரதிபலிக்கிறது. இப்போது, example1 tabஐ மூடுகிறேன். |
09:45 | நாம் slideகளில் பார்த்த, electric circuitஐ எப்படி model செய்வது என்று கற்போம். |
09:51 | simpleElectricCircuit packageன் ஒரு பகுதியான, Circuit iconஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
09:58 | நமக்கு விருப்பமான circuitஐ , இந்த class, ஏற்கனவே பொறுத்தியுள்ளது. அதை நாம், அதன் Diagram Viewல் காண்கிறோம். அது simulate செய்யப்பட தயாராக உள்ளது. |
10:09 | ஆனால், அதே circuitஐ , ஒரு புது fileலில் நாம் உருவாக்குவோம். |
10:14 | நாம் தற்போது கற்ற drag and drop செயல்பாட்டை, நாம் பயன்படுத்துவோம். |
10:19 | Ctrl + Nஐ அழுத்தவும். இந்து fileக்கு circuit(underscore)construction என்று பெயர் கொடுக்கவும். OKஐ அழுத்தவும். |
10:28 | அது Text Viewல் திறந்தால், Diagram Viewக்கு மாறவும். |
10:32 | Libraries Browserல் இருந்து, VoltageSource iconஐ தேர்ந்தெடுத்து, drag and drop செய்யவும். அதன் dimensionகளை உங்கள் விருப்பத்திற்க்கேற்றவாறு நீங்கள் மாற்றலாம். |
10:43 | இவ்வாறே, Libraries Browserல் இருந்து, Resistor iconஐ தேர்ந்தெடுத்து, drag and drop செய்யவும். |
10:50 | Ground classக்கும் அதேயே செய்யவும். |
10:54 | இப்போது, ஒவ்வொரு componentனின், அந்தந்த pinகளை நாம் இணைக்க வேண்டும். |
11:00 | முதலில், Voltage Sourceன், positive pinஐ , Resistorன், positive pinக்கு இணைப்போம். |
11:07 | Voltage Sourceன், இடது pinனின் மீது, வட்டமிடவும். |
11:11 | தோன்றுகின்றtext, இதுவே positive pin p என சுட்டிக்காட்டுகிறது. |
11:17 | இந்த pinஐ லெப்ட்- க்ளிக் செய்து, cursorஐ , Resistorன் இடது pinக்கு அருகே இழுக்கவும். |
11:24 | Cursorன் தோற்றம், ஒரு arrowல் இருந்து, crossக்கு மாறியவுடன், mouseஐ விடவும். |
11:30 | இவ்வாறே, Resistorன், negative pinஐ , voltage sourceன், negative pinக்கு இணைக்கவும். |
11:38 | Circuit வரைபடத்தில், Groundஉடன் இருக்கின்ற இணைப்புகளை நாம் கூறவில்லை. |
11:44 | ஆனால், Resistor மற்றும் Voltage Sourceன், negative pinகளை, Groundக்கு தனித்தனியாக இணைக்க வேண்டும். |
11:51 | Circuitல் இருக்கின்ற potentialக்கு, இது ஒரு reference pointஐ உறுதிசெய்கிறது. |
11:57 | இப்போது, இந்த class, முடிவடைந்துவிட்டது. Ctrl + Sஐ அழுத்தி, இந்த classஐ சேமிக்கவும். |
12:04 | Simulate பட்டனை க்ளிக் செய்யவும். Pop up windowஐ மூடவும். |
12:10 | Class வெற்றிகரமாகsimulate செய்துவிட்டது. |
12:14 | Variables browserன் சிறந்த பார்வைக்கு, OMEdit windowஐ இடது பக்கம் நகர்த்துகிறேன். |
12:20 | Variables Browserல் இருக்கின்ற, Resistor columnஐ விரிவாக்கி, Irஐ தேர்ந்தெடுக்கவும். |
12:28 | எதிர்பார்த்தபடி, profile, sinusoidalஆக இருப்பதை கவனிக்கவும். |
12:33 | ஏனெனில், Voltage Source, DCக்கு பதிலாக ஒரு AC sourceஆக இருப்பதனால். |
12:38 | அதனால், அதன்component பகுதிகளில் இருந்து, ஒரு modelஐ உருவாக்கி, அதை simulate செய்துள்ளோம். |
12:44 | இங்கு பயன்படுத்தியுள்ள, Resistor மற்றும் Voltage Source classகளைப் பற்றி, அடுத்த டுடோரியலில், மேலும் கற்போம். |
12:52 | Slideகளுக்கு திரும்புகிறேன். |
12:55 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
12:59 | பயிற்சியாக, இரண்டு resistorகளை seriesயிலும், ஒரு Voltage Sourceஉடன் கூடிய, ஒரு electric circuitஐ உருவாக்கவும். |
13:07 | Voltage source மற்றும்Resistor க்கு, simple electric circuit packageல் கொடுக்கப்பட்டுள்ள component modelகளை பயன்படுத்தவும். |
13:15 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்: org /What\_is\_a\_Spoken\_Tutorial. அது, Spoken Tutorial Project ஐ சுருங்க சொல்கிறது. |
13:21 | ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம்.எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
13:26 | இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும். |
13:32 | பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
13:38 | Commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க நாங்கள் உதவுகிறோம். மேலும் விவரங்களுக்கு, பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும். |
13:47 | Spoken Tutorial Projectக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
13:54 | ஆதரவு அளித்த, OpenModelicaவின் வளர்ச்சிக்கு குழுவிற்கு நாங்கள் நன்று செலுத்துகிறோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. |