OpenModelica/C3/Annotations--in-Modelica/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:46, 22 November 2017 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Annotationகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு annotationஐ எப்படி குறிப்பிடுவது, மற்றும், ஒரு recordஐ எப்படி வரையறுப்பது.
00:14 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica 1.9.2ஐ பயன்படுத்துகிறேன்.
00:20 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, பின்வரும் operating systemகளில் எவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
00:26 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, மற்றும் பயிற்சி செய்ய, Modelicaவில், class definition பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:33 எங்கள் வலைதளத்தில் இருக்கின்ற முன்நிபந்தனை டுடோரியல்களை பார்க்கவும்.
00:39 Annotationகள், ஒரு classல், பல இடங்களில் தோன்றலாம்.
00:44 அவற்றை பின்வருவானவற்றிக்கு பயன்படுத்தலாம்: simulation settingகளை மாற்ற, supporting documentationஐ சேர்க்க, மற்றும், ஒரு classக்கு, icon and diagram viewகளை சேர்க்க.
00:56 முந்தைய டுடோரியல்களில், simulation settingகளை மாற்ற, tool barல் இருக்கின்ற, SimulationSetup பட்டனை பயன்படுத்தினோம்.
01:05 பின்வருவனவற்றை மாற்ற, ஒரு model annotationஆன, experimentஐ நாம் பயன்படுத்தலாம்: Start Time , Stop Time ,Tolerance மற்றும்Interval.
01:19 Tolerance மற்றும்Interval பற்றிய விவாதம், இந்த டுடோரியல் தொடருக்கு அப்பாற்பட்டது.
01:25 Experiment annotationனின் syntaxஐ , விளக்குகின்ற ஒரு உதாரணம் இங்கு காட்டப்பட்டுள்ளது.
01:32 இப்போது, bouncingBallWithAnnotations என்ற பெயரைக் கொண்ட ஒரு class மூலமாக, experiment annotationஐ நாம் புரிந்துகொள்வோம்.
01:40 OMEditக்கு மாறுகிறேன்.
01:43 எங்கள் வலைதளத்தில் இருக்கின்ற எல்லா fileகளையும் தரவிறக்கிக் கொள்ளவும்.
01:48 இந்த டுடோரியலுக்கு தேவையான model fileகளை நான் திறக்கிறேன்.
01:54 Ctrl + Oஐ அழுத்தவும்.
01:58 உங்கள் desktopல், தகுந்த இடத்திற்கு சென்று, color.mo மற்றும் bouncingBallWithAnnotationsஐ தேர்ந்தெடுக்கவும்.
02:09 இந்த fileகள், இப்போது OMEditல் திறந்துள்ளன.
02:13 முதலில், bouncingBallWithAnnotationsஐ காண்போம்.
02:18 இந்த model, நாம் முந்தைய டுடோரியல்களில் விவாதித்த, bouncingBall modelன் ஒரு நீட்டிப்பு ஆகும்.
02:25 இந்த model பற்றிய மேலும் தகவல்களுக்கு, முன்நிபந்தனை டுடோரியல்களை பார்க்கவும்.
02:31 Libraries Browserல், bouncingBallWithAnnotationsஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
02:37 சிறந்த பார்வைக்கு, OMEdit windowஐ இடது பக்கம் நகர்த்துகிறேன்.
02:42 Class, Icon/Diagram Viewல் திறந்தால், Text Viewக்கு மாறவும்.
02:48 Model, இப்போது, Text Viewல் திறந்துவிட்டது.
02:52 நான் சிறிது கீழே scroll செய்கிறேன்.
02:55 இங்கு, startTime0க்கும், stopTime5 unitகளுக்கும் set செய்ய, experiment annotationஐ நாம் பயன்படுத்துகிறோம்.
03:04 experiment annotation, Simulation Setup toolboxன் அதே நோக்கத்தை பூர்த்தி செய்கிறது.
03:11 Tool barல் இருக்கின்ற, Simulation Setup பட்டனை க்ளிக் செய்யவும்.
03:15 அதே stopTime மற்றும் startTime fieldகளை இங்கு நீங்கள் காணலாம்.
03:21 experiment annotationஐ பயன்படுத்தி, இந்த fieldகளின் மதிப்புகளை நாம் மாற்றினோம்.
03:27 இப்போது modelஐ simulate செய்வோம்.
03:30 Simulate பட்டனை க்ளிக் செய்யவும்.
03:33 Variables Browserல், hஐ தேர்ந்தெடுக்கவும்.
03:37 Simulation இடைவெளி, 5 unitகளாக இருப்பதை கவனிக்கவும்.
03:42 இது, experiment annotationனின், startTime மற்றும் ‘StopTime fieldகளினால் ஏற்பட்டதாகும்.
03:48 இப்போது, hஐ de-select செய்து, முடிவை நீக்கவும்.
03:54 கீழ் வலது பக்கத்தில் இருக்கின்ற, Modeling பட்டனை க்ளிக் செய்யவும்.
03:58 இப்போது, annotationகளை பயன்படுத்தி, ஒரு modelக்கு documentationஐ சேர்ப்பது பற்றி மேலும் கற்போம்.
04:06 முன்னிலைப்படுத்தப்பட்டtext , Documentation annotationல் தோன்றுகிறது.
04:11 இப்போது, Documentation annotationனின் ஒரு applicationஐ காட்டுகிறேன்.
04:17 Modeling பகுதியின், மேல் இடது பக்கத்திற்கு செல்லவும்.
04:21 நான்காவது பாட்டனான, Documentation Viewஐ க்ளிக் செய்யவும்.
04:24 Documentation annotationல் டைப் செய்த textஐ , browserல் நீங்கள் காணலாம்.
04:31 Documentation தேவைப்படுகின்ற பெரிய modelகளுக்கு, பயனுள்ள தகவலை சேர்க்க, இந்த செயல்பாடு அனுமதிக்கிறது.
04:40 Documentation Browserஐ மூடவும். Slideகளுக்கு திரும்பச் செல்கிறேன்.
04:46 Record, ஒரு record data structureஐ வரையறுக்க பயன்படுத்தப்படுகின்ற ஒரு தனித்திறன் கொண்ட class ஆகும்.
04:52 உதாரணத்திற்கு, வங்கி கணக்குகள், நபருடைய பெயர், வயது போன்றவற்றை fieldகளாக recordகளில் கொண்டிருக்கும்.
05:01 Recordகள் variableகளை மட்டுமே கொண்டிருக்க முடியும். அவை equationகளை கொண்டிருக்காது.
05:08 Person என்று பெயரிடப்பட்ட ஒரு உதாரண record இங்கு காட்டப்பட்டுள்ளது.
05:13 அது, பெயர் மற்றும் வயதை அதன் fieldகளாக கொண்டிருக்கிறது.
05:17 Recordன் வரையறுப்பை விளக்க, OMEditக்கு மாறுகிறேன்.
05:23 OMEdit windowஐ வலது பக்கம் நகர்த்துகிறேன்.
05:27 Color என்று பெயரிடப்பட்டfileஐ இப்போது பயன்படுத்துவோம்.
05:31 அதை Textviewல் திறக்க, Libraries Browserல் இருக்கின்ற color iconஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
05:39 இந்த record, red, blue மற்றும் green என்று பெயரிடப்பட்ட மூன்று variableகளை கொண்டிருக்கிறது.
05:47 Simulate பட்டன், toolbar ல் தோன்றாதிருப்பதை கவனிக்கவும்.
05:53 Recordகள் simulate செய்யப்படவேண்டுவன அல்ல என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
05:58 இப்போது, slideகளுக்கு திரும்புகிறேன்.
06:01 Annotation elementகளை recordகளாக புரிந்துகொள்வது எளிதாகும்.
06:07 உதாரணத்திற்கு, StartTime, StopTime, Interval மற்றும்Toleranceஐ அதன் fieldகளாக கொண்ட ஒரு recordஆக experiment annotationஐ கருதலாம்.
06:19 இவ்வாறே graphical elementகளையும் விளக்கலாம்.
06:23 Icon and diagram viewகளை பற்றி விவாதிக்கும் போது, annotationகளை recordகளாக விளக்குவதை பற்றி மேலும் புரிந்து கொள்ளலாம்.
06:33 பயிற்சியாக,
06:35 bouncingBallWithAnnotations classன் simulationக்கு, stop timeஐ , 10ல் இருந்து 20 unitகளுக்கு மாற்றவும்.
06:42 இதற்கு, experiment annotationஐ பயன்படுத்தவும்.
06:47 இந்த மாற்றத்தை செய்த பிறகு, classஐ simulate செய்யவும்.
06:50 h vs timeஐ plot செய்து, simulation stop time ல் மாற்றத்தை கவனிக்கவும்.
06:57 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
07:00 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
07:03 அது, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
07:07 Spoken tutorialsஐ பயன்படுத்தி நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம்.
07:11 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
07:17 இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும்.
07:24 பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம்.
07:29 பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும்.
07:32 Commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க நாங்கள் உதவுகிறோம்.
07:38 இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
07:43 Spoken Tutorial Projectக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
07:50 ஆதரவு அளித்த, OpenModelicaவின் வளர்ச்சிக்கு குழுவிற்கு நாங்கள் நன்று செலுத்துகிறோம்.
07:56 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree, Venuspriya