Single-Board-Heater-System/C2/Accessing-SBHS-through-Scilab-on-Windows/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 21:07, 30 October 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 SBHSஐ, Windowsல், Scilab மூலம் அணுகுவது” குறித்த இந்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:07 SBHS , Single Board Heater Systemன் சுருக்கமாகும்.
00:10 இந்த ஸ்போகன் டுடோரியலில், நாம் கற்கப்போவது: Scilab மற்றும் SBHSக்கு இடையேserial தொடர்பை அமைப்பது,
00:17 ஒரு Step Test சோதனையை செய்வது.
00:20 இந்த டுடோரியலுக்கு, நான், Windows 7 operating system, மற்றும், Scilab 5.3.3ஐ பயன்படுத்துகிறேன்.
00:28 www.scilab.orgல் இருந்து, நீங்கள் Scilabஐ download செய்யலாம்.
00:34 Scilabஐ நிறுவ, "Scilab" ஸ்போகன் டுடோரியல் தொடரை, காணவும்.
00:44 இந்த டுடோரியலை தொடர்வதற்கு முன்பு, Introduction to Xcos, Connecting SBHS to computer, ஆகியவற்றை நீங்கள் காண வேண்டும்.
00:52 இதற்கான டுடோரியல்கள், spoken tutorial வலைத்தளத்தில், இந்த தொடரில் உள்ளன.
00:59 தொடங்குவதற்கு, நாம், Scilab Step Test codeஐ download செய்ய வேண்டும். அதனால், ஒரு web browserஐ திறப்போம்.
01:06 Address barல் டைப் செய்க: os-hardware.in. Project SBHSஐ க்ளிக் செய்து, பின், Downloads இணைப்பை க்ளிக் செய்யவும்.
01:19 SBHS Local Code sectionன் கீழ் இருக்கும் fileஐ download செய்து, அந்த fileஐ desktopல் சேமிக்கவும்.
01:29 Download செய்யப்பட்ட file, zip formatல் இருப்பதை கவனிக்கவும்.
01:34 இந்த fileஐ ரைட்- க்ளிக் செய்து, Extract hereஐ தேர்வு செய்யவும்.
01:38 Scilab codes local என்ற ஒரு folder உருவாக்கப்படும்.
01:43 நமது சோதனையை தொடங்க நாம் தயாராக உள்ளோம்.
01:47 உங்கள் கணிணி , SBHSஉடன் இணைக்கப்பட்டு, power ON செய்யப்பட்டு உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
01:53 முதலில், SBHSக்கு ஒதுக்கப்பட்ட communication port எண்ணை சரி பார்ப்போம்.
01:58 இதை செய்ய, My Computer ஐ ரைட்- க்ளிக் செய்து, Propertiesஐ க்ளிக் செய்யவும்.
02:05 ஒரு window திறக்கும். இந்த windowவில், Device Managerஐ க்ளிக் செய்யவும்.
02:11 Windows 7, பார்ப்பதற்கும், உணர்வதற்கும், மற்ற Windows பதிப்புகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும் என்பதை குறித்துக் கொள்ளவும்.
02:19 உங்கள் Windows பதிப்புக்கு ஏற்றவாறு, நான் செயல்விளக்கும் படிகளை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.
02:28 Device manager உங்கள் கணிணியில் உள்ள, hardware கருவிகளின் பட்டியலை காட்டும்.
02:33 இதில், Ports (COM & LPT) option கண்டறியவும். அதை திறக்க, டபுள்-க்ளிக் செய்யவும்.
02:42 நீங்கள், RS232 cableஐ இணத்திருந்தால், communications Port COM1 ஐ பார்க்கவும். இல்லையெனில் USB Serial Portஐ பார்க்கவும்.
02:52 RS232 இணைப்பிற்கு, port எண், பெரும்பாலும், COM1ஆக இருக்கும்.
02:59 USB இணைப்பிற்கு, அது, வேறொரு எண்ணாக மாறலாம்.
03:03 அதற்கான COM எண்ணை குறித்துக் கொள்ளவும். எனக்கு, அது COM14 ஆகும்.
03:09 இப்போது, USB cableஐ இணைத்த பிறகு கிடைக்கும் COM port எண், சில நேரங்களில், ஒரு இரண்டு- digit எண்ணாக இருக்கும்.
03:17 உங்கள் boardஐயும், கணிணியையும் இணைக்கும் serial tool boxஆல், ஒற்றை-digit port எண்ணை மட்டுமே கையாள முடியும்.
03:24 அதனால், உங்கள் COM port numberஐ மாற்றுவது அவசியம்.
03:28 COM port எண்ணை, மாற்றுவதற்கான செயல்முறையை நான் உங்களுக்கு காட்டுகிறேன்.
03:31 அந்த குறிப்பிட்ட COM portஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
03:34 Port Settings tabஐ க்ளிக் செய்து, பின் Advancedஐ க்ளிக் செய்யவும்.
03:40 COM port number drop-down menuவில், வேறு ஏதேனும் ஒற்றை-digit எண்ணுக்கு பதிலாக, port எண்ணை தேர்வு செய்யவும்.
03:46 எல்லா portகளும் தற்போது உபயோகத்தில் உள்ளன என்று, Windows காட்டலாம், ஆனால், உண்மையில், அது பழைய status ஆகும்.
03:55 அதனால், வேறு எந்த USB கருவியும் இணைக்கப்படவில்லை எனில், நீங்கள் வலுக்கட்டாயமாக ஒரு குறிப்பிட்ட , COM port எண்ணை பயன்படுத்தலாம்.
04:03 இந்த அமைப்புகளை செயலாக்க, OKஐ க்ளிக் செய்யவும்.
04:07 Properties window ஐ மூட, OKஐ க்ளிக் செய்யவும்.
04:11 Device Manager, மற்றும் மீதமிருக்கும் windowக்களை மூடவும்.
04:14 இப்போது, SBHSஐ பயன்படுத்தி, ஒரு Step Test சோதனையை செய்ய, Scilabஐ configure செய்யக் கற்போம்.
04:23 நாம் desktopல் சேமித்த Scilab local codes folderஐ திறக்கவும்.
04:28 Step test folderஐ திறக்கவும்.
04:31 Ser underscore init dot sce fileஐ கண்டறிந்து, அதை டபுள்-க்ளிக் செய்யவும்.
04:37 இது Scilabஐ தானாகவே நிறுவி, fileஐயும் Scilab editorல் திறக்கும்.
04:43 அது fileஐ திறக்கவில்லை எனில், File menuஐ, க்ளிக் செய்து, பின் Openஐ க்ளிக் செய்யவும்.
04:50 Ser underscore init fileஐ தேர்வு செய்து, பின் Openஐ க்ளிக் செய்யவும்.
04:57 Scilab workspaceக்கு மாறி, பின்வரும் commandகளைexecute செய்யவும்.
05:03 டைப் செய்க: get d space dot dot slash common underscore files , பின் Enter keyஐ அழுத்தவும்.
05:10 பின், டைப் செய்க: exec space dot dot slash common underscore files slash loader dot sce, பின் Enterஐ அழுத்தவும்.
05:21 serial port toolbox. load செய்யப்பட்டுவிட்டது என்ற messageஐ நீங்கள் காணலாம்.
05:26 Scilab editorக்கு மாறவும்.
05:28 Ser underscore init dot sce fileலில், variable port2ன் மதிப்பை கேட்கும் வரியை கண்டறியவும்.
05:36 port2 variableன் மதிப்புக்கு பதிலாக, அடையாளம் காணப்பட்ட, COM port numberஐ வைக்க வேண்டும்.
05:44 Port எண்ணை, நீங்கள் அடையாளம் கண்ட ஒன்றிற்கோ அல்லது, நீங்கள் சிறிது நிமிடங்களுக்கு முன் set செய்த எண்ணிற்கோ மாற்றவும்.
05:52 இது ஒற்றை quoteகளினுள் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
05:55 இந்த fileன் contentல், எந்த மாற்றமும் செய்ய வேண்டாம்.
05:59 இப்போது, fileஐ சேமிக்கவும்.
06:01 இந்த fileஐ செயல்படுத்த, menu barல், Execute பட்டனை க்ளிக் செய்யவும்.
06:06 Scilab workspace ல், "COM Port Opened" என்ற message உங்களுக்கு கிடைக்கும்.
06:12 எனினும், உங்களுக்கு ஒரு error messageஉம் கிடைக்கலாம்.
06:16 ஒரு வழக்கமானerrorஐ எப்படி கையாள்வது என்று, நான் slideகளை பயன்படுத்தி விளக்குகிறேன்.
06:21 Slideகளுக்கு திரும்புகிறேன்.
06:23 ஒரு வேளை, TCL/TK தொடர்பான error தெரிந்தால், SBHSஉடன் இணைக்கப்பட்டUSB cableஐ மீண்டும் இணைத்து, இந்த fileஐ மீண்டும் செயல்படுத்தவும்.
06:33 COM port எண், மாறி விட்டதா என்று ஒருமுறை சரி பார்க்கவும்.
06:37 அப்படியும் வேலை செய்யவில்லை எனில், Scilabஐ restart செய்து, செயல்முறையை மீண்டும் செய்யவும்.
06:42 Scilab workspace ல், பின்வரும் commandகளை செயல்படுத்தவும்.
06:46 டைப் செய்க: exec space step underscore test dot sci, பின் Enterஐ அழுத்தவும்.
06:54 பின், டைப் செய்க: xcos space step underscore test dot xcos, பின் Enterஐ அழுத்தவும்.
07:03 இது, Step Test சோதனைக்கு செய்யப்பட்ட, xcos interface ஐ செயல்படுத்தும்.
07:09 Blockகளை டபுள்-க்ளிக் செய்து, block parameterகளை நீங்கள் மாற்றலாம்.
07:13 முதல் முறை, parameterகளை நீங்கள் மாற்றாமல் இருக்க பரிந்துரைக்கப்படுகிறது.
07:18 Xcos windowவின் menu barல், Simulation optionஐ க்ளிக் செய்து, பின், Start optionஐ தேர்ந்தெடுக்கவும்.
07:27 Xcos fileஐ, வெற்றிகரமாக நாம் செயல்படுத்திய பிறகு, மூன்று graphகளுடன் ஒரு plot window, காட்டப்படும்.
07:35 முதல் graph, Heater in percentage பற்றியதாகவும்,
07:40 இரண்டாவது graph, Fan in percentage பற்றியதாகவும்,
07:44 மூன்றாவது graph, Temperature in degree Celsius பற்றியதாகவும் இருக்கும்.
07:49 நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. நான் slideகளுக்கு திரும்புகிறேன்.
07:54 Imageல் காட்டப்பட்டுள்ளபடி, SBHS displayல், Fan, Heater மற்றும் Temperature காட்டப்படுகின்றன.
08:01 Graphல் காட்டப்படும் மதிப்புகள், SBHS displayல் காட்டப்படுவதற்கு ஒத்ததாக இருக்க வேண்டும் என்பதை குறித்துக் கொள்ளவும்.
08:08 அப்படி இல்லை எனில், Scilab, SBHSஉடன் தொடர்பு கொள்ளவில்லை என்று பொருள்.
08:14 Communication LEDக்கள், அவ்வப் போது flash செய்கின்றனவா என்றும் நீங்கள் சரி பார்க்கலாம்.
08:19 இந்தImageல் காட்டப்பட்டுள்ளபடி, இந்த LEDக்களை, SBHS ல், USB connectorக்கு அடுத்ததாக காணலாம்.
08:26 இப்போது, இது ஒரு உண்மையான சோதனை, மற்றும் முடிவுகளைக் கொடுக்க, இது,சிறிது நேரம் எடுக்கும்.
08:30 இப்போது, சிறிது நேரத்திற்கு நான் பதிவை இடைநிறுத்துகிறேன்.
08:35 போதுமான நேரத்திற்கு, சோதனையை run செய்த பிறகு, இறுதி graphகள் இங்கு காட்டப்பட்டுள்ளபடி இருக்கும்.
08:41 Heat மதிப்பில், step change க்கு, temperature, பதிலளித்துள்ளதை நாம் காணலாம்.
08:47 நாம் செய்த பெரும்பாலான செயல்முறைகளை, ஒரு fileஐ இயக்கியே முடிக்கலாம்.
08:53 அந்த fileஐ நான் உங்களுக்கு காட்டுகிறேன். Step test folderக்கு மாறவும்.
08:58 Scilabஐ நிறுவுவதில் இருந்து, xcosஐ திறக்கும் வரையுள்ள படிகளை, start.sce fileஐ பயன்படுத்தி, இயக்கலாம்.
09:07 Slideகளுக்கு திரும்புகிறேன்.
09:10 செயல்முறையை நீங்கள் நன்கு புரிந்து கொண்ட பிறகே, start dot sce fileஐ பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
09:17 இந்த file, ser underscore init dot sce fileலில் இருக்கின்ற port எண் சரியானது என்று அனுமானித்து கொள்கிறது.
09:26 இப்போது, சோதனையை நிறுத்த, Xcos windowவின் menu barல் இருக்கும், Stop optionஐ க்ளிக் செய்யவும்.
09:35 சோதனையை முடித்த பிறகு, SBHSஐ reset செய்வோம்.
09:40 இதை விளக்க, மீண்டும் Slideகளுக்கு திரும்புகிறேன்.
09:44 படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, SBHSல் ஒரு Reset push பட்டன் இருக்கிறது.
09:49 Reset செய்ய, Reset பட்டனை1 அல்லது 2 நொடிகளுக்கு அழுத்தி, பின் விடவும்.
09:55 Reset operation, Heatஐ, 0%ஆகவும், Fanஐ, 100%.ஆகவும் செய்கிறது.
10:00 எனினும், LCDல், இரண்டிற்கும், 0 காட்டப்படுகிறது.
10:05 இந்த சோதனைக்கான, data file, Step test folderல் சேமிக்கப்படுகிறது.
10:10 இந்த fileஐ நான் உங்களுக்கு காட்டுகிறேன்.
10:13 இந்த data fileன் பெயர், ஒரு time stampன் formatல் உள்ளது.
10:17 Data fileன் பெயரை, Year Month Date Hours Minutes Seconds dot txt என read செய்யவும்.
10:27 Data fileஐ திறந்து, அதன் contentஐ நான் உங்களுக்கு காட்டுகிறேன்.
10:31 ஒவ்வொரு மாதிரிக்கும், heat, fan மற்றும் temperature மதிப்புகளை அது கொண்டிருக்கும்.
10:36 அதனால், இந்த fileஐ, பகுப்பாய்வு நோக்கத்திற்கு பயன்படுத்தலாம்.
10:40 இப்போது, சுருங்கச் சொல்ல,
10:42 இந்த டுடோரியலில், Scilab மற்றும் SBHSக்கு இடையே serial communicationஐ அமைக்கவும்
10:48 ஒரு Step Test சோதனையை செய்யவும் கற்றோம்.
10:52 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
10:58 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
11:04 மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:08 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
11:13 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
11:17 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து சண்முகப்பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Jayashree, Priyacst