Single-Board-Heater-System/C2/Introduction-to-Single-Board-Heater-System/Tamil
From Script | Spoken-Tutorial
| |
00:01 | “Single Board Heater Systemக்கு அறிமுகம்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், SBHSன் முக்கிய அம்சங்கள், |
00:11 | SBHSன் block diagramன் விளக்கம் பற்றி காண்போம். |
00:14 | Single-board Heater System, SBHS என சுருக்கப்படுகிறது. |
00:19 | இது ஒரு micro-controllerஐ அடிப்படையாகக் கொண்ட, lab-in-a-box வெப்பநிலை கட்டுப்படுத்தும் அமைப்பாகும். |
00:24 | இது, இளங்கலை மற்றும் முதுகலை control பாடங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட அமைப்பாகும். |
00:32 | மிண்ணனுவியலின் கருத்து்களை சுற்றியே இது அமைந்திருக்கிறது. |
00::36 | Serial port communication |
00:38 | Micro-controller programming |
00:40 | Data acquisition interface |
00:42 | Control theory. |
00:44 | இதன் வளர்ச்சிக்கு, அடிப்படை அடித்தளமாக, இந்த பாடங்கள் அமைகின்றன. |
00:50 | அடுத்து, SBHSன் முக்கிய அம்சங்கள் பற்றி பேசுவோம். |
00:55 | SBHS, அதன் hardware வடிவமைப்பு மற்றும் codeகள், open sourceஆக வெளியிடப்பட்ட ஒரு 3000 ரூபாய் மதிப்புள்ள கருவி ஆகும். |
01:03 | ஆனால், கொள்முதல் செய்யும் போது, அதன் உண்மையான விலை மாறலாம் என்பதை கவனிக்கவும். |
01:08 | SBHSஐ interface செய்ய, ஒரு open source software பயன்படுத்தப்படுகிறது. |
01:12 | மேலும் விவரங்களுக்கு, sbhs dot os hyphen hardware dot in ஐ பார்க்கவும். |
01:19 | மேலும், சுமார் 1 நிமிடம் கூடிய, ஒரு சிறிய time constantஐ இது கொண்டிருக்கிறது. |
01:24 | அதனால், ஒருவர், 10 நிமிடத்திற்குள் யதார்த்தமான சோதனையை செய்யலாம். |
01:29 | இந்த அமைப்பை, Virtual labs projectன் கீழ், தொலைவாகவும் அணுகலாம். |
01:35 | ஒருவர், அதனை தொலைவாக அணுகி, அதனை புரிந்து கொள்ளலாம். |
01:38 | பின்னர், user அதனை வாங்கி அல்லது assemble செய்து, அதனை ஒரு labஆக, கல்லூரியிலோ அல்லது வீட்டிலோ அமைக்கலாம். |
01:46 | இந்த figure, Single Board Heater Systemன் படத்தை காட்டுகிறது. |
01:50 | 12 Volt regulated DC மின் வழங்கலை உருவாக்க, ஒரு SMPSஐயும் |
01:56 | இந்த உலோக துணையின் கீழ், ஒரு உலோக blade மற்றும் ஒரு heater coilஐயும் |
02:02 | ஒரு கணணி மின்விசிறி, ஒரு display, |
02:04 | USB மற்றும் RS232 portகளையும் இது கொண்டுள்ளது. |
02:08 | இப்போது, SBHSன் block diagramஐ காண்போம். |
02:11 | இந்த figure, SBHSன் block diagramஐ காட்டுகிறது. |
02:14 | அது, power supply, |
02:17 | 8-bit micro-controller, |
02:19 | display, fan, |
02:21 | Heater Assembly, temperature sensor, |
02:25 | instrumentation amplifier மற்றும் associated circuitry, |
02:29 | ISP, serial மற்றும் USB portகளை கொண்டுள்ளது. |
02:33 | இப்போது, SBHSல் உள்ள பல்வேறு blockகளின் சுருக்கமான விளக்கத்தை காண்போம். |
02:39 | முதலில், power Supplyஐ காண்போம். |
02:42 | மின் வழங்கல், அடிப்படையில், ஒரு 12V 400 watt SMPS ஆகும். |
02:47 | இந்த 12V வழங்கல், நேராக பயன்படுத்தப்படுகிறது, ஆனால், பெரும்பாலான circuitryக்கு, 15V வழங்கல் தேவைப்படுகிறது. |
02:54 | அதனால், தேவையான போது, தனித்தனி voltage regulatorகள் பயன்படுத்தப்படுகின்றன. |
02:59 | மேலும், மின் வழங்கலின் ஏற்ற இறக்கங்களினால் ஏற்படும் தெளிவற்ற வெப்பநிலை readingகளை தவிர்க்க, systemகள் மற்றும் sensorகளுக்கான voltage regulatorகள், தனித்தனியே வைக்கப்படுகின்றன. |
03:09 | அடுத்தது Micro-controller. |
03:11 | ஒரு 8-bit ATmega16 micro-controller பயன்படுத்தப்படுகிறது. |
03:15 | Micro-controller, ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. |
03:19 | SBHSல் இருக்கும் ஒவ்வொரு தனி hardwareஐயும், நேராகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்படுத்துகிறது. |
03:25 | இவை போன்ற பல்வேறு பணிகளை இது செயல்படுத்துகிறது, கணிணி மற்றும் SBHSக்கு இடையே தொடர்பை அமைப்பது |
03:33 | heater coil வழியாக செல்லும் மின்சாரத்தின் அளவை கட்டுப்படுத்துவது |
03:37 | fanன் வேகத்தை கட்டுப்படுத்துவது |
03:39 | வெப்பநிலையின் மதிப்பை read செய்வது |
03:42 | parameter மதிப்புகளை காட்டுவது, மற்றும், மற்ற பல்வேறு தேவையான operationகள். |
03:47 | அடுத்து வருவது, heater மற்றும் fan. |
03:50 | ஒரு nichrome wire coilல் இருந்து, 3.5 mm தள்ளி வைக்கப்பட்ட ஒரு உலோக தட்டை, heater assembly கொண்டிருக்கிறது. |
03:58 | மின்சாரம் coil வழியாக செல்லும் போது, coil சூடாகிறது. |
04:02 | இந்த வெப்பம், convention வழியாக உலோக தட்டுக்கு பரிமாற்றப்படுவதால், வெப்பநிலை அதிகரிக்கிறது. |
04:08 | ஒரு சிறிய வழக்கமான கணிணி மின்விசிறி பயன்படுத்தப்படுகிறது. |
04:12 | அது, சூடாக்கப்பட்ட உலோக தட்டை குளிர வைக்க பயன்படுத்தப்படுகிறது. |
04:15 | சில முயற்சி மற்றும் சோதனை காரணங்களால், அது heaterக்கு கீழே வைக்கப்படுகிறது. |
04:20 | அடுத்தது Driver block. |
04:23 | இது, fan மற்றும் heaterக்கு கொண்டு சேர்க்கப்படும் powerன் அளவை வேறுபடுத்தும் ஒரு கருவி ஆகும். |
04:29 | MOSFETSகளும் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. |
04:32 | Micro-controller கொடுக்கின்ற commandகளின் படி, MOSFETSகள் operate செய்யப்படுகின்றன. |
04:37 | இந்த MOSFETSகள், ஏதோ ஒரு PWM frequencyல், switch செய்யப்படுகின்றன. |
04:42 | இப்போது, Temperature sensor பற்றி பேசுவோம். |
04:45 | AD590, சூடாக்கப்பட்டplateன் வெப்பநிலையை உணர பயன்படும் Temperature sensor ஆகும். |
04:51 | இந்த sensorன் output, micro ampere per kelvinல் இருக்கும். |
04:56 | Operating வெப்பநிலை, -55ல் இருந்து, 150 degree Celsius வரை இருக்கும். |
05:02 | மேலும், இதற்கு, linearization செயல்முறை எதுவும் தேவையில்லை. |
05:07 | அடுத்ததாக, Instrumentation amplifierஐ காண்போம். |
05:11 | AD590ஆல் உருவாக்கப்பட்ட signalன் signal conditioningக்கு, Instrumentation amplifier பயன்படுத்தப்படுகிறது. |
05:18 | Temperature sensorக்கு அது, நல்ல input impedanceஐயும் தருகிறது. |
05:23 | அதனால், sensorஆல் உருவாக்கப்பட்ட signal, signal conditioningன் போது, மெலிப்பிடப்படுவதில்லை. |
05:30 | அடுத்தது, Display மற்றும் Indicators block. |
05:33 | Display, ஒரு 16x2 LCD displayஐ இது கொண்டிருக்கிறது. |
05:37 | ஒவ்வொரு வரியிலும் 16 characterகளை கொண்ட, இரண்டு வரிகளை காட்டும் திறன் கொண்டது display என்பது இதன் பொருள். |
05:44 | அதற்கு சொந்த in-built controller இருப்பதால், தனி controller தேவையில்லை. |
05:50 | Temperature, fan, heater மற்றும் machine ID (MID) போன்ற பல்வேறுparameterகளை காட்ட, இது பயன்படுகிறது. |
05:56 | இது 4-bit modeல் operate செய்யப்படுகிறது. |
05:59 | Indicators, பல்வேறு on-board LEDக்களை கொண்டிருக்கும். |
06:04 | அடுத்து, Serial Voltage Level Converter blockஐ காண்போம். |
06:09 | Signalகளை, serialல் இருந்து, TTLக்கும் மற்றும் அதன் எதிர்மறை மாற்றத்திற்கும், இது பயன்படுகிறது. |
06:15 | அடுத்தது, USB to Serial Converter block. |
06:19 | Signalகளை, USBல் இருந்து, serialக்கும் மற்றும் அதன் எதிர்மறை மாற்றத்திற்கும், இது பயன்படுகிறது. |
06:24 | அடுத்து வருவது, USB மற்றும் RS232 blockகள். |
06:28 | இது, USB மற்றும் RS232 cableஐ இணைக்க பயன்படுகிறது. |
06:33 | கடைசியாக, ISP blockஐ காண்போம். |
06:36 | ISP என்றால், "In-System Programming" என்று பொருள். |
06:39 | அது ஒரு 10 pin male connector ஆகும். |
06:42 | இதை வைத்து, முறையான programming deviceன் உதவியுடன், micro-controllerஐ நாம் program செய்ய முடியும். |
06:48 | “Single Board Heater Systemக்கு அறிமுகம்” குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். |
06:54 | சுருங்கச் சொல்ல, |
06:56 | இந்த டுடோரியலில், SBHSன், முக்கிய அம்சங்கள், மற்றும் அதன்block diagramன் விளக்கத்தை பார்த்தோம். |
07:03 | இதில் சுருக்கமாக விளக்கப்பட்ட பல்வேறு blockகள்:Power Supply, |
07:07 | micro-controller, heater மற்றும் fan, |
07:09 | driver, temperature sensor, |
07:11 | instrumentation amplifier, display, |
07:14 | USB மற்றும் RS232 portகள், ISP. |
07:19 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
07:22 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
07:25 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
07:29 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
07:34 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
07:38 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
07:45 | Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
07:49 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
07:56 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:[1]. |
08:08 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. |