LibreOffice-Suite-Base/C3/Create-simple-queries-in-SQL-View/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:02 | LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு |
00:06 | இந்த tutorialலில் நாம் கற்க போவது |
00:09 | SQL View ல் எளிய query க்களை உருவாக்குதல், எளிய SQL ஐ எழுதுதல் |
00:16 | SELECT, FROM , மற்றும் WHERE clause களை பயன்படுத்துதல் |
00:20 | fields மற்றும் table களுக்கு பெயரிட upper, lower, அல்லது mixed case களை தேர்ந்தெடுத்தல் |
00;27 | SQL View ல் query க்களை உருவாக்க Base ஐ பயன்படுத்துமுன் LibreOffice Base பற்றி பார்க்கலாம் |
00:35 | Base, HSQL database engine ல் இயங்குகிறது |
00:41 | இது Java வில் எழுதப்பட்ட ஒரு open source database engine software. HSQLDB மீதான மேலும் தகவல்களுக்கு http://hsqldb.org க்கு செல்லவும் |
01:02 | சரி, இப்போது SQL ஐ கற்கலாம் |
01:06 | SQL ன் விரிவு Structured Query Language. இது databases ஐ அணுகுதலுக்கும் கையாளுதலுக்குமான ஒரு நிலையான language. |
01:17 | இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ANSI standard. |
01:23 | அதனால் இது பல்வேறு Database Management Systems அல்லது DBMS ல் பயன்படுத்தப்படுகிறது |
01;31 | சில உதாரணங்கள்: நம் LibreOffice Base, MySQL, Microsoft SQL Server, Microsoft Access, Oracle, மற்றும் DB2. |
01:47 | database ல் இருந்து data ஐ பெறுவது SQL ன் மிகப் பொதுவான பயன்பாடு. database க்கு query செய்தல் எனவும் இது அறியப்படுகிறது |
01:58 | SQL, data ஐ database ல் உள்நுழைக்கவும், data ஐ update செய்யவும், database லிருந்து data ஐ நீக்கவும் பயனாகிறது |
02:09 | இவையனைத்தையும் Base ஐப் பயன்படுத்தி பயனருக்கு ஏற்ற wizards மற்றும் designing windows மூலம் நம் முன் tutorialகளில் செய்தோம். |
02:22 | அடிப்படை query language ஐ கற்பது database ஐ query செய்ய நமக்கு அதிக நெகிழ்வையும் திறனையும் கொடுக்கிறது. data ஐ மாற்றியமைக்க மட்டுமல்லாது database மற்றும் table structure களையும் மாற்ற SQL பயன்படுகிறது |
02:43 | நம் tutorial, இன்னும் SQL முழுவதையும் முடிக்கவில்லை, இங்கே சில பயனுள்ள tutorials மற்றும் அவற்றின் websites. |
02:59 | HSQLDB க்கு உள்ள தனி பயனாளர் கையேட்டை இணையத்தில் பார்க்க முடியும் அல்லது உங்கள் கணினிக்கு PDF file ஆக தரவிறக்கம் செய்து சேமிக்கலாம் |
03:14 | சரி, இப்போது சில SQL ஐ கற்போம். நம் பிரபல Library database உதாரணத்தை திறக்கலாம். |
03:23 | நம் Library database ஐ திறக்கலாம். இடப்பக்க panel ல் Queries list ஐ சொடுக்கலாம். |
03:34 | பின் ‘Create Query in SQL View’ ல் சொடுக்கலாம். Query Design என்ற தலைப்புடன் ஒரு காலி window ஐ பார்க்கிறோம் |
03:46 | இங்குதான் SQL ல் நம் query க்களில் type செய்வோம் |
03:51 | நம் முதல் எளிய query ஐ எழுதுவோம். அது: library ன் மொத்த புத்தகங்களின் தகவலைப் பெற. |
04:02 | எந்த தகவலைப் பெறவும் ஒரு SELECT keyword ஐ பயன்படுத்த வேண்டும். அதனால் நம் query ஐ இப்படி எழுதலாம் |
04:10 | SELECT * FROM Books. |
04:15 | இங்கு Books என்பது table பெயர். books ல் B capital என்பதைக் கவனிக்கவும் |
04:23 | நாம் முன்னே பயன்படுத்திய table அல்லது column பெயர்களை உண்மையில் பின்தொடர்வோம் |
04:29 | * என்பது ஒரு wild card. இங்கே இது Books table ல் இருந்து அனைத்து columns அல்லது fields ஐ பெறு என பொருள் |
04:39 | இப்போது இதை இயக்கலாம். Edit menu ல் Run Query ஐ சொடுக்கவும் |
04;48 | books ன் அனைத்து record களின் பட்டியலுடன் ஒரு top panel ஐ காணலாம். |
04:53 | நாம் எழுதும் இந்த query அல்லது மற்ற query ஐ விரிவான பெயர்கள் கொடுத்து சேமிக்கலாம் |
05:00 | இது நம் முதல் எளிய query! இங்கே சில குறிப்புகள்: |
05:06 | HSQLDB ன் tables மற்றும் column பெயர்கள் போன்ற Database Object பெயர்கள் case sensitive ஆனவை |
05:17 | அதாவது Table பெயர் Capital B உடன் “Books” என்பதும் small b உடன் உள்ள “books” ம் ஒன்றல்ல |
05:27 | வசதிக்காக எல்லாம் upper case மற்றும் எல்லாம் lower case களில் பயன்படுத்தலாம் |
05:34 | உதாரணமாக capital letter களில் BOOKS, அல்லது small letterகளில் members |
05:44 | ஆனால் mixed caseகளைப் பயன்படுத்துவது படிக்க எளிமையாகவும் புரிந்துகொள்ளகூடியதாகவும் இருக்கும். உதாரணமாக: capital B மற்றும் I உடன் BooksIssued, |
05:57 | அல்லது capital R மற்றும் D உடன் ReturnDate |
06:03 | ஆனால், table மற்றும் column பெயர்களை உருவாக்கியபடியே பயன்படுத்த வேண்டும் |
06:11 | SQL keyword SELECT க்கு, எந்த case உம் அல்லது mix caseகளையும் பயன்படுத்தலாம். ஆனால் நம் பயன்பாடு நன்றாக படிக்கதக்கவாறு ஒரேமாதிரியாக இருக்க வேண்டும். |
06:25 | நம் உதாரணங்களில் keywords க்கு அனைத்தும் upper case ஆக பயன்படுத்துவோம் |
06:31 | இப்போது நம் அடுத்த query. புது window ல் இந்த query ஐ எழுதலாம் அல்லது முன் query யிலும் overwrite செய்யலாம் |
06:42 | இப்போதைக்கு, முன் query ல் overwrite செய்யலாம். |
06:47 | Books table ல் இருந்து குறிப்பிட்ட column களை பெறுவோம். SELECT Title, Author FROM Books . |
06:58 | query ஐ இயக்குவோம். file menu bar ன் கீழ் உள்ள Run Query icon அல்லது keyboard shortcut F5 ஐயும் பயன்படுத்தலாம். |
07:13 | இங்கே நம் records நமக்கு தேவையான column களுடன் இருகின்றன |
07:19 | சரி. மேலும் போகலாம் |
07:22 | நம் query க்கு conditions அல்லது criteria ஐ அறிமுகப்படுத்தலாம் |
07:27 | Cambridge ஆல் வெளியிடப்பட்ட புத்தகங்களை மட்டும் பெறுவோம் |
07:31 | எனவே நம் query , SELECT * FROM Books WHERE Publisher = 'Cambridge' . |
07:46 | condition ஐ தொடர்ந்து Publisher equals Cambridge என்ற இடத்தில் |
07:52 | புது keyword WHERE ஐ அறிமுகப்படுத்தியுள்ளோம் என்பதை கவனிக்கவும் |
07:59 | நம் query ஐ இயக்கலாம். Cambridge ஆல் வெளியிடப்பட்ட புத்தகங்களை மட்டும் பார்க்கிறோம் |
08:08 | ஒரு query ல் எத்தனை conditions அல்லது criteria வையும் பயன்படுத்தலாம் |
08:14 | இரண்டு condition களுடன் ஒரு query ஐ எழுதுவோம் |
08:18 | 1975 ம் ஆண்டுக்குப் பிறகு Cambridge ஆல் வெளியிடப்பட்ட புத்தகங்களை பெறுவோம் |
08:29 | நம் query : SELECT * FROM Books WHERE Publisher = 'Cambridge' AND PublishedYear > 1975 |
08:49 | WHERE keyword அல்லது clause க்கு பின் இரண்டு condition களைப் பார்க்கிறோம் |
08:55 | ‘AND’ மூலம் அவை ஒன்றாக்கப்படுவதை கவனிக்கவும். இங்கே ‘AND’ என்பது logical operator, |
09:04 | இங்கே இது conditions ஐ இணைக்க பயனாகிறது . ‘OR’ என்பது மற்றொரு logical operator |
09:13 | மேற்சொன்ன query ல் இவற்றை பயன்படுத்தி அறிக |
09:18 | query ஐ இயக்கி மேலே தீர்வைப் பார்க்கலாம் |
09:23 | நம் condition களைச் சந்தித்த புத்தகங்கள் இவையே |
09:29 | சரி, பல conditionகளைச் சேர்க்கும் மற்றொரு வழியையும் கற்கலாம். |
09:36 | Cambridge அல்லது Oxford அல்லது இரண்டும் வெளியிட்ட புத்தகங்களின் பட்டியலைப் பெறுவது எப்படி? |
09:46 | இங்கே நமது query: SELECT * FROM Books WHERE Publisher IN ( 'Cambridge', 'Oxford') |
10:09 | புது keyword ‘IN’ ஐ கவனிக்கவும் |
10:13 | இது single column அடிப்படையில் conditions ஐ இணைக்க உதவுகிறது, இங்கே அது Publisher. |
10:21 | தீர்வைக் கவனிக்கவும் |
10:25 | இப்போது assignment: |
10:27 | பின்வருவனவற்றிற்கு SQL query களை எழுதி சோதனை செய்க |
10:33 | 1. Library ன் அனைத்து உறுப்பினர்கள் பற்றிய தகவலைப் பெறுக. 2. 150 ரூபாய்க்கு அதிகமான அனைத்து புத்தகங்களின் பட்டியலைப் பெறுக. 3. William Shakespeare அல்லது John Milton எழுதிய புத்தகங்களின் பட்டியலைப் பெறுக |
10:56 | அடுத்த tutorial ல் SQL பற்றி மேலும் கற்கலாம். |
11:01 | இத்துடன் LibreOffice Base ல் Queries in SQL View மீதான இந்த tutorial முடிகிறது |
11:09 | நாம் கற்றது |
11:12 | SQL View ல் எளிய query க்களை உருவாக்குதல் |
11:17 | எளிய SQL ஐ எழுதுதல் |
11:20 | SELECT, FROM , மற்றும் WHERE clause களை பயன்படுத்துதல் |
11:25 | fields மற்றும் table களுக்கு பெயரிட upper, lower, அல்லது mixed case களை தேர்ந்தெடுத்தல் |
11:35 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
11:55 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி. |