LibreOffice-Suite-Base/C3/Create-simple-queries-in-SQL-View/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு
00:06 இந்த tutorialலில் நாம் கற்க போவது
00:09 SQL View ல் எளிய query க்களை உருவாக்குதல், எளிய SQL ஐ எழுதுதல்
00:16 SELECT, FROM , மற்றும் WHERE clause களை பயன்படுத்துதல்
00:20 fields மற்றும் table களுக்கு பெயரிட upper, lower, அல்லது mixed case களை தேர்ந்தெடுத்தல்
00;27 SQL View ல் query க்களை உருவாக்க Base ஐ பயன்படுத்துமுன் LibreOffice Base பற்றி பார்க்கலாம்
00:35 Base, HSQL database engine ல் இயங்குகிறது
00:41 இது Java வில் எழுதப்பட்ட ஒரு open source database engine software. HSQLDB மீதான மேலும் தகவல்களுக்கு http://hsqldb.org க்கு செல்லவும்
01:02 சரி, இப்போது SQL ஐ கற்கலாம்
01:06 SQL ன் விரிவு Structured Query Language. இது databases ஐ அணுகுதலுக்கும் கையாளுதலுக்குமான ஒரு நிலையான language.
01:17 இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ANSI standard.
01:23 அதனால் இது பல்வேறு Database Management Systems அல்லது DBMS ல் பயன்படுத்தப்படுகிறது
01;31 சில உதாரணங்கள்: நம் LibreOffice Base, MySQL, Microsoft SQL Server, Microsoft Access, Oracle, மற்றும் DB2.
01:47 database ல் இருந்து data ஐ பெறுவது SQL ன் மிகப் பொதுவான பயன்பாடு. database க்கு query செய்தல் எனவும் இது அறியப்படுகிறது
01:58 SQL, data ஐ database ல் உள்நுழைக்கவும், data ஐ update செய்யவும், database லிருந்து data ஐ நீக்கவும் பயனாகிறது
02:09 இவையனைத்தையும் Base ஐப் பயன்படுத்தி பயனருக்கு ஏற்ற wizards மற்றும் designing windows மூலம் நம் முன் tutorialகளில் செய்தோம்.
02:22 அடிப்படை query language ஐ கற்பது database ஐ query செய்ய நமக்கு அதிக நெகிழ்வையும் திறனையும் கொடுக்கிறது. data ஐ மாற்றியமைக்க மட்டுமல்லாது database மற்றும் table structure களையும் மாற்ற SQL பயன்படுகிறது
02:43 நம் tutorial, இன்னும் SQL முழுவதையும் முடிக்கவில்லை, இங்கே சில பயனுள்ள tutorials மற்றும் அவற்றின் websites.
02:59 HSQLDB க்கு உள்ள தனி பயனாளர் கையேட்டை இணையத்தில் பார்க்க முடியும் அல்லது உங்கள் கணினிக்கு PDF file ஆக தரவிறக்கம் செய்து சேமிக்கலாம்
03:14 சரி, இப்போது சில SQL ஐ கற்போம். நம் பிரபல Library database உதாரணத்தை திறக்கலாம்.
03:23 நம் Library database ஐ திறக்கலாம். இடப்பக்க panel ல் Queries list ஐ சொடுக்கலாம்.
03:34 பின் ‘Create Query in SQL View’ ல் சொடுக்கலாம். Query Design என்ற தலைப்புடன் ஒரு காலி window ஐ பார்க்கிறோம்
03:46 இங்குதான் SQL ல் நம் query க்களில் type செய்வோம்
03:51 நம் முதல் எளிய query ஐ எழுதுவோம். அது: library ன் மொத்த புத்தகங்களின் தகவலைப் பெற.
04:02 எந்த தகவலைப் பெறவும் ஒரு SELECT keyword ஐ பயன்படுத்த வேண்டும். அதனால் நம் query ஐ இப்படி எழுதலாம்
04:10 SELECT * FROM Books.
04:15 இங்கு Books என்பது table பெயர். books ல் B capital என்பதைக் கவனிக்கவும்
04:23 நாம் முன்னே பயன்படுத்திய table அல்லது column பெயர்களை உண்மையில் பின்தொடர்வோம்
04:29 * என்பது ஒரு wild card. இங்கே இது Books table ல் இருந்து அனைத்து columns அல்லது fields ஐ பெறு என பொருள்
04:39 இப்போது இதை இயக்கலாம். Edit menu ல் Run Query ஐ சொடுக்கவும்
04;48 books ன் அனைத்து record களின் பட்டியலுடன் ஒரு top panel ஐ காணலாம்.
04:53 நாம் எழுதும் இந்த query அல்லது மற்ற query ஐ விரிவான பெயர்கள் கொடுத்து சேமிக்கலாம்
05:00 இது நம் முதல் எளிய query! இங்கே சில குறிப்புகள்:
05:06 HSQLDB ன் tables மற்றும் column பெயர்கள் போன்ற Database Object பெயர்கள் case sensitive ஆனவை
05:17 அதாவது Table பெயர் Capital B உடன் “Books” என்பதும் small b உடன் உள்ள “books” ம் ஒன்றல்ல
05:27 வசதிக்காக எல்லாம் upper case மற்றும் எல்லாம் lower case களில் பயன்படுத்தலாம்
05:34 உதாரணமாக capital letter களில் BOOKS, அல்லது small letterகளில் members
05:44 ஆனால் mixed caseகளைப் பயன்படுத்துவது படிக்க எளிமையாகவும் புரிந்துகொள்ளகூடியதாகவும் இருக்கும். உதாரணமாக: capital B மற்றும் I உடன் BooksIssued,
05:57 அல்லது capital R மற்றும் D உடன் ReturnDate
06:03 ஆனால், table மற்றும் column பெயர்களை உருவாக்கியபடியே பயன்படுத்த வேண்டும்
06:11 SQL keyword SELECT க்கு, எந்த case உம் அல்லது mix caseகளையும் பயன்படுத்தலாம். ஆனால் நம் பயன்பாடு நன்றாக படிக்கதக்கவாறு ஒரேமாதிரியாக இருக்க வேண்டும்.
06:25 நம் உதாரணங்களில் keywords க்கு அனைத்தும் upper case ஆக பயன்படுத்துவோம்
06:31 இப்போது நம் அடுத்த query. புது window ல் இந்த query ஐ எழுதலாம் அல்லது முன் query யிலும் overwrite செய்யலாம்
06:42 இப்போதைக்கு, முன் query ல் overwrite செய்யலாம்.
06:47 Books table ல் இருந்து குறிப்பிட்ட column களை பெறுவோம். SELECT Title, Author FROM Books .
06:58 query ஐ இயக்குவோம். file menu bar ன் கீழ் உள்ள Run Query icon அல்லது keyboard shortcut F5 ஐயும் பயன்படுத்தலாம்.
07:13 இங்கே நம் records நமக்கு தேவையான column களுடன் இருகின்றன
07:19 சரி. மேலும் போகலாம்
07:22 நம் query க்கு conditions அல்லது criteria ஐ அறிமுகப்படுத்தலாம்
07:27 Cambridge ஆல் வெளியிடப்பட்ட புத்தகங்களை மட்டும் பெறுவோம்
07:31 எனவே நம் query , SELECT * FROM Books WHERE Publisher = 'Cambridge' .
07:46 condition ஐ தொடர்ந்து Publisher equals Cambridge என்ற இடத்தில்
07:52 புது keyword WHERE ஐ அறிமுகப்படுத்தியுள்ளோம் என்பதை கவனிக்கவும்
07:59 நம் query ஐ இயக்கலாம். Cambridge ஆல் வெளியிடப்பட்ட புத்தகங்களை மட்டும் பார்க்கிறோம்
08:08 ஒரு query ல் எத்தனை conditions அல்லது criteria வையும் பயன்படுத்தலாம்
08:14 இரண்டு condition களுடன் ஒரு query ஐ எழுதுவோம்
08:18 1975 ம் ஆண்டுக்குப் பிறகு Cambridge ஆல் வெளியிடப்பட்ட புத்தகங்களை பெறுவோம்
08:29 நம் query : SELECT * FROM Books WHERE Publisher = 'Cambridge' AND PublishedYear > 1975
08:49 WHERE keyword அல்லது clause க்கு பின் இரண்டு condition களைப் பார்க்கிறோம்
08:55 ‘AND’ மூலம் அவை ஒன்றாக்கப்படுவதை கவனிக்கவும். இங்கே ‘AND’ என்பது logical operator,
09:04 இங்கே இது conditions ஐ இணைக்க பயனாகிறது . ‘OR’ என்பது மற்றொரு logical operator
09:13 மேற்சொன்ன query ல் இவற்றை பயன்படுத்தி அறிக
09:18 query ஐ இயக்கி மேலே தீர்வைப் பார்க்கலாம்
09:23 நம் condition களைச் சந்தித்த புத்தகங்கள் இவையே
09:29 சரி, பல conditionகளைச் சேர்க்கும் மற்றொரு வழியையும் கற்கலாம்.
09:36 Cambridge அல்லது Oxford அல்லது இரண்டும் வெளியிட்ட புத்தகங்களின் பட்டியலைப் பெறுவது எப்படி?
09:46 இங்கே நமது query: SELECT * FROM Books WHERE Publisher IN ( 'Cambridge', 'Oxford')
10:09 புது keyword ‘IN’ ஐ கவனிக்கவும்
10:13 இது single column அடிப்படையில் conditions ஐ இணைக்க உதவுகிறது, இங்கே அது Publisher.
10:21 தீர்வைக் கவனிக்கவும்
10:25 இப்போது assignment:
10:27 பின்வருவனவற்றிற்கு SQL query களை எழுதி சோதனை செய்க
10:33 1. Library ன் அனைத்து உறுப்பினர்கள் பற்றிய தகவலைப் பெறுக. 2. 150 ரூபாய்க்கு அதிகமான அனைத்து புத்தகங்களின் பட்டியலைப் பெறுக. 3. William Shakespeare அல்லது John Milton எழுதிய புத்தகங்களின் பட்டியலைப் பெறுக
10:56 அடுத்த tutorial ல் SQL பற்றி மேலும் கற்கலாம்.
11:01 இத்துடன் LibreOffice Base ல் Queries in SQL View மீதான இந்த tutorial முடிகிறது
11:09 நாம் கற்றது
11:12 SQL View ல் எளிய query க்களை உருவாக்குதல்
11:17 எளிய SQL ஐ எழுதுதல்
11:20 SELECT, FROM , மற்றும் WHERE clause களை பயன்படுத்துதல்
11:25 fields மற்றும் table களுக்கு பெயரிட upper, lower, அல்லது mixed case களை தேர்ந்தெடுத்தல்
11:35 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:55 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst