Advanced-Cpp/C2/More-On-Inheritance/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:38, 3 April 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம் C++ ல் Multiple மற்றும் Hierarchical Inheritance குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:09 Multiple Inheritance
00:11 Hierarchical Inheritance.
00:13 இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம்.
00:17 இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது
00:20 உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10,
00:24 g++ compiler பதிப்பு 4.6.1
00:29 multiple inheritance ல், ஒன்றுக்கும் மேற்பட்ட base class ல் இருந்து derived class inherit செய்கிறது.
00:36 இப்போது multiple inheritance க்கான உதாரணத்தைக் காண்போம்.
00:40 ஏற்கனவே எடிடரில் code ஐ டைப் செய்துவைத்துள்ளேன்.
00:42 அதை திறக்கிறேன்.
00:45 நம் file பெயர் multiple.cpp என்பதை கவனிக்கவும்
00:49 இந்த ப்ரோகிராமில் மாணவரின் பெயர், வரிசை எண், மதிப்பெண்கள் மற்றும் சராசரியைக் காட்டுவோம்.
00:56 code ஐ விளக்குகிறேன்.
00:59 இது நம் headerfile iostream
01:01 இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம்
01:05 பின் class "student" ஐ கொண்டுள்ளோம்
01:07 இது base class.
01:09 இதில் integer variable roll_no மற்றும் character variable name ஐ கொண்டுள்ளோம்.
01:16 இவை protected ஆக declare செய்யப்பட்டுள்ளன.
01:19 பின் மற்றொரு class "exam_inherit" ஐ கொண்டுள்ளோம்
01:24 இதுவும் ஒரு base class.
01:26 எனவே இங்கே இருbase class கள் - student மற்றும் exam_inherit உள்ளன
01:32 இதில் protected ஆக 3 variableகள்- sub1, sub2, sub3 உள்ளன.
01:38 ஏனெனில் protected variableகளை derived class மூலம் அணுக முடியும்.
01:44 இப்போது derived class ஆன class "grade" ஐ கொண்டுள்ளோம்.
01:50 இது base classகளான – class student"' மற்றும் class "exam_inherit" ஐ inherit செய்கிறது.
01:56 இதில் private ஆக declare செய்யப்பட்ட integer variable avg ஐ கொண்டுள்ளோம்.
02:02 பின் public functionகளாக function
02:04 input(), display()
02:06 average(), input_exam()
02:08 மற்றும் display_exam() ஐ கொண்டுள்ளோம்.
02:11 public ஆக declare செய்யப்பட்ட integer variable "total" ஐ கொண்டுள்ளோம்.
02:17 பின் மாணவரின் வரிசைஎண் மற்றும் பெயரை ஏற்க input function ஐ பயன்படுத்துகிறோம்.
02:24 display function ல், மாணவரின் வரிசை எண் மற்றும் பெயரைக் காட்டுகிறோம்.
02:28 இங்கே function input_exam உள்ளது
02:31 இங்கே மூன்று பாடங்களின் மதிப்பெண்களை sub1, sub2 மற்றும் sub3 ஆக ஏற்கிறோம்
02:37 பின் display_exam function ல், மூன்று பாடங்களின் கூடுதலை கணக்கிட்டு அச்சடிக்கிறோம்.
02:44 function average ல் சராசரியை கணக்கிடுகிறோம்.
02:48 இது நம் main function.
02:51 இதில் derived class ஆன class grade க்கு ஒரு object gd ஐ உருவாக்குகிறோம்
02:57 பின் மேலுள்ள அனைத்து functionகளையும் call செய்கிறோம்
03:01 இது நம் return statement.
03:03 இப்பொது ப்ரோகிராமை இயக்குவோம்
03:05 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும்.
03:14 compile செய்ய டைப் செய்க, g++ space multiple dot cpp space hyphen o space mult. எண்டரை அழுத்துக
03:24 டைப் செய்க dot slash mult. எண்டரை அழுத்துக
03:29 இங்கு காண்பது, Enter Roll no.:
03:32 3ஐ கொடுக்கிறேன்
03:34 Enter Name:
03:36 Pratham என கொடுக்கிறேன்
03:39 Enter marks of subject1'
03:41 67 ஐ கொடுக்கிறேன்
03:43 subject2 க்கு 78 மற்றும்
03:46 subject3 க்கு 84
03:48 காட்டப்படும் வெளியீடு
03:51 Roll no is: 3, Name is: Pratham
03:53 Total is: 229
03:55 Average is: 76
03:58 இதுதான் multiple inheritance.
04:00 இப்போது hierarchical inheritance ஐ காண்போம்.
04:03 நம் ப்ரோகிராமுக்கு வருவோம்.
04:05 hierarchical inheritance ல், ஒருbase class ல் இருந்து பல derived classகள் inherit செய்கின்றன .
04:12 நம் file பெயர் hierarchical dot cpp என்பதை கவனிக்கவும்
04:16 இப்போது code ஐ விளக்குகிறேன்.
04:19 இது நம் header file iostream.
04:22 இங்கே std namespace ஐ பயன்படுத்தியுள்ளோம்
04:25 பின் base class ஆன class student ஐ கொண்டுள்ளோம்
04:29 இதில், integer variableகளாக ஆக roll_no ...
04:34 Sub1, sub2, sub3 மற்றும் total ஐ கொண்டுள்ளோம்.
04:40 பின் character variable ஆக name ஐ கொண்டுள்ளோம் .
04:43 இவை protected ஆக declare செய்யப்படுகின்றன.
04:46 இங்கே மற்றொரு class 'show' ஐ கொண்டுள்ளோம்
04:49 இது derived class.
04:51 இது class student ன் பண்புகளை inherit செய்கிறது
04:54 இதில் இரு functionகள்: "input" மற்றும் "display" உள்ளன
04:59 இவை public functionகளாக declare செய்யப்படுகின்றன.
05:02 function input ல் மாணவரின் வரிசை எண் மற்றும் பெயரை ஏற்கிறோம்.
05:07 function display ல் மாணவரின் வரிசை எண் மற்றும் பெயரை காட்டுகிறோம்.
05:11 பின் class exam என்ற மற்றொரு derived class உள்ளது
05:15 இதுவும் class student ஐ inherit செய்கிறது
05:19 இரு derived classகள்- class exam மற்றும் class show இருப்பதைக் காணலாம்
05:26 இரு classகளும் class "student" ஐ inherit செய்கின்றன
05:30 class exam ல் public ஆக declare செய்யப்பட்ட இரு functionகள் "input_exam" மற்றும் "total marks" உள்ளன.
05:38 இங்கே function "input_exam" ஐ அணுகுகிறோம்
05:41 இது மூன்று பாடங்கள்- sub1, sub2 மற்றும் sub3 ன் மதிப்பெண்களை ஏற்கிறது
05:46 பின் "total_marks" function ஐ கொண்டுள்ளோம்
05:49 இது மூன்று பாடங்களின் மதிப்பெண்களைக் கூட்டி மொத்தத்தை அச்சடிக்கிறது.
05:53 இது நம் main function.
05:56 இதில் மூன்று classகளின் objectகளை st, sw மற்றும் em என உருவாக்குகிறோம்
06:03 பின் இந்த object களை பயன்படுத்தி மேலுள்ள functionகளை call செய்கிறோம்.sw.input(); em.input_exam(); sw.display(); em.total_marks();
06:15 இது நம் return statement.
06:17 இப்போது ப்ரோகிராமை இயக்குவோம்.
06:19 டெர்மினலுக்கு வருவோம்.
06:21 prompt ஐ துடைப்போம்.
06:24 compile செய்ய டைப் செய்க, g++ space hierarchical dot cpp space hyphen o space hier எண்டரை அழுத்துக
06:37 டைப் செய்க dot slash hier
06:41 எண்டரை அழுத்துக
06:43 Enter Roll no.: 4 ஐ கொடுக்கிறேன்
06:46 Enter Name: Ashwini என கொடுக்கிறேன்
06:50 Enter marks of subject1
06:52 87 ஐ கொடுக்கிறேன்
06:54 subject2 க்கு 67 மற்றும் subject3 க்கு 97
07:00 காட்டப்படும் வெளியீடு
07:02 Roll no is: 4
07:04 Name is: Ashwini மற்றும்
07:06 Total is : 251
07:10 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. நம் slideகளுக்கு வருவோம்.
07:14 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் கற்றது,
07:16 Multiple Inheritance மற்றும்
07:18 Hierarchical Inheritance.
07:21 பயிற்சியாக class area மற்றும் perimeter ஐ உருவாக்கி.
07:25 செவ்வகத்தின் பரப்பளவும் மற்றும் சுற்றளவை கண்டறியவும்.
07:29 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
07:32 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
07:35 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
07:40 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:45 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:49 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:56 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:01 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:07 இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
08:11 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst