Advanced-Cpp/C2/More-On-Inheritance/Tamil
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
| 00:01 | வணக்கம் C++ ல் Multiple மற்றும் Hierarchical Inheritance குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
| 00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
| 00:09 | Multiple Inheritance |
| 00:11 | Hierarchical Inheritance. |
| 00:13 | இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம். |
| 00:17 | இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது |
| 00:20 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10, |
| 00:24 | g++ compiler பதிப்பு 4.6.1 |
| 00:29 | multiple inheritance ல், ஒன்றுக்கும் மேற்பட்ட base class ல் இருந்து derived class inherit செய்கிறது. |
| 00:36 | இப்போது multiple inheritance க்கான உதாரணத்தைக் காண்போம். |
| 00:40 | ஏற்கனவே எடிடரில் code ஐ டைப் செய்துவைத்துள்ளேன். |
| 00:42 | அதை திறக்கிறேன். |
| 00:45 | நம் file பெயர் multiple.cpp என்பதை கவனிக்கவும் |
| 00:49 | இந்த ப்ரோகிராமில் மாணவரின் பெயர், வரிசை எண், மதிப்பெண்கள் மற்றும் சராசரியைக் காட்டுவோம். |
| 00:56 | code ஐ விளக்குகிறேன். |
| 00:59 | இது நம் headerfile iostream |
| 01:01 | இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம் |
| 01:05 | பின் class "student" ஐ கொண்டுள்ளோம் |
| 01:07 | இது base class. |
| 01:09 | இதில் integer variable roll_no மற்றும் character variable name ஐ கொண்டுள்ளோம். |
| 01:16 | இவை protected ஆக declare செய்யப்பட்டுள்ளன. |
| 01:19 | பின் மற்றொரு class "exam_inherit" ஐ கொண்டுள்ளோம் |
| 01:24 | இதுவும் ஒரு base class. |
| 01:26 | எனவே இங்கே இருbase class கள் - student மற்றும் exam_inherit உள்ளன |
| 01:32 | இதில் protected ஆக 3 variableகள்- sub1, sub2, sub3 உள்ளன. |
| 01:38 | ஏனெனில் protected variableகளை derived class மூலம் அணுக முடியும். |
| 01:44 | இப்போது derived class ஆன class "grade" ஐ கொண்டுள்ளோம். |
| 01:50 | இது base classகளான – class student"' மற்றும் class "exam_inherit" ஐ inherit செய்கிறது. |
| 01:56 | இதில் private ஆக declare செய்யப்பட்ட integer variable avg ஐ கொண்டுள்ளோம். |
| 02:02 | பின் public functionகளாக function |
| 02:04 | input(), display() |
| 02:06 | average(), input_exam() |
| 02:08 | மற்றும் display_exam() ஐ கொண்டுள்ளோம். |
| 02:11 | public ஆக declare செய்யப்பட்ட integer variable "total" ஐ கொண்டுள்ளோம். |
| 02:17 | பின் மாணவரின் வரிசைஎண் மற்றும் பெயரை ஏற்க input function ஐ பயன்படுத்துகிறோம். |
| 02:24 | display function ல், மாணவரின் வரிசை எண் மற்றும் பெயரைக் காட்டுகிறோம். |
| 02:28 | இங்கே function input_exam உள்ளது |
| 02:31 | இங்கே மூன்று பாடங்களின் மதிப்பெண்களை sub1, sub2 மற்றும் sub3 ஆக ஏற்கிறோம் |
| 02:37 | பின் display_exam function ல், மூன்று பாடங்களின் கூடுதலை கணக்கிட்டு அச்சடிக்கிறோம். |
| 02:44 | function average ல் சராசரியை கணக்கிடுகிறோம். |
| 02:48 | இது நம் main function. |
| 02:51 | இதில் derived class ஆன class grade க்கு ஒரு object gd ஐ உருவாக்குகிறோம் |
| 02:57 | பின் மேலுள்ள அனைத்து functionகளையும் call செய்கிறோம் |
| 03:01 | இது நம் return statement. |
| 03:03 | இப்பொது ப்ரோகிராமை இயக்குவோம் |
| 03:05 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும். |
| 03:14 | compile செய்ய டைப் செய்க, g++ space multiple dot cpp space hyphen o space mult. எண்டரை அழுத்துக |
| 03:24 | டைப் செய்க dot slash mult. எண்டரை அழுத்துக |
| 03:29 | இங்கு காண்பது, Enter Roll no.: |
| 03:32 | 3ஐ கொடுக்கிறேன் |
| 03:34 | Enter Name: |
| 03:36 | Pratham என கொடுக்கிறேன் |
| 03:39 | Enter marks of subject1' |
| 03:41 | 67 ஐ கொடுக்கிறேன் |
| 03:43 | subject2 க்கு 78 மற்றும் |
| 03:46 | subject3 க்கு 84 |
| 03:48 | காட்டப்படும் வெளியீடு |
| 03:51 | Roll no is: 3, Name is: Pratham |
| 03:53 | Total is: 229 |
| 03:55 | Average is: 76 |
| 03:58 | இதுதான் multiple inheritance. |
| 04:00 | இப்போது hierarchical inheritance ஐ காண்போம். |
| 04:03 | நம் ப்ரோகிராமுக்கு வருவோம். |
| 04:05 | hierarchical inheritance ல், ஒருbase class ல் இருந்து பல derived classகள் inherit செய்கின்றன . |
| 04:12 | நம் file பெயர் hierarchical dot cpp என்பதை கவனிக்கவும் |
| 04:16 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
| 04:19 | இது நம் header file iostream. |
| 04:22 | இங்கே std namespace ஐ பயன்படுத்தியுள்ளோம் |
| 04:25 | பின் base class ஆன class student ஐ கொண்டுள்ளோம் |
| 04:29 | இதில், integer variableகளாக ஆக roll_no ... |
| 04:34 | Sub1, sub2, sub3 மற்றும் total ஐ கொண்டுள்ளோம். |
| 04:40 | பின் character variable ஆக name ஐ கொண்டுள்ளோம் . |
| 04:43 | இவை protected ஆக declare செய்யப்படுகின்றன. |
| 04:46 | இங்கே மற்றொரு class 'show' ஐ கொண்டுள்ளோம் |
| 04:49 | இது derived class. |
| 04:51 | இது class student ன் பண்புகளை inherit செய்கிறது |
| 04:54 | இதில் இரு functionகள்: "input" மற்றும் "display" உள்ளன |
| 04:59 | இவை public functionகளாக declare செய்யப்படுகின்றன. |
| 05:02 | function input ல் மாணவரின் வரிசை எண் மற்றும் பெயரை ஏற்கிறோம். |
| 05:07 | function display ல் மாணவரின் வரிசை எண் மற்றும் பெயரை காட்டுகிறோம். |
| 05:11 | பின் class exam என்ற மற்றொரு derived class உள்ளது |
| 05:15 | இதுவும் class student ஐ inherit செய்கிறது |
| 05:19 | இரு derived classகள்- class exam மற்றும் class show இருப்பதைக் காணலாம் |
| 05:26 | இரு classகளும் class "student" ஐ inherit செய்கின்றன |
| 05:30 | class exam ல் public ஆக declare செய்யப்பட்ட இரு functionகள் "input_exam" மற்றும் "total marks" உள்ளன. |
| 05:38 | இங்கே function "input_exam" ஐ அணுகுகிறோம் |
| 05:41 | இது மூன்று பாடங்கள்- sub1, sub2 மற்றும் sub3 ன் மதிப்பெண்களை ஏற்கிறது |
| 05:46 | பின் "total_marks" function ஐ கொண்டுள்ளோம் |
| 05:49 | இது மூன்று பாடங்களின் மதிப்பெண்களைக் கூட்டி மொத்தத்தை அச்சடிக்கிறது. |
| 05:53 | இது நம் main function. |
| 05:56 | இதில் மூன்று classகளின் objectகளை st, sw மற்றும் em என உருவாக்குகிறோம் |
| 06:03 | பின் இந்த object களை பயன்படுத்தி மேலுள்ள functionகளை call செய்கிறோம்.sw.input(); em.input_exam(); sw.display(); em.total_marks(); |
| 06:15 | இது நம் return statement. |
| 06:17 | இப்போது ப்ரோகிராமை இயக்குவோம். |
| 06:19 | டெர்மினலுக்கு வருவோம். |
| 06:21 | prompt ஐ துடைப்போம். |
| 06:24 | compile செய்ய டைப் செய்க, g++ space hierarchical dot cpp space hyphen o space hier எண்டரை அழுத்துக |
| 06:37 | டைப் செய்க dot slash hier |
| 06:41 | எண்டரை அழுத்துக |
| 06:43 | Enter Roll no.: 4 ஐ கொடுக்கிறேன் |
| 06:46 | Enter Name: Ashwini என கொடுக்கிறேன் |
| 06:50 | Enter marks of subject1 |
| 06:52 | 87 ஐ கொடுக்கிறேன் |
| 06:54 | subject2 க்கு 67 மற்றும் subject3 க்கு 97 |
| 07:00 | காட்டப்படும் வெளியீடு |
| 07:02 | Roll no is: 4 |
| 07:04 | Name is: Ashwini மற்றும் |
| 07:06 | Total is : 251 |
| 07:10 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. நம் slideகளுக்கு வருவோம். |
| 07:14 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் கற்றது, |
| 07:16 | Multiple Inheritance மற்றும் |
| 07:18 | Hierarchical Inheritance. |
| 07:21 | பயிற்சியாக class area மற்றும் perimeter ஐ உருவாக்கி. |
| 07:25 | செவ்வகத்தின் பரப்பளவும் மற்றும் சுற்றளவை கண்டறியவும். |
| 07:29 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
| 07:32 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
| 07:35 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
| 07:40 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
| 07:45 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
| 07:49 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
| 07:56 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
| 08:01 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
| 08:07 | இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
| 08:11 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |