Advanced-Cpp/C2/Constructor-And-Destructor/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:31, 3 April 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். Constructorகள் மற்றும் Destructorகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இதில் நாம் கற்கபோவது,
00:09 Constructorகள், constructorகளின் வகைகள்
00:12 Destructorகள். இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம்.
00:17 இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது
00:20 உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10,
00:23 g++ Compiler பதிப்பு 4.6.1.
00:28 Constructorகளுக்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:31 constructor என்பது ஒரு member function.
00:33 இது class பெயர் போன்ற அதே பெயரை கொண்டிருக்கும்.
00:37 Constructorகள் மதிப்புகளை திருப்பாது.
00:40 object உருவாக்கப்படும் போது இது தானாக call செய்யப்படுகிறது.
00:44 Constructorகளின் வகைகள்:
00:46 Parameterized Constructorகள், Copy Constructorகள்
00:50 மற்றும் Default Constructorகள்
00:53 இப்பொது Destructorகள் பற்றி காண்போம்.
00:56 Destructorகள் ஒதுக்கப்பட்ட memoryஐ திரும்பபெற பயன்படுகின்றன .
00:59 ஒரு object அழிக்கப்படும்போது இவை call செய்யப்படுகின்றன.
01:02 destructor க்கு argumentகளும் இல்லை return typeகளும் இல்லை.
01:07 Constructorகள் மற்றும் Destructorகளுக்கு உதாரணத்தை காண்போம்,
01:11 editor ல் ஏற்கனவே டைப் செய்து வைத்துள்ள code ஐ திறக்கிறேன்.
01:15 நம் file பெயர் cons hyphen dest dot cpp என்பதை கவனிக்கவும்
01:20 இந்த ப்ரோகிராமில் constructor ஐ பயன்படுத்தி இரு எண்களின் கூட்டலை செயல்படுத்துவோம்
01:25 இப்போது code ஐ விளக்குகிறேன்.
01:27 இது நம் header file iostream
01:30 இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம்
01:33 பின் class Addition. a மற்றும் b integer variableகள்.
01:38 இவை class Addition ன் private memberகள் ஆகும்
01:42 இங்கே Public specifier உள்ளது
01:44 பின் construtor Addition உள்ளது
01:47 class பெயர் போன்ற அதே பெயரை constructor உம் கொண்டுள்ளது.
01:52 இங்கே இரு arguementகளை pass செய்துள்ளோம்.
01:54 இப்போது ஒரு Destructor ஐ define செய்துள்ளோம்
01:57 அதற்கு destructorகளின் பெயருக்கு முன் ஒரு tilde குறியை பயன்படுத்துகிறோம்.
02:02 இது ஒரு public function add.
02:05 இது a மற்றும் b ன் கூடுதலை திருப்புகிறது.
02:08 இங்கே scope resolution operator ஐ பயன்படுத்தி constructor ஐ அணுகுகிறோம்
02:12 a மற்றும் b private memberகள்.
02:15 private memberகளை அணுக x மற்றும் y ஐ பயன்படுத்துகிறோம்.
02:19 பின் destructor ஐ அணுகுகிறோம்
02:21 இதில் Memory Deallocation என அச்சடிக்கிறோம்
02:25 இது நம் main function.
02:28 இங்கே class Addition க்கு ஒரு object obj ஐ உருவாக்குகிறோம் .
02:32 பின் இரு argumentகள் 3 மற்றும் 4 ஐ pass செய்கிறோம்.
02:36 3 x ல் சேமிக்கப்படும் 4 y ல் சேமிக்கப்படும்.
02:40 அதாவது a ன் மதிப்பு 3 மற்றும் b ன் மதிப்பு 4.
02:45 argumentகளை கொண்டிருக்கும் constructor parameterized constructor எனப்படும்
02:50 எனவே இது prameterized constructor.
02:53 இங்கே object obj ஐ பயன்படுத்தி function add ஐ call செய்கிறோம்.
02:58 பின் கூடுதலை அச்சடிக்கிறோம்.
03:00 இது நம் return statement.
03:02 இப்பொது ப்ரோகிராமை இயக்குவோம்.
03:05 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும்.
03:12 compile செய்ய டைப் செய்க, g++ space cons hyphen dest dot cpp space hyphen o space cons
03:21 எண்டரை அழுத்துக
03:23 டைப் செய்க dot slash cons
03:25 எண்டரை அழுத்துக
03:27 காட்டப்படும் வெளியீடு
03:29 Sum is 7 மற்றும் Memory Deallocation
03:33 இப்போது Default constructorகளுக்கான ஒரு உதாரணத்தை காண்போம்
03:37 நம் ப்ரோகிராமுக்கு வருவோம்.
03:39 code ஐ ஏற்கனவே டைப் செய்துள்ளேன்.
03:41 நம் file பெயர் default dot cpp என்பதை கவனிக்கவும்
03:45 class ல் ஒரு constructor declare செய்யப்படவில்லை எனில்
03:48 பின் compiler அதை அந்த class ன் ஒரு default constructor ஆக எடுத்துக்கொள்ளும்.
03:53 code ஐ விளக்குகிறேன்.
03:55 இது நம் header file iostream.
03:58 இங்கே std namespace ஐ பயன்படுத்தியுள்ளோம்
04:02 பின் class Subtraction உள்ளது
04:04 பின் public ஆக declare செய்யப்பட்டுள்ள a மற்றும் b உள்ளது
04:08 இங்கே sub function உள்ளது.
04:10 இருargumentகள் int a மற்றும் int b ஐ pass செய்துள்ளோம்
04:15 இது இரு எண்கள் a மற்றும் b ஐ திருப்புகிறது
04:19 இது defalut constructor.
04:22 இங்கே scope resolution operator ஐ பயன்படுத்தி default constructor ஐ அணுகுகிறோம்
04:27 இது main function.
04:29 இதில் ஒரு variable x ஐ define செய்துள்ளோம்
04:34 இங்கே subtraction ன் ஒரு object s ஐ உருவாக்குகிறோம்
04:39 பின் object s ஐ பயன்படுத்தி function sub ஐ call செய்து
04:42 இரு argumentகள் ' 8 மற்றும் 4' ஐ pass செய்கிறோம்
04:47 பின் variable x ல் முடிவு சேமிக்கப்படுகிறது
04:51 இங்கே வித்தியாசத்தை அச்சடிக்கிறோம்.
04:54 இது நம் return statement.
04:56 இப்பொது ப்ரோகிராமை இயக்குவோம்.
04:58 நம் டெர்மினலுக்கு வருவோம்.
05:01 compile செய்ய டைப் செய்க g++ space default dot cpp space hyphen o space def
05:09 எண்டரை அழுத்துக
05:10 டைப் செய்க dot slash def
05:12 எண்டரை அழுத்துக
05:14 பெறப்படும் வெளியீடு
05:16 Difference is 4
05:18 நம் ப்ரோகிராமுக்கு வருவோம்.
05:20 இங்கே function க்குள் argumentகளை pass செய்திருப்பதை காணலாம்.
05:25 முந்தைய உதாரணத்தில் Object னுள் argumentகளை pass செய்தோம்
05:30 இங்கே Object ஐ பயன்படுத்தி argument களை pass செய்துள்ளோம்
05:34 இப்போது நம் slideகளுக்கு வருவோம்.
05:38 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,
05:41 Constructorகள். எகா. Addition
05:43 Parameterized Constructor. எகா. Addition obj (3, 4);
05:48 Destructorகள் எகா. ~Addition
05:52 Default Constructor. எகா. Subtraction
05:55 பயிற்சியாக, Division என்ற ஒரு class ஐ உருவாக்குக
05:59 அந்த class க்கு ஒரு constructor ஐ உருவாக்குக.
06:01 கொடுக்கப்படும் இரு எண்களை வகுக்கும் ஒரு function divide ஐ உருவாக்குக.
06:06 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06:09 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
06:11 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
06:16 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
06:21 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06:25 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
06:31 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
06:36 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:42 இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
06:47 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst