Advanced-Cpp/C2/Constructor-And-Destructor/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். Constructorகள் மற்றும் Destructorகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இதில் நாம் கற்கபோவது, |
00:09 | Constructorகள், constructorகளின் வகைகள் |
00:12 | Destructorகள். இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம். |
00:17 | இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது |
00:20 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10, |
00:23 | g++ Compiler பதிப்பு 4.6.1. |
00:28 | Constructorகளுக்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:31 | constructor என்பது ஒரு member function. |
00:33 | இது class பெயர் போன்ற அதே பெயரை கொண்டிருக்கும். |
00:37 | Constructorகள் மதிப்புகளை திருப்பாது. |
00:40 | object உருவாக்கப்படும் போது இது தானாக call செய்யப்படுகிறது. |
00:44 | Constructorகளின் வகைகள்: |
00:46 | Parameterized Constructorகள், Copy Constructorகள் |
00:50 | மற்றும் Default Constructorகள் |
00:53 | இப்பொது Destructorகள் பற்றி காண்போம். |
00:56 | Destructorகள் ஒதுக்கப்பட்ட memoryஐ திரும்பபெற பயன்படுகின்றன . |
00:59 | ஒரு object அழிக்கப்படும்போது இவை call செய்யப்படுகின்றன. |
01:02 | destructor க்கு argumentகளும் இல்லை return typeகளும் இல்லை. |
01:07 | Constructorகள் மற்றும் Destructorகளுக்கு உதாரணத்தை காண்போம், |
01:11 | editor ல் ஏற்கனவே டைப் செய்து வைத்துள்ள code ஐ திறக்கிறேன். |
01:15 | நம் file பெயர் cons hyphen dest dot cpp என்பதை கவனிக்கவும் |
01:20 | இந்த ப்ரோகிராமில் constructor ஐ பயன்படுத்தி இரு எண்களின் கூட்டலை செயல்படுத்துவோம் |
01:25 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
01:27 | இது நம் header file iostream |
01:30 | இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம் |
01:33 | பின் class Addition. a மற்றும் b integer variableகள். |
01:38 | இவை class Addition ன் private memberகள் ஆகும் |
01:42 | இங்கே Public specifier உள்ளது |
01:44 | பின் construtor Addition உள்ளது |
01:47 | class பெயர் போன்ற அதே பெயரை constructor உம் கொண்டுள்ளது. |
01:52 | இங்கே இரு arguementகளை pass செய்துள்ளோம். |
01:54 | இப்போது ஒரு Destructor ஐ define செய்துள்ளோம் |
01:57 | அதற்கு destructorகளின் பெயருக்கு முன் ஒரு tilde குறியை பயன்படுத்துகிறோம். |
02:02 | இது ஒரு public function add. |
02:05 | இது a மற்றும் b ன் கூடுதலை திருப்புகிறது. |
02:08 | இங்கே scope resolution operator ஐ பயன்படுத்தி constructor ஐ அணுகுகிறோம் |
02:12 | a மற்றும் b private memberகள். |
02:15 | private memberகளை அணுக x மற்றும் y ஐ பயன்படுத்துகிறோம். |
02:19 | பின் destructor ஐ அணுகுகிறோம் |
02:21 | இதில் Memory Deallocation என அச்சடிக்கிறோம் |
02:25 | இது நம் main function. |
02:28 | இங்கே class Addition க்கு ஒரு object obj ஐ உருவாக்குகிறோம் . |
02:32 | பின் இரு argumentகள் 3 மற்றும் 4 ஐ pass செய்கிறோம். |
02:36 | 3 x ல் சேமிக்கப்படும் 4 y ல் சேமிக்கப்படும். |
02:40 | அதாவது a ன் மதிப்பு 3 மற்றும் b ன் மதிப்பு 4. |
02:45 | argumentகளை கொண்டிருக்கும் constructor parameterized constructor எனப்படும் |
02:50 | எனவே இது prameterized constructor. |
02:53 | இங்கே object obj ஐ பயன்படுத்தி function add ஐ call செய்கிறோம். |
02:58 | பின் கூடுதலை அச்சடிக்கிறோம். |
03:00 | இது நம் return statement. |
03:02 | இப்பொது ப்ரோகிராமை இயக்குவோம். |
03:05 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும். |
03:12 | compile செய்ய டைப் செய்க, g++ space cons hyphen dest dot cpp space hyphen o space cons |
03:21 | எண்டரை அழுத்துக |
03:23 | டைப் செய்க dot slash cons |
03:25 | எண்டரை அழுத்துக |
03:27 | காட்டப்படும் வெளியீடு |
03:29 | Sum is 7 மற்றும் Memory Deallocation |
03:33 | இப்போது Default constructorகளுக்கான ஒரு உதாரணத்தை காண்போம் |
03:37 | நம் ப்ரோகிராமுக்கு வருவோம். |
03:39 | code ஐ ஏற்கனவே டைப் செய்துள்ளேன். |
03:41 | நம் file பெயர் default dot cpp என்பதை கவனிக்கவும் |
03:45 | class ல் ஒரு constructor declare செய்யப்படவில்லை எனில் |
03:48 | பின் compiler அதை அந்த class ன் ஒரு default constructor ஆக எடுத்துக்கொள்ளும். |
03:53 | code ஐ விளக்குகிறேன். |
03:55 | இது நம் header file iostream. |
03:58 | இங்கே std namespace ஐ பயன்படுத்தியுள்ளோம் |
04:02 | பின் class Subtraction உள்ளது |
04:04 | பின் public ஆக declare செய்யப்பட்டுள்ள a மற்றும் b உள்ளது |
04:08 | இங்கே sub function உள்ளது. |
04:10 | இருargumentகள் int a மற்றும் int b ஐ pass செய்துள்ளோம் |
04:15 | இது இரு எண்கள் a மற்றும் b ஐ திருப்புகிறது |
04:19 | இது defalut constructor. |
04:22 | இங்கே scope resolution operator ஐ பயன்படுத்தி default constructor ஐ அணுகுகிறோம் |
04:27 | இது main function. |
04:29 | இதில் ஒரு variable x ஐ define செய்துள்ளோம் |
04:34 | இங்கே subtraction ன் ஒரு object s ஐ உருவாக்குகிறோம் |
04:39 | பின் object s ஐ பயன்படுத்தி function sub ஐ call செய்து |
04:42 | இரு argumentகள் ' 8 மற்றும் 4' ஐ pass செய்கிறோம் |
04:47 | பின் variable x ல் முடிவு சேமிக்கப்படுகிறது |
04:51 | இங்கே வித்தியாசத்தை அச்சடிக்கிறோம். |
04:54 | இது நம் return statement. |
04:56 | இப்பொது ப்ரோகிராமை இயக்குவோம். |
04:58 | நம் டெர்மினலுக்கு வருவோம். |
05:01 | compile செய்ய டைப் செய்க g++ space default dot cpp space hyphen o space def |
05:09 | எண்டரை அழுத்துக |
05:10 | டைப் செய்க dot slash def |
05:12 | எண்டரை அழுத்துக |
05:14 | பெறப்படும் வெளியீடு |
05:16 | Difference is 4 |
05:18 | நம் ப்ரோகிராமுக்கு வருவோம். |
05:20 | இங்கே function க்குள் argumentகளை pass செய்திருப்பதை காணலாம். |
05:25 | முந்தைய உதாரணத்தில் Object னுள் argumentகளை pass செய்தோம் |
05:30 | இங்கே Object ஐ பயன்படுத்தி argument களை pass செய்துள்ளோம் |
05:34 | இப்போது நம் slideகளுக்கு வருவோம். |
05:38 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
05:41 | Constructorகள். எகா. Addition |
05:43 | Parameterized Constructor. எகா. Addition obj (3, 4); |
05:48 | Destructorகள் எகா. ~Addition |
05:52 | Default Constructor. எகா. Subtraction |
05:55 | பயிற்சியாக, Division என்ற ஒரு class ஐ உருவாக்குக |
05:59 | அந்த class க்கு ஒரு constructor ஐ உருவாக்குக. |
06:01 | கொடுக்கப்படும் இரு எண்களை வகுக்கும் ஒரு function divide ஐ உருவாக்குக. |
06:06 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
06:09 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
06:11 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
06:16 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
06:21 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
06:25 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
06:31 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
06:36 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06:42 | இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
06:47 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |