PERL/C3/Downloading-CPAN-module/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | CPAN moduleகளை download செய்வது குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், தேவையான CPAN moduleகளை Ubuntu Linux மற்றும் Windows இயங்குதளங்களில் download செய்யக் கற்போம் |
00:17 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 இயங்கு தளம், Windows 7, Perl 5.14.2 மற்றும் gedit' Text Editor. |
00:32 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம். |
00:36 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, Perl Programmingல் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும். |
00:41 | இல்லையெனில், அதற்கான Perl ஸ்போகன் டுடோரியல்களுக்கு, spoken tutorial வலைத்தளத்தை பார்க்கவும். |
00:48 | முதலில், Ubuntu Linux OSல், CPAN moduleகளை download செய்யக் கற்போம். |
00:55 | Terminalக்கு திரும்பவும். |
00:57 | டைப் செய்க: sudo space cpan, பின் Enterஐ அழுத்தவும். தேவையெனில், passwordஐ enter செய்யவும். |
01:06 | உங்கள் கணிணியில், cpan நிறுவப்படவில்லையெனில், அது நிறுவுதல் செயல்முறைக்கு உங்களைத் தூண்டும். |
01:13 | படிப்படியாக தொடரவும். நிறுவுதல் செயல்முறைக்கு, உங்கள் கணிணியில் internet இணைப்பு இருக்க வேண்டும். |
01:21 | Prompt, cpanக்கு மாறுவதைக் காணலாம். |
01:26 | உதாரணத்திற்கு, ஒரு CSV fileலில் இருந்து சில dataஐ extract செய்து, அதை என் Perl programல் பயன்படுத்த வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். |
01:35 | இதற்கு Text colon colon CSV moduleஐ பயன்படுத்துவோம். |
01:40 | பயன்படுத்துவதற்கு முன், Text colon colon CSV moduleஐ நிறுவ வேண்டும். |
01:46 | Terminalக்கு திரும்பவும். |
01:48 | டைப் செய்க: install Text colon colon CSV, பின் Enterஐ அழுத்தவும். |
01:55 | இந்த moduleக்கு தொடர்புடைய packageகள் நிறுவப்படுவதை நாம் காணலாம். |
02:00 | உங்கள் internetன் வேகத்தை பொருத்து, நிறுவதல் முழுமையடைய சிறிது நேரம் ஆகும். |
02:06 | இப்போது, module வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டதா என்பதை சரி பார்ப்போம். |
02:12 | Cpanல் இருந்து வெளியேற, 'q' keyஐ அழுத்தவும். |
02:16 | டைப் செய்க: "instmodsh", பின் Enterஐ அழுத்தவும். |
02:23 | நிறுவப்பட்ட moduleகளை பட்டியலிட டைப் செய்க: '1'. |
02:28 | நமது கணிணியில், module நிறுவப்பட்டுவிட்டதை , நாம் காணும், Text colon colon CSV காட்டும். |
02:38 | வெளியேற, 'q' keyஐ டைப் செய்யவும். |
02:41 | இப்போது, நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்தcandidates.csv ஐ திறக்கிறேன். |
02:47 | டைப் செய்க: gedit candidates.csv , பின் Enterஐ அழுத்தவும். |
02:53 | இங்கு, comma separatorஉடன், பெயர், வயது, பாலினம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களைக் காணலாம். |
03:02 | இந்த moduleஐ பயன்படுத்தும், நான் எழுதிய Perl programஐ கொண்டுள்ள csvtest.pl fileஐ திறக்கிறேன். |
03:11 | Csv fileலில் சேமிக்கப்பட்டிருக்கும் name field மதிப்புகளை இந்த program, extract செய்யும். |
03:18 | Use statement, Text colon colon CSV moduleஐ load செய்கிறது. |
03:23 | "Candidates.csv" fileஐ, dollar file என்ற local variableக்கு declare செய்துள்ளேன். |
03:29 | அடுத்த statement, fileஐ READ modeல் திறக்கும். |
03:34 | Text colon colon CSV, தான் class. newஉடன் constructorஐ call செய்வதன் மூலம் ஒரு instanceஐ நாம் உருவாக்கலாம். |
03:42 | Comma(,)ஐ, separator characterஆக அமைத்து, இந்த வரி ஒரு objectஐ உருவாக்குகிறது. |
03:48 | "Getline()" methodஐ பயன்படுத்தி, "while" loop, ஒவ்வொரு வரியாக dataஐ எடுக்கிறது. |
03:54 | ஒரு arrayக்கான referenceஐ, "getline" method, return செய்கிறது. |
03:58 | மதிப்பை எடுக்க, அதை dereference செய்ய வேண்டும். |
04:02 | Csv fileலில், பூஜ்ஜியத்தின் Index, name fieldஐ குறிக்கிறது. |
04:07 | Print statement, Csv fileலில் இருந்து பெயர்களை print செய்யும். |
04:11 | இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
04:15 | Programஐ இயக்குவோம். |
04:18 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl csvtest.pl, பின் Enterஐ அழுத்தவும். |
04:27 | இங்கு, outputஆக பெயர்களின் filedஐ காணலாம். |
04:32 | அடுத்து, Windows இயங்குதளத்தில், தேவையான CPAN moduleகளை download செய்யக் கற்போம். |
04:39 | Perl நிறுவப்படும் போது, PPM, அதாவது, Perl Package Moduleஉம் தானாகவே நிறுவப்படுகிறது. |
04:48 | PPMஐ பயன்படுத்த, உங்கள் கணிணியில் internet இணைப்பு இருக்க வேண்டும். |
04:53 | இந்த utility ஐ பின்வருவனவற்றிற்கு பயன்படுத்தலாம்: Windows இயங்குதளத்தில் moduleஐ தேட, தேவையான moduleகளை நிறுவ, நீக்க மற்றும் மேம்படுத்த. |
05:04 | இப்போது, command windowஐ, Windows OSல் திறப்போம். |
05:09 | Command windowஐ திறக்க, Start ஐ க்ளிக் செய்து, டைப் செய்க: "cmd", பின் Enterஐ அழுத்தவும். |
05:17 | உங்கள் கணிணியில், Perl நிறுவப்பட்டுவிட்டதா என்பதை சரி பார்க்க, டைப் செய்க: perl hyphen v . |
05:25 | உங்கள் கணிணியில் நிறுவப்பட்டPerl பதிப்பு எண்ணை நீங்கள் காண்பீர்கள். |
05:30 | Perl நிறுவப்படவில்லை எனில், இந்த வலைத்தளத்தில் உள்ள, Perl Installation டுடோரியலை பார்க்கவும். |
05:36 | Windows OSல் Perlஐ நிறுவ கற்போம். |
05:41 | “DOS” promptல், டைப் செய்க: ppm install Text colon colon CSV, பின் Enterஐ அழுத்தவும். |
05:49 | Module பெயர்கள் case sensitive என்பதை கவனிக்கவும். |
05:53 | நிறுவுதல் செயல்முறை தொடங்கி இருப்பதைக் காணலாம். நிறுவுதல் முடியும் வரை காத்திருக்கவும் |
06:00 | தற்போதைய வேலை செய்யும் directoryக்கு, candidates.csv மற்றும் csvtest.pl fileகளை நான் copy செய்துள்ளேன். |
06:08 | இப்போது Perl programஐ இயக்குவோம். |
06:11 | Command windowவில் டைப் செய்க: perl csvtest.pl, பின் Enterஐ அழுத்தவும். |
06:18 | Output இதோ. |
06:21 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கசொல்ல, |
06:26 | இந்த டுடோரியலில் நாம் தேவையான CPAN moduleகளை Linux மற்றும் Windows ல் download செய்ய கற்றோம் |
06:34 | இங்கே உங்களுக்கான பயிற்சி. Date colon colon Calc moduleஐ நிறுவ முயற்சிக்கவும். Moduleஐ தேட கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தை பயன்படுத்தவும். |
06:47 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
06:54 | Spoken Tutorial திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
07:03 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
07:06 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
07:18 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ..... நன்றி. |