PERL/C3/Sample-PERL-program/Tamil
From Script | Spoken-Tutorial
00:01 | மாதிரி PERL program குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், இதுவரை கற்றுள்ள பிரதான தலைப்புகளை, ஒரு மாதிரி PERL programல் சேர்க்கக் கற்போம். |
00:14 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 இயங்கு தளம், Perl 5.14.2 மற்றும் gedit Text Editor. |
00:25 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம். |
00:29 | முன்நிபந்தனையாக, Perl Programmingல் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும். |
00:34 | இல்லையெனில், அதற்கான Perl ஸ்போகன் டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும். |
00:39 | இந்த மாதிரி Perl program, ஓர் பகுதியின் , பல்வேறு வானிலை கணிப்பு அறிக்கைகளை outputஆக தரும். |
00:46 | இந்த program க்கு தேவையான dataஐ கொண்டிருக்கும் சிக்கலான data-structure அடங்கிய weather dot pm ஆனது, ஒரு module file ஆகும். |
00:54 | அறிக்கையை உருவாக்க, அது பல்வேறு functionகளை கொண்டிருக்கிறது. |
00:59 | Weather underscore report dot pl என்ற Perl program, இந்த module fileஐ பயன்படுத்தி, தேவையான outputஐ தருகிறது. |
01:08 | எங்கள் வலைத்தளத்தில், இந்த வீடியோவின் கீழ், அதன் code fileகள் இருக்கின்றன. |
01:13 | Code file linkல் இருக்கும் fileகளை தரவிறக்கி, unzip செய்யவும். |
01:18 | இப்போது, நமது மாதிரி Perl programஆன, Weather dot pmஐ காண்போம். |
01:24 | இந்த programல், அதற்கான code block, namespace Weatherன் கீழ் உள்ளது. |
01:29 | Package keywordஐ பயன்படுத்தி, Perl , namespace ஐ நடைமுறைப்படுத்துகிறது. |
01:34 | Main programக்கு முன், BEGIN block, compile செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. |
01:40 | Moduleகளின், functionகளையும், variableகளையும், userன் namespaceக்கு export செய்ய, export அனுமதிக்கிறது. |
01:48 | Export operation போது பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய variableகள், At the rate EXPORT மற்றும் at the rate EXPORT underscore OK ஆகும். |
01:57 | Moduleன் , subroutineகள் மற்றும் variableகளின் பட்டியலைAt the rate EXPORT கொண்டிருக்கும். |
02:03 | இவை caller namespaceக்கு export செய்யப்படும். |
02:07 | தேவையின் அடிப்படையில், At the rate EXPORT underscore OK, symbolகளின் exportஐ செய்கிறது. |
02:14 | வானிலை அறிக்கைக்கு தேவையான dataஐ கொண்டிருக்க, அதற்கான சிக்கலான data-structureகளை உருவாக்க, நான் இங்கு referenceகளை பயன்படுத்தி இருக்கிறேன். |
02:24 | $weather_report என்பது ஒரு hash reference. “place” மற்றும் “nstate”, scalar மதிப்புகளை கொண்டிருக்கும். |
02:32 | “Weekly” என்பது , hash referenceகளின் hash ஆகும். |
02:37 | ஒவ்வொரு வாரத்தின் நாளும் நான்கு keyகளை பெற்றுள்ளன- max underscore temp, min underscore temp, sunrise, sunset |
02:48 | “Record underscore time” என்பது , இரண்டு index மதிப்புகளை கொண்ட, ஒரு array reference ஆகும். |
02:54 | பல்வேறு optionகளின் வானிலை அறிக்கையை காட்ட, சில subroutineகளை நான் வைத்துள்ளேன். அவற்றை, ஒன்றன் பின் ஒன்றாகக் காண்போம். |
03:01 | Header தகவல்களான, அறிக்கையின் header, இடம், மாநிலம் மற்றும் தற்போதைய தேதியை, இந்த function print செய்கிறது. |
03:10 | அடுத்து, display underscore daily underscore report functionஐ காண்போம். |
03:16 | வாரநாளின் inputஐ பொறுத்து, தினசரி அறிக்கையை இந்த function, திரையில் print செய்கிறது. |
03:22 | Shift functionஐ பயன்படுத்தி, subroutineக்குள் pass செய்யப்பட்ட parameterஐ நாம் மீட்கிறோம். |
03:27 | Parameter மதிப்பின், முன்னும், பின்னும் இருக்கும் இடைவெளிகளை நீக்க, நான் trim() functionஐ பயன்படுத்தி இருக்கிறேன். |
03:34 | Trim() functionனுக்கான code இதோ. |
03:37 | கொடுக்கப்பட்டுள்ள inputன் lowercase versionஐ, lc() function, return செய்கிறது. |
03:42 | case-sensitivity ஐ தவிர்க்க இது பயன்படுத்தப்படுகிறது. |
03:45 | Main programல் இருந்து parameterஆக pass செய்யப்பட்ட வார-நாள், dollar week underscore day, என்ற local variableக்கு ஒதுக்கப்படுகிறது. |
03:55 | ஒரு குறிப்பிட்ட வார நாளுக்கு தொடர்புடைய dataஐ பின்வரும் print statementகள், print செய்கின்றன. |
04:01 | $weather underscore reportல், ஒரு மதிப்பை dereference செய்ய, arrow operatorஐ நாம் பயன்படுத்துகிறோம். |
04:09 | Referenceகளுடன் வேலை செய்யும் போது, நாம் dereference செய்கிற data type ஐ புரிந்து கொள்ள வேண்டும். |
04:15 | அது hashஆக இருந்தால், curly அடைப்புக் குறிகளுக்குள், keyஐ pass செய்ய வேண்டும். |
04:20 | அது arrayஆக இருந்தால்,index valueகளுடன், சதுர அடைப்புக் குறிகளை பயன்படுத்த வேண்டும். |
04:26 | Perlன் return function ஒரு மதிப்பை return செய்கிறது. |
04:29 | இதை, main programல் உள்ள functionனின் நிலையை சரி பார்க்க பயன்படுத்தலாம். |
04:36 | அடுத்த function, write underscore daily underscore report ஆகும். |
04:40 | இந்தfunction, ஒரு fileக்கு, report outputஐ print செய்யும். |
04:45 | Greater than symbolஉடன் கூடிய open function, WRITE modeஐ வரையறுக்கும். |
04:50 | வார நாள் பெயர் மற்றும் dot txt ' extentionஉடன், fileன் பெயர் உருவாக்கப்படுகிறது. |
04:56 | ஒரு குறிப்பிட்ட வார நாளுக்கு தொடர்புடைய dataஐ, ஒரு fileக்கு, print statementகள், print செய்கின்றன. |
05:02 | இது வாரத்திற்கு ஒரு முறை அறிக்கையை print செய்கிறது. |
05:05 | Hash referenceன், ஒவ்வொரு வார நாளுக்குள் loop செய்ய, ஒரு foreach loopஐ declare செய்துள்ளேன். |
05:11 | Hash referenceஐ குறியிட curly அடைப்புக் குறிகளையும், dereference செய்ய arrow operatorஐயும் பயன்படுத்தியுள்ளேன். |
05:18 | Hashன் keyகளுக்குள் loop செய்ய, keys எனும் in-built functionஐ நான் பயன்படுத்துகிறேன். |
05:23 | Display underscore daily underscore report function , hashன் ஒவ்வொரு elementஐயும் print செய்யும். |
05:30 | Weather dot pm என்ற module fileஐ பயன்படுத்தும், weather underscore report dot pl என்ற Perl programஐ காண்போம். |
05:40 | இங்கு, பொதுவான programming தவறுகளை தவிர்க்க, compiler flagகளான, use strict மற்றும் use warnings பயன்படுத்தப்படுகின்றன. |
05:48 | Use Weather semicolon. இங்கு, Weather என்பது இந்த programல் நான் பயன்படுத்தி இருக்கும் moduleன் பெயராகும். |
05:56 | இந்த programக்கு தேவையான functionகள், இந்த moduleலில் சேமிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். |
06:03 | இங்கு dot pm file extentionஐ தர வேண்டிய அவசியமில்லை. |
06:08 | இந்த programல், கொடுக்கப்பட்டுள்ள optionகளை பொறுத்து வெவ்வேறு reportகளை நான் print செய்வேன். |
06:14 | Print செய்ய, user ஒரு optionஐ enter செய்ய வேண்டும்: ஒரு குறிப்பிட்ட வார நாளின் தினசரி வானிலை அறிக்கை, ஒரு ouput fileக்கு தர ஒரு குறிப்பிட்ட வார நாளின் தினசரி வானிலை அறிக்கை, வாராந்திர வானிலை அறிக்கை. |
06:27 | Option '1'ஐ டைப் செய்தால், வாரத்தின் நாளை enter செய்யக் கேட்கும். |
06:32 | diamond operator, STDIN, அதாவது keyboardல் இருந்து, read செய்யும். |
06:38 | உதாரணத்திற்கு, user monday என enter செய்தால், local variableஆன, dollar dayoption என்ற variableக்கு அது ஒதுக்கப்படுகிறது. |
06:47 | அடுத்து, நாம் இரண்டு functionகளை call செய்வதை காணலாம்- display_header() மற்றும் display_daily_report(). |
06:56 | இந்த fileலில், “use Weather” statementஉடன், எல்லா functionகளையும், Weather dot pmல், நாம் export செய்துள்ளோம். |
07:03 | அதனால், colon colon (::)package qualifierஐ பயன்படுத்தி, ஒரு packageன் உள் இருக்கும் எல்லா functionகளையும் பார்க்கத் தேவையில்லை. |
07:10 | இப்போது, அடுத்த optionஐ காண்போம். |
07:13 | Option 2ஐ டைப் செய்தால், ஒரு வாரத்தின் நாளை enter செய்ய, userஐ தூண்டும். |
07:19 | Function write underscore daily underscore reportக்கு, $dayoption, input parameterஆக pass செய்யப்படுகிறது. |
07:27 | Functionலிருந்து return செய்யப்படும் மதிப்பு, dollar result என்ற variableலில் சேமிக்கப்படுகிறது. |
07:33 | Text file அல்லது outputஐ சரி பார்க்க, Print statement, userஐ கேட்கிறது. |
07:38 | Output fileஆக, வாரத்தின் நாள் dot txt, என்று file பெயர் உருவாக்கப்படுகிறது. |
07:46 | Option 3ஐ டைப் செய்தால், மொத்த வாரத்திற்கான வானிலை அறிக்கையை print செய்யும். |
07:51 | Display underscore weekly underscore report, என்பது வாராந்திர அறிக்கையின் function பெயர் ஆகும். |
07:57 | குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, ஒரு கிடைமட்ட வரியை, print statement வரைகிறது. |
08:02 | Reportக்கு ஒரு நல்ல பார்வையை வழங்குவதற்கே இது. |
08:06 | இறுதியாக, option 4ஆக இருந்தால், அது programஐ விட்டு வெளியேறும். |
08:11 | குறிப்பிட்ட optionஐ தவிர, வேறொன்றை கொடுத்தால், print statement, “Incorrect option” எனக் கூறும். |
08:19 | இங்கு, '0'ன் exit மதிப்பு , program வெற்றிகரமாக இயக்கப்பட்டிருப்பதை குறிக்கும். |
08:25 | Exit மதிப்பு '0' அல்லாமல் இருப்பின், ஏதோ ஒரு விதமான error ஏற்பட்டுவிட்டது என்று பொருள். |
08:31 | இப்போது Programஐ இயக்குவோம். |
08:34 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl weather underscore report dot pl, பின் Enterஐ அழுத்தவும். |
08:41 | திரையில் நான்கு optionகளைக் காணலாம். |
08:45 | டைப் செய்க: '1', பின் Enterஐ அழுத்தவும். |
08:48 | வாரத்தின் ஒரு நாளை enter செய்ய, நாம் தூண்டப்படுகிறோம். "monday" என கொடுத்து பின் Enterஐ அழுத்துகிறேன் |
08:56 | Function display underscore header()'ல் இருந்து உருவாக்கப்பட்ட header output இதுவே. |
09:02 | இப்போது, mondayன் வானிலை அறிக்கையை காணலாம். |
09:06 | இப்போது, மற்ற optionகளை காட்ட, programஐ மீண்டும் இயக்குகிறேன். |
09:13 | டைப் செய்க: '2', பின் Enterஐ அழுத்தவும். |
09:17 | Promptல், ஏதேனும் வார நாளை டைப் செய்ய வேண்டும். நான் "Wednesday"ஐ டைப் செய்து , பின் Enterஐ அழுத்துகிறேன். |
09:25 | "Please check the file wednesday dot txt for report output" என்ற messageஐ காணலாம். |
09:32 | இந்த text fileக்கு, output எழுதப்பட்டிருக்கிறது. Fileஐ திறந்து, contentகளை சரி பார்ப்போம். |
09:38 | டைப் செய்க: gedit wednesday dot txt, பின் Enterஐ அழுத்தவும். |
09:44 | 'Txt' extentionஉடன், enter செய்யப்பட்ட வார நாளின் பெயருடன், output file உருவாக்கப்படுகிறது. |
09:51 | இப்போது, அடுத்த optionஐ சரி பார்ப்போம். |
09:54 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl weather underscore report dot pl |
10:00 | டைப் செய்க: '3' |
10:04 | இம்முறை, நாம் வாராந்திர வானிலை அறிக்கையை காணலாம். |
10:08 | Hash keyகள் மற்றும் hash valueகள் , சீரற்ற வரிசையில் சேமிக்கப்படுகின்றன. |
10:13 | அதனால் காட்டப்படும் output, அவைகள் சேர்க்கப்பட்ட வரிசைக்கு தொடர்புடையது அல்ல. |
10:19 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். , |
10:24 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில், நாம் முந்தைய டுடோரியலின் பிரதான தலைப்புகளை சேர்த்து, ஒரு மாதிரி PERL programஐ பார்த்தோம். |
10:32 | பயிற்சியாக, employee salary, designation, department, leave_balance விவரங்களைக் காட்ட, employee underscore report.pl என்ற இது போன்ற ஒரு PERL programஐ எழுதவும். |
10:45 | Inputஆக, Employee ID அல்லது Employee nameஐ pass செய்யவும். |
10:50 | Module Employee dot pm fileலில், தேவையான functionகளை எழுதவும். |
10:56 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
11:03 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:12 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
11:25 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |