PERL/C3/Sample-PERL-program/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 மாதிரி PERL program குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், இதுவரை கற்றுள்ள பிரதான தலைப்புகளை, ஒரு மாதிரி PERL programல் சேர்க்கக் கற்போம்.
00:14 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 இயங்கு தளம், Perl 5.14.2 மற்றும் gedit Text Editor.
00:25 உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம்.
00:29 முன்நிபந்தனையாக, Perl Programmingல் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும்.
00:34 இல்லையெனில், அதற்கான Perl ஸ்போகன் டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும்.
00:39 இந்த மாதிரி Perl program, ஓர் பகுதியின் , பல்வேறு வானிலை கணிப்பு அறிக்கைகளை outputஆக தரும்.
00:46 இந்த program க்கு தேவையான dataஐ கொண்டிருக்கும் சிக்கலான data-structure அடங்கிய weather dot pm ஆனது, ஒரு module file ஆகும்.
00:54 அறிக்கையை உருவாக்க, அது பல்வேறு functionகளை கொண்டிருக்கிறது.
00:59 Weather underscore report dot pl என்ற Perl program, இந்த module fileஐ பயன்படுத்தி, தேவையான outputஐ தருகிறது.
01:08 எங்கள் வலைத்தளத்தில், இந்த வீடியோவின் கீழ், அதன் code fileகள் இருக்கின்றன.
01:13 Code file linkல் இருக்கும் fileகளை தரவிறக்கி, unzip செய்யவும்.
01:18 இப்போது, நமது மாதிரி Perl programஆன, Weather dot pmஐ காண்போம்.
01:24 இந்த programல், அதற்கான code block, namespace Weatherன் கீழ் உள்ளது.
01:29 Package keywordஐ பயன்படுத்தி, Perl , namespace ஐ நடைமுறைப்படுத்துகிறது.
01:34 Main programக்கு முன், BEGIN block, compile செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.
01:40 Moduleகளின், functionகளையும், variableகளையும், userன் namespaceக்கு export செய்ய, export அனுமதிக்கிறது.
01:48 Export operation போது பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய variableகள், At the rate EXPORT மற்றும் at the rate EXPORT underscore OK ஆகும்.
01:57 Moduleன் , subroutineகள் மற்றும் variableகளின் பட்டியலைAt the rate EXPORT கொண்டிருக்கும்.
02:03 இவை caller namespaceக்கு export செய்யப்படும்.
02:07 தேவையின் அடிப்படையில், At the rate EXPORT underscore OK, symbolகளின் exportஐ செய்கிறது.
02:14 வானிலை அறிக்கைக்கு தேவையான dataஐ கொண்டிருக்க, அதற்கான சிக்கலான data-structureகளை உருவாக்க, நான் இங்கு referenceகளை பயன்படுத்தி இருக்கிறேன்.
02:24 $weather_report என்பது ஒரு hash reference. “place” மற்றும் “nstate”, scalar மதிப்புகளை கொண்டிருக்கும்.
02:32 Weekly” என்பது , hash referenceகளின் hash ஆகும்.
02:37 ஒவ்வொரு வாரத்தின் நாளும் நான்கு keyகளை பெற்றுள்ளன- max underscore temp, min underscore temp, sunrise, sunset
02:48 Record underscore time” என்பது , இரண்டு index மதிப்புகளை கொண்ட, ஒரு array reference ஆகும்.
02:54 பல்வேறு optionகளின் வானிலை அறிக்கையை காட்ட, சில subroutineகளை நான் வைத்துள்ளேன். அவற்றை, ஒன்றன் பின் ஒன்றாகக் காண்போம்.
03:01 Header தகவல்களான, அறிக்கையின் header, இடம், மாநிலம் மற்றும் தற்போதைய தேதியை, இந்த function print செய்கிறது.
03:10 அடுத்து, display underscore daily underscore report functionஐ காண்போம்.
03:16 வாரநாளின் inputஐ பொறுத்து, தினசரி அறிக்கையை இந்த function, திரையில் print செய்கிறது.
03:22 Shift functionஐ பயன்படுத்தி, subroutineக்குள் pass செய்யப்பட்ட parameterஐ நாம் மீட்கிறோம்.
03:27 Parameter மதிப்பின், முன்னும், பின்னும் இருக்கும் இடைவெளிகளை நீக்க, நான் trim() functionஐ பயன்படுத்தி இருக்கிறேன்.
03:34 Trim() functionனுக்கான code இதோ.
03:37 கொடுக்கப்பட்டுள்ள inputன் lowercase versionஐ, lc() function, return செய்கிறது.
03:42 case-sensitivity ஐ தவிர்க்க இது பயன்படுத்தப்படுகிறது.
03:45 Main programல் இருந்து parameterஆக pass செய்யப்பட்ட வார-நாள், dollar week underscore day, என்ற local variableக்கு ஒதுக்கப்படுகிறது.
03:55 ஒரு குறிப்பிட்ட வார நாளுக்கு தொடர்புடைய dataஐ பின்வரும் print statementகள், print செய்கின்றன.
04:01 $weather underscore reportல், ஒரு மதிப்பை dereference செய்ய, arrow operatorஐ நாம் பயன்படுத்துகிறோம்.
04:09 Referenceகளுடன் வேலை செய்யும் போது, நாம் dereference செய்கிற data type ஐ புரிந்து கொள்ள வேண்டும்.
04:15 அது hashஆக இருந்தால், curly அடைப்புக் குறிகளுக்குள், keyஐ pass செய்ய வேண்டும்.
04:20 அது arrayஆக இருந்தால்,index valueகளுடன், சதுர அடைப்புக் குறிகளை பயன்படுத்த வேண்டும்.
04:26 Perlன் return function ஒரு மதிப்பை return செய்கிறது.
04:29 இதை, main programல் உள்ள functionனின் நிலையை சரி பார்க்க பயன்படுத்தலாம்.
04:36 அடுத்த function, write underscore daily underscore report ஆகும்.
04:40 இந்தfunction, ஒரு fileக்கு, report outputஐ print செய்யும்.
04:45 Greater than symbolஉடன் கூடிய open function, WRITE modeஐ வரையறுக்கும்.
04:50 வார நாள் பெயர் மற்றும் dot txt ' extentionஉடன், fileன் பெயர் உருவாக்கப்படுகிறது.
04:56 ஒரு குறிப்பிட்ட வார நாளுக்கு தொடர்புடைய dataஐ, ஒரு fileக்கு, print statementகள், print செய்கின்றன.
05:02 இது வாரத்திற்கு ஒரு முறை அறிக்கையை print செய்கிறது.
05:05 Hash referenceன், ஒவ்வொரு வார நாளுக்குள் loop செய்ய, ஒரு foreach loopஐ declare செய்துள்ளேன்.
05:11 Hash referenceஐ குறியிட curly அடைப்புக் குறிகளையும், dereference செய்ய arrow operatorஐயும் பயன்படுத்தியுள்ளேன்.
05:18 Hashன் keyகளுக்குள் loop செய்ய, keys எனும் in-built functionஐ நான் பயன்படுத்துகிறேன்.
05:23 Display underscore daily underscore report function , hashன் ஒவ்வொரு elementஐயும் print செய்யும்.
05:30 Weather dot pm என்ற module fileஐ பயன்படுத்தும், weather underscore report dot pl என்ற Perl programஐ காண்போம்.
05:40 இங்கு, பொதுவான programming தவறுகளை தவிர்க்க, compiler flagகளான, use strict மற்றும் use warnings பயன்படுத்தப்படுகின்றன.
05:48 Use Weather semicolon. இங்கு, Weather என்பது இந்த programல் நான் பயன்படுத்தி இருக்கும் moduleன் பெயராகும்.
05:56 இந்த programக்கு தேவையான functionகள், இந்த moduleலில் சேமிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.
06:03 இங்கு dot pm file extentionஐ தர வேண்டிய அவசியமில்லை.
06:08 இந்த programல், கொடுக்கப்பட்டுள்ள optionகளை பொறுத்து வெவ்வேறு reportகளை நான் print செய்வேன்.
06:14 Print செய்ய, user ஒரு optionஐ enter செய்ய வேண்டும்: ஒரு குறிப்பிட்ட வார நாளின் தினசரி வானிலை அறிக்கை, ஒரு ouput fileக்கு தர ஒரு குறிப்பிட்ட வார நாளின் தினசரி வானிலை அறிக்கை, வாராந்திர வானிலை அறிக்கை.
06:27 Option '1'ஐ டைப் செய்தால், வாரத்தின் நாளை enter செய்யக் கேட்கும்.
06:32 diamond operator, STDIN, அதாவது keyboardல் இருந்து, read செய்யும்.
06:38 உதாரணத்திற்கு, user monday என enter செய்தால், local variableஆன, dollar dayoption என்ற variableக்கு அது ஒதுக்கப்படுகிறது.
06:47 அடுத்து, நாம் இரண்டு functionகளை call செய்வதை காணலாம்- display_header() மற்றும் display_daily_report().
06:56 இந்த fileலில், “use Weather” statementஉடன், எல்லா functionகளையும், Weather dot pmல், நாம் export செய்துள்ளோம்.
07:03 அதனால், colon colon (::)package qualifierஐ பயன்படுத்தி, ஒரு packageன் உள் இருக்கும் எல்லா functionகளையும் பார்க்கத் தேவையில்லை.
07:10 இப்போது, அடுத்த optionஐ காண்போம்.
07:13 Option 2ஐ டைப் செய்தால், ஒரு வாரத்தின் நாளை enter செய்ய, userஐ தூண்டும்.
07:19 Function write underscore daily underscore reportக்கு, $dayoption, input parameterஆக pass செய்யப்படுகிறது.
07:27 Functionலிருந்து return செய்யப்படும் மதிப்பு, dollar result என்ற variableலில் சேமிக்கப்படுகிறது.
07:33 Text file அல்லது outputஐ சரி பார்க்க, Print statement, userஐ கேட்கிறது.
07:38 Output fileஆக, வாரத்தின் நாள் dot txt, என்று file பெயர் உருவாக்கப்படுகிறது.
07:46 Option 3ஐ டைப் செய்தால், மொத்த வாரத்திற்கான வானிலை அறிக்கையை print செய்யும்.
07:51 Display underscore weekly underscore report, என்பது வாராந்திர அறிக்கையின் function பெயர் ஆகும்.
07:57 குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, ஒரு கிடைமட்ட வரியை, print statement வரைகிறது.
08:02 Reportக்கு ஒரு நல்ல பார்வையை வழங்குவதற்கே இது.
08:06 இறுதியாக, option 4ஆக இருந்தால், அது programஐ விட்டு வெளியேறும்.
08:11 குறிப்பிட்ட optionஐ தவிர, வேறொன்றை கொடுத்தால், print statement, “Incorrect option” எனக் கூறும்.
08:19 இங்கு, '0'ன் exit மதிப்பு , program வெற்றிகரமாக இயக்கப்பட்டிருப்பதை குறிக்கும்.
08:25 Exit மதிப்பு '0' அல்லாமல் இருப்பின், ஏதோ ஒரு விதமான error ஏற்பட்டுவிட்டது என்று பொருள்.
08:31 இப்போது Programஐ இயக்குவோம்.
08:34 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl weather underscore report dot pl, பின் Enterஐ அழுத்தவும்.
08:41 திரையில் நான்கு optionகளைக் காணலாம்.
08:45 டைப் செய்க: '1', பின் Enterஐ அழுத்தவும்.
08:48 வாரத்தின் ஒரு நாளை enter செய்ய, நாம் தூண்டப்படுகிறோம். "monday" என கொடுத்து பின் Enterஐ அழுத்துகிறேன்
08:56 Function display underscore header()'ல் இருந்து உருவாக்கப்பட்ட header output இதுவே.
09:02 இப்போது, mondayன் வானிலை அறிக்கையை காணலாம்.
09:06 இப்போது, மற்ற optionகளை காட்ட, programஐ மீண்டும் இயக்குகிறேன்.
09:13 டைப் செய்க: '2', பின் Enterஐ அழுத்தவும்.
09:17 Promptல், ஏதேனும் வார நாளை டைப் செய்ய வேண்டும். நான் "Wednesday"ஐ டைப் செய்து , பின் Enterஐ அழுத்துகிறேன்.
09:25 "Please check the file wednesday dot txt for report output" என்ற messageஐ காணலாம்.
09:32 இந்த text fileக்கு, output எழுதப்பட்டிருக்கிறது. Fileஐ திறந்து, contentகளை சரி பார்ப்போம்.
09:38 டைப் செய்க: gedit wednesday dot txt, பின் Enterஐ அழுத்தவும்.
09:44 'Txt' extentionஉடன், enter செய்யப்பட்ட வார நாளின் பெயருடன், output file உருவாக்கப்படுகிறது.
09:51 இப்போது, அடுத்த optionஐ சரி பார்ப்போம்.
09:54 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl weather underscore report dot pl
10:00 டைப் செய்க: '3'
10:04 இம்முறை, நாம் வாராந்திர வானிலை அறிக்கையை காணலாம்.
10:08 Hash keyகள் மற்றும் hash valueகள் , சீரற்ற வரிசையில் சேமிக்கப்படுகின்றன.
10:13 அதனால் காட்டப்படும் output, அவைகள் சேர்க்கப்பட்ட வரிசைக்கு தொடர்புடையது அல்ல.
10:19 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். ,
10:24 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில், நாம் முந்தைய டுடோரியலின் பிரதான தலைப்புகளை சேர்த்து, ஒரு மாதிரி PERL programஐ பார்த்தோம்.
10:32 பயிற்சியாக, employee salary, designation, department, leave_balance விவரங்களைக் காட்ட, employee underscore report.pl என்ற இது போன்ற ஒரு PERL programஐ எழுதவும்.
10:45 Inputஆக, Employee ID அல்லது Employee nameஐ pass செய்யவும்.
10:50 Module Employee dot pm fileலில், தேவையான functionகளை எழுதவும்.
10:56 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
11:03 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:12 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
11:25 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst