PERL/C3/File-Handling/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:44, 1 March 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 PERLலில் Fileஐ கையாளுதல் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Read modeல் ஒரு fileஐ திறப்பது, ஒரு fileக்கு எழுதுவது, Append modeல் ஒரு fileஐ திறப்பது, File handleஐ மூடுவது
00:17 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04, Perl 5.14.2 மற்றும் gedit Text Editor.
00:28 உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம்.
00:32 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, Perl Programmingல் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும்.
00:37 இல்லையெனில், அதற்கான Perl ஸ்போகன் டுடோரியல்களுக்கு, spoken tutorial வலைத்தளத்தை பார்க்கவும்.
00:43 Perl fileகளுடன் நாம் செய்யக்கூடிய அடிப்படை செயல்பாடுகளாவன: Fileஐ திறப்பது, Fileலில் இருந்து படிப்பது, Fileக்கு எழுதுவது மற்றும் Fileஐ மூடுவது
00:54 முன்னிருப்பான file handleகளாவன: STDIN, STDOUT, STDERR
01:02 Open functionக்கு இதுவே syntax
01:05 syntaxல், FILEHANDLE என்பது open function ஆல் return செய்யப்பட்ட file handle.
01:11 Fileஐ திறப்பதற்கான பாங்கை MODE குறிக்கிறது. உதாரணத்திற்கு: read, write, ஆகியவை.
01:18 படிப்பதற்கு அல்லது எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் உண்மையான file பெயர், EXPR ஆகும். இங்கு, “First.txt” என்பது file பெயர் ஆகும்.
01:27 இங்கு, காட்டப்பட்டுள்ளபடி, open functionஐ எழுத வேறொரு வழியும் உண்டு.
01:32 ஏற்கெனவே உள்ள fileஐ திறக்கவும், அதில் இருந்து dataஐ படிக்கவும் கற்று கொள்வோம்.
01:38 முதலில், ஒரு text fileஐ உருவாக்கி, சில dataஐ சேமிப்போம். Terminal'க்கு சென்று, டைப் செய்க: gedit first.txt, பின் Enterஐ அழுத்தவும்.
01:51 பின்வரும் textஐ first dot txt fileலில் டைப் செய்யவும்.
01:55 Fileஐ சேமித்து, geditஐ மூடவும்.
01:59 'First.txt' fileஐ திறந்து, அதன் contentஐ படிக்கும் ஒரு Perl programஐ காண்போம்.
02:07 நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த 'openfile.pl' என்ற மாதிரி programஐ திறக்கிறேன்.
02:13 டைப் செய்க: gedit openfile dot pl ampersand, பின் Enterஐ அழுத்தவும்.
02:19 Openfile dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும்.
02:25 இப்போது codeஐ புரிந்து கொள்வோம்.
02:28 படிப்பதற்கு ஒரு fileஐ open function திறக்கிறது.
02:33 முதல் parameterஆன DATA, எதிர்காலத்தில் fileஐ பார்ப்பதற்கு Perlஐ அனுமதிக்கும் file handle ஆகும்.
02:40 இரண்டாவது parameterஆன less than symbol, READ modeஐ குறிக்கும்.
02:44 Modeஐ குறிப்பிடவில்லையெனில், முன்னிருப்பாக file, “READ” modeல் திறக்கப்படும்.
02:50 மூன்றாவது parameterஆன 'first.txt', படிக்கப்பட வேண்டிய dataஐ கொண்டிருக்கும் file பெயர் ஆகும்.
02:57 'first.txt' என்ற file இல்லையெனில் என்ன ஆகும்?
03:02 Dollar exclamation ($!)variableலில் சேமிக்கப்பட்டிருக்கும், அதற்கான error messageஉடன் script செயல்பாட்டை இழக்கும்.
03:08 While loop ஒவ்வொரு வரியாகப் படித்து, எல்லா வரிகளையும் படித்து முடிக்கும் வரை DATA fileலின் உள் loop செய்யும்.
03:17 தற்போதைய வரியின் contentகளை Print dollar underscore ('$_') variable printசெய்யும்.
03:22 இறுதியாக, நாம் open statementல் கொடுத்த FILEHANDLE பெயரை வைத்து fileஐ மூடவும்.
03:29 ஒரு fileஐ மூடுவது, தற்செயலான file மாற்றங்கள் அல்லது content overwrite ஆவதை தடுக்கிறது.
03:36 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
03:40 Programஐ இயக்குவோம்.
03:42 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl openfile dot pl, பின் Enterஐ அழுத்தவும்.
03:51 இங்கு காட்டப்பட்டுள்ளபடி, output தெரியும்.
03:54 நாம் முன்பு first dot txt fileலில் பார்த்த அதே content தான் இது.
03:59 அடுத்து, ஒரு fileன் உள் dataஐ எழுதக் கற்போம்.
04:03 Greater than (>) குறியுடன் கூடிய open statement, WRITE modeஐ வரையறுக்கிறது.
04:08 Filename என்பது dataஐ எழுத வேண்டிய fileன் பெயரைக் குறிக்கும்.
04:13 நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த 'writefile.pl' என்ற மாதிரி programஐ திறக்கிறேன்.
04:19 Terminalக்கு திரும்பவும்.
04:21 இப்போது டைப் செய்க: gedit writefile dot pl ampersand', பின் Enterஐ அழுத்தவும்.
04:29 Writefile dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும்.
04:34 இப்போது codeஐ விளக்குகிறேன்.
04:37 Open function, 'second.txt' என்ற fileஐ "write" modeல் திறக்கிறது.
04:44 Fileன் பெயருக்கு முன் வரும் Greater than குறி, "write" modeஐ குறிக்கிறது.
04:49 முதல் parameterஆன "FILE1" தான் FILEHANDLE.
04:53 FILEHANDLE, அதாவது 'FILE1'க்கு, கொடுக்கப்பட்டுள்ள textஐ print function print செய்கிறது.
04:59 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
05:03 Programஐ இயக்குவோம்.
05:05 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl writefile dot pl, பின் Enterஐ அழுத்தவும்.
05:12 இப்போது, 'second.txt' fileலில் text எழுதப்பட்டுவிட்டதா என சரி பார்ப்போம்.
05:18 டைப் செய்க: gedit second.txt, பின் Enterஐ அழுத்தவும்.
05:23 'Second.txt' fileலில், "Working with files makes data storage and retrieval a simple task!" என்ற textஐ காண முடியும்.
05:32 'Second.txt' fileஐ மூடுவோம்.
05:35 அதே fileஐ, "write" modeல் திறந்தால் என்ன ஆகும்? அதைப் பார்ப்போம்.
05:41 'Writefile.pl'லில் முந்தைய print statementஐ comment செய்யவும்.
05:46 கீழே கொடுக்கப்பட்டுள்ள print commandஐ சேர்க்கவும்.
05:48 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். Programஐ இயக்குவோம்.
05:54 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl writefile dot pl, பின் Enterஐ அழுத்தவும்.
06:00 இப்போது, மீண்டும், 'second.txt' fileஐ சரி பார்ப்போம்.
06:04 டைப் செய்க: "gedit second.txt", பின் Enterஐ அழுத்தவும்.
06:09 “Greater than symbol (>) overwrites the content of the file!" என்ற outputஐ காண முடியும்.
06:14 'Second.txt' fileன் முந்தைய contentகள் overwrite ஆகிவிட்டன.
06:19 இது ஏனெனில், நாம் fileஐ மீண்டும் "write" modeல் திறந்துவிட்டோம்.
06:24 'Second.txt' fileஐ மூடவும்.
06:27 அடுத்து, ஏற்கெனவே உள்ள fileக்கு dataஐ append செய்யக் கற்போம்.
06:32 இரண்டு greater than குறிகளுடன் கூடிய open statement, "APPEND" modeஐ குறிக்கிறது.
06:38 இப்போது, மீண்டும், writefile dot plஐ , geditல் திறக்கிறேன்.
06:44 Open statementல் இரண்டு greater than குறிகளை டைப் செய்யவும். இது, file, append modeல் இருக்கிறது என்பதனை குறிக்கிறது.
06:52 முந்தைய print statement ஏற்கெனவே இயக்கப்பட்டுவிட்டதால், அதை Comment செய்யவும்.
06:57 ஏற்கெனவே உள்ள dataஉடன் append செய்ய, இந்த வரியைச் சேர்க்கவும்: print FILE1 இரட்டை மேற்கோள்களுக்குள் "Two greater than symbols (>>) open the file in append mode".
07:07 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
07:11 Programஐ இயக்குவோம்.
07:14 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl writefile dot pl, பின் Enterஐ அழுத்தவும்.
07:20 இப்போது, 'second.txt' fileக்கு text, append செய்யப்பட்டுவிட்டதா என சரி பார்ப்போம்.
07:26 டைப் செய்க: "gedit second.txt", பின் Enterஐ அழுத்தவும்.
07:31 நமது 'second.txt' fileக்கு text, append செய்யப்பட்டு இருப்பதைக் காணலாம்.
07:36 'Second.txt' fileஐ மூடவும்.
07:39 அதே போல், வேறு பல modeகளும் உண்டு.
07:42 இந்த முறைகளை நீங்களே முயற்சி செய்து நடப்பதை புரிந்து கொள்ளவும்.
07:49 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கசொல்ல,
07:53 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Read modeல் ஒரு fileஐ திறப்பது, ஒரு fileக்கு எழுதுவது, Append modeல் ஒரு fileஐ திறப்பது மற்றும் File handleஐ மூடுவது
08:03 இங்கே உங்களுக்கான பயிற்சி. 'writefile.pl' programல் file attributeஐ, "plus greater than"க்கு மாற்றவும்.
08:11 Programஐ சேமித்து இயக்கவும்
08:14 Outputஐ காண 'second.txt' fileஐ திறக்கவும்.
08:17 File attribute ஆன "plus greater than"ன் பயன்பாட்டை ஆய்வு செய்யவும்.
08:22 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
08:29 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
08:37 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
08:41 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
08:48 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
08:53 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst