PERL/C3/File-Handling/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | PERLலில் Fileஐ கையாளுதல் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Read modeல் ஒரு fileஐ திறப்பது, ஒரு fileக்கு எழுதுவது, Append modeல் ஒரு fileஐ திறப்பது, File handleஐ மூடுவது |
00:17 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04, Perl 5.14.2 மற்றும் gedit Text Editor. |
00:28 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம். |
00:32 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, Perl Programmingல் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும். |
00:37 | இல்லையெனில், அதற்கான Perl ஸ்போகன் டுடோரியல்களுக்கு, spoken tutorial வலைத்தளத்தை பார்க்கவும். |
00:43 | Perl fileகளுடன் நாம் செய்யக்கூடிய அடிப்படை செயல்பாடுகளாவன: Fileஐ திறப்பது, Fileலில் இருந்து படிப்பது, Fileக்கு எழுதுவது மற்றும் Fileஐ மூடுவது |
00:54 | முன்னிருப்பான file handleகளாவன: STDIN, STDOUT, STDERR |
01:02 | Open functionக்கு இதுவே syntax |
01:05 | syntaxல், FILEHANDLE என்பது open function ஆல் return செய்யப்பட்ட file handle. |
01:11 | Fileஐ திறப்பதற்கான பாங்கை MODE குறிக்கிறது. உதாரணத்திற்கு: read, write, ஆகியவை. |
01:18 | படிப்பதற்கு அல்லது எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் உண்மையான file பெயர், EXPR ஆகும். இங்கு, “First.txt” என்பது file பெயர் ஆகும். |
01:27 | இங்கு, காட்டப்பட்டுள்ளபடி, open functionஐ எழுத வேறொரு வழியும் உண்டு. |
01:32 | ஏற்கெனவே உள்ள fileஐ திறக்கவும், அதில் இருந்து dataஐ படிக்கவும் கற்று கொள்வோம். |
01:38 | முதலில், ஒரு text fileஐ உருவாக்கி, சில dataஐ சேமிப்போம். Terminal'க்கு சென்று, டைப் செய்க: gedit first.txt, பின் Enterஐ அழுத்தவும். |
01:51 | பின்வரும் textஐ first dot txt fileலில் டைப் செய்யவும். |
01:55 | Fileஐ சேமித்து, geditஐ மூடவும். |
01:59 | 'First.txt' fileஐ திறந்து, அதன் contentஐ படிக்கும் ஒரு Perl programஐ காண்போம். |
02:07 | நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த 'openfile.pl' என்ற மாதிரி programஐ திறக்கிறேன். |
02:13 | டைப் செய்க: gedit openfile dot pl ampersand, பின் Enterஐ அழுத்தவும். |
02:19 | Openfile dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். |
02:25 | இப்போது codeஐ புரிந்து கொள்வோம். |
02:28 | படிப்பதற்கு ஒரு fileஐ open function திறக்கிறது. |
02:33 | முதல் parameterஆன DATA, எதிர்காலத்தில் fileஐ பார்ப்பதற்கு Perlஐ அனுமதிக்கும் file handle ஆகும். |
02:40 | இரண்டாவது parameterஆன less than symbol, READ modeஐ குறிக்கும். |
02:44 | Modeஐ குறிப்பிடவில்லையெனில், முன்னிருப்பாக file, “READ” modeல் திறக்கப்படும். |
02:50 | மூன்றாவது parameterஆன 'first.txt', படிக்கப்பட வேண்டிய dataஐ கொண்டிருக்கும் file பெயர் ஆகும். |
02:57 | 'first.txt' என்ற file இல்லையெனில் என்ன ஆகும்? |
03:02 | Dollar exclamation ($!)variableலில் சேமிக்கப்பட்டிருக்கும், அதற்கான error messageஉடன் script செயல்பாட்டை இழக்கும். |
03:08 | While loop ஒவ்வொரு வரியாகப் படித்து, எல்லா வரிகளையும் படித்து முடிக்கும் வரை DATA fileலின் உள் loop செய்யும். |
03:17 | தற்போதைய வரியின் contentகளை Print dollar underscore ('$_') variable printசெய்யும். |
03:22 | இறுதியாக, நாம் open statementல் கொடுத்த FILEHANDLE பெயரை வைத்து fileஐ மூடவும். |
03:29 | ஒரு fileஐ மூடுவது, தற்செயலான file மாற்றங்கள் அல்லது content overwrite ஆவதை தடுக்கிறது. |
03:36 | இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
03:40 | Programஐ இயக்குவோம். |
03:42 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl openfile dot pl, பின் Enterஐ அழுத்தவும். |
03:51 | இங்கு காட்டப்பட்டுள்ளபடி, output தெரியும். |
03:54 | நாம் முன்பு first dot txt fileலில் பார்த்த அதே content தான் இது. |
03:59 | அடுத்து, ஒரு fileன் உள் dataஐ எழுதக் கற்போம். |
04:03 | Greater than (>) குறியுடன் கூடிய open statement, WRITE modeஐ வரையறுக்கிறது. |
04:08 | Filename என்பது dataஐ எழுத வேண்டிய fileன் பெயரைக் குறிக்கும். |
04:13 | நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த 'writefile.pl' என்ற மாதிரி programஐ திறக்கிறேன். |
04:19 | Terminalக்கு திரும்பவும். |
04:21 | இப்போது டைப் செய்க: gedit writefile dot pl ampersand', பின் Enterஐ அழுத்தவும். |
04:29 | Writefile dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். |
04:34 | இப்போது codeஐ விளக்குகிறேன். |
04:37 | Open function, 'second.txt' என்ற fileஐ "write" modeல் திறக்கிறது. |
04:44 | Fileன் பெயருக்கு முன் வரும் Greater than குறி, "write" modeஐ குறிக்கிறது. |
04:49 | முதல் parameterஆன "FILE1" தான் FILEHANDLE. |
04:53 | FILEHANDLE, அதாவது 'FILE1'க்கு, கொடுக்கப்பட்டுள்ள textஐ print function print செய்கிறது. |
04:59 | இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
05:03 | Programஐ இயக்குவோம். |
05:05 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl writefile dot pl, பின் Enterஐ அழுத்தவும். |
05:12 | இப்போது, 'second.txt' fileலில் text எழுதப்பட்டுவிட்டதா என சரி பார்ப்போம். |
05:18 | டைப் செய்க: gedit second.txt, பின் Enterஐ அழுத்தவும். |
05:23 | 'Second.txt' fileலில், "Working with files makes data storage and retrieval a simple task!" என்ற textஐ காண முடியும். |
05:32 | 'Second.txt' fileஐ மூடுவோம். |
05:35 | அதே fileஐ, "write" modeல் திறந்தால் என்ன ஆகும்? அதைப் பார்ப்போம். |
05:41 | 'Writefile.pl'லில் முந்தைய print statementஐ comment செய்யவும். |
05:46 | கீழே கொடுக்கப்பட்டுள்ள print commandஐ சேர்க்கவும். |
05:48 | இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். Programஐ இயக்குவோம். |
05:54 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl writefile dot pl, பின் Enterஐ அழுத்தவும். |
06:00 | இப்போது, மீண்டும், 'second.txt' fileஐ சரி பார்ப்போம். |
06:04 | டைப் செய்க: "gedit second.txt", பின் Enterஐ அழுத்தவும். |
06:09 | “Greater than symbol (>) overwrites the content of the file!" என்ற outputஐ காண முடியும். |
06:14 | 'Second.txt' fileன் முந்தைய contentகள் overwrite ஆகிவிட்டன. |
06:19 | இது ஏனெனில், நாம் fileஐ மீண்டும் "write" modeல் திறந்துவிட்டோம். |
06:24 | 'Second.txt' fileஐ மூடவும். |
06:27 | அடுத்து, ஏற்கெனவே உள்ள fileக்கு dataஐ append செய்யக் கற்போம். |
06:32 | இரண்டு greater than குறிகளுடன் கூடிய open statement, "APPEND" modeஐ குறிக்கிறது. |
06:38 | இப்போது, மீண்டும், writefile dot plஐ , geditல் திறக்கிறேன். |
06:44 | Open statementல் இரண்டு greater than குறிகளை டைப் செய்யவும். இது, file, append modeல் இருக்கிறது என்பதனை குறிக்கிறது. |
06:52 | முந்தைய print statement ஏற்கெனவே இயக்கப்பட்டுவிட்டதால், அதை Comment செய்யவும். |
06:57 | ஏற்கெனவே உள்ள dataஉடன் append செய்ய, இந்த வரியைச் சேர்க்கவும்: print FILE1 இரட்டை மேற்கோள்களுக்குள் "Two greater than symbols (>>) open the file in append mode". |
07:07 | இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
07:11 | Programஐ இயக்குவோம். |
07:14 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl writefile dot pl, பின் Enterஐ அழுத்தவும். |
07:20 | இப்போது, 'second.txt' fileக்கு text, append செய்யப்பட்டுவிட்டதா என சரி பார்ப்போம். |
07:26 | டைப் செய்க: "gedit second.txt", பின் Enterஐ அழுத்தவும். |
07:31 | நமது 'second.txt' fileக்கு text, append செய்யப்பட்டு இருப்பதைக் காணலாம். |
07:36 | 'Second.txt' fileஐ மூடவும். |
07:39 | அதே போல், வேறு பல modeகளும் உண்டு. |
07:42 | இந்த முறைகளை நீங்களே முயற்சி செய்து நடப்பதை புரிந்து கொள்ளவும். |
07:49 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கசொல்ல, |
07:53 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Read modeல் ஒரு fileஐ திறப்பது, ஒரு fileக்கு எழுதுவது, Append modeல் ஒரு fileஐ திறப்பது மற்றும் File handleஐ மூடுவது |
08:03 | இங்கே உங்களுக்கான பயிற்சி. 'writefile.pl' programல் file attributeஐ, "plus greater than"க்கு மாற்றவும். |
08:11 | Programஐ சேமித்து இயக்கவும் |
08:14 | Outputஐ காண 'second.txt' fileஐ திறக்கவும். |
08:17 | File attribute ஆன "plus greater than"ன் பயன்பாட்டை ஆய்வு செய்யவும். |
08:22 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
08:29 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
08:37 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
08:41 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
08:48 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
08:53 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |