Jmol-Application/C2/Structures-from-Database/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Jmol ல் தரவுத்தளங்களில் (Database) உள்ள அமைப்புகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:10 | PubChem தரவுத்தளத்திலிருந்து வேதியியல் அமைப்புகளை ஏற்றுதல் |
00:14 | ஜிகெம்பெயிண்டில் வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளை Jmol ல் முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல். |
00:21 | இந்த டுடோரியலை தொடர Jmol அப்ளிகேஷன் பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:27 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:33 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது |
00:35 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு. 12.04 |
00:40 | Jmol பதிப்பு 12.2.2 |
00:44 | Java பதிப்பு 7 |
00:46 | ஜிகெம்பெயிண்ட் பதிப்பு 0.12.10 |
00:51 | மொசில்லா ஃபயர்பாக்ஸ் ப்ரெளசர் 22.0. |
00:56 | ஒரு புதிய Jmol அப்ளிகேஷன் விண்டோவை திறந்துவைத்துள்ளேன். |
01:00 | தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சேர்மங்களின் அமைப்புகளை ஏற்ற ஒரு அம்சத்தை Jmol கொண்டுள்ளது. |
01:07 | menu bar ல் உள்ள 'File' menu.... 'Get MOL' தேர்வைக் கொண்டுள்ளது |
01:12 | இது வேதியியல் அமைப்பு தரவுத்தளம் 'PubChem' லிருந்து மூலக்கூறுகளை ஏற்றுகிறது |
01:17 | Protein Data Bank லிருந்து புரத அமைப்புகளை ஏற்ற 'Get PDB' என்ற மற்றொரு தேர்வையும் கொண்டுள்ளது. |
01:26 | இந்த அம்சம் மற்றொரு டுடோரியலில் விரிவாக விளக்கப்படும். |
01:31 | panel ல் ஒரு வேதியியல் அமைப்பை ஏற்ற, 'Get Mol' மீது க்ளிக் செய்க. |
01:36 | திரையில் ஒரு 'Input' dialog box திறக்கிறது. |
01:40 | இந்த உரைப்பெட்டியில் பின்வருவனவற்றை டைப் செய்வதன் மூலம் தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த மூலக்கூறையும் ஏற்ற முடியும்: |
01:48 | பொது பெயர் அல்லது IUPAC பெயர் |
01:51 | CAS எண் |
01:54 | CID எண் |
01:56 | InChi identifier அல்லது |
01:58 | SMILES identifier. |
02:01 | ஒரு குறிப்பிட்ட இரசாயனத்தின் அடையாள எண்களின் தகவலுக்கு Pubchem தரவுத்தள இணையத்தளத்திற்கு செல்க |
02:09 | திரையில் ஃபீனாலை (phenol) காட்டுவோம். |
02:13 | எனவே உள்ளீட்டு உரைப்பெட்டியில் டைப்செய்க''phenol. |
02:16 | OK பட்டன் மீது க்ளிக் செய்க. |
02:20 | panel ல் ஃபீனால் மாதிரி காட்டப்படுகிறது. |
02:24 | பல்வேறு rendering தேர்வுகளை பயன்படுத்தி ஃபீனாலின் display ஐ மாற்றமுடியும். |
02:30 | இந்த தேர்வுகள் Menu bar மற்றும் Pop-up menu ல் பட்டியலிடப்பட்டுள்ளன. |
02:36 | ஃபீனாலின் பென்சீன் (benzene) வளையத்திற்கு நம்மால் பதிலிகளை (substituent) சேர்க்க முடியும். |
02:41 | முதலில் மாதிரியில் அணுக்களுக்கு பெயரிடுவோம். |
02:45 | display menu மீது க்ளிக் செய்து, label ஐ தேர்ந்தெடுக்கவும். பின் number தேர்வு மீது க்ளிக் செய்க. |
02:52 | இப்போது, கார்பன் அணு எண் 4 உடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் எண் 10 க்கு பதிலாக ஒரு அமினோ குழுவை வைப்போம் |
03:00 | modelkit menuஐ திறந்து, தேர்வுகளில் நைட்ரஜனை தேர்ந்தெடுக்கவும். |
03:06 | ஹைட்ரஜன் எண் 10 மீது க்ளிக் செய்க. |
03:09 | panel ல் பாரா-அமினோ ஃபீனால் (Para-Amino Phenol) மூலக்கூறு உள்ளது. |
03:14 | display ஐ Sticks display ஆக மாற்றுவோம். |
03:18 | modelkit menu ஐ மூடவும். |
03:21 | Pop-up menu ஐ திறந்து, Style க்கு வந்து, Scheme ஐ தேர்ந்தெடுத்து பின் Sticks தேர்வு மீது க்ளிக் செய்க. |
03:30 | panel ல் பாரா-அமினோ ஃபீனால் (Para-Amino-phenol) மாதிரியை sticks display ல் கொண்டுள்ளோம். |
03:36 | உருவாக்க கடினமான சிக்கலான அமைப்புகளை, எளிமையாக panel ல் ஏற்ற முடியும். |
03:42 | உதாரணமாக கொலஸ்ட்ரால் (cholesterol). |
03:45 | File menu மீது க்ளிக் செய்க |
03:47 | Get Mol தேர்வு மீது க்ளிக் செய்து, உரைப்பெட்டியில் டைப் செய்க Cholesterol . |
03:54 | OK பட்டன் மீது க்ளிக் செய்க. |
03:57 | கொலஸ்ட்ரால் (Cholesterol) ன் மூலக்கூறு panel ல் காட்டப்படுகிறது. |
04:02 | மூலக்கூறின் இரட்டை பிணைப்பு மற்றும் பக்க-சங்கிலி போன்ற அம்சங்களை முன்னிலைப்படுத்த முடியும் |
04:08 | இரட்டை பிணைப்பை முன்னிலைப்படுத்த, இரட்டை பிணைப்பின் கார்பன் அணுக்களின் நிறங்களை முதலில் மாற்றுவோம். |
04:15 | tool bar ல் 'Select atoms' ஐகான் மீது க்ளிக் செய்க. |
04:19 | பின் இரட்டை பிணைப்பில் உள்ள கார்பன் அணுக்கள் மீது க்ளிக் செய்க. |
04:24 | அணுக்களை சுற்றி மஞ்சள் நிள ஒளிவட்டம் தோன்றுகிறது. |
04:28 | Pop-up-menu ஐ திறந்து. |
04:30 | Color க்கு வந்து, Atoms ஐ தேர்ந்தெடுத்து பின் Orange தேர்வு மீது க்ளிக் செய்க. |
04:37 | இப்போது tool bar ல் “Rotate molecule” தேர்வு மீது க்ளிக் செய்க. |
04:42 | கொலஸ்ட்ரால் மாதிரியில் உள்ள இரட்டை பிணைப்பு இப்போது ஆரஞ்ச் நிறத்தில் உள்ளது. |
04:49 | அதேபோல, பக்க சங்கிலியில் உள்ள கார்பன்களையும் முன்னிலைப்படுத்த முடியும். |
04:54 | Pop-up-menu ஐ பயன்படுத்தி நிறத்தை violet ஆக மாற்றுக. |
04:59 | முக்கிய அம்சங்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட கொலஸ்ட்ரால் மாதிரியை panel ல் கொண்டுள்ளோம். |
05:06 | பயிற்சியாக, |
05:08 | Pubchem தரவுத்தளத்தில் இருந்து கஃபீன் (caffeine) அமைப்பை ஏற்றுக |
05:11 | அந்த மூலக்கூறில் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக |
05:15 | display ஐ wireframe ஆக மாற்றுக. |
05:19 | இப்போது Jmol ன் மற்றொரு முக்கிய அம்சத்தை விவரிக்கிறேன் |
05:24 | மற்றொரு மென்பொருளில் வரைப்பட்ட மூலக்கூறுகளின் இருபரிமாண அமைப்புகளை முப்பரிமாண மாதிரிகளாக மாற்ற முடியும். |
05:31 | இங்கே panel ல் அமினோஅமில அலனைன் (aminoacid Alanine) மாதிரியைக் கொண்டுள்ளேன். |
05:36 | இந்த மூலக்கூறின் இருபரிமாண அமைப்பு ஜிகெம்பெய்ண்ட் என்ற மென்பொருளில் வரையப்பட்டது |
05:42 | இந்த அமைப்பு .mol file ஆக சேமிக்கப்பட்டது. |
05:46 | ஜிகெம்பெய்ண்ட் என்பது இருபரிமாண அமைப்புகளை வரைவதற்கான ஒரு கட்டற்ற மென்பொருள். |
05:51 | ஜிகெம்பெய்ண்ட் டுடோரியல்கள் பின்வரும் இணைப்பில் கிடைக்கும். |
05:56 | அமைப்புகளை வரையவும் அதை .mol format ல் சேமிக்கவும், Analysis of Compounds டுடோரியலைக் காணவும். |
06:05 | இந்த ஜிகெம்பெய்ண்ட் காட்சி பகுதியில் காட்டப்பட்டுள்ள இருபரிமாண வரைப்படங்களாவன |
06:10 | Amino acid -Alanine |
06:12 | Nuclioside -Adenosine |
06:14 | Saccharide -Alpha-D glucopyranose |
06:19 | நாம் அவற்றை என் Desktop ல் .mol format ல் சேமித்துள்ளேன் |
06:24 | முதலில், அலனைனின் இருபரிமாண அமைப்பை Jmol அப்ளிகேஷனில் ல் முப்பரிமாண மாதிரியாக காண்பொம். |
06:32 | எனவே ஒரு புதிய Jmol விண்டோவை திறக்கிறேன். |
06:36 | tool bar ல் 'Open a file' ஐகான் மீது க்ளிக் செய்க. |
06:40 | நான் Desktop folder ஐ தேர்ந்தெடுத்து open மீது க்ளிக் செய்கிறேன். file Alanine.mol ஐ தேர்ந்தெடுத்து Open பட்டன் மீது க்ளிக் செய்கிறேன். |
06:51 | திரையில் அலனைன் முப்பரிமாண மாதிரி திறக்கிறது. |
06:55 | modelkit menu ஐ திறந்து 'fix hydrogens and minimize' தேர்வு மீது க்ளிக் செய்க. |
07:03 | அமைப்புக்கு ஹைட்ரஜன்கள் சேர்க்கப்பட்டு energy minimization செய்யப்பட்டுள்ளது. |
07:08 | மற்ற .mol file களுடன் செய்வது போல menu bar மற்றும் Pop-up menu ஐ பயன்படுத்தி display ஐ மாற்ற முடியும். |
07:15 | இங்கே Jmol ல் Adenosine.mol ன் முப்பரிமாண மாதிரி உள்ளது |
07:19 | இது Jmol ல் Alpha-D-glucopyranose.mol ன் முப்பரிமாண மாதிரி |
07:25 | சுருங்கசொல்ல. |
07:27 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
07:32 | Pubchem தரவுத்தளத்திலிருந்து வேதியியல் அமைப்புகளை ஏற்றுதல் |
07:34 | ஃபீனால் (Phenol) மற்றும் கொலஸ்ட்ரால் (Cholesterol) ன் display ஐ மாற்றுதல் |
07:38 | ஜிகெம்பெய்ண்டில் வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளை Jmol ல் முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல் |
07:44 | அலனைன் (Alanine), அடினோசின் (Adenosine) மற்றும் ஆல்ஃபா-டி-க்ளுகோபைரநோஸ் (Alpha-D-glucopyranose) ன் இருபரிமாண அமைப்புகளை முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல். |
07:53 | இங்கே உங்களுக்கான மற்றொரு பயிற்சி. |
07:56 | பின்வரும் அமினோ அமிலங்களின் இருபரிமாண அமைப்புகளை ஜிகெம்பெய்ண்டில் வரைக |
08:01 | சிஸ்டின் (Cysteine) |
08:03 | ஹிஸ்டிடின் (Histidine) , ஃபீனைல்அலனைன் (Phenylalanine) |
08:06 | .mol fileகளாக சேமிக்கவும். |
08:09 | அந்த fileகளை Jmol ல் திறந்து display ஐ மாற்றவும். |
08:12 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
08:16 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
08:19 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
08:23 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
08:29 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08:33 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08:40 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08:45 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:52 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
08:57 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
|