Git/C2/The-git-checkout-command/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | git checkout command பற்றிய ஸ்போகன் டுடோரியல்க்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது,
|
00:12 | *Git repositoryலிருந்து fileஐ எப்படி நீக்குவது. |
00:16 | * நீக்கிய fileஐ எப்படி மீட்பது |
00:18 | * fileலுக்கு செய்த மாற்றங்களை எப்படி புறக்கணிப்பது, மற்றும் |
00:21 | *முந்திய revisionஐ எப்படி மீண்டும் பெறுவது. |
00:25 | இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது
Ubuntu Linux 14.04, |
00:31 | Git 2.3.2 மற்றும்
gedit Text Editor. |
00:36 | உங்களுக்கு விருப்பமான editor-ரை பயன்படுத்தலாம். |
00:40 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, terminal-லில் Linux command களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். |
00:47 | இல்லையெனில், அதற்கான Linux டுடோரியலுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:52 | இப்போது, Git repositoryக்கு, பல fileகளை எப்படி சேர்ப்பது என காண்போம். |
00:58 | terminalஐ திறக்க,Ctrl+Alt+Tஐ அழுத்தவும். |
01:02 | நாம் முன்னதாக உருவாக்கிய, Git repository mywebpageக்கு செல்வோம். |
01:09 | டைப் செய்க cd space mywebpage, பின் Enterஐ அழுத்தவும். |
01:14 | செயல்விளக்கத்திற்கு, நான் '"html fileகளை தொடர்ந்து பயன்படுத்துகிறேன். |
01:19 | உங்களுக்கு விருப்பமான எந்த file வகையையும், பயன்படுத்தலாம். |
01:23 | இப்போது, இரண்டு '"html fileகளை உருவாக்குவோம். |
01:27 | டைப் செய்க: gedit space mystory.html space mynovel.html space ampersand. |
01:37 | Promptஐ விலக்க, &(ampersand)ஐ பயன்படுத்துகிறோம். Enterஐ அழுத்தவும். |
01:43 | முன்னதாக சேமித்து வைத்து இருந்த சில codeகளை, writer documentலிருந்து, இந்த fileகளுக்கு, copy-paste செய்கிறேன். |
01:51 | இந்த fileகளை சேமிப்போம். |
01:53 | terminalலில், Git statusஐ சரி பார்க்க, git space status என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும். |
02:03 | இது இரண்டு '"untracked fileகளை காட்டும். |
02:06 | இப்போது, tracking செய்வதற்கு, அந்த untracked fileகளை சேர்க்கலாம். |
02:10 | டைப் செய்க: git space add space dot, பின் Enterஐ அழுத்தவும். |
02:17 | git add dot command, எல்லா '"untracked fileகளையும், staging areaவிற்கு சேர்த்துவிடும். |
02:23 | ஆதலால், mystory.html, mynovel.html ஆகிய இரண்டு fileகளும், staging areaவிற்கு சேர்க்கப்படும். |
02:32 | மறுபடியும் Git statusஐ சரி பார்க்க, டைப் செய்க git space status பின் Enterஐ அழுத்தவும். |
02:40 | Git repositoryன், staging areaவிற்கு, நமது இரண்டு fileகளும் சேர்க்கப்பட்டுவிட்டதை காணலாம். |
02:47 | நம் mystory.html, மற்றும் mynovel.html fileகளுக்கு திரும்புவோம். |
02:54 | இப்போது, இன்னும் சில code வரிகளை, இந்த இரண்டு fileகளிலும் சேர்ப்போம். |
03:00 | முன்னர் செய்தது போல், writer documentலிருந்து, copy-paste செய்கிறேன். |
03:05 | மறுபடியும் fileஐ சேமித்து மூடவும். |
03:08 | Git statusஐ சரி பார்க்க, டைப் செய்க git space status, பின் Enterஅழுத்தவும். |
03:16 | அது, changes not staged for commit என்றும், modified:mynovel.html மற்றும், mystory.htmlஎன்றும் காட்டும். |
03:26 | நாம் செய்த மாற்றங்கள், staging areaவிற்கு சேர்க்கப்படவில்லை என்பதை இது குறிக்கும். |
03:32 | இவ்விடத்தில், நம் வேலையை நாம் commit செய்வோம். |
03:36 | ஆதலால், டைப் செய்க: git space commit space hyphen a space hyphen m space “Added two files”, பின் Enterஐ அழுத்தவும். |
03:50 | கவனிக்கவும்: முந்தைய டுடோரியலில் பார்த்தபடி, commit செய்வதற்கு முன்பு, staging areaவிற்கு, மாற்றப்பட்ட fileகளை நாம் சேர்க்கவில்லை. |
03:57 | மேலும் commit messageக்காக editorஉம் திறக்கப்படவில்லை. |
04:03 | இது ஏனெனில், நாம் இங்கு hyphen a, மற்றும் hyphen m flagகளை பயன்படுத்தியுள்ளோம். |
04: 10 | எதற்காக இந்த flagகள்? |
04:13 | அதை அறிய slideகளுக்கு வருவோம். |
04:15 | எல்லா மாற்றப்பட்ட fileகளையும் staging areaவிற்கு சேர்க்க hyphen 'a' flag பயன்படுத்தப்படுகிறது. |
04:21 | நாம் hyphen a flagஐ பயன்படுத்தும் போது, மாற்றப்பட்ட fileகளை, staging areaவிற்குள் சேர்க்க, ஒரு தனி git add command நமக்கு தேவையில்லை. |
04:30 | command lineல், commit message கொடுப்பதற்கு, hyphen m flag பயன்படுத்தப்படுகிறது. |
04:36 | hyphen a, hyphen m flagகளை, hyphen am என பயன்படுத்தலாம். |
04:42 | Terminalக்கு திரும்பி வரவும். |
04:45 | Git logஐ சரி பார்க்க, git space log என டைப் செய்து, Enterஐ அழுத்தவும். |
04:52 | commitsன் பட்டியலை நீங்கள் காணலாம். |
04:54 | சமீபத்திய commitகள், பட்டியலில் முதலாவதாக வந்திருப்பதை கவனிக்கவும். |
04:58 | அப்படியெனில், commitகள் எல்லாம் காலவரிசைப்படி பட்டியலிடப்படுகின்றன. |
05:03 | ஒரு வேளை, ஒரு தவறான fileஐ Git repositoryகுள் சேர்த்துவிட்டீர்கள் எனில், அதை எளிதாக நீக்கி விடலாம். |
05:10 | உதாரணத்திற்கு, எனக்கு, mypage.html என்ற fileஐ நீக்க வேண்டும் |
05:16 | டைப் செய்க:git space rm space hyphen hyphen cached space mypage dot html, பின் Enterஐ அழுத்தவும். |
05:26 | இந்த command, staging areaவிலிருந்து, mypage.html fileஐ நீக்கிவிடும். |
05:32 | Git statusஐ சரி பார்க்க, git space statusஎன டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும். |
05:40 | அது, mypage.html file, untrackedஆக இருக்கிறது என கூறுகிறது. |
05:45 | இப்போது, file systemல் இருந்து fileஐ நீக்க, டைப் செய்க |
05:49 | rm space mypage dot html, பின் Enterஐ அழுத்தவும். |
05:55 | இந்த command, mywebpage folderலிருந்து முழுவதுமாக fileஐ நீக்கிவிடும். |
06:00 | இப்போது, Git repositoryலிருந்து file நீக்கப்பட்டுவிட்டதா என சரி பார்க்கலாம். |
06:06 | டைப் செய்க: git space status, Enterஐ அழுத்தவும். |
06:12 | deleted:mypage.html என்ற தகவலை அது காண்பிக்கும். |
06:16 | இப்போது, fileகளை பட்டியலிட, lsஎன டைப் செய்து, Enterஐ அழுத்தவும். |
06:21 | இங்கு, mypage.html fileஐ நாம் காண முடியாது, ஏனெனில் அது நீக்கப்பட்டுவிட்டது. |
06:28 | இந்த இடத்தில், நமது codeஐ freeze செய்வோம். |
06:32 | commit செய்ய, டைப் செய்க: git space commit space hyphen am space இரட்டை மேற்கோள்களில் '"Deleted mypage.html, பி்ன் Enterஐ அழுத்தவும். |
06:45 | Git logஐ சரி பார்க்க, git space log என டைப் செய்து, Enterஐ அழுத்தவும். |
06:51 | வெளியேறுவதற்கு, விசைப்பலகையில், q keyஐ அழுத்தவும். |
06:55 | இங்கு, commit messageஐ படிப்பதன் மூலம், சமீபத்திய commitஐ கண்டுபிடிக்கலாம். |
06:59 | இப்போது, ஒரு வேளை, mypage.htmlஐ தவறுதலாக நீக்கி விட்டோம் எனில், அதை மீட்க வேண்டும் எனில் |
07:08 | என்ன செய்யலாம்? |
07:09 | முந்தைய commitகளில் இருந்து, நீக்கப்பட்ட fileஐ மீட்கலாம். |
07:13 | Added two files என்ற commit message உள்ள இரண்டாவது commitலிருந்து, நமது fileஐ மீட்கலாம். |
07:20 | இரண்டாவது commit hashன் முதல் ஐந்து digitகளை தேர்ந்தெடுக்கவும். |
07:24 | Copy செய்ய, Ctrl+Shift+Ckeyகளை ஒன்றாக அழுத்தவும். |
07:28 | முதல் ஐந்து digitகள் போதுமானவை. |
07:31 | வேண்டுமெனில், ஐந்திற்கும் மேற்பட்ட digitகளை copy செய்யலாம். |
07:36 | commit hashஐ paste செய்ய, டைப் செய்க git space checkout space, Ctrl+Shift+V keyகளை ஒன்றாக அழுத்தவும். |
07:45 | இப்போது, mypage.html file பெயரை டைப் செய்து, enterஐ அழுத்தவும். |
07:51 | Git statusஐ சரி பார்க்க, git space status என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும். |
07:58 | இப்போது, mypage.html fileஐ காணலாம். |
08:02 | இந்த இடத்தில், நமது வேலையை commit செய்வோம். |
08:05 | எந்த fileயும், சேர்க்கும்போதோ அல்லது நீக்கும்போதோ, நமது வேலையை commit செய்வது மிக முக்கியம் என்பதை கவனிக்கவும் |
08:12 | டைப் செய்க: git space commit space hyphen am space “Restored mypage.html”, பின் enterஐ அழுத்தவும். |
08:22 | இப்போது, fileகளை பட்டியலிட, ls என டைப் செய்து, Enterஐ அழுத்தவும். |
08:28 | நமது file, mypage.html மீட்கப்பட்டிருப்பதைக் காணலாம். |
08:33 | அடுத்து, ஒரு fileன் மாற்றங்களை எப்படி புறக்கணிப்பது என காண்போம். |
08:38 | Fileஐ திறக்க, டைப் செய் gedit space mypage.html space mystory.html space ampersand, பின் enterஐ அழுத்தவும். |
08:50 | mypage.html, மற்றும், mystory.htmlலிலும், சில மாற்றங்களை செய்யலாம். |
08:58 | இந்த இரண்டு fileகளிலும், சில வரிகளை சேர்க்கவும், நீக்கவும் செய்வோம். |
09:03 | Fileகளை சேமித்து மூடவும். |
09:06 | சில சமயங்களில் மாற்றங்கள் நமக்கு அவசியமில்லாமல் போகலாம். |
09:11 | அப்படியெனில், நமது வேலையின் முந்தைய stageற்கு செல்ல வேண்டும் என்று பொருள். |
09:16 | அதை எப்படி செய்வது என்று கற்போம். |
09:19 | முதலில், Git statusஐ சரி பார்க்க, git space statusஎன டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும். |
09:27 | சில fileகள் மாற்றப்பட்டுள்ளன என்று சொல்கிறது. |
09:30 | டைப் செய்க: git space checkout space dot, enterஐ அழுத்தவும். |
09:37 | நமது வேலையின், சமீபத்திய மாற்றங்களை, இந்த command நீக்கி விடும். |
09:41 | Git statusஐ சரி பார்க்க, git space statusஎன டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும். |
09:48 | nothing to commitஎன அது சொல்கிறது. |
09:51 | மாற்றங்கள் இன்னும் இருக்கின்றனவா என கண்டறிய, fileகளை சரி பார்க்கலாம். |
09:57 | gedit space mypage.html space mystory.html &என டைப் செய்து, Enterஐ அழுத்தவும். |
10:07 | நாம் செய்த மாற்றங்கள், புறக்கணிக்கப்பட்டன என்பதனைக் காணலாம். fileகளை மூடவும். |
10:13 | இப்போது, Git logஐ சரி பார்க்க, git space log என டைப் செய்து, Enterஐ அழுத்தவும். |
10:20 | commitsன் பட்டியலை அது காண்பிக்கும். |
10:23 | மேலும் பார்க்க, down arrow keyஐ அழுத்தவும். |
10:26 | வெளியேறுவதற்கு, விசைப்பலகையில், q keyஐ அழுத்தவும். |
10:30 | commit listஐ ஒரு வரியில் காண, டைப் செய்க: git space log space hyphen hyphen oneline, Enterஐ அழுத்தவும். |
10:42 | இங்கு, commits listஐ, commit hash, commit messages உடன் ஒரு வரியில் காணலாம். |
10:48 | நமது வேலையின் முந்தைய revisionக்கு எப்படி செல்வது? |
10:53 | தற்போது, நமது repository”யில், நான்கு commitகள் உள்ளன. |
10:56 | அதன் பொருள், நமது வேலையின் நான்கு revisionகள் உள்ளன. |
11:01 | இப்போது, நமக்கு Initial commit stageற்கு திரும்பி செல்ல வேண்டும் எனில் |
11:05 | டைப் செய்க: git space checkout space. பிறகு, Initial commitன், commit hashஐ, copy-paste செய்து, Enterஐ அழுத்தவும். |
11:15 | fileகளை பட்டியலிட, ls என டைப் செய்து, Enterஐ அழுத்தவும். |
11:19 | mypage.html fileஐ மட்டும் தான் காண இயலும், ஏனெனில், இந்த stageல், இந்த file மட்டும் தான் நம்மிடம் இருந்தது. |
11:28 | இப்போது, Git logஐ சரி பார்க்க, git space log என டைப் செய்து, Enterஐ அழுத்தவும். |
11:34 | முதல் commitஐ மட்டும் தான் காண இயலும். அதாவது, Initial commit. |
11:39 | தற்போதைய revisionக்கு திரும்பி செல்ல, டைப் செய்க: git space checkout space master, Enterஐ அழுத்தவும். |
11:48 | பின்வரும் டுடோரியல்களில், master பற்றி மேலும் கற்கலாம். |
11:53 | மறுபடியும், Git logஐ சரி பார்க்க, டைப் செய்க : |
11:57 | git space log space hyphen hyphen oneline, பின் Enterஐ அழுத்தவும். |
12:03 | இப்போது, எல்லா நான்கு commitகளையும் நீங்கள் காணலாம். |
12:10 | இம்முறையில், நமது வேலையின் எந்த நிலைக்கும் நாம் செல்லலாம். |
12:14 | பழைய revisionக்கு செல்ல, மற்றொரு வழியும் உண்டு. |
12:18 | டைப் செய்க: git space reset space hyphen hyphen hard. |
12:23 | பிறகு, Initial commitன், commit hashஐ, copy மற்றும் paste செய்து, Enterஐ அழுத்தவும். |
12:29 | Git logஐ சரி பார்க்க, டைப் செய் git space log பின் Enterஐ அழுத்தவும். |
12:35 | அது, நாம், Initial commit stageல் உள்ளோம் என காண்பிக்கும். |
12:39 | இப்போது, சமீபத்திய revisionக்கு செல்ல முயற்சிப்போம். |
12:43 | முன்பு போல், டைப் செய்க :git space checkout space master, பின் Enterஐ அழுத்தவும். |
12:51 | நம்மால், சமீபத்திய revisionக்கு செல்ல இயலாது. |
12:55 | அதற்குப் பதிலாக, Already on 'master', என்ற தகவல் தெரியும். |
12:58 | இதற்கு இது தான், நமது, சமீபத்திய revision என்று பொருள். |
13:02 | ஆதலால், ஒருமுறை, git reset hyphen hyphen hard என்ற commandஐ பயன்படுத்திவிட்டால், சமீபத்திய stageற்கு திரும்பிச் செல்ல இயலாது. |
13:11 | ஆதலால், இந்த command உடன் கவனமாக இருக்கவும். |
13:15 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
13:18 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது:
|
13:27 | *Git repositoryலிருந்து fileஐ எப்படி நீக்குவது.
|
13:32 | fileலுக்கு செய்த மாற்றங்களை எப்படி புறக்கணிப்பது, மற்றும்*முந்திய revisionஐ எப்படி மீண்டும் பெறுவது. |
13:39 | பயிற்சியாக-முந்தைய டுடோரியல் பயிற்சியில் உருவாக்கிய Git repositoryக்கு செல்லுங்கள். |
13:46 | text fileலில் சில மாற்றங்களை செய்யுங்கள். |
13:49 | மாற்றங்களை commit செய்யுங்கள். |
13:52 | பழைய revisionக்கு திரும்பிச் செல்ல முயலுங்கள். |
13:55 | மறுபடியும் உங்கள் text fileலில் சில மாற்றங்களை செய்து, அதை புறக்கணிக்க முயலுங்கள். |
14:02 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
14:11 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
14:18 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
14:22 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
14:29 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
14:34 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |