Git/C2/The-git-checkout-command/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 git checkout command பற்றிய ஸ்போகன் டுடோரியல்க்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, Git repositoryக்கு, பல fileகளை எப்படி சேர்ப்பது ,
00:12 Git repositoryலிருந்து fileஐ எப்படி நீக்குவது.
00:16 நீக்கிய fileஐ எப்படி மீட்பது
00:18 fileலுக்கு செய்த மாற்றங்களை எப்படி புறக்கணிப்பது, மற்றும்
00:21 முந்தைய revisionஐ எப்படி மீண்டும் பெறுவது.
00:25 இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது Ubuntu Linux 14.04,
00:31 Git 2.3.2 மற்றும் gedit Text Editor.
00:36 உங்களுக்கு விருப்பமான editor-ரை பயன்படுத்தலாம்.
00:40 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, terminal-லில் Linux command களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
00:47 இல்லையெனில், அதற்கான Linux டுடோரியலுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:52 இப்போது, Git repositoryக்கு, பல fileகளை எப்படி சேர்ப்பது என காண்போம்.
00:58 terminalஐ திறக்க,Ctrl+Alt+Tஐ அழுத்தவும்.
01:02 நாம் முன்னதாக உருவாக்கிய, Git repository mywebpageக்கு செல்வோம்.
01:09 டைப் செய்க cd space mywebpage, பின் Enterஐ அழுத்தவும்.
01:14 செயல்விளக்கத்திற்கு, நான் '"html fileகளை தொடர்ந்து பயன்படுத்துகிறேன்.
01:19 உங்களுக்கு விருப்பமான எந்த file வகையையும், பயன்படுத்தலாம்.
01:23 இப்போது, இரண்டு '"html fileகளை உருவாக்குவோம்.
01:27 டைப் செய்க: gedit space mystory.html space mynovel.html space ampersand.
01:37 Promptஐ விலக்க, &(ampersand)ஐ பயன்படுத்துகிறோம். Enterஐ அழுத்தவும்.
01:43 முன்னதாக சேமித்து வைத்து இருந்த சில codeகளை, writer documentலிருந்து, இந்த fileகளுக்கு, copy-paste செய்கிறேன்.
01:51 இந்த fileகளை சேமிப்போம்.
01:53 terminalலில், Git statusஐ சரி பார்க்க, git space status என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்.
02:03 இது இரண்டு '"untracked fileகளை காட்டும்.
02:06 இப்போது, tracking செய்வதற்கு, அந்த untracked fileகளை சேர்க்கலாம்.
02:10 டைப் செய்க: git space add space dot, பின் Enterஐ அழுத்தவும்.
02:17 git add dot command, எல்லா '"untracked fileகளையும், staging areaவிற்கு சேர்த்துவிடும்.
02:23 ஆதலால், mystory.html, mynovel.html ஆகிய இரண்டு fileகளும், staging areaவிற்கு சேர்க்கப்படும்.
02:32 மறுபடியும் Git statusஐ சரி பார்க்க, டைப் செய்க git space status பின் Enterஐ அழுத்தவும்.
02:40 Git repositoryன், staging areaவிற்கு, நமது இரண்டு fileகளும் சேர்க்கப்பட்டுவிட்டதை காணலாம்.
02:47 நம் mystory.html, மற்றும் mynovel.html fileகளுக்கு திரும்புவோம்.
02:54 இப்போது, இன்னும் சில code வரிகளை, இந்த இரண்டு fileகளிலும் சேர்ப்போம்.
03:00 முன்னர் செய்தது போல், writer documentலிருந்து, copy-paste செய்கிறேன்.
03:05 மறுபடியும் fileஐ சேமித்து மூடவும்.
03:08 Git statusஐ சரி பார்க்க, டைப் செய்க git space status, பின் Enterஅழுத்தவும்.
03:16 அது, changes not staged for commit என்றும், modified:mynovel.html மற்றும், mystory.htmlஎன்றும் காட்டும்.
03:26 நாம் செய்த மாற்றங்கள், staging areaவிற்கு சேர்க்கப்படவில்லை என்பதை இது குறிக்கும்.
03:32 இவ்விடத்தில், நம் வேலையை நாம் commit செய்வோம்.
03:36 ஆதலால், டைப் செய்க: git space commit space hyphen a space hyphen m space “Added two files”, பின் Enterஐ அழுத்தவும்.
03:50 கவனிக்கவும்: முந்தைய டுடோரியலில் பார்த்தபடி, commit செய்வதற்கு முன்பு, staging areaவிற்கு, மாற்றப்பட்ட fileகளை நாம் சேர்க்கவில்லை.
03:57 மேலும் commit messageக்காக editorஉம் திறக்கப்படவில்லை.
04:03 இது ஏனெனில், நாம் இங்கு hyphen a, மற்றும் hyphen m flagகளை பயன்படுத்தியுள்ளோம்.
04:10 எதற்காக இந்த flagகள்?
04:13 அதை அறிய slideகளுக்கு வருவோம்.
04:15 எல்லா மாற்றப்பட்ட fileகளையும் staging areaவிற்கு சேர்க்க hyphen 'a' flag பயன்படுத்தப்படுகிறது.
04:21 நாம் hyphen a flagஐ பயன்படுத்தும் போது, மாற்றப்பட்ட fileகளை, staging areaவிற்குள் சேர்க்க, ஒரு தனி git add command நமக்கு தேவையில்லை.
04:30 command lineல், commit message கொடுப்பதற்கு, hyphen m flag பயன்படுத்தப்படுகிறது.
04:36 hyphen a, hyphen m flagகளை, hyphen am என பயன்படுத்தலாம்.
04:42 Terminalக்கு திரும்பி வரவும்.
04:45 Git logஐ சரி பார்க்க, git space log என டைப் செய்து, Enterஐ அழுத்தவும்.
04:52 commitsன் பட்டியலை நீங்கள் காணலாம்.
04:54 சமீபத்திய commitகள், பட்டியலில் முதலாவதாக வந்திருப்பதை கவனிக்கவும்.
04:58 அப்படியெனில், commitகள் எல்லாம் காலவரிசைப்படி பட்டியலிடப்படுகின்றன.
05:03 ஒரு வேளை, ஒரு தவறான fileஐ Git repositoryகுள் சேர்த்துவிட்டீர்கள் எனில், அதை எளிதாக நீக்கி விடலாம்.
05:10 உதாரணத்திற்கு, எனக்கு, mypage.html என்ற fileஐ நீக்க வேண்டும்
05:16 டைப் செய்க:git space rm space hyphen hyphen cached space mypage dot html, பின் Enterஐ அழுத்தவும்.
05:26 இந்த command, staging areaவிலிருந்து, mypage.html fileஐ நீக்கிவிடும்.
05:32 Git statusஐ சரி பார்க்க, git space statusஎன டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்.
05:40 அது, mypage.html file, untrackedஆக இருக்கிறது என கூறுகிறது.
05:45 இப்போது, file systemல் இருந்து fileஐ நீக்க, டைப் செய்க
05:49 rm space mypage dot html, பின் Enterஐ அழுத்தவும்.
05:55 இந்த command, mywebpage folderலிருந்து முழுவதுமாக fileஐ நீக்கிவிடும்.
06:00 இப்போது, Git repositoryலிருந்து file நீக்கப்பட்டுவிட்டதா என சரி பார்க்கலாம்.
06:06 டைப் செய்க: git space status, Enterஐ அழுத்தவும்.
06:12 deleted:mypage.html என்ற தகவலை அது காண்பிக்கும்.
06:16 இப்போது, fileகளை பட்டியலிட, lsஎன டைப் செய்து, Enterஐ அழுத்தவும்.
06:21 இங்கு, mypage.html fileஐ நாம் காண முடியாது, ஏனெனில் அது நீக்கப்பட்டுவிட்டது.
06:28 இந்த இடத்தில், நமது codeஐ freeze செய்வோம்.
06:32 commit செய்ய, டைப் செய்க: git space commit space hyphen am space இரட்டை மேற்கோள்களில் '"Deleted mypage.html, பி்ன் Enterஐ அழுத்தவும்.
06:45 Git logஐ சரி பார்க்க, git space log என டைப் செய்து, Enterஐ அழுத்தவும்.
06:51 வெளியேறுவதற்கு, விசைப்பலகையில், q keyஐ அழுத்தவும்.
06:55 இங்கு, commit messageஐ படிப்பதன் மூலம், சமீபத்திய commitஐ கண்டுபிடிக்கலாம்.
06:59 இப்போது, ஒரு வேளை, mypage.htmlஐ தவறுதலாக நீக்கி விட்டோம் எனில், அதை மீட்க வேண்டும் எனில்
07:08 என்ன செய்யலாம்? முந்தைய commitகளில் இருந்து, நீக்கப்பட்ட fileஐ மீட்கலாம்.
07:13 Added two files என்ற commit message உள்ள இரண்டாவது commitலிருந்து, நமது fileஐ மீட்கலாம்.
07:20 இரண்டாவது commit hashன் முதல் ஐந்து digitகளை தேர்ந்தெடுக்கவும்.
07:24 Copy செய்ய, Ctrl+Shift+Ckeyகளை ஒன்றாக அழுத்தவும்.
07:28 முதல் ஐந்து digitகள் போதுமானவை.
07:31 வேண்டுமெனில், ஐந்திற்கும் மேற்பட்ட digitகளை copy செய்யலாம்.
07:36 commit hashஐ paste செய்ய, டைப் செய்க git space checkout space, Ctrl+Shift+V keyகளை ஒன்றாக அழுத்தவும்.
07:45 இப்போது, mypage.html file பெயரை டைப் செய்து, enterஐ அழுத்தவும்.
07:51 Git statusஐ சரி பார்க்க, git space status என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்.
07:58 இப்போது, mypage.html fileஐ காணலாம்.
08:02 இந்த இடத்தில், நமது வேலையை commit செய்வோம்.
08:05 எந்த fileயும், சேர்க்கும்போதோ அல்லது நீக்கும்போதோ, நமது வேலையை commit செய்வது மிக முக்கியம் என்பதை கவனிக்கவும்
08:12 டைப் செய்க: git space commit space hyphen am space “Restored mypage.html”, பின் enterஐ அழுத்தவும்.
08:22 இப்போது, fileகளை பட்டியலிட, ls என டைப் செய்து, Enterஐ அழுத்தவும்.
08:28 நமது file, mypage.html மீட்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
08:33 அடுத்து, ஒரு fileன் மாற்றங்களை எப்படி புறக்கணிப்பது என காண்போம்.
08:38 Fileஐ திறக்க, டைப் செய் gedit space mypage.html space mystory.html space ampersand, பின் enterஐ அழுத்தவும்.
08:50 mypage.html, மற்றும், mystory.htmlலிலும், சில மாற்றங்களை செய்யலாம்.
08:58 இந்த இரண்டு fileகளிலும், சில வரிகளை சேர்க்கவும், நீக்கவும் செய்வோம்.
09:03 Fileகளை சேமித்து மூடவும்.
09:06 சில சமயங்களில் மாற்றங்கள் நமக்கு அவசியமில்லாமல் போகலாம்.
09:11 அப்படியெனில், நமது வேலையின் முந்தைய stageற்கு செல்ல வேண்டும் என்று பொருள்.
09:16 அதை எப்படி செய்வது என்று கற்போம்.
09:19 முதலில், Git statusஐ சரி பார்க்க, git space statusஎன டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்.
09:27 சில fileகள் மாற்றப்பட்டுள்ளன என்று சொல்கிறது.
09:30 டைப் செய்க: git space checkout space dot, enterஐ அழுத்தவும்.
09:37 நமது வேலையின், சமீபத்திய மாற்றங்களை, இந்த command நீக்கி விடும்.
09:41 Git statusஐ சரி பார்க்க, git space statusஎன டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்.
09:48 nothing to commitஎன அது சொல்கிறது.
09:51 மாற்றங்கள் இன்னும் இருக்கின்றனவா என கண்டறிய, fileகளை சரி பார்க்கலாம்.
09:57 gedit space mypage.html space mystory.html &என டைப் செய்து, Enterஐ அழுத்தவும்.
10:07 நாம் செய்த மாற்றங்கள், புறக்கணிக்கப்பட்டன என்பதனைக் காணலாம். fileகளை மூடவும்.
10:13 இப்போது, Git logஐ சரி பார்க்க, git space log என டைப் செய்து, Enterஐ அழுத்தவும்.
10:20 commitsன் பட்டியலை அது காண்பிக்கும்.
10:23 மேலும் பார்க்க, down arrow keyஐ அழுத்தவும்.
10:26 வெளியேறுவதற்கு, விசைப்பலகையில், q keyஐ அழுத்தவும்.
10:30 commit listஐ ஒரு வரியில் காண, டைப் செய்க: git space log space hyphen hyphen oneline, Enterஐ அழுத்தவும்.
10:42 இங்கு, commits listஐ, commit hash, commit messages உடன் ஒரு வரியில் காணலாம்.
10:48 நமது வேலையின் முந்தைய revisionக்கு எப்படி செல்வது?
10:53 தற்போது, நமது repository”யில், நான்கு commitகள் உள்ளன.
10:56 அதன் பொருள், நமது வேலையின் நான்கு revisionகள் உள்ளன.
11:01 இப்போது, நமக்கு Initial commit stageற்கு திரும்பி செல்ல வேண்டும் எனில்
11:05 டைப் செய்க: git space checkout space. பிறகு, Initial commitன், commit hashஐ, copy-paste செய்து, Enterஐ அழுத்தவும்.
11:15 fileகளை பட்டியலிட, ls என டைப் செய்து, Enterஐ அழுத்தவும்.
11:19 mypage.html fileஐ மட்டும் தான் காண இயலும், ஏனெனில், இந்த stageல், இந்த file மட்டும் தான் நம்மிடம் இருந்தது.
11:28 இப்போது, Git logஐ சரி பார்க்க, git space log என டைப் செய்து, Enterஐ அழுத்தவும்.
11:34 முதல் commitஐ மட்டும் தான் காண இயலும். அதாவது, Initial commit.
11:39 தற்போதைய revisionக்கு திரும்பி செல்ல, டைப் செய்க: git space checkout space master, Enterஐ அழுத்தவும்.
11:48 பின்வரும் டுடோரியல்களில், master பற்றி மேலும் கற்கலாம்.
11:53 மறுபடியும், Git logஐ சரி பார்க்க, டைப் செய்க :
11:57 git space log space hyphen hyphen oneline, பின் Enterஐ அழுத்தவும்.
12:03 இப்போது, எல்லா நான்கு commitகளையும் நீங்கள் காணலாம்.
12:10 இம்முறையில், நமது வேலையின் எந்த நிலைக்கும் நாம் செல்லலாம்.
12:14 பழைய revisionக்கு செல்ல, மற்றொரு வழியும் உண்டு.
12:18 டைப் செய்க: git space reset space hyphen hyphen hard.
12:23 பிறகு, Initial commitன், commit hashஐ, copy மற்றும் paste செய்து, Enterஐ அழுத்தவும்.
12:29 Git logஐ சரி பார்க்க, டைப் செய் git space log பின் Enterஐ அழுத்தவும்.
12:35 அது, நாம், Initial commit stageல் உள்ளோம் என காண்பிக்கும்.
12:39 இப்போது, சமீபத்திய revisionக்கு செல்ல முயற்சிப்போம்.
12:43 முன்பு போல், டைப் செய்க :git space checkout space master, பின் Enterஐ அழுத்தவும்.
12:51 நம்மால், சமீபத்திய revisionக்கு செல்ல இயலாது.
12:55 அதற்குப் பதிலாக, Already on 'master', என்ற தகவல் தெரியும்.
12:58 இதற்கு இது தான், நமது, சமீபத்திய revision என்று பொருள்.
13:02 ஆதலால், ஒருமுறை, git reset hyphen hyphen hard என்ற commandஐ பயன்படுத்திவிட்டால், சமீபத்திய stageற்கு திரும்பிச் செல்ல இயலாது.
13:11 ஆதலால், இந்த command உடன் கவனமாக இருக்கவும்.
13:15 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
13:18 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: Git repositoryக்கு, பல fileகளை எப்படி சேர்ப்பது
13:27 Git repositoryலிருந்து fileஐ எப்படி நீக்குவது. நீக்கிய fileஐ எப்படி மீட்பது.
13:32 fileலுக்கு செய்த மாற்றங்களை எப்படி புறக்கணிப்பது, மற்றும்முந்தைய revisionஐ எப்படி மீண்டும் பெறுவது.
13:39 பயிற்சியாக-முந்தைய டுடோரியல் பயிற்சியில் உருவாக்கிய Git repositoryக்கு செல்லுங்கள்.
13:46 text fileலில் சில மாற்றங்களை செய்யுங்கள்.
13:49 மாற்றங்களை commit செய்யுங்கள்.
13:52 பழைய revisionக்கு திரும்பிச் செல்ல முயலுங்கள்.
13:55 மறுபடியும் உங்கள் text fileலில் சில மாற்றங்களை செய்து, அதை புறக்கணிக்க முயலுங்கள்.
14:02 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
14:11 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
14:18 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
14:22 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
14:29 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
14:34 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst