Thunderbird/C2/Introduction-to-Thunderbird/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:42, 11 February 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00.00 Mozilla Thunderbird இல் Introduction குறித்த டுடோரியலுக்கு நல்வரவு


00.04 இதில் நாம் கற்கப்போவது
00.09 Thunderbird ஐ download, install மற்றும் launch செய்வது


00.13 மேலும் கற்பது:


00.15 புதிய email account ஐ Configure செய்தல்

message களை Download செய்து படித்தல்


00.20 message களை Compose செய்து அனுப்புதல்

Thunderbird இலிருந்து Log out செய்தல்


00.26 Mozilla Thunderbird, எளிய email client.


00.29 அது cross platform software, அதாவது பல operating system களிலும் வேலை செய்யும்


00.35 email message களை மற்ற mail account களிலிருந்து உங்கள் கணினிக்கு download செய்ய உதவும்


00.42 ஒன்றுக்கு மேற்பட்ட email account களை மேலாளலாம்


00.47 Thunderbird இல் சில advanced features உள்ளன.


00.50 Gmail, Yahoo மற்றும் Eudora போன்ற mail account களின் Mail folders மற்றும் Address book போன்ற email தரவுகளை இறக்குமதி செய்யலாம்.


01.01 POP3 ஐ பயன்படுத்தினால்...,


01.04 எல்லா POP3 account களையும் ஒரே Thunderbird Inbox இல் இறக்கிக்கொள்ளலாம்


01.09 message களை attributes - Date, Sender, Priority அல்லது Custom label ஆல் group செய்யலாம்
01.18 நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1


01.26 கணினியில் Mozilla Thunderbird install செய்திருக்கவில்லையானால் Ubuntu Software Centre மூலம் நிறுவிக்கொள்ளலாம்.


01.33 Ubuntu Software Centre குறித்த மேல் தகவல்களுக்கு இங்கே செல்லவும்


01.40 Mozilla website இலிருந்தும் Thunderbird ஐ download செய்து install செய்யலாம்.


01.46 Mozilla Thunderbird மற்ற os க்கும் கிடைக்கிறது


01.48 Microsoft Windows 2000 அல்லது மற்ற version கள் MS Windows XP அல்லது MS Windows 7.
01.56 மேற்கொண்டு விவரங்காளுக்கு Mozilla website க்கு செல்லவும்


02.02 Mozilla Thunderbird ஐ பயன்படுத்த உங்களுக்கு குறைந்தது செல்லுபடியாகும் email addresse கள் தேவை


02.08 email account களில் POP3 option உம் enable ஆகி இருக்கவேண்டும்


02.15 Internet க்கும் இணைப்பு இருத்தல் வேண்டும்
02.19 Thunderbird ஐ துவக்கலாம்.


02.22 முதலில் Dash Home மீது சொடுக்கவும்; அது desktop இல் மேல் இடது மூலையில் உள்ள round button


02.29 Search box தோன்றுகிறது


02.31 type செய்க: Thunderbird. Thunderbird icon தோன்றுகிறது.


02.37 அதன் மீது சொடுக்க application திறக்கிறது


02.40 Mail Account Setup dialogue box திறக்கிறது.


02.43 மேல் இடது பக்கம் உள்ள Red Cross button மீது சொடுக்கி இதை மூடலாம்.


02.49 Mozilla Thunderbird application திறக்கிறது.


02.53 முதலில், Mozilla Thunderbird இடைமுகத்தை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்


02.59 Mozilla Thunderbird இடைமுகத்தில்... ஒரு Main menu ... பல option களுடன் உள்ளது


03.05 Menu bar இல் Main menu வில் பல Short cut icons உள்ளன


03.11 உதாரணமாக , Get Mail, Write, மற்றும் Address Book க்கு shortcut icons உள்ளன


03.18 Thunderbird இல் இரண்டு panel கள்


03.21 இடது panel... Thunderbird account இன் folder களை காட்டுகிறது


03.26 இன்னும் எந்த mail account உம் configure செய்யவில்லை; ஆகவே இப்போது எதையும் காட்டவில்லை


03.33 வலது panel இல்.. Email account களுக்கு options, Advanced Features போன்றன உள்ளன


03.41 இந்த tutorial க்காக


03.44 இரண்டு email account களை உருவாக்கியுள்ளோம். அவை:


03.48 STUSERONE at gmail dot com

STUSERTWO at yahoo dot in


03.56 நீங்கள் உங்கள் email account களில் இரண்டை பயன்படுத்துங்கள்


04.02 நான் இந்த mail account களில் POP3 option ஐ enable செய்துள்ளேன்


04.07 Gmail இல் POP3 ஐ enable செய்வதெப்படி?


04.11 முதலில், Gmail account இல் login செய்க


04.14 புது browser திறந்து address bar இல் type செய்க: www.gmail.com.


04.21 user name ஆக STUSERONE at gmail dot com என enter செய்யலாம். பின் password.


04.30 Gmail window வில் மேல் வலது பக்கம் Settings icon மீது சொடுக்கவும். Settings option மீது சொடுக்கவும்
04.40 Settings window தோன்றுகிறது. Forwarding மற்றும் POP/IMAP tab ஐ சொடுக்கவும்


04.48 POP download இல், நான் Enable POP for all mail' ஐ தேர்ந்தெடுத்தேன்.


04.53 Save Changes ஐ சொடுக்கவும்


04.56 Gmail Mail window தோன்றுகிறது.


04.58 POP3 இப்போது Gmail இல் enable ஆகிவிட்டது!


05.02 Gmail ல் இருந்து log out செய்து, browser ஐ மூடலாம்


05.08 Thunderbird இல் STUSERONE at gmail dot com account ஐ configure செய்வோம்.


05.15 Gmail account கள் Thunderbird ஆல் automatic ஆக configure செய்யப்படும்


05.19 பின் வரும் tutorial களில் email account களுக்கு manual configurations களை கற்போம்.


05.26 முதலில், network connection சரியாக configure ஆகி இருப்பதை உறுதி செய்க.


05.31 Main menu விலிருந்து Edit மற்றும் Preferences ஐ தேர்க.


05.36 Thunderbird Preferences dialog box தோன்றுகிறது.


05.39 Advanced, select Network மற்றும் DiskSpace tab மீது சொடுக்கவும். பின் Settings ஐ சொடுக்கவும்


05.48 Connection Settings dialog box இல், Use system proxy settings option ஐ தேர்க


05.56 OK செய்து Close ஐ சொடுக்கவும்


06.00 இப்போது ஒரு புதிய account ஐ accounts option மூலம் திறக்கலாம்


06.05 Thunderbird இல் வலது panel லில் accounts ன் கீழ்,Create a New Account மீது சொடுக்கவும்


06.12 Mail Account Setup dialog box தோன்றுகிறது.


06.17 Name ஐ STUSERONE என Enter செய்க
06.20 Email address ஐ STUSERONE at gmail dot com என enter செய்க


06.27 பின் Gmail account க்கு password ஐ உள்ளிடுக


06.32 அடுத்து Continue மீது சொடுக்கவும்


06.36 Mozilla ISP database இன் message Configuration தோன்றுகிறது.


06.42 அடுத்து, select செய்க POP3.


06.46 சில சமயம் ஒரு பிழை செய்தி..


06.49 Thunderbird failed to find the settings என காட்டப்படலாம்


06.53 Thunderbird Gmail settings ஐ automatic ஆக configure செய்ய முடியவில்லை என பொருள்.


06.59 அப்படி இருந்தால் settings ஐ கைமுறையாக configure செய்ய வேண்டும்


07.04 இப்போது , Manual Config button மீது சொடுக்கவும்


07.08 Gmail க்கு configuration settings காட்டப்படுகின்றன.


07.12 Thunderbird ஏற்கனெவே Gmail settings ஐ சரியாக configure செய்துவிட்டதால் நாம் அதை மாற்றவில்லை


07.19 video வை இடை நிறுத்தி settings ஐ குறித்துக்கொள்க


07.24 Gmail settings ஐ கைமுறையாக configure செய்ய, இந்த setting களை பொருத்தமான field களில் உள்ளிட வேன்டும்.


07.30 settings ஐ கைமுறையாக configure செய்தபின் Create Account button enable ஆகிறது


07.36 இந்த tutorialலில், Thunderbird Gmail ஐ சரியாக configure செய்தது


07.41 ஆகவே Create Account ஐ சொடுக்கவும்


07.44 இது Internet வேகத்தை பொருத்து சில நிமிடங்கள் ஆகலாம்.


07.52 Gmail account உருவாகி வலது panel லில் காட்டப்படுகிறது


07.56 இடது panel இப்போது Email ID STUSERONE at gmail dot com ஐ காட்டுகிறது


08.04 இந்த Gmail account இன் கீழ், பல mail folder கள் காட்டப்படுகின்றன.


08.09 இப்போது , இடது panel இலிருந்து, Gmail account ன் கீழ், Inbox ஐயும், பின் Get Mail icon ஐயும் சொடுக்கவும்


08.18 Thunderbird window வின் கீழே status bar ஐ காண்க


08.22 அது download ஆகும் message களின் எண்ணிக்கையை காட்டுகிறது


08.27 Gmail account... STUSERONE at gmail dot com க்கான எல்லா email message களும் இப்போது Inbox க்கு download ஆகிவிட்டன.


08.36 Inbox மீது சொடுக்கி, ஒரு message ஐ தேர்க.


08.39 message கீழே உள்ள panel லில் தெரிகிறது


08.43 message மீது இரட்டை- சொடுக்கவும்.


08.46 அது ஒரு புது tab இல் திறக்கிறது


08.49 tab இன் மேல் வலது பக்கமுள்ள X icon மீது சொடுக்கி tab ஐ மூடலாம்.


08.55 ஒரு message ஐ compose செய்து, STUSERTWO at yahoo dot in... account க்கு அனுப்பலாம்.


09.03 Mail toolbar இல், Write ஐ சொடுக்கவும்.


09.07 Write dialog box தோன்றுகிறது.


09.10 From field உங்கள் பெயரையும், Gmail ID ஐயும் காட்டுகிறது


09.14 To field இல், STUSERTWO at yahoo dot in என உள்ளிடலாம்


09.20 mail body யில் type செய்யலாம்: Hi, I now have an email account in Thunderbird!


09.29 இப்போது , text ஐ தேர்ந்து font size ஐ அதிகரிப்போம்


09.33 இப்போது , Larger font size Icon ஐ சொடுக்கவும். Font size ஐ இது அதிகரிக்கிறது


09.40 உரையின் நிறத்தை மாற்ற அதை தேர்ந்து Choose colour for text icon ஐ சொடுக்கவும்


09.47 Text Color dialog box தோன்றுகிறது. Red ஐ சொடுக்கி OK செய்க
09.55 உரையின் நிறம் மாறிவிட்டது


09.58 ஒரு smiley ஐ நுழைக்கலாம் ! Insert a Smiley face icon மீது சொடுக்கவும்


10.04 Smiley list இல், Smile ஐ சொடுக்கவும். Smiley உள்நுழைக்கப்பட்டது


10.11 உங்கள் mail இல் spell check உம் செய்யலாம்.


10.15 have ஐ heve என மாற்றுவோம்


10.20 Spelling ஐ சொடுக்கவும்; English US ஐ தேர்க


10.24 Check Spelling dialog box தோன்றுகிறது; அது தவறாக எழுதிய சொல்லை highlight செய்கிறது


10.30 அது மேலும் சரியான spelling ஐ காட்டுகிறது.Replace ஐ சொடுக்கவும். exit ஐ சொடுக்கி வெளியேறுக
10.38 spelling preferences ஐ அமைக்க, Main menu வில், Edit மற்றும் Preferences ஐ சொடுக்கவும்.


10.44 Preferences dialog box இல், Composition ஐ சொடுக்கவும்.


10.48 பின் தேவையான option களை குறியிட்டு, Close ஐ சொடுக்கவும்.


10.54 இப்போது , mail ஐ அனுப்ப Send button மீது சொடுக்கவும்


10.59 ஒரு Subject Reminder dialog box தோன்றுகிறது.


11.03 ஏனெனில் நாம் இந்த mail க்கு Subject உள்ளிடவில்லை.


11.07 Subject Line இல்லாமலே mail ஐ அனுப்ப Send Without Subject மீது சொடுக்கவும்


11.13 அல்லது Cancel Sending மீது சொடுக்கவும்


11.16 இப்போது , Subject field இல், type செய்க: My first Email From Thunderbird.


11.21 Send ஐ சொடுக்கவும் . email அனுப்பப்பட்டது. அதை சோதிக்கலாம்.


11.29 STUSERTWO@yahoo.in account ஐ திறந்து Inbox இல் பார்க்கலாம்


11.37 அகவே Yahoo வில் login செய்யலாம்


11.47 Yahoo login page இல், Yahoo ID STUSERTWO வை type செய்க . password ஐ Enter செய்க


11.56 Inbox ஐ சொடுக்கவும். Inbox இல் Gmail account இலிருந்து அனுப்பிய mail உள்ளது.
12.03 அந்த mail ஐ திறக்க open மீது சொடுக்கவும்.


12.05 Reply button மற்றும் reply to the mail ஐ பயன்படுத்தி பதில் எழுதலாம்; ஆனால் இங்கே ஒரு புதிய mail எழுதுவோம்.


12.13 Compose மீது சொடுக்கவும்


12.16 To field இல், address எழுதுக: STUSERONE at gmail dot com


12.23 Subject field இல் எழுதுக: Congrats!


12.27 Type செய்க: Glad you got a new account, in the mail


12.32 Send button ஐ சொடுக்கவும், Yahoo விலிருந்து log out செய்க


12.37 browser ஐ மூடலாம்


12.39 Thunderbird ஐ இப்போது check செய்வோம்.


12.42 Get Mail மீதும் மற்றும் Get All New Messages மீது சொடுக்கவும்


12.48 இடது panel லில் இருந்து,உங்கள் Gmail account ID இல், Inbox ஐ சொடுக்கவும்


12.53 yahoo account இலிருந்து அனுப்பிய செய்தி Inbox இல் இருக்கிறது


12.58 mail இன் உள்ளடகக்ம் கீழே panel லில் தெரிகிறது


13.03 Reply button மூலம் இந்த மெயிலுக்கு reply செய்யலாம்.


13.07 நாம் வெற்றிகரமாக மெய்லை Thunderbird மூலம் அனுப்பி, பெற்று பார்த்தோம்.


13.14 Thunderbird இலிருந்து வெளியேற, Main menu விலிருந்து,File மற்றும் Quit ஐ சொடுக்கவும்


13.19 Mozilla Thunderbird இலிருந்து வெளியேறினோம்.


13.22 இத்துடன் இந்த tutorial முடிகிறது


13.26 இந்த tutorial இல் நாம் Mozilla Thunderbird பற்றி கற்றோம். மேலும் எப்படி Thunderbird ஐ download, install மற்றும் launch செய்வது என கண்டோம்.


13.35 மேலும் கற்றது:


13.37 புது email account ஐ Configure செய்தல்

mail message களை Compose செய்தல், message கள send

Receive மற்றும் படித்தல்

Thunderbird இலிருந்து Log out செய்தல்.


13.46 உங்களுக்கு assignment


13.49 Mozilla Thunderbird application ஐ Download செய்க


13.52 அதை Install மற்றும் launch செய்க


13.54 'Thunderbird' இல் ஒரு email account ஐ Configure செய்க


13.58 இந்த account இலிருந்து மெய்ல்களை Send, receive செய்து நடப்பதை பாருங்கள்


14.06 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
14.09 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.


14.12 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.


14.16 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை


14.18 பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.


14.22 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.


14.26 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org


14.32 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.


14.36 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


14.44 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro


14.55 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.

தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst