Netbeans/C2/Netbeans-Debugger/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:49, 21 October 2015 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம்.
00:02 Netbeans Debugger குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 Netbeans ஐ முதல் முறை பயன்படுத்துகிறீர்கள் எனில், முதலில் Spoken Tutorial இணையத்தளத்தில் முன் டுடோரியல்களைக் காணவும்.
00:14 இந்த செயல்விளக்கத்திற்கு நான் பயன்படுத்துவது லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு பதிப்பு 12.04,
00:21 மற்றும் Netbeans IDE பதிப்பு 7.1.1
00:26 programகளை debug செய்வது பெரிய சிரமமான வேலையாக இருக்கும் என நமக்கு தெரியும்.
00:31 அதனால், ஒரு debugging tool மற்றும் அதன் அம்சங்களை தெரிந்துகொண்டால் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
00:39 சக்திவாய்ந்த இந்த debugging tool மிகவும் பயனுள்ளது,
00:42 குறிப்பாக பெரிய programகளை எழுதும்போது அல்லது சோதிக்கும் போது.
00:46 இந்த டுடோரியலில் Netbeans Debugger தரும் சில அம்சங்கள் பற்றி அறிவோம்.
00:53 இந்த டுடோரியலில் பின்வருவனவற்றை தெரிந்துகொள்வோம்
00:55 debugging window
00:58 breakpointகளை configure செய்தல்
01:00 expressionகளை மதிப்பிடுதல் அல்லது watchகளை அமைத்தல்
01:04 உங்கள் program ன் இயக்கத்தை கண்டுபிடிக்க தேர்வுகள்
01:17 மற்றும் debugger ஐ configure செய்ய தேர்வுகள்
01:12 இப்போது இந்த உதாரண codeஐ debug செய்வதுடன் ஆரம்பிப்போம்.
01:17 Netbeans IDEக்கு வருகிறேன்
01:20 செயல்விளக்கத்திற்காக என் IDE ல் ஏற்கனவே ஒரு Java Application, sampleDebug ஐ உருவாக்கியுள்ளேன்.
01:27 இது மூன்று integer மதிப்புகள் a, b, மற்றும் c ஐ initialize செய்யும் ஒரு எளிய program.
01:35 பின் இது 'Hello World!' ஐயும் 'a'ன் மதிப்பையும் அச்சடிக்கிறது.
01:40 ஒரு class object 'SampleClass'ஐ உருவாக்குகிறது அதில் ஒரு 'value' integer, private integer மதிப்பாக உள்ளது.
01:52 பின், இது 'b' ன் மதிப்பை கணக்கிடுகிறது,
01:55 cன் மதிப்பை கணக்கிட ஒரு function ஐ call செய்கிறது,
02:00 பின் 'b' மற்றும் 'c'ன் மதிப்புகளை அச்சிடுகிறது.
02:05 debuggingஐ ஆரம்பிக்கும் முன், முதலில் breakpointஐ அமைப்போம்.
02:09 ஒரு breakpointஐ அமைக்க, வரி எண் மீது க்ளிக் செய்க.
02:13 Hello World!ஐ அச்சடிக்கும் இந்த வரியில் நான் அமைக்கிறேன்
02:18 breakpoint அமைப்பட்டுள்ள வரி ஊதா நிறத்தில் மாறியிருப்பதையும் அந்த வரி எண் ஒரு சதுரமாக மாறியிருப்பதையும் காண்க.
02:28 toolbarல் Debug Project பட்டனை அழுத்தி, debugging mode ல் ப்ரோகிராமை இயக்கும்போது,
02:35 நாம் breakpointஐ அமைத்த வரியில் ப்ரோகிராமின் இயக்கம் நிற்கிறது.
02:41 இதுவரை, 'a'ன் மதிப்பு அமைக்கப்பட்டுள்ளது.
02:45 அதன் மதிப்பைக் காண அதன் மீது mouse ஐ நகர்த்தவும்.
02:49 அதன் மதிப்பு 10 என காட்டுகிறது.
02:52 workspaceக்கு கீழே சில கூடுதல் windowகள் இருப்பதைக் காணலாம்.
02:59 'Variables' window ல் variableகள் மற்றும் அதன் மதிப்புகள் காட்டப்படுகின்றன.
03:07 இதுவரை, variable 'a' மட்டும்தான் initialize செய்யப்பட்டுள்ளது.
03:11 உதாரண debug output உடன் 'Output' windowஐயும் காணலாம்.
03:17 இதுவரை output இல்லை.
03:19 ஒரு 'Debugger Console' ' உள்ளது அது program வரி 29 ல் ஒரு breakpointஐ சந்தித்து அங்கே நிறுத்தப்பட்டுள்ளது என்கிறது.
03:28 ஒரு 'Breakpoints' window உம் உள்ளத. அது வரி எண் 29 ஒரு breakpoint உள்ளது என்கிறது.
03:36 மேலும் செல்வதற்கு முன், ஒரு watchஐ சேர்க்க கற்போம்.
03:40 உதாரணமாக, integer value 'aSample' ஐ கண்காணிக்க விரும்புகிறேன் என்போம்
03:48 workspaceன் கீழே 'Variables' windowல், Enter new Watch தேர்வை டபுள் க்ளிக் செய்து variable ன் பெயரை 'aSample.value' என கொடுக்கிறேன்
04:02 OK ல் க்ளிக் செய்க
04:06 இதுவரை 'aSample' உருவாக்கப்படவில்லை எனவே இது மதிப்பு தெரியாது என்கிறது.
04:12 அந்த வரியை இயக்கியபின்தான் variable இருப்பது தெரியவரும்.
04:16 இதே போல expressionகளை கண்காணித்து மதிப்பிடலாம்.
04:21 இங்கே b=a+10 ஐ சோதிக்கிறேன்.
04:25 a-4 என்ன என அறிய விரும்பினால்.
04:29 எனவே menu bar ல் Debug menu க்கு சென்று Evaluate expression தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
04:37 workspace ல் 'Evaluate Code' window தோன்றுகிறது.
04:41 இதில் expression 'a-4' ஐ கொடுக்கிறேன்
04:45 இங்கே Evaluate Expression button ஐ க்ளிக் செய்க, Variable windowல், 'a-4' ன் மதிப்பு 6 என்கிறது.
04:56 இப்போது இந்த ஒரு வரி code ஐ இயக்குவோம்.
05:00 அதற்கு, toolbar ல் Step-Over button ஐ க்ளிக் செய்க.
05:06 அது “Hello World” என்ற ஒரே ஒரு வரி codeஐ மட்டும் இயக்க வேண்டும்
05:12 outputஐ காண, output window க்கு சென்று sampleDebug output window ஐ தேர்ந்தெடுக்கவும்
05:17 அது காட்டுவது Hello World! a is 10.
05:22 program இப்போது ஒரு SampleClass object ஐ உருவாக்கும் இந்த வரியில் நிறுத்தப்பட்டுள்ளது.
05:28 இப்போது, SampleClass ன் constructorக்குள் செல்ல விரும்புகிறேன்
05:32 அதை செய்ய toolbar ல் Step Into தேர்வை க்ளிக் செய்யலாம்.
05:41 பின் Step Over ஐ தேர்ந்தெடுக்கிறேன் constructor callக்குள் மதிப்பு வந்து இப்போது 10 ஆக அமைக்கப்பட்டிருப்பதைக் காண்க.
05:51 variableன் மீது mouse ஐ நகர்த்தியும் அதை சோதிக்கலாம்.
05:55 மீண்டும் Step Over செய்யும்போது, this.variable உம் 10 ஆக இருப்பதைக் காணலாம்.
06:03 இந்த functionல் இருந்து வெளியேற Continue அல்லது Step Over அல்லது Step Out ஐ தேர்ந்தெடுக்கலாம்
06:11 method ஐ விட்டு வெளியேற Step-Out ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
06:14 இப்போது function call உருவாக்கபட்ட இடத்திற்கு செல்கிறேன்.
06:19 மீண்டும் Step-Over செய்யும்போது, aSample.value ஆனது 10 ஆக அமைக்கப்படுகிறது.
06:27 இதற்காக தான் நாம் கண்காணித்திருந்தோம்.
06:30 Breakpointகள் மற்றும் StepOverகளைத் தவிர, cursor உள்ள வரியில் ப்ரோகிராமின் இயக்கத்தை நிறுத்தவும் முடியும்.
06:38 உதாரணமாக, இங்கே இந்த functionன் உள் சென்று d=b-5; என்ற வரியில் cursor ஐ வைக்கிறேன்.
06:49 இப்போது toolbar ல் Run To Cursor தேர்வை தேர்ந்தெடுக்கிறேன்.
06:54 programன் இயக்கம் இந்த functionன் உள் சென்று cursor இருக்கும் இடத்தில் நிறுத்தப்படுகிறது என்பதைக் காணலாம்.
07:05 இது bன் மதிப்பை 20 என கணக்கிட்டுள்ளதைக் காண்க.
07:10 variable windowன் உள், 'b' க்கு 20ஐ அமைத்துள்ளது.
07:14 இப்போது, மீண்டும் Step Over ஐ க்ளிக் செய்து d ன் மதிப்பும் initialize செய்யப்பட்டு 15 ஆகிறது.
07:23 இப்போது, நான் programக்கு திரும்பவரலாம் அல்லது இயக்கத்தை முழுதும் முடிக்கலாம்.
07:29 Step Outஐ தேர்ந்தெடுத்து function callக்கு வருகிறேன்.
07:36 getC() functionல் mouse ஐ நகர்த்தும்போது, function மதிப்பு 15ஐ திருப்பியுள்ளதைக் காணலாம்.
07:43 அந்த மதிப்பு variable 'c' ல் இன்னும் assign செய்யப்படவில்லை.
07:47 எனவே, Step Over ஐ க்ளிக் செய்து அந்த வரியை இயக்க, 'c' மதிப்பு 15 ஐ பெறும்.
07:55 இப்போது variable window ல் அதை சோதிக்கலாம் அல்லது அதன் மதிப்பை சோதிக்க variable மீது mouse ஐ வைக்கலாம்.
08:03 debugging session ஐ இப்போது நிறுத்த, toolbar ல் Finish Debugger Session தேர்வை தேர்ந்தெடுக்கலாம்.
08:12 அடுத்த breakpointக்கு இயக்கத்தைத் தொடர நினைத்தால் Continue தேர்வை தேர்ந்தெடுக்கலாம்.
08:19 முடித்தவுடன், மீதி ப்ரோகிராமின் இயக்கத்தை முடிக்கவும் Continue தேர்வை தேர்ந்தெடுக்கலாம்.
08:25 இங்கே Continue ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
08:27 Output windowல், காட்டப்படும் output: b is 20 and c is 15.
08:34 இதுதான் netbeans ல் debugging தேர்வுகள் மீதான ஒரு கண்ணோட்டம் ஆகும்
08:39 உங்களுக்கு ஏதேனும் advanced feature settings வேண்டுமெனில் -
08:42 Tools menuக்கு சென்று, Options ல் Miscellaneous தேர்வுக்கு சென்று Java Debugger tab ஐ க்ளிக் செய்க.
08:53 multi-threaded program breakpoint தேர்வுகளுக்கான settingsஐ இங்கே மாற்றலாம்.
08:59 அல்லது எந்த methodகளில் விலக வேண்டும் என filterகளை வைக்கலாம்.
09:07 இப்போது பயிற்சி.
09:09 உங்கள் programகளில் ஏதேனும் ஒன்றை எடுக்கவும், அதில் ஏற்கனவே பிழைகள் இருந்தால் மிக நன்று.
09:16 இல்லையெனில், logic அல்லது algorithm ல் சில பிழைகளை ஏற்படுத்தவும்.
09:20 code ல் breakpointகளை அமைக்கவும். வழக்கமாக, பிழை இருக்கும் என நீங்கள் சந்தேகப்படும் ஒரு function ன் function call ல் ஒரு breakpoint ஐ அமைக்கலாம்.
09:29 function ன் உள் செல்ல Step-Into ஐ பயன்படுத்தவும்.
09:32 அந்த வரியை இயக்க Step-Overs ஐ பயன்படுத்துக பின் variable window ல் variableகளின் மதிப்புகள் சோதிக்கவும்.
09:41 பிழைகளை கண்டறிந்து சரிசெய்ய சில watchகளை சேர்க்கவும்.
09:45 method க்கு Step-Out செய்யவும்.
09:48 breakpoint ஐ அடையும் வரை continue செய்யவும்.
09:51 கடைசியாக debugger session ஐ முடித்து உங்கள் application ஐ run செய்யவும்.
09:57 இந்த டுடோரியலில் netbeans debugger பற்றி தெரிந்துகொண்டோம்
10:02 நாம் கற்றது breakpointகள் மற்றும் watchகளை அமைத்தல்.
10:06 code இயங்கும்போது மதிப்பிட வேண்டிய expressionகளை சேர்த்தல்.
10:11 Step-Into, Step-Over, Step-Out மற்றும் Run-to-Cursor தேர்வுகளுடன் ப்ரோகிராமின இயக்கத்தை கண்காணித்தல்.
10:19 advanced debugging க்கு debugger ஐ configure செய்தல்
10:24 இந்த டுடோரியல் testing மற்றும் debugging வேலைகளில் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த பயன்படும் என நம்புகிறோம்.
10:30 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
10:33 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
10:36 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
10:41 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
10:46 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
10:49 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:55 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:05 மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:14 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst