Netbeans/C2/Netbeans-Debugger/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:02 | வணக்கம். Netbeans Debugger குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | Netbeans ஐ முதல் முறை பயன்படுத்துகிறீர்கள் எனில், முதலில் Spoken Tutorial இணையத்தளத்தில் முன் டுடோரியல்களைக் காணவும். |
00:14 | (இங்கு) இந்த செயல்விளக்கத்திற்கு நான் பயன்படுத்துவது லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு பதிப்பு 12.04, |
00:21 | மற்றும் Netbeans IDE பதிப்பு 7.1.1 |
00:26 | programகளை debug செய்வது பெரிய சிரமமான வேலையாக இருக்கும் என நமக்கு தெரியும். |
00:31 | அதனால், ஒரு debugging tool மற்றும் அதன் அம்சங்களை தெரிந்துகொண்டால் நேரத்தை மிச்சப்படுத்தலாம். |
00:39 | சக்திவாய்ந்த இந்த debugging tool மிகவும் பயனுள்ளது, |
00:42 | குறிப்பாக பெரிய programகளை எழுதும்போது அல்லது சோதிக்கும் போது. |
00:46 | இந்த டுடோரியலில் Netbeans Debugger தரும் சில அம்சங்கள் பற்றி அறிவோம். |
00:53 | இந்த டுடோரியலில் பின்வருவனவற்றை தெரிந்துகொள்வோம் |
00:55 | debugging window |
00:58 | breakpointகளை configure செய்தல் |
01:00 | expressionகளை மதிப்பிடுதல் அல்லது watchகளை அமைத்தல் |
01:04 | உங்கள் program ன் இயக்கத்தை கண்டுபிடிக்க தேர்வுகள் |
01:07 | மற்றும் debugger ஐ configure செய்ய தேர்வுகள். |
01:12 | இப்போது இந்த உதாரண codeஐ debug செய்வதுடன் ஆரம்பிப்போம். |
01:17 | Netbeans IDEக்கு வருகிறேன் |
01:20 | செயல்விளக்கத்திற்காக என் IDE ல் ஏற்கனவே ஒரு Java Application, sampleDebug ஐ உருவாக்கியுள்ளேன். |
01:27 | இது மூன்று integer மதிப்புகள் a, b, மற்றும் c ஐ initialize செய்யும் ஒரு எளிய program. |
01:35 | பின் இது 'Hello World!' ஐயும் 'a'ன் மதிப்பையும் அச்சடிக்கிறது. |
01:40 | ஒரு class object 'SampleClass'ஐ உருவாக்குகிறது அதில் ஒரு 'value' integer, private integer மதிப்பாக உள்ளது. |
01:52 | பின், இது 'b' ன் மதிப்பை கணக்கிடுகிறது, |
01:55 | cன் மதிப்பை கணக்கிட ஒரு function ஐ call செய்கிறது, |
02:00 | பின் 'b' மற்றும் 'c'ன் மதிப்புகளை அச்சிடுகிறது. |
02:05 | debuggingஐ ஆரம்பிக்கும் முன், முதலில் breakpointஐ அமைப்போம். |
02:09 | ஒரு breakpointஐ அமைக்க, வரி எண் மீது க்ளிக் செய்க. |
02:13 | Hello World!ஐ அச்சடிக்கும் இந்த வரியில் அதை அமைக்கிறேன் |
02:18 | breakpoint அமைப்பட்டுள்ள வரி ஊதா நிறத்தில் மாறியிருப்பதையும் அந்த வரி எண் ஒரு சதுரமாக மாறியிருப்பதையும் காண்க. |
02:28 | toolbarல் Debug Project பட்டனை அழுத்தி, debugging mode ல் ப்ரோகிராமை இயக்கும்போது, |
02:35 | நாம் breakpointஐ அமைத்த வரியில் ப்ரோகிராமின் இயக்கம் நிற்கிறது. |
02:41 | இதுவரை, 'a'ன் மதிப்பு அமைக்கப்பட்டுள்ளது. |
02:45 | அதன் மதிப்பைக் காண அதன் மீது mouse ஐ நகர்த்தவும். |
02:49 | அதன் மதிப்பு 10 என காட்டுகிறது. |
02:52 | workspaceக்கு கீழே சில கூடுதல் windowகள் இருப்பதைக் காணலாம். |
02:59 | 'Variables' window ல் variableகள் மற்றும் அதன் மதிப்புகள் காட்டப்படுகின்றன. |
03:07 | இதுவரை, variable 'a' மட்டும்தான் initialize செய்யப்பட்டுள்ளது. |
03:11 | உதாரண debug output உடன் 'Output' windowஐயும் காணலாம். |
03:17 | இதுவரை output ஏதும் இல்லை. |
03:19 | ஒரு 'Debugger Console' ' உள்ளது அது வரி 29 ல் ஒரு breakpointஐ சந்தித்து program அங்கே நிறுத்தப்பட்டுள்ளது என்கிறது. |
03:28 | ஒரு 'Breakpoints' window உம் உள்ளது. அது வரி எண் 29ல் ஒரு breakpoint உள்ளது என்கிறது. |
03:36 | மேலும் செல்வதற்கு முன், ஒரு watchஐ சேர்க்க கற்போம். |
03:40 | உதாரணமாக, integer value 'aSample' ஐ கண்காணிக்க விரும்புகிறேன் என்போம் |
03:48 | workspaceன் கீழே 'Variables' windowல், Enter new Watch தேர்வை டபுள் க்ளிக் செய்து variable ன் பெயரை 'aSample.value' என கொடுக்கிறேன் |
04:02 | OK ல் க்ளிக் செய்க |
04:06 | இதுவரை 'aSample' உருவாக்கப்படவில்லை எனவே இது மதிப்பு தெரியாது என்கிறது. |
04:12 | அந்த வரியை இயக்கியபின்தான் variable இருப்பது தெரியவரும். |
04:16 | இதே போல expressionகளை கண்காணித்து மதிப்பிடலாம். |
04:21 | இங்கே b=a+10 ஐ சோதிக்கிறேன். |
04:25 | a-4 மதிப்பை அறிய விரும்பினால். |
04:29 | menu bar ல் Debug menu க்கு சென்று Evaluate expression தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
04:37 | workspace ல் 'Evaluate Code' window தோன்றுகிறது. |
04:41 | இதில் expression 'a-4' ஐ கொடுக்கிறேன் |
04:45 | இங்கே Evaluate Expression button ஐ க்ளிக் செய்க, Variable windowல், 'a-4' ன் மதிப்பு 6 என்கிறது. |
04:56 | இப்போது இந்த ஒரு வரி code ஐ இயக்குவோம். |
05:00 | அதற்கு, toolbar ல் Step-Over button ஐ க்ளிக் செய்க. |
05:06 | அது “Hello World” என்ற ஒரே ஒரு வரி codeஐ மட்டும் இயக்க வேண்டும் |
05:12 | outputஐ காண, output window க்கு சென்று sampleDebug output window ஐ தேர்ந்தெடுக்கவும் |
05:17 | அது காட்டுவது Hello World! a is 10. |
05:22 | program இப்போது ஒரு SampleClass object ஐ உருவாக்கும் இந்த வரியில் நிறுத்தப்பட்டுள்ளது. |
05:28 | இப்போது, SampleClass ன் constructorக்குள் செல்ல விரும்புகிறேன் |
05:32 | அதை செய்ய toolbar ல் Step Into தேர்வை க்ளிக் செய்யலாம். |
05:41 | பின் Step Over ஐ தேர்ந்தெடுக்கிறேன் constructor callக்குள் மதிப்பு வந்து இப்போது 10 ஆக அமைக்கப்பட்டிருப்பதைக் காண்க. |
05:51 | variableன் மீது mouse ஐ நகர்த்தியும் அதை சோதிக்கலாம். |
05:55 | மீண்டும் Step Over செய்யும்போது, this.variable உம் 10 ஆக இருப்பதைக் காணலாம். |
06:03 | இந்த functionல் இருந்து வெளியேற Continue அல்லது Step Over அல்லது Step Out ஐ தேர்ந்தெடுக்கலாம் |
06:11 | method ஐ விட்டு வெளியேற Step-Out ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
06:14 | இப்போது function call உருவாக்கபட்ட இடத்திற்கு செல்கிறேன். |
06:19 | மீண்டும் Step-Over செய்யும்போது, aSample.value ஆனது 10 ஆக அமைக்கப்படுகிறது. |
06:27 | இதற்காக தான் நாம் கண்காணித்திருந்தோம். |
06:30 | Breakpointகள் மற்றும் StepOverகளைத் தவிர, cursor உள்ள வரியில் ப்ரோகிராமின் இயக்கத்தை நிறுத்தவும் முடியும். |
06:38 | உதாரணமாக, இங்கே இந்த functionன் உள் சென்று d=b-5; என்ற வரியில் cursor ஐ வைக்கிறேன். |
06:49 | இப்போது toolbar ல் Run To Cursor தேர்வை தேர்ந்தெடுக்கிறேன். |
06:54 | programன் இயக்கம் இந்த functionன் உள் சென்று cursor இருக்கும் இடத்தில் நிறுத்தப்படுகிறது என்பதைக் காணலாம். |
07:05 | இது bன் மதிப்பை 20 என கணக்கிட்டுள்ளதைக் காண்க. |
07:10 | variable windowன் உள், 'b' க்கு 20ஐ அமைத்துள்ளது. |
07:14 | இப்போது, மீண்டும் Step Over ஐ க்ளிக் செய்ய... d ன் மதிப்பும் initialize செய்யப்பட்டு 15 ஆகிறது. |
07:23 | நாம் இப்போது programக்கு திரும்பவரலாம் அல்லது இயக்கத்தை முழுதும் முடிக்கலாம். |
07:29 | Step Outஐ தேர்ந்தெடுத்து function callக்கு வருகிறேன். |
07:36 | getC() functionல் mouse ஐ நகர்த்தும்போது, function... மதிப்பு 15ஐ திருப்பியுள்ளதைக் காணலாம். |
07:43 | அந்த மதிப்பு variable 'c' ல் இன்னும் assign செய்யப்படவில்லை. |
07:47 | எனவே, Step Over ஐ க்ளிக் செய்து அந்த வரியை இயக்க, 'c' மதிப்பு 15 ஐ பெறுகிறோம். |
07:55 | இப்போது variable window ல் அதை சோதிக்கலாம் அல்லது அதன் மதிப்பை சோதிக்க variable மீது mouse ஐ வைக்கலாம். |
08:03 | debugging session ஐ இப்போது நிறுத்த, toolbar ல் Finish Debugger Session தேர்வை தேர்ந்தெடுக்கலாம். |
08:12 | அடுத்த breakpointக்கு இயக்கத்தைத் தொடர நினைத்தால் Continue தேர்வை தேர்ந்தெடுக்கலாம். |
08:19 | முடித்தவுடன், மீதி ப்ரோகிராமின் இயக்கத்தை முடிக்கவும் Continue தேர்வை தேர்ந்தெடுக்கலாம். |
08:25 | இங்கே Continue ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
08:27 | Output windowல், காட்டப்படுவது: b is 20 and c is 15. |
08:34 | இதுதான் netbeans ல் debugging தேர்வுகள் மீதான ஒரு கண்ணோட்டம் ஆகும் |
08:39 | உங்களுக்கு ஏதேனும் advanced feature settings வேண்டுமெனில் - |
08:42 | Tools menuக்கு சென்று, Options ல் Miscellaneous தேர்வுக்கு சென்று Java Debugger tab ஐ க்ளிக் செய்க. |
08:53 | multi-threaded program breakpoint தேர்வுகளுக்கான settingsஐ இங்கே மாற்றலாம். |
08:59 | அல்லது எந்த methodகளில் விலக வேண்டும் என filterகளை வைக்கலாம். |
09:07 | இப்போது பயிற்சி. |
09:09 | உங்கள் programகளில் ஏதேனும் ஒன்றை எடுக்கவும், அதில் ஏற்கனவே பிழைகள் இருந்தால் மிக நன்று. |
09:16 | இல்லையெனில், logic அல்லது algorithm ல் சில பிழைகளை ஏற்படுத்தவும். |
09:20 | code ல் breakpointகளை அமைக்கவும். வழக்கமாக, பிழை என சந்தேகப்படும் ஒரு function ன் function call ல் breakpoint ஐ அமைக்கலாம். |
09:29 | function ன் உள் செல்ல Step-Into ஐ பயன்படுத்தவும். |
09:32 | அந்த வரியை இயக்க Step-Overஐ பயன்படுத்துக பின் variable window ல் variableகளின் மதிப்புகளை சோதிக்கவும். |
09:41 | பிழைகளை கண்டறிந்து சரிசெய்ய சில watchகளை சேர்க்கவும் |
09:45 | method க்கு Step-Out செய்யவும் |
09:48 | breakpoint ஐ அடையும் வரை continue செய்யவும் |
09:51 | கடைசியாக debugger session ஐ முடித்து உங்கள் application ஐ run செய்யவும். |
09:57 | இந்த டுடோரியலில் netbeans debugger பற்றி தெரிந்துகொண்டோம் |
10:02 | நாம் கற்றது breakpointகள் மற்றும் watchகளை அமைத்தல் |
10:06 | code இயங்கும்போது மதிப்பிட வேண்டிய expressionகளை சேர்த்தல் |
10:11 | Step-Into, Step-Over, Step-Out மற்றும் Run-to-Cursor தேர்வுகளுடன் ப்ரோகிராமின் இயக்கத்தை கண்காணித்தல் |
10:19 | advanced debugging க்கு debugger ஐ configure செய்தல். |
10:24 | இந்த டுடோரியல் testing மற்றும் debugging வேலைகளில் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த பயன்படும் என நம்புகிறோம். |
10:30 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
10:33 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
10:36 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
10:41 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10:46 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
10:49 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:55 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:05 | மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
11:14 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |